கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Sankmrt (பேச்சு | பங்களிப்புகள்)
சி 61.3.200.28 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1497006 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 4: வரிசை 4:
== வேறு சொற்கள்==
== வேறு சொற்கள்==
[[தமிழ்|தமிழில்]] கடலானது அரலை,அரி,அலை,அழுவம்,அளம்,அளக்கர்,ஆர்கலி, ஆலந்தை,ஆழி,
[[தமிழ்|தமிழில்]] கடலானது அரலை,அரி,அலை,அழுவம்,அளம்,அளக்கர்,ஆர்கலி, ஆலந்தை,ஆழி,
ஈண்டுநீர், உரவுநீர்,உவர்,உவரி,உவா,ஓதம்,ஓதவனம்,ஓலம், கடல்,கயம்,கலி,கார்கோள்,கிடங்கர், குண்டுநீர்,குரவை,சக்கரம்,சலதரம்,சலநிதி,சலராசி,சலதி,சுழி,தாழி,திரை,துறை,தெண்டிரை,தொடரல், தொன்னீர்,தோழம்,நரலை,நிலைநீர்,நீத்தம் நீந்து, நீரகம்,நிரதி,நீராழி,நெடுநீர், நெறிநீர்,பரப்பு,பரவை, பரு, பாரி,பாழி,பானல்,பிரம்பு,புணர்ப்பு,புணரி,பெருநீர், பௌவம்,மழு,முந்நீர், வரி,வலயம்,வளைநீர், வாரி, வாரிதி,வீரை,வெண்டிரை,வேழாழி,வேலை என பல சொற்களால் குறிப்பிடப்படுகிறது.
ஈண்டுநீர், உரவுநீர்,உவர்,உவரி,உவா,ஓதம்,ஓதவனம்,ஓலம், கடல்,கயம்,கலி,கார்கோள்,கிடங்கர், குண்டுநீர்,குரவை,சக்கரம்,சலதரம்,சலநிதி,சலராசி,சலதி,சுழி,தாழி,திரை,துறை,தெண்டிரை,தொடரல், தொன்னீர்,தோழம்,நரலை,நிலைநீர்,நீத்தம் நீந்து, நீரகம்,நிரதி,நீராழி,நெடுநீர், நெறிநீர்,பரப்பு,பரவை, பரு, பாரி,பாழி,பானல்,பிரம்பு,புணர்ப்பு,புணரி,பெருநீர், பௌவம்,மழு,முந்நீர், வரி,வலயம்,வளைநீர், வாரி, வாரிதி,வீரை,வெண்டிரை,வேழாழி,வேலை என பல சொற்களால் குறிப்பிடப்படுகிறது.<ref>''தமிழ்க் கழக அகராதி'', திருநெல்வேலி சைவ சித்தாந்த பதிப்பகம், ஆழ்வார்பேட்டை, சென்னை.</ref>.
-சுரேந்தர்,ஆரணி
<ref>''தமிழ்க் கழக அகராதி'', திருநெல்வேலி சைவ சித்தாந்த பதிப்பகம், ஆழ்வார்பேட்டை, சென்னை.</ref>.
<ref>[http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/ சென்னைப் பல்கலைக்கழக தமிழ் அகராதி (தமிழ் லெக்சிகன்) ] ]</ref>
<ref>[http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/ சென்னைப் பல்கலைக்கழக தமிழ் அகராதி (தமிழ் லெக்சிகன்) ] ]</ref>



16:13, 13 செப்டெம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

கடலும் மறையும் சூரியனும்

கடல் (sea) என்பது உப்பு நீர் நிரம்பிய மிகப் பெரிய அல்லது பரந்த நீர்நிலை ஆகும். பொதுவாக கடலானது பெருங்கடலுடன் இணைந்தோ அல்லது தனித்த நீர்நிலையாகவோ இருக்கலாம். உலகில் ஏறத்தாழ 146 கோடி கன கிலோ மீட்டர் தண்ணீர் நிறைந்துள்ளது. இதில் கடல்கள் மற்றும் நில உட்கடல்கள் 97.3 சதவீதமாகும். இதன் அளவு 144.5 கோடி கன கிலோ மீட்டர் ஆகும். மீதமுள்ள 2.7 சதவீதம் பனியாறுகள், பனிச்சிகரங்கள், நன்னீர் ஏரிகள், ஆறுகள், நிலத்தடிநீர் போன்றவைகளாகும்.

வேறு சொற்கள்

தமிழில் கடலானது அரலை,அரி,அலை,அழுவம்,அளம்,அளக்கர்,ஆர்கலி, ஆலந்தை,ஆழி, ஈண்டுநீர், உரவுநீர்,உவர்,உவரி,உவா,ஓதம்,ஓதவனம்,ஓலம், கடல்,கயம்,கலி,கார்கோள்,கிடங்கர், குண்டுநீர்,குரவை,சக்கரம்,சலதரம்,சலநிதி,சலராசி,சலதி,சுழி,தாழி,திரை,துறை,தெண்டிரை,தொடரல், தொன்னீர்,தோழம்,நரலை,நிலைநீர்,நீத்தம் நீந்து, நீரகம்,நிரதி,நீராழி,நெடுநீர், நெறிநீர்,பரப்பு,பரவை, பரு, பாரி,பாழி,பானல்,பிரம்பு,புணர்ப்பு,புணரி,பெருநீர், பௌவம்,மழு,முந்நீர், வரி,வலயம்,வளைநீர், வாரி, வாரிதி,வீரை,வெண்டிரை,வேழாழி,வேலை என பல சொற்களால் குறிப்பிடப்படுகிறது.[1]. [2]

கடல் நீரில் உள்ளவை

கடல்நீரில் ஏறத்தாழ 3.5 சதவீதம் வரை உப்புகள் கரைந்திருக்கின்றன. குளோரின், சோடியம், மக்னீசியம், கந்தகம், கால்சியம், பொட்டாசியம், புரோமின், ஸ்டிரான்ஷியம், போரான் போன்றவற்றுடன் மிக நுண்ணிய அளவில் கரி, சிலிக்கான், அலுமினியம், புளூரின், அயோடின் ஆகிய மூல உப்புகளும் காணப்படுகின்றன.மேலும் கடலில் ஏராளமான கடல் வாழ் உயிரினங்களும், முத்து, பவளம் போன்றவைகளும் உள்ளன.

அலைகள்

கடலுக்குள் எப்போதும் நீர் அலை மோதிக்கொண்டிருக்கிறது. இதற்கு சூரிய வெப்பமே காரணம். நிலநடுகோட்டுப் பகுதிகளில் சூரியனால் சூடேற்றப்பட்ட தண்ணீர் விரிவடைந்து ஒருசில அடி உயருகிறது. இவ்வாறு உயர்ந்த நீர் துருவப் பகுதிகளை நோக்கி வழிகிறது. பூமி கிழக்கு நோக்கி சுழன்று கொண்டிருப்பதால் கடல்நீர் மேற்கு பக்கமாக அடித்துச் சுருட்டப்படுகிறது.

பெருங்கடல்கள்

அத்திலாந்திக் பெருங்கடல்

அயர்லாந்தில் இருந்து அட்லாண்டிக் பெருங்கடலின் தோற்றம்

உலகின் இரண்டாவது மிகப்பெரிய கடல் இதுவாகும். இதன் மொத்தப் பரப்பு 106,4 மில்லியன் சதுர கிலோ மீட்டர் ஆகும். இது பூமியின் பரப்பில் சராசரியாக இருபது சதவிகிதம் ஆகும். இதன் மேற்கு பகுதியில் வட அமெரிக்க, தென் அமெரிக்க கண்டங்களும், கிழக்கு எல்கையில் ஐரோப்பாவும், ஆப்பிரிக்காவும் அமைந்துள்ளன. இக்கடலின் மிக ஆழமான பகுதி ப்யூரிடோ ரிகோ ஆகும். அட்லாண்டிக் கடலின் சராசரி ஆழம் 28,232 அடிகள் ஆகும். இதன் சராசரி ஆழம் 10,936 அடிகள் ஆகும்.

தென்முனைப் பெருங்கடல்

தென்முனைப் பெருங்கடல்(அன்டார்டிக் பெருங்கடல்)

.

அன்டார்க்டிக் நிலபரப்பைச் சூழ்ந்துள்ள கடல்பரப்பு ஆகும். இது பனிபாறைகள் நிரம்பிய ஒரு குளிர்ந்த கடல் ஆகும். இங்கு பத்து டிகிரி செல்சியஸ் முதல் மைனஸ் இரண்டு டிகிரி செல்சியஸ் வரையிலான தட்பவெட்ப நிலை நிலவுகிறது. இங்கு பனிப்பாறைகள் கடல் மட்டத்திற்கு கீழ் பல நூறு அடிகளுக்கு மிதந்துக் கொண்டிருக்கிறது. மார்ச் மாதங்களில் பனிப்பாறைகளின் பரப்பளவு 26 லட்சம் சதுர கி.மீ. ஆக இருக்கும். செப்டம்பர் மாதத்தில் இதன் பரப்பு குறைந்து 19.8 லட்சம் சதுர கி.மீ ஆக ஆகி விடுகிறது. இக்கடல் ராஸ் கடல், அமுன்ட்சென் கடல், வெடல் கடல் மற்றும் அன்டார்க்டிகா விரிகுடாக்களையும், இன்னும் பல விரிகுடாக்களையும் தன்னகத்தேக் கொண்டுள்ளது.

உலகின் நான்காவது பெருங்கடலாக விளங்குவது அன்டார்க்டிக் பெருங்கடல். இது பல நேரங்களில் தெற்கு பெருங்கடல் என அழைக்கப்படுகிறது. 2000 - ஆம் ஆண்டில் சர்வதேச நீர்பரப்பு ஆய்வு மையம் இக்கடலின் எல்லையை விரிவுபடுத்தி 60 டிகிரி தெற்கு ரேகைக்கு தெற்கே உள்ள கடல் பகுதிகளை அன்டார்க்டிக்காவுடன் இணைத்தது. தற்போது இதன் மொத்த பரப்பளவு இரண்டு கோடியே மூன்று லட்சத்து இருபத்தியேழாயிரம் சதுர கி.மீ. ஆகும். 4,000 முதல் 5,000 மீட்டர் ஆழம் காணப்படுகிறது.

இக்கடல் பகுதிகளில் மிகப் பெருமளவில் எண்ணெய் வளமும், இயற்கை எரிவாயு வளமும் நிறைந்துள்ளன. சீல் எனப்படும் கடல் சிங்கங்களும், திமிங்கலங்களும் இங்கு அதிகமாகக் காணப்படுகின்றன.

ஆர்டிக் பெருங்கடல்

ஆர்க்டிக் பெருங்கடல், உலகிலுள்ள பெருங்கடல்களுள் சிறியது. இது முழுவதுமாக ஆர்க்டிக் வட்டத்திற்கு மேல் அமைந்துள்ளது. இதன் மொத்தப் பரப்பளவு 14,090,000 சதுர கி.மீ. ஆகும். இதன் சராசரி ஆழம் 3,658 மீ. இதன் மிக அதிகபட்ச ஆழம் 4,665 மீ. ஆகும். இப்பெருங்கடல் முழுவதுமாக நிலப்பரப்பால் சூழப்பட்டுள்ளது. அலாஸ்கா - ரஷ்யா இடையே அமைந்துள்ள பேரிங் நீரிணையம், கிரீன்லாந்து - கனடா இடையே அமைந்துள்ள டேவிஸ் நீரிணையம், கிரீன்லாந்து - ஐரோப்பா இடையே அமைந்துள்ள டென்மார்க் நீரிணையம், நார்வேஜியன் கடல் போன்றவை ஆர்க்டிக் பெருங்கடலை வெளி உலகுடன் இணைக்கின்றன.

ஆர்க்டிக் பெருங்கடல் பூமி அடித்தட்டின் அடிப்படையில் இரு பகுதிகளாக பிரிக்கப்படுகிறது. அவை யுரேசியன் தட்டு, வட அமெரிக்கத் தட்டு ஆகும். ஆர்க்டிக் மற்றும் அட்லாண்டிக் கடல்களுக்கு இடையில் அவற்றின் விளிம்புகள் மூழ்கிய நிலையில் காணப்படுகின்றன. ஆர்க்டிக்கை சுற்றியுள்ள நிலப்பரப்புகளும், மூழ்கியுள்ள தட்டுப்பகுதிகளும் வெளி நீர் உட்புகாதவாறு தடுக்கின்றன. எனவே, இக்கடல் குளிர்ந்த நீர் நிறைந்த ஒரு நீர்த்தேக்கம் போல் உள்ளது.

ஆர்க்டிக் பெருங்கடலின் மையப்பகுதி நிரந்தரமாக பத்து அடி ஆழத்திற்கு பனிக்கட்டியாக உறைந்துள்ளது. வெயில் மாதங்களில் பனிக்கட்டிகளை சுற்றி நீர் சூழ்ந்து அவை மிதக்க துவங்கிவிடும். குளிர் மாதங்களில் வெயில் மாதங்களில் இருந்ததைப் போன்று இருமடங்கு அதிக பரப்பில் பனிக்கட்டி உறைந்து விடுகிறது.

ஆர்டிக் பெருங்கடல் அலைகளே இல்லாத பெருங்கடலாகும். இதில் கப்பற்பயணம் செய்ய முடியாது. குளிர்காலத்தில் உறைபனியாகவும், இதரப்பருவங்களில் பனிக்கட்டித் துண்டங்கள் மிதக்கும் பகுதியாகவும் இது விளங்குகிறது. 130 இலட்சம் ச.கி.மீ.க்கும் அதிகமான இடத்தை நிரப்பிக் கொண்டிருப்பதாலேயே பெருங்கடல் என்ற சிறப்புடன் இது அழைக்கப்படுகிறது.[3]

இந்தியப் பெருங்கடல்

இந்தியப் பெருங்கடல்

உலகிலுள்ள ஐந்து பெருங்கடல்களுள் பசிபிக், அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு அடுத்தபடியாக பெரிய கடலாக விளங்குவது இந்திய பெருங்கடல் ஆகும். தெற்கே தெற்கு பெருங்கடலும், மேற்கே ஆப்பிரிக்காவும், வடக்கே ஆசியாவும், கிழக்கே ஆஸ்திரேலியாவும் இப்பெருங்கடலின் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் மொத்த பரப்பளவு 6,85,56,000 சதுர கி.மீ. ஆகும்.

சர்வதேச நீர்பரப்பு ஆய்வு மையம் இரண்டாயிரமாண்டில் இந்திய பெருங்கடலின் எல்லைகளை வரையறை செய்தது. அதன்படி இந்திய பெருங்கடலின் தெற்கே 60 டிகிரிக்கு கீழ் உள்ள பகுதி பிரிக்கப்பட்டு தெற்கு பெருங்கடலின் (அன்டார்க்டிக்) எல்லை விரிவாக்கப்பட்டது.

இந்திய பெருங்கடலின் மிக ஆழமான பகுதி ஜாவா நீர்வழி ஆகும். இதன் ஆழம் 7,258 மீட்டர் ஆகும். இக்கடலில் அதிகமாக பெட்ரோலியப் பொருள்களும், இயற்கை எரிவாயுக்களும் இயற்கையாக, மிகுதியாக காணப்படுகின்றன. உலக பெட்ரோலிய பொருள்கள் உற்பத்தியில் 40 சதவிகிதம் இந்தியப் பெருங்கடலிலிருந்து கிடைக்கிறது. மீன் போன்ற கடல் உணவுப் பொருள்கள் அதிக அளவில் கிடைப்பது இக்கடலின் மற்றுமொரு இயற்கை வளமாகும். இந்திய பெருங்கடல் நாடுகள் உட்பட ரஷ்யா, ஜப்பான், தென்கொரியா, தாய்வான் நாட்டு மீன்பிடி கப்பல்கள் இதை தங்கள் மீன்பிடித் தளமாக பயன்படுத்துகின்றன.

இந்திய பெருங்கடல் முக்கியமான கடல்பாதைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. மத்திய கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் கிழக்கு ஆசியா பகுதிகளை இது ஐரோப்பாவுடன் இணைக்கிறது.

பசிபிக் பெருங்கடல்

பசிபிக் பெருங்கடல்

உலகின் மிகப்பெரும் பரப்பளவை தன்னகத்தே கொண்ட பெருங்கடல் பசிபிக் (Pacific Ocean) ஆகும். பசிபிக் என்பதன் லத்தின் பொருள் அமைதியான கடல் என்பதாகும். வடக்கே ஆர்க்டிக் கடல் முதல் தெற்கே தென்கடல் வரை இது பரந்து விரிந்துள்ளது. மேற்கில் ஆஸ்திரேலியாவும், ஆசியாவும், கிழக்கே அமெரிக்கக் கண்டங்களும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. பதினாறு கோடியே தொண்ணுத்திரெண்டு லட்சம் ச.கி.மீ. பரப்பளவில் இக்கடல் அமைந்துள்ளது. சுமாராக 62 புள்ளி 2 கோடி கனசதுர கி.மீ. நீரை இக்கடல் கொண்டுள்ளது. உலக நீர் இருப்பில் 46 சதவிகிதத்தையும், உலகின் மொத்தப் பரப்பளவில் 30 சதவிகிதத்தையும் இக்கடல் கொண்டுள்ளது.

உலகிலேயே பெரிய கடல் பசிபிக் பெருங்கடலாகும். பூமியின் பரப்பளவில் 35.25 சதவிகிதம் கொண்டது. உலகிலேயே ஆழம் கூடிய மிண்டானா பகுதி இதிலுள்ளது. இதன் ஆழம் 11,516 மீட்டர். உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான தீவுகளும் இக்கடலில் தான் உள்ளன.

வடமேற்கு பசிபிக் கடலில் உள்ள மரியானா ட்ரென்ச் என்ற பகுதியே உலகிலேயே ஆழமான கடல் பகுதி ஆகும். இதன் ஆழம் 10,911 மீட்டர். பசிபிக்கின் சராசரி ஆழம் 4028 முதல் 4188 மீட்டர் ஆகும். இக்கடலில் சுமார் 25,000 தீவுகள் உள்ளன. பெரும்பாலான தீவுகள் தென் பசிபிக்கிலேயே கண்டறியப்பட்டுள்ளன. அவற்றுள் சில கடலில் மூழ்கி உள்ளன. பெரும்பாலானவை உயரமான தீவுகள். தற்போது பூமி தட்டின் நகர்வினால் பசிபிக் கடல் சுருங்கி வருகிறது. மாறாக அட்லாண்டிக் கடல் விரிவடைந்து வருகிறது. சராசரியாக ஆண்டிற்கு அரை கிலோ மீட்டர் சுருங்குகிறது.

பசிபிக் கடலின் மேற்கு எல்லையில் பல கடல்கள் அமைந்துள்ளன. அவை செலிபஸ் கடல் (Celebes Sea), கோரல் கடல் (Coral Sea), கிழக்குச் சீன கடல், ஜப்பான் கடல், தென் சீன கடல், சுலு கடல் (Sulu Sea), பிலிபைனி கடல் (Philippine Sea), டாஸ்மான் கடல் (Tasman Sea) மற்றும் மஞ்சள் கடல் போன்றவை ஆகும்.

கடல்கள்

அரபிக்கடல்

இந்தியாவிற்கு மேற்கே அமைந்துள்ள கடல் பகுதி அரபிக்கடல் என அழைக்கப்படுகிறது. இது பண்டைக் காலத்திலும், இடைக்காலத்திலும் பச்சிம் சமுத்திரம் என அழைக்கப்பட்டது. இக்கடலின் கிழக்கே இந்தியாவும், மேற்கே சவுதி அரேபியாவும் - ஆப்பிரிக்காவும், வடக்கே ஈரானும் - பாகிஸ்தானும், தெற்கே இந்தியப் பெருங்கடலும் அமைந்துள்ளன.

இக்கடலின் மிக அகலமான பகுதி ஏறத்தாழ 2400 கி.மீ. ஆகும். தெற்கில் இக்கடல் இந்தியப் பெருங்கடலுடன் கலப்பதால் இதன் தெற்கு எல்லையை அறுதியிட்டு கூற இயலாது. சிந்து, நர்மதை, தபதி ஆறுகள் இக்கடலில் கலக்கின்றன. ஓமன் வளைகுடா இதனை பாரசீக வளைகுடாவுடனும், ஏடன் வளைகுடா இதனைச் செங்கடலுடனும் இணைக்கின்றன. இக்கடலின் கரையில் ஏடன், கராச்சி, பம்பாய், கொச்சி போன்ற பெரிய துறைமுகங்களும், பல புகழ்பெற்ற நகரங்களும் அமைந்துள்ளன.

ஆரல் கடல்

ஆரல் கடல் ( Aral sea ) என்பது துர்க்கிஸ்தான் பகுதியில் காஸ்பியன் கடலுக்குக் கிழக்கே 240 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மிகப் பெரியதோர் உப்புநீர் ஏரியாகும். இந்த ஏரி உலகிலேயே நில உட்பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய நீர்நிலை ஆகும். இதன் மொத்த பரப்பளவு 66,459 சதுர கி.மீ. ஆகும். இது 17 முதல் 68 மீட்டர் ஆழமுடையது. ஆரல் கடலில் பல தீவுகள் அமைந்துள்ளன. அமுதாரியா (Amu Darya), சைர் தாரியா ( Syr Darya ) ஆகிய ஆறுகள் இக்கடலில் கலக்கின்றன.

அயோனியன் கடல்

அயோனியன் கடல் ( Ionian Sea ) என்பது மத்தியத் தரைக்கடலின் ஆழமிக்க பகுதியாகும். இக்கடல் இத்தாலியையும் - சிசிலியையும், அல்பேனியாவிலிருந்தும் - கிரீசிலிருந்தும் பிரிக்கிறது. இக்கடலையும் அட்ரியாடிக் (Adriatic) கடலையும் ஆட்ராண்டோ நீர்ப்பிரிவு ( Strait of Otranto ) இணைக்கிறது. இக்கடலின் அகலம் 676 கி.மீ. ஆகும். சில பகுதிகளில் இக்கடலின் ஆழம் 5093 மீட்டர் ஆகும்.

இன்லான்ட் கடல்

ஜப்பான் நாட்டில் பசிபிக் பெருங்கடலில் கால்வாய் போன்று அமைந்துள்ளது இன்லான்ட் கடல் (Inland sea). இது தென் ஜப்பானில் ஹான்சிகோக், கியூஸ் ஆகிய தீவுகளுக்கிடையில் உள்ளது. ஆழம் குறைந்த இக்கடலில் 950 க்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. இதன் மொத்த நீளம் 9505 கி.மீ. ஆகும். இது குறுகிய கால்வாய் ஒன்றின் மூலம் ஜப்பான் கடலுடன் இணைக்கப்பட்டுள்ளது. இன்லான்ட் கடலின் கடற்கரைகளில் மக்கள் தொகை மிகுதி. இக்கடல் இயற்கை எழிலுடன் புகழ்பெற்று விளங்குகிறது.

வங்காள விரிகுடா

வங்காள விரிகுடாக் கடல்

இந்தியாவின் கிழக்கே எல்லையாக அமைந்திருப்பது வங்காள விரிகுடா (Bay of Bengal) ஆகும். இது 21 லட்சத்து 73 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்தியப் பெருங்கடலின் வடகிழக்கே இக்கடல் அமைந்துள்ளது. இதன் மேற்கே இந்தியாவும், இலங்கையும் எல்லையாக உள்ளன. வடக்கே பங்களாதேசமும், மியான்மரும் (பர்மா), கிழக்கே பெனின்சுலாவும், தெற்கே இலங்கையின் தென் முனையும், இந்தோனேஷியாவின் சுமத்திரா தீவு வரையிலான கடலும் வங்காள விரிகுடாவின் எல்லைகளாக உள்ளன.

இக்கடலின் மேற்கே பல முக்கியமான ஆறுகள் கலக்கின்றன. மகாநதி, கோதாவரி, கிரிஷ்ணா மற்றும் காவேரி போன்றவையே அவையாகும். வடக்கே பிரம்மபுத்திரா ஆறும் இக்கடலில் கலக்கின்றன. இக்கடலில் அமைந்துள்ள ஒரே தீவுக் கூட்டம் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகும். இதன் சராசரி ஆழம் 2,600 மீட்டர் ஆகும். இக்கடலின் அதிகபட்ச ஆழம் 4,694 மீட்டர்.

வங்காள விரிகுடாவில் எண்ணெய் வளமும், இயற்கை எரிவாயு வளமும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. அதிகமான கனிமவளம் நிறைந்த மண் இக்கடலில் நிறைந்துள்ளது. இங்கு அதிகமான மீன் வளம் உள்ளதால் கடற்கரை நாடுகளும், ஜப்பான் நாடும் மீன்பிடித்தலில் ஈடுபடுகின்றன. இக்கடல் பல பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த கடல்வழிகளைக் கொண்டுள்ளது. அவை பல சர்வதேச துறைமுகங்களை பங்களாதேஷ், இலங்கை மற்றும் இந்தியாவின் கிழக்கு துறைமுகங்களுடன் இணைக்கின்றன.

பெருங்கடல் வாரியாக கடல்களின் பட்டியல்

அட்லாண்டிக் பெருங்கடல்

  • அர்கெந்தீனக் கடல்
  • பபின் குடா
  • சென். லாரன்ஸ் வளைகுடா
  • ஃபண்டி வளைகுடா
  • கரிபியன் கடல்
  • மெக்சிக்கோ வளைகுடா
  • சர்கசோ கடல்
  • வடகடல்
  • சேஸபீக் குடா
  • பால்டிக் கடல்
  • மத்திய பால்டிக் கடல்
  • போத்னியா வளைகுடா
  • போத்னியா குடா
  • போத்னியக் கடல்
  • பின்லாந்து வளைகுடா
  • ஹெப்ரைட்ஸ் கடல்
  • ஐரிஷ் கடல்
  • செல்டிக் கடல்
  • ஆங்கிலக் கால்வாய்
  • மத்தியதரைக் கடல்
  • ஏட்ரியாட்டிக் கடல்
  • ஈஜியன் கடல்
  • மிர்தூன் கடல்
  • கிரீட் கடல்
  • திரேசியன் கடல்
  • அல்போரன் கடல்
  • மர்மரா கடல்
  • கருங்கடல்
  • அசோவ் கடல்
  • கட்டாலன் கடல்
  • அயோனியன் கடல்
  • லிகுரியக் கடல்
  • திர்ரேனியக் கடல்
  • சித்ரா வளைகுடா

