பயனர் பேச்சு:AntanO: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎பதக்கம்: +#{{விருப்பம்}}--~~~~
வரிசை 273: வரிசை 273:
#{{விருப்பம்}}--[[பயனர்:Nan|நந்தகுமார்]] ([[பயனர் பேச்சு:Nan|பேச்சு]]) 18:12, 5 அக்டோபர் 2013 (UTC)
#{{விருப்பம்}}--[[பயனர்:Nan|நந்தகுமார்]] ([[பயனர் பேச்சு:Nan|பேச்சு]]) 18:12, 5 அக்டோபர் 2013 (UTC)
#{{விருப்பம்}}--≈ [[User:தகவலுழவன்|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup>[[User talk:தகவலுழவன்|<font style="color:#FF8C00"> ''( கூறுக )'']] </font></sup> 18:15, 5 அக்டோபர் 2013 (UTC)
#{{விருப்பம்}}--≈ [[User:தகவலுழவன்|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup>[[User talk:தகவலுழவன்|<font style="color:#FF8C00"> ''( கூறுக )'']] </font></sup> 18:15, 5 அக்டோபர் 2013 (UTC)
{{விருப்பம்}}--[[பயனர்:பரிதிமதி|பரிதிமதி]] ([[பயனர் பேச்சு:பரிதிமதி|பேச்சு]]) 19:37, 5 அக்டோபர் 2013 (UTC)

19:37, 5 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்

மறுமொழிக் கொள்கை
வணக்கம். என் பேச்சுப் பக்கத்தில் எனக்கு சேதி சொன்னால், இங்கே பதிலளிப்பேன். அது போல உங்கள் பேச்சுப்பக்கத்தில் நான் ஏதேனும் கேட்டிருந்தால், அங்கேயே பதிலளிக்கலாம். உங்கள் பேச்சுப் பக்கம் குறித்த விடயம் காலாவதியாகும் வரைக்கும் என் கவனிப்புப் பட்டியலில் இருக்கும்.
தொகுப்பு

தொகுப்புகள்


1|2

முதற்பக்கக் கட்டுரை திட்டம்

முதற்பக்கப் படிமம் அறிவிப்பு

உங்களுக்குத் தெரியுமா அறிவிப்பு

உதவி

வணக்கம். படிமம்:Linefocus.jpg, பயனர்:அருண்தாணுமால்யனால் த.வி இல் பதிவேற்றப்பட்டுள்ளது. கூகுள் தேடலில் அப்படிமம் இங்கு கிடைக்கிறது. இதை த.வியில் பதிவேற்ற காப்புரிமை உண்டா என்ற சந்தேகம் எழுகிறது எனக்கு. தெளிவுபடுத்தி உதவவும்.--Booradleyp1 (பேச்சு) 05:34, 11 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

இப்படிமத்தை பயன்படுத்துவதற்கான முக்கியத்துவம் கட்டுரையில் காணப்படவில்லை. அதனால் நியாயமான பயன்பாட்டு விளக்கம் அளிப்பதில் குழப்பமுள்ளது. மேலும் இப்படிமம் காப்புரிமை கொண்டிருக்கலாம். அவரின் பேச்சுப் பக்கத்தில் குறிப்பிடுகிறேன். --Anton (பேச்சு) 06:06, 11 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
நன்றி.--Booradleyp1 (பேச்சு) 12:28, 12 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

கட்டுரைக் வேண்டுதல்

வணக்கம். விக்கிப்பீடியா பற்றி பொது ஊடகங்களில் பரப்புரை செய்யவும், பத்தாண்டுகளை பதிவு செய்யவும் சிறப்புக் கட்டுரைகளை இதழ்களில் வெளியிடுதல் உதவும். அந்த வகையில் தொடர் பங்களிப்பாளரான நீங்கள் பின்வரும் தலைப்புக்களில் ஒன்றில் விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/சிறப்பிதழ்கள்#கட்டுரைத் தலைப்புக்கள் கட்டுரை எழுதித் தர முடிந்தால் சிறப்பு. 400 அல்லது 800 சொற்கள். செப்டெம்பர் 11 2013 திகதிக்குள். குறிப்பாக பின்வரும் தலைப்புக்களில் ஒன்று:

  • இலங்கையில் தமிழ் விக்கியூடகங்களின் வளர்ச்சியும் வாய்ப்புக்களும்
  • இணையத் தமிழ் கல்வி உள்ளடக்கங்களில் தமிழ் விக்கியூடகங்கள் பங்கு

உங்கள் பரிசீலனைக்கும் பங்களிப்புக்கும் நன்றி. --Natkeeran (பேச்சு) 00:24, 12 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

நல்ல தலைப்புத் தெரிவு. கட்டுரையை ஆர்வலுடன் எதிர்பாக்கிறேன். நன்றி. --Natkeeran (பேச்சு) 19:52, 20 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

நூற்பகுப்புக்கள் நீக்கம்

தமிழ்நூல்கள் என்ற பகுப்பை பல நூல்கள் கட்டுரைகளில் நீக்கி உள்ளீர்கள். அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாமா.

பொதுவாக, துறை, ஆண்டு, இடம், பதிப்பகம் ஆகிய நான்கு பகுப்புக்கள் ஒரு நூலுக்குச் சேர்க்கபடலாம். ஆனால் இவை பற்றி தெளிவில்லாமல் இருந்தால் பொதுப் பகுப்பில் சேர்க்கலாம். பொதுப் பகுப்புக்குள் சேர்த்தால் பின்னர் நாம் தகவலறிந்து சரியான பகுப்புகளுக்குள் சேர்க்கலாம். நன்றி. --Natkeeran (பேச்சு) 13:23, 15 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

பல கட்டுரைகள் தாய்பகுப்பான தமிழ்நூல்கள் என்ற பகுப்பிலும், உப பகுப்பிலும் இருந்தன. சில நீங்கள் குறிப்பிடுவது போன்று சில தாய்ப்பகுப்பில் மட்டும் இருந்தன. சிலவற்றுக்கு சரியான உபபகுப்பினை சேர்க்கக் கூடியதாகவிருந்தது. பலவற்றுக்கு சரியான உள்ளடக்கம் இல்லாததால் நூல் பற்றி அறிய முடியாவில்லை. இச்சிக்கல் தமிழ்நூல்கள் என்ற பகுப்புக்கு மட்டும் உரியதல்ல, பொதுவான சிக்கலும் கூட. குறித்த கட்டுரையை உருபாக்குபவர் அப்படியே விட்டுவிடுவதால் தேக்கந்தான் உருவாகின்றது.--Anton (பேச்சு) 07:18, 16 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
பகுப்புக்கள் இல்லாமல் இருப்பதைக் காட்டிலும் தாய்ப் பகுப்பில் இருப்பது கூடிய பயன்தரக் கூடியது. நாம் பெரிய பகுப்புக்கலை துப்பரவு செய்ய வேண்டும். பொதுவாக தமிழ் நூல்கள் என்ற பகுப்பை நான் துப்பரவு செய்வது உண்டு. --Natkeeran (பேச்சு) 13:16, 16 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

விக்கி பத்தாண்டு கொண்டாட்ட சட்டை வடிவமைப்பு வேண்டுகோள்

வணக்கம் நண்பரே, தாங்கள் விக்கிப்பீடியாவிற்கு சிறப்பான பல படங்களை வடிவமைத்து தந்திருக்கின்றீர்கள் என்பதை அறிவேன். என் வேண்டுகோளுக்காக இந்து சமய வார்ப்புருக்களில் இணைப்பதற்காக தமிழ் ஓம் படிமத்தினை மிகச்சிறப்பாக வடிவமைத்து தந்தீர்கள். தற்போது விக்கிப்பீடியாவின் பத்தாண்டு கொண்டாட்டத்திற்கான சட்டை (டிசர்ட்) வடிவமைப்பு தேவையுறுகிறது. தங்களது பணிச்சுமைகளிடையே இந்த டிசர்ட் வடிவமைப்பினை செய்துதர இயலுமா நண்பரே? --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:00, 25 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

எப்போது தேவை? எந்த அளவில் வடிவமைப்பு தேவை? வடிவமைப்பில் முக்கிய விடயங்கள் என்பவற்றைக் குறிப்பிட முடியுமா? --Anton (பேச்சு) 04:53, 25 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
நன்றி நண்பரே. [கொண்டாட்டம்] பக்கத்தில் சட்டைகள், விக்கிமீடியா அறக்கட்டளையில் நிதி ஒதுக்கீடு கோரிக்கை ஆகிய பகுதிகளை கவனிக்கவும். இரவி அவர்கள் 50 சட்டைகளுக்கு அறக்கட்டளையிடமிருந்து நிதி பெறுவதற்றாக மனு தயாரித்துள்ளார், இவற்றில் small 5%, medium 20%, large 40% extra large 30%, XXL 5% என தோராயமாக தரலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
  1. \\எப்போது தேவை\\ அறக்கட்டளையிடமிருந்து பணம் கிடைக்கும் நேரம் வரை வடிவமைப்பிற்கு காலம் இருக்கிறது நண்பரே. அதற்கு முன் வடிவமைப்பினை இறுதி செய்துவிட்டால் பணம் கிடைத்தும் அச்சடிக்கும் பொறுப்பினை தக்கவிடம் தந்துவிடலாம்.
  2. \\எந்த அளவில் வடிவமைப்பு தேவை\\ இணையத்தில் Standard 17.5" x 19", Oversized 19" x 25", All-over 40" x 35" என மூன்று அளவுகளைக் கண்டேன். இவற்றைப் பற்றி மேலும் யாரிடமாவது விசாரித்து தங்களுக்குச் சமர்ப்பிக்கின்றேன்.
  3. \\வடிவமைப்பில் முக்கி விடயங்கள்\\ விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சட்டையை தயார் செய்தாலும் அனைத்து நேரத்திற்கும் பொருந்தும் படியான பொதுவாக இருத்தலே சிறப்பு என கருதுகிறேன். அணிந்து கொள்வருக்கு விக்கிப்பீடியர் என்ற பெருமை தருவதாகவும், காண்பவருக்கு விக்கப்பீடியாவின் பெருமை புரிவதாகவும் இருக்க வேண்டும் என்பது என் தனிப்பட்ட எண்ணம். மற்றபடி முன் பின் வடிவமைப்பு பற்றி எந்த கோரிக்கையும் இல்லை. வடிவமைப்பாளரான தங்களுக்குத் தெரியாததா என்ன?.

தாங்கள் மனமுவந்து இப்பணியை ஏற்றுக் கொண்டமைக்கு மிக்க நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:04, 25 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

கண்ணில் பட்ட கன்னட (?) விக்கிப்பீடியா சட்டை ஒன்று - http://wiki.wikimedia.in/File:Pavithra_Shivu_-_Profile_Picture.JPG . http://commons.wikimedia.org/wiki/File:Wikipedia_T_Shirt_-_Kannada_Liners.JPG

தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்ட ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு

வணக்கம், அன்டன். பத்தாண்டு கொண்டாட்ட சட்டை வடிவமைப்புப் பணியில் உதவ முன்வந்தமைக்கு நன்றி. இது தொடர்பாக இன்னொரு வேண்டுகோளும கூட: தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்ட ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக பொறுப்பு எடுக்க முடியுமா? குறிப்பாக, அனைத்து வகையான வடிவமைப்புப் பணிகளிலும் பங்களிப்பு அல்லது வழிகாட்டல் தேவைப்படுகிறது. தமிழ் விக்கிப்பீடியாவில் வடிவமைப்பில் சிறந்த விளங்கும் மற்ற பங்களிப்பாளர்களுடன் இணைந்து நீங்கள் இதனை மேற்கொள்ளலாம். நன்றி.--இரவி (பேச்சு) 16:00, 25 ஆகத்து 2013 (UTC) s|பேச்சு]]) 16:00, 25 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

வணக்கம் இரவி, வடிவமைப்புப் பணிகளில் இயலுமான உதவிகளைச் செய்ய இயலும். தேவைகளைக் குறிப்பிடுங்கள். --Anton (பேச்சு) 05:27, 26 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
நன்றி, அன்டன். விரைவில் விவரங்களுடன் தொடர்பு கொள்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 18:27, 26 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

வடிவமைப்புப் பணிகளில் உதவி தேவை

வணக்கம் அன்டன், தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் தொடர்பாக தேவைப்படும் வடிவமைப்புப் பணிகள் குறித்த பட்டியல் இது. உங்களால் இயன்ற பங்களிப்புகளை நேரடியாகத் தாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் வடிவமைப்பில் சிறந்து விளங்கும் மற்ற பயனர்களின் உதவியையும் நாடி ஒருங்கிணைத்து இதனைச் செயற்படுத்தினாலும் போதுமானதாக இருக்கும்.

எண் தேவை காலக்கெடு குறிப்புகள்
1 கூடல் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் செப்டம்பர் 15 இடம், நேரம் விவரங்கள் விரைவில் தெரிய வரும். இதை அச்சடிக்கப் போவதில்லை. மின் சுற்றுக்கு மட்டும்.
2 அரங்கப் பதாகை செப்டம்பர் 20 நிகழ்ச்சி நடக்கும் அரங்கில் மேடைக்குப் பின்புறம் இருக்கும் பதாகை. தள முகவரியும் எடுப்பான எழுத்தில் இருந்தால் நன்றாக இருக்கும். இது flex bannerஆக மிகப் பெரிய அளவிலும் அச்சடிக்க ஏற்றதாக கூடிய நுணுக்கத்துடன் இருக்க வேண்டும். வேறு கூட்டங்களில் பயன்படுத்துவதற்கு ஏற்ப பொதுவான உரையைக் கொண்டிருக்க வேண்டும். இதே பதாகையைப் பண்பாட்டுச் சுற்றுலா வாகனத்திலும் சிறிய அளவில் கட்டிக் கொள்ளலாம் என்று எண்ணுகிறேன்.
3 சட்டை செப்டம்பர் 5 செகதீசுவரன் ஏற்கனவே சில விவரங்களைத் தந்திருக்கிறார். இயன்ற அளவு விரைவில் கிடைத்தால் உற்பத்தி செய்ய ஏதுவாக இருக்கும்.
4 கையேடு செப்டம்பர் 5 விக்கிப்பீடியா:தமிழ் விக்கியூடகக் கையேடு பக்கத்தில் உரையைக் காணலாம். இதனை அச்சுக்கேற்ற வடிவில் PDF ஆகவோ பதிப்பாளர் கோரும் வடிவத்திலோ அழகுற வடிவமைக்க வேண்டி இருக்கும்.
5 பாராட்டுச் சான்றிதழ் செப்டம்பர் 15 தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளில் அடுத்தடுத்து வாசகங்கள் இருக்க வேண்டும். கீழே மூவர் கையெழுத்திடுவது போன்ற இடைவெளி இருக்கலாம்.
6 அஞ்சல் தலை செப்டம்பர் 3 வழக்கமான இந்திய அஞ்சல் தலை அளவில் தெளிவாகத் தெரியுமாறு இருக்க வேண்டும். தமிழ் விக்கிப்பீடியா இலச்சினை, தமிழ் விக்கிப்பீடியா என்ற வாசகம் இடம் பெற வேண்டும்.
வணக்கம் இரவி, இங்கே பார்க்கவும்: வடிவமைப்புப் பணிகள் --Anton (பேச்சு) 05:27, 29 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
வணக்கம் நண்பரே, தாங்கள் நண்பர் தாரிக் அவர்களையும் சட்டை வடிவமைப்பில் ஈடுபட வைத்தமை மகிழ்வை தருகிறது. அவருடைய வடிவமைப்பில் கை விளிம்புகளில் விக்கிப்பீடியா முகவரியை பொறிக்கும் யுத்தி நன்றாக உள்ளதென நினைக்கிறேன். சில அலுவலகங்கள் காலர் இல்லாத சட்டைகளை அணிந்துவர அனுமதிப்பதில்லை என்பதால் காலர் வைத்த சட்டைகளில் அச்சிடும் யோசனை உள்ளது. சட்டையின் முன்பக்க வடிவமைப்பில் விக்கியின் சின்னம் மட்டும் பொறித்த உங்களது வடிவமைப்பும், தாரிக் அவர்களின் வடிவமைப்பும் எளிமையாக உள்ளது. அத்துடன் பின்பக்க வடிவமைப்பு அலுவலகங்களுக்கு சட்டை அணிந்து செல்பவர்களுக்கு ஏற்றதாக இருக்குமா. அல்லது முன்பக்க வடிவமைப்புடன் இறுதி செய்து கொள்ளமா என்று தாங்கள் அலோசித்து கூற வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:26, 1 செப்டம்பர் 2013 (UTC)
பின்னூட்டலுக்கு நன்றி ஜெகதீஸ்வரன். கை விளிம்புகளில் விக்கிப்பீடியா முகவரி - நன்று. வடிவமைப்புப் பணிகள் - இங்கு சட்டை பற்றிய பொதுவான விடங்களை குறிப்பிடுங்கள் (அஞ்சல் தலை பற்றியது போல). --Anton (பேச்சு) 04:50, 1 செப்டம்பர் 2013 (UTC)

-

நன்றி நன்பரே, நான் அதை சரிசெய்து கொள்கிறேன்.--Muthuppandy pandian (பேச்சு) 05:47, 2 செப்டம்பர் 2013 (UTC)

பதக்கம்

சிறப்புப் பதக்கம்
பல கட்டுரைகளிலும் உள்ள பதிப்புரிமை மீறல் உரைகளைக் கண்டறிந்து நீக்கி வருகிறீர்கள். இது யாரும் அவ்வளவு இலகுவாகச் செய்யாத பணி. தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தைப் பேண நீங்கள் எடுக்கும் முயற்சியைப் பாராட்டி இந்தச் சிறப்புப் பதக்கத்தை அளிக்கிறேன். இரவி (பேச்சு) 07:14, 2 செப்டம்பர் 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

நன்றி இரவி. யாராவது சண்டைக்கு வருவார்கள் என்று எதிர்பார்த்தேன். நீங்களோ பதக்கம் கொடுத்துப் பாராட்டுகிறீர்கள்! :) --Anton (பேச்சு) 10:10, 2 செப்டம்பர் 2013 (UTC)
வாழ்த்துக்கள். :) --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 15:56, 2 செப்டம்பர் 2013 (UTC)
சண்டைக்கு வந்தா என் பேச்சுப் பக்கத்துக்கு வழிமாத்தி விடுங்க :)--இரவி (பேச்சு) 19:19, 2 செப்டம்பர் 2013 (UTC)

மாதம் 1000 தொகுப்புகள் மைல்கல்

வணக்கம், AntanO!

