சர் இராமசாமி முதலியார் மேல்நிலைப் பள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 32: வரிசை 32:
ஏப்ரல் [[2010]]-ஆம் ஆண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அன்புச்செல்வன் என்ற மாணவர் 492 மதிப்பெண்கள் பெற்று [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர் மாவட்டத்தில்]] முதலிடமும் யுவனேஷ் என்ற மாணவர் 491 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் இரண்டாம் இடமும் பெற்றுள்ளனர்.<ref>[http://www.maalaimalar.com/2010/05/26124602/sslc-exam-results.html மாலைமலர்]</ref>
ஏப்ரல் [[2010]]-ஆம் ஆண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அன்புச்செல்வன் என்ற மாணவர் 492 மதிப்பெண்கள் பெற்று [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர் மாவட்டத்தில்]] முதலிடமும் யுவனேஷ் என்ற மாணவர் 491 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் இரண்டாம் இடமும் பெற்றுள்ளனர்.<ref>[http://www.maalaimalar.com/2010/05/26124602/sslc-exam-results.html மாலைமலர்]</ref>


மோகன் குமார் என்ற மேனிலைப் பிரிவு மாணவர் 2013 ஆகத்தில் நான்சிங்கில் நடைப்பெற்ற ஆசிய இளைஞர் ஒலிம்பிக் போட்டிகளில் 200 m, 400 m தடகளப் பிரிவுகளில் கலந்து கொள்ளத் தமிழகம் சார்பாகச் சென்று வயது மிகைமை காரணத்தினால் பங்கேற்க இயலாமல் திரும்பினார்.
மொஹன் என்ட்ர மாணவன் உலக அலவில் '


==முன்னாள் மாணவர்கள்==
==முன்னாள் மாணவர்கள்==

08:40, 28 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம்

சர் ராமசுவாமி முதலியார் மேல்நிலைப்பள்ளி
சர் ராமசுவாமி முதலியார் மேல்நிலைப்பள்ளி
அமைவிடம்
அம்பத்தூர், சென்னை, தமிழ் நாடு
தகவல்
குறிக்கோள்முயற்சி திருவினையாக்கும்
தொடக்கம்1958
நிறுவனர்அ.மு.மு.நிறுவனம்
பள்ளி மாவட்டம்திருவள்ளூர்
கல்வி ஆணையம்முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்
தலைமை ஆசிரியர்ஜி. வெங்கடாசலம்
தரங்கள்ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை
பால்இருபால் மாணவர்கள்
மாணவர்கள்3291
கல்வி முறைதமிழ்நாட்டு மாநில கல்வித்திட்டம்

இப்பள்ளி சென்னையை அடுத்துள்ள அம்பத்தூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஆகும். இது ஆற்காடு சர் ராமசுவாமி முதலியாரின் நினைவை நிலைநிறுத்தும் வண்ணம் 1958இல் அ.மு.மு. அறக்கட்டளையினால் (A.M.M.Charities Trust) தொடங்கப்பட்ட பள்ளி ஆகும். கடந்த 2008-ஆம் ஆண்டு பொன்விழா கண்ட பெருமை இப்பள்ளிக்குச் சாரும். 13-ஏக்கர் நிலத்தில் 60 லட்ச ரூபாய் (அன்றைய) மதிப்பில் இப்பள்ளி அ.மு.மு.நிறுவனத்தால் (A.M.M.Foundation) நிறுவப்பட்டது. 1978-இல் இருபாலர் மேல்நிலைப்பள்ளியாக மேம்படுத்தப்பட்டது. தற்போது மூவாயிரத்துக்கும் மேலான மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கி வருகின்றது. பள்ளியின் உட்கட்டமைப்பு மற்றும் நிருவாகத்தை அ.மு.மு.நிறுவனம் செய்து வருகிறது.