அன்டார்டிக் பெருங்கடல்

  • வேட்டெல் கடல்
  • ரோஸ் கடல்
  • கிரேட் ஆத்திரேலிய பைட்
  • சென். வின்சன்ட் வளைகுடா
  • ஸ்பென்சர் வளைகுடா
  • ஸ்காட்டியாக் கடல்
  • அமுன்சென் கடல்
  • பெல்லிங்க்ஷுசென் கடல்
  • டேவிஸ் கடல்

ஆர்க்டிக் பெருங்கடல்

  • ஹட்சன் குடா
  • ஜேம்ஸ் குடா
  • பேரன்ட்ஸ் கடல்
  • காராக் கடல்
  • பியூபோர்ட் கடல்
  • அமுன்சென் வளைகுடா
  • கிறீன்லாந்து கடல்
  • நோர்வே கடல்
  • சுக்சிக் கடல்
  • லப்டேவ் கடல்
  • கிழக்கு சைபீரியக் கடல்
  • வெண் கடல்
  • லிங்கன் கடல்

இந்தியப் பெருங்கடல்

  • செங்கடல்
  • ஏடென் குடா
  • பாரசீக வளைஇகுடா
  • ஓமான் வளைகுடா
  • அரபிக்கடல்
  • வங்காள விரிகுடா
  • அந்தமான் கடல்
  • திமோர் கடல்

பசிபிக் பெருங்கடல்

  • சிலியன் கடல்
  • பெரிங் கடல்
  • அலாஸ்கா வளைகுடா
  • சலிஷ் கடல்
  • கலிபோர்னிய வளைகுடா
  • ஒக்கொட்ஸ் கடல்
  • ஜப்பான் கடல்
  • செடோ உள்நாட்டுக் கடல்
  • கிழக்கு சீனக் கடல்
  • தெற்கு சீனக் கடல்
  • சூலு கடல்
  • செலேபெஸ் கடல்
  • மிண்டானோக் கடல்
  • பிலிப்பைன் கடல்
  • கமோட்ஸ் கடல்
  • ப்லோரெஸ் கடல்
  • பண்டா கடல்
  • அரபுராக் குடல்
  • தீமோர் கடல்
  • தாஸ்மான் கடல்
  • மஞ்சள் கடல்
  • பொகாய்க் கடல்
  • கோரல் கடல்
  • கார்பெண்டாரிய வளைகுடா
  • பிஸ்மார்க் கடல்
  • சொலொமன் கடல்
  • செரம் கடல்
  • ஹல்மஹெறக் கடல்
  • மொலுக்கக் கடல்
  • சாக்கடல்
  • ஜாவாக் கடல்
  • தாய்லாந்து வளைகுடா

நிலம் சூழ் கடல்கள்

  • ஆரல் கடல்
  • காஸ்பியன் கடல்
  • சாக்கடல்
  • கலிலேயக் கடல்
  • சால்டன் கடல்
  • உப்புப் பேரேரி

மேலும் பார்க்க

உசாத்துணை

மேற்கோள்கள்

  1. தமிழ்க் கழக அகராதி, திருநெல்வேலி சைவ சித்தாந்த பதிப்பகம், ஆழ்வார்பேட்டை, சென்னை.
  2. சென்னைப் பல்கலைக்கழக தமிழ் அகராதி (தமிழ் லெக்சிகன்) ]
  3. தகவல் களஞ்சியம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடல்&oldid=1497031" இலிருந்து மீள்விக்கப்பட்டது