நீங்கள் கடந்த மாதம் 1000 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்து மிகவும் முனைப்பான தமிழ் விக்கிப்பீடியராகத் திகழ்வதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். இதற்கு மேல் கடப்பதற்கு ஒரு மைல்கல்லும் இல்லை என்பதால் :), வழமை போல் மற்ற உரையாடல்கள் தொடர்பாக உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

--இரவி (பேச்சு) 08:54, 2 செப்டம்பர் 2013 (UTC)

-

நன்றி.நந்தினிகந்தசாமி (பேச்சு) 10:03, 2 செப்டம்பர் 2013 (UTC)

முதற் பக்க 'உங்களுக்குத் தெரியுமா' இற்றைப்படுத்தல் குறித்து...

வணக்கம் அன்டன்!

  • தங்களின் சுட்டிக்காட்டலுக்கு நன்றி; உரிய முறையில் செயல்படுத்தப்படும்.
  • வெவ்வேறு துறைகள் குறித்தத் தகவல்களை இடும் கண்ணோட்டத்திலேயே பரவலாகத் தேடி, நடப்பு வாரத்து பக்கத்தினை இற்றை செய்தேன்.
  • பரிந்துரைகளுக்கு இடமளிக்க வேண்டும் என்பது விக்கியின் உயர்ந்த கொள்கை என்பதினால்... ஒரு வாரம் 3 தகவல்கள், அடுத்த வாரம் 2 தகவல்கள் என மாறிமாறி பரிந்துரைகளை காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளேன். செப்டெம்பர் 4 முதல் இது செயல்படுத்தப்படும்.
  • தங்களின் பரிந்துரைகளை தொடர்ந்து இடுமாறு வேண்டுகிறேன்.
  • எனது இற்றைப்படுத்தலில்... தேவைப்படின், தயங்காது திருத்தங்கள் செய்ய வேண்டுகிறேன். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:45, 2 செப்டம்பர் 2013 (UTC)

வணக்கம்! பரிந்துரைகளை திரும்பப் பெற்றுக் கொள்வது பயனர்களின் சொந்த விருப்பம். எனினும் என்னுடைய செயல்பாடு காரணமாக தமிழ் விக்கிப்பீடியாவில் எவ்விதத் தவறான புரிதலும் நிகழ்ந்திட நான் விரும்பாததால், கீழ்க்காணும் தன்னிலை விளக்கத்தைத் தருகிறேன்:

  • நான் ஏற்கனவே தங்களின் பேச்சுப் பக்கத்தில் தெரிவித்திருந்தபடி... வெவ்வேறு துறைகள் குறித்தத் தகவல்களை இடும் கண்ணோட்டத்திலேயே பரவலாகத் தேடி, முதல் வாரத்து பக்கத்தினை இற்றை செய்தேன்.
  • தாங்கள் சுட்டிக்காட்டியபிறகு, பரிந்துரைப் பக்கத்திலிருந்தும் தகவல்களை எடுத்து இற்றை செய்தேன். கடந்த 3 வாரத்து இற்றைகளைக் கவனித்தால், 50% தகவல்கள், பரிந்துரைப் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டதைக் காணலாம்.
  • 'மற்றவர்களின் பரிந்துரைகளை கேட்கத் தேவையில்லை' என நான் நினைக்கவில்லை; தனித்துவமாக நான் விளங்கவேண்டும் என கருதவில்லை; என்னால் இயன்ற அளவு இப்பகுதியினை சிறப்பாக இற்றை செய்தல் வேண்டும் என்பதே எனது நோக்கம்.
  • ஒருமுறை முதற் பக்கம் இற்றையாகாமல் தோன்றியபோது, இனி நாம் எடுத்து செய்து மற்ற நிருவாகிகளின் வேலையினைப் பகிர்ந்துகொள்ளலாமே என்று எண்ணியே இந்த வேலையினை எடுத்துக் கொண்டேன்.
  • என்னுடைய நடவடிக்கையின் காரணமாகவே நீங்கள் உங்களின் பரிந்துரைகளை திரும்பப் பெற்றுக்கொண்டீர்கள் எனில், அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

நடைமுறை ஒழுங்கு இல்லாததால் பரிந்துரை பின்வாங்கப்படுகின்றது என்ற உங்களின் வாக்கியம், நான் எவ்வகையில் விதிமுறைகளை மீறினேன் எனும் கேள்வியினை என்னுள் எழுப்புகிறது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:12, 23 செப்டம்பர் 2013 (UTC)

திருவிளையாடல் கட்டுரைகளைக் கவனிக்க வேண்டுகோள்

வணக்கம் நண்பரே, பதக்கம் பெற்றமைக்கு வாழ்த்துகள். திருவிளையாடல் புராணம் தொடர்புடைய ஐந்து ஆறு பக்கங்களை பதிப்புரிமை மீறல் என்று நீக்கம் செய்திருக்கின்றீர்கள். மீதமிருக்கும் சில திருவிளையாடல் பக்கங்களையும் கண்டு அவற்றிலும் பதிப்புரிமை மீறல் இருக்கின்றதா என்று உறுதி செய்ய வேண்டுகிறேன். தினமலர் கோயில்கள் தளத்தில் மட்டுமே கட்டுரை வடிவில் திருவிளையாடல்கள் இருந்தமையால் அவற்றைப் படித்தே எழுத வேண்டியிருக்கிறது. அதனால் எல்லாவற்றையும் உறுதி செய்ய வேண்டுகிறேன். மீண்டும் அக்கட்டுரைகளை உரிய முறையில் எழுதுவதற்கு பிறருக்கு வாய்ப்புகிடைக்கும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 01:53, 3 செப்டம்பர் 2013 (UTC)

வணக்கம் ஜெகதீஸ்வரன், பதிப்புரிமை மீறல் இருந்தால் நீக்கல் வார்ப்புரு இடுங்கள். சிலவற்றைப் பார்த்தேன் பதிப்புரிமை மீறல் உள்ளதுபோல் உள்ளது. பதிப்புரிமை மீறாமல் திருத்தி எழுத முடியுமாவென்று பாருங்கள். --Anton (பேச்சு) 12:17, 4 செப்டம்பர் 2013 (UTC)
இதில் குழப்பம் உள்ளமையாலே, தங்களை அனுகியுள்ளேன் நண்பரே, உறுதி செய்தல் தங்களுடைய பொறுப்பு. :-) --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:20, 4 செப்டம்பர் 2013 (UTC)
கவனிக்கிறேன். --Anton (பேச்சு) 12:49, 4 செப்டம்பர் 2013 (UTC)
வடிவமைப்பு பணிகள், கட்டுரைகள் உருவாக்கம் இப்பணிகளுக்கு மத்தியில் கட்டுரைகளின் தரத்தினைப் பேனுவது கடுமையான பணியே. தாங்கள் சம்மதம் தெரிவித்தமைக்கு நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:55, 4 செப்டம்பர் 2013 (UTC)

வழிமாற்றுகள் நீக்கம்

அன்ரன், வழிமாற்றுகளை நீக்கும் போது அவ்வழிமாற்றுகள் இணைக்கப்பட்டிருக்கும் கட்டுரைகளிலும் திருத்தங்கள் செய்து, அவற்றில் சரியான தலைப்பை இட வேண்டும். இல்லையேல், தேவையற்ற சிவப்பு இணைப்புகள் தோன்றும்.--Kanags \உரையாடுக 21:18, 9 செப்டம்பர் 2013 (UTC)

பதக்கம்

சிறந்த பகுப்பாக்குனர் பதக்கம்
என்னுடைய படைப்பிற்கு காலம் ஒதுக்கியதோடு மட்டுமல்லாது, அறியாமல் பதிவேற்றிய புகைப்படத்தை திருத்திய ஆன்டன் அவர்களுக்கு என்னுடைய நன்றியோடு சிறந்த பகுப்பாக்குனர் என்ற பதக்கத்தையும் அளிப்பதில் மகிழ்கின்றேன். அல்லிக்கேணி பார்த்திபன் 07:18, 16 செப்டம்பர் 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

வாழ்த்துக்கள்

அன்டன், நீங்களும் தாரிக்கும் இணைந்து வடிவமைப்புக்களைக் குவிப்பதைப் பார்க்கப் பிரமிப்பாக உள்ளது. தமிழ் விக்கிக்குத் தனியான வடிவமைப்புப் பிரிவு உள்ளதோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. வாழ்த்துக்கள். ---மயூரநாதன் (பேச்சு) 14:34, 20 செப்டம்பர் 2013 (UTC)

உங்கள் வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்! --Anton (பேச்சு) 15:51, 20 செப்டம்பர் 2013 (UTC)

வேண்டுகோள்....