பள்ளி வரலாறு

சர் இராமசாமி முதலியார்

அம்பத்தூர்-வெங்கடாபுரத்தில் நடேச அய்யரால் தொடங்கப்பட்ட திண்ணைப்பள்ளி தான் இன்றைய ஆலமரமான எஸ்.ஆர்.எம்.மேனிலைப்பள்ளியின் வித்தாகும். 1927 ஆம் ஆண்டில் அம்பத்தூர் கல்விக்கழகத்தால் (அ.க.கழகம்) தத்தெடுக்கப்பட்ட இப்பள்ளி ஸ்ரீ மகா கணேசா வித்யாலயா என்ற பெயரில் இயங்கி வந்தது. 1950-களில் நிகழ்ந்த தொழில் விரிவு அம்பத்தூரை மையங்கொண்டிருந்தது; அவ்விரிவாக்கத்தில் முக்கிய பங்காற்றிய தொழிலதிபர்கள் அ.மு.மு.முருகப்ப செட்டியார் மற்றும் அ.மு.மு.அருணாச்சலம் ஆகியோர். வேகமாக வளர்ந்து வந்த அம்பத்தூருக்கு ஒரு உயர்நிலைப்பள்ளியின் தேவையை உணர்ந்த அம்பத்தூர் கல்விக்கழகத்தார் இவ்விரு தொழிலதிபர்களையும் சந்தித்துப் பேசினர். அ.க.கழகம் மனமுவந்து அளித்த ஸ்ரீ மகா கணேசா வித்யாலயாவை அ.மு.மு.அறக்கட்டளை 12-09-1957 அன்று முறைப்படி ஏற்றுக்கொண்டது.

பல புதிய திட்டங்களோடு பள்ளியின் வளர்ச்சியை மேம்படச் செய்தது அ.மு.மு.அறக்கட்டளை. பள்ளியின் முதல் தாளாளர் எம்.எம். முத்தைய்யா மற்றும் முதல் தலைமையாசிரியர் சி.ஆர்.இராமனாதன் ஆகியோரின் சீரிய முயற்சியால் பள்ளி மென்மேலும் வளர்ந்தது.

1958இல் பொதுக்கல்வித் துறையின் (D.P.I.) ஒப்புதல் பெற்று முறையே பள்ளியில் நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது படிவம் வகுப்புகள் தொடங்கப்பட்டன. பள்ளியும் தற்போதுள்ள இடமான சென்னை-திருவள்ளூர் நெடுஞ்சாலைக்கு இடம் மாற்றப்பட்டது. நிரந்தரமான உட்கட்டமைப்பு வசதிகளை கோரமாண்டல் பொறியியல் நிறுவனம் மிகக்குறுகிய காலகட்டத்தில் செய்து தந்தனர். 22-6-1960 இல் அன்றைய தமிழக முதலமைச்சர் காமராசர் முன்னிலையில் கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியம் சர் ராமசுவாமி முதலியாரின் உருவப்படத்தைத் திறந்து வைத்ததன் மூலம் பள்ளி புதிய சகாப்தத்தை நோக்கி அடியெடுத்து வைத்தது. பிறகு 4-07-1960 அன்று பள்ளியைக் காண வருகை புரிந்தனர் அ.மு.மு.முருகப்ப செட்டியார் மற்றும் அ.மு.மு.அருணாச்சலம் - அவர்களுடன் வந்தார் சர் ராமசுவாமி முதலியார். அன்று தொடங்கியது தான் இன்று சர் இராமசாமி முதலியார் மேல்நிலைப்பள்ளி என்று அம்பத்தூரில் அனைவராலும் அறியப்படும் பள்ளி.

மாணவர்களின் சாதனைகள்

ஏப்ரல் 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அன்புச்செல்வன் என்ற மாணவர் 492 மதிப்பெண்கள் பெற்று திருவள்ளூர் மாவட்டத்தில் முதலிடமும் யுவனேஷ் என்ற மாணவர் 491 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் இரண்டாம் இடமும் பெற்றுள்ளனர்.[1]

மோகன் குமார் என்ற மேனிலைப் பிரிவு மாணவர் 2013 ஆகத்தில் நான்சிங்கில் நடைப்பெற்ற ஆசிய இளைஞர் ஒலிம்பிக் போட்டிகளில் 200 m, 400 m தடகளப் பிரