சேக்கிழார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎இளமைப் பருவம்: *விரிவாக்கம்*
சி + கட்டுரையில் வேலை நடந்துகொண்டிருக்கிறது; using தொடுப்பிணைப்பி
வரிசை 1: வரிசை 1:
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}


[[படிமம்:சேக்கிழார்.PNG|thumb|250px|சேக்கிழார் நாயனார்]]
[[படிமம்:சேக்கிழார்.PNG|thumb|250px|சேக்கிழார் நாயனார்]]

09:11, 2 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்

சேக்கிழார் நாயனார்

சேக்கிழார் கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் தொண்டை நாட்டைச் சேர்ந்த புலியூர்க் கோட்டத்தில் உள்ள குன்றத்தூர் என்னும் ஊரில் பிறந்தவர். பல நூல்களையும் கற்றுச் சிறந்த புலமை மிக்கவராக விளங்கிய சேக்கிழார் இரண்டாம் குலோத்துங்க சோழனின் முதன் மந்திரியாக இருந்தார். இவரது திறமைக்காக இவருக்கு உத்தம சோழப் பல்லவராயன் என்ற பட்டமும் கிடைத்தது.

பிறப்பு

வெள்ளாளர் மரபில் வெள்ளியங்கிரி முதலியார் மற்றும் அழகாம்பிகை ஆகியோருக்கு முதல் மகனாக சேக்கிழார் தோன்றினார். இவருக்கு பெற்றோர் அருண்மொழித்தேவர் என்று பெயரிட்டனர். இவருக்கு பாலறாவாயர் என்ற தம்பியும் இருந்தார்.

இளமைப் பருவம்

சோழநாட்டு அரசனான அநபாயசோழருக்கு கடலினும் பெரியது எது உலகினும் பெரியது எது மலையினும் பெரியது என்ற கேள்விகள் தோன்றின. அநபாய சோழரின் அமைச்சராக இருந்த சேக்கிழாரின் தந்தை இந்தக் கேள்விகளுக்கு விடைதெரியாது தவித்த பொழுது, சேக்கிழார் விடையை அளித்தார். அதனை மன்னரிடம் கூறியமையால் சேக்கிழாருக்கு அமைச்சர் பதவியை அநபாய சோழர் அளித்தார்.

அமைச்சாராகுதல்

திருத்தொண்டர் புராணம் இயற்றுதல்

பெரியபுராணம் என்று அழைக்கப்படும் சைவத் தமிழ் நூலான திருத்தொண்டர் புராணத்தை இயற்றியவர் இவரே. சுந்தரமூர்த்தி நாயனார் இயற்றிய திருத்தொண்டத் தொகை, நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதி என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு 63 சைவ அடியார்களைப் பற்றி விரிவான நூலாகப் பெரியபுராணத்தை எழுதினார். இந் நூலை இயற்றும் நோக்குடன் சிதம்பரம் கோயிலுக்குச் சென்ற இவருக்கு சிவபெருமானே உலகெலாம் என அடியெடுத்துக் கொடுத்துப் பாடச் செய்தார் என்பது சைவர்களின் நம்பிக்கை.

திருத்தொண்டர் புராணச் சாரம், திருப்பதிக்கோவை, திருப்பதிகக்கோவை என்னும் மூன்று நூல்களும் சேக்கிழாரால் பாடப்பட்ட நூல்கள். [1]

இவற்றையும் பார்க்கவும்

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1972, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 74. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=சேக்கிழார்&oldid=1507968" இலிருந்து மீள்விக்கப்பட்டது