வணக்கம்! தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களின் பங்களிப்பை மகிழும்வகையில் 'பாராட்டுச் சான்றிதழ்' வழங்க திட்டமிட்டுள்ளோம். பத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் உள்ளது. இங்கு தங்களின் விவரங்களை இற்றைப்படுத்த வேண்டுகிறோம். மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:15, 27 செப்டம்பர் 2013 (UTC)

புதுப்பயனர் கட்டுரைகளை காலம் தாழ்த்தி நீக்க வேண்டுகோள்

வணக்கம் நண்பரே,

விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாடத்தின் தாக்கத்தினால் நிறைய புதுப்பயனர்கள் தற்போது களம் இறங்கியுள்ளார்கள் என்பது தெரிகிறது. அவர்களுக்கு விக்கியைப் பற்றிய அறிவு அதிகம் இல்லாதமையால் பதிப்புரிமையுள்ள உள்ளடக்கம், தெளிவற்ற உள்ளடக்கம் போன்ற கட்டுரைகளை துவங்குகிறார்கள். அவற்றை உடனே நீக்கம் செய்ய வேண்டாம். அது அவர்களுக்கு புரிதல் இல்லாமையால் விக்கியை விட்டு வெளியேறிவிடும் அபாயத்தினை தருகிறது. எனவே சில காலம் உடனடி நீக்குதலை செய்யாமல் அவர்களின் கட்டுரைகளில் மேலதிக விவரங்களை சேர்க்கவும், உரிய நடையில் எழுதவும் வழிகாட்டல் வார்ப்புருகளை இணைக்க வேண்டுகிறேன். (இவ்வாறான வார்ப்புரு இதுவரை தமிழ் விக்கிப்பீடியாவில் தொகுப்பாக இல்லை என்பதால் ஜெயரத்தின மாதரசன் அவர்களிடம் உருவாக்கி தர கோரிக்கை வைத்திருக்கிறேன். தாங்களும் இந்த வார்ப்புவை மேம்படுத்தி தர கோரிக்கை வைக்கிறேன்.) அத்துடன் புதுப்பயனர்களை வழிநடத்த அலோசனைகளும் கூற வேண்டுகிறேன். நன்றி--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:11, 30 செப்டம்பர் 2013 (UTC)

தங்கள் ஆலோசனை ஏற்றுக் கொள்ளத்தக்கதே. ஆயினும் பதிப்புரிமை மீறலை அனுமதிக்க முடியாது. வளர்ந்து வரும் நாடுகளில் இது பற்றிய விழிப்புணர்வு குறைவென நினைக்கிறேன். இது சட்டச் சிக்கலையும், கூகுளில் முறையிடும் பட்சத்தில் குறித்த தேடு சொற்களை பதிப்புரிமை மீறிய தளத்திற்கான தேடலிருந்து நீக்கக் கூடிய வாய்ப்புள்ளது. இவற்றையும் பார்க்க: {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}, {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}, பயன்பாட்டு விதிமுறைகள் புதுப்பயனர்களை வழிநடத்தல் பற்றிய அணுமுறையினை மேம்படுத்தல் அவசியமே. --Anton (பேச்சு) 08:07, 30 செப்டம்பர் 2013 (UTC)
பதிப்புரிமை மீறலை அனுமதிக்க கோரவில்லை நீக்கலை தாமதம் செய்ய வேண்டுகிறேன். பதிப்புரிமை மீறியதனால் நீக்கப்படலாம் என்பதை புதுப்பயனர் அறிய வேண்டும். கட்டுரை நீக்கப்படுவதால் ஏற்படும் அயற்சியை இது தவிர்க்கும். ஒரு வகையில் தங்களைப் போன்ற நிர்வாகிகளுக்கு இது கூடுதல் சுமை எனும் போதும் அதனை அன்புடன் ஏற்கும்படி வேண்டுகிறேன். புதுப்பயனரை தொடர் பயனராக மாற்றவே இவ்வாறு கோரிக்கை வைக்கிறேன். மற்றவர்களுக்கு இதனைப் பற்றி தெரியப்படுத்த வேண்டியே புதிய பயனர்களின் கட்டுரைகளில் சேர்க்க புதிய வார்ப்புரு அமைக்கப்பெற்றுள்ளது. அதினை பயன்படுத்த: {{புதுப்பயனர் கட்டுரை|புதுப்பயனரின் பெயர்|date=இன்றய திகதி}} என இடுக. இதில் புதுப்பயனரின் பெயரும், திகதி கட்டாயமல்ல. நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:40, 30 செப்டம்பர் 2013 (UTC)
தங்கள் நல்ல நோக்கத்திற்குப் பாராட்டுக்கள். ஆயினும் முன்னமே உள்ள நடைமுறைகளை விட்டு புதிதாக செயற்படுவது ஆரோக்கியமாக எனக்குப்படவில்லை. அல்லது நீங்கள் குறிப்பிடும் விடயங்கள் நடைமுறையில் சேர்க்கப்படல் நலம். பார்க்க: விக்கிப்பீடியா:துரித நீக்கல் தகுதிகள், en:Wikipedia:Criteria for speedy deletion. நடைமுறை அல்லது விதிமுறை இருப்பது நல்ல வளர்ச்சிக்கு உதவும் என்பது என் கருத்து. --Anton (பேச்சு) 13:05, 30 செப்டம்பர் 2013 (UTC)

அவதானிக்கவும்

தோழர் இங்கு குறிப்பிடப்பட்ட விடயம் தொடர்பாக அவதானிக்கவும் யூ எஸ் ஓப்பன்

இணைக்கவும்

நவரத்தினம் திரைபடத்தை இணைத்துவிடுங்கள்.இருப்பது தெரியாமல் எழுதிவிட்டேன்.நந்தினிகந்தசாமி (பேச்சு) 11:11, 1 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

கட்டுரைப் போட்டியை நிர்வகிக்க வேண்டுகோள்

தற்போது கட்டுரைப் போட்டியை நிர்வகிக்க இரவியும் நானும் இருக்கிறோம். வேலைப்பளு அதிகமாக உள்ளதால் நீங்களும் அதில் பங்கெடுக்குமாறு வேண்டுகிறேன். நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:33, 2 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

பங்கெடுக்கிறேன். --Anton (பேச்சு) 18:22, 2 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நன்றி. அண்டன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:46, 3 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

வணக்கம் அண்டன்! முதற் பக்கத்திலுள்ள 'தொடர் கட்டுரைப் போட்டி' குறித்த தகவல்களை இற்றைப்படுத்த வேண்டுகிறேன். படிமம், அவரே; ஆனால் உள்ளடக்கத்தை மாற்ற வேண்டும். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:28, 4 அக்டோபர் 2013 (UTC) தேவைப்படின் படிமத்தையும் மாற்றலாம்; மற்ற வெற்றியாளர்களையும் பெருமைப்படுத்தலாம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:53, 4 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

10 நாட்களின் பின் 2ம் மற்றும் சிறப்புப் பரிசு பெற்றவர்கள் குறித்த தகவல்களை இற்றைப்படுத்தலாமா? தேவையெனின் குறித்த பேச்சுப் பக்கத்தில் பரிந்துரைக்கலாம் என எண்ணுகிறேன். --Anton (பேச்சு) 03:59, 4 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

அருமையான யோசனை... 10-10-10 நாட்கள் என பிரித்து மூவரையும் சிறப்பிக்கலாம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:34, 4 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

தொடர்பு விபரம்

அன்ரன் தங்களைத் தொடர்பு கொள்ள விரும்புகின்றேன். தொலைபேசி எண்ணை தனி மடலிட முடியுமா?--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 16:04, 4 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று--Anton (பேச்சு) 01:29, 5 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

பதக்கம்

மெய்வாழ்வுப் பதக்கம்
விக்கிப் பத்திற்கு பல வடிவமைப்பு பணிகளில் உதவியுள்ளீர்கள். தங்களது வடிவமைப்புகளையும் தாரிக்கின் வடிவமைப்புகளையும் நண்பர்களிடம் காட்டிப் பெருமை படுவேன். எனக்கு வடிவமைப்பு தேவை என்று அவர்களை நாடுகையில் உடன் அமர்ந்து கருத்து கூற வேண்ட வேன்டும் என்று கூறுவர். ஆனால், இது போன்ற எதுவுமின்றி நீங்கள் இருவரும் கச்சிதமான வடிவமைப்புகளைச் செய்துதந்தீர்கள். நன்றி.... :) மெச்சுகிறேன்!  சூர்யபிரகாஷ்  உரையாடுக 13:57, 5 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

நன்றி சூர்யா! --Anton (பேச்சு) 15:25, 5 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

  1. 👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 18:12, 5 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  2. 👍 விருப்பம்--≈ உழவன் ( கூறுக ) 18:15, 5 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--பரிதிமதி (பேச்சு) 19:37, 5 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:AntanO&oldid=1510729" இலிருந்து மீள்விக்கப்பட்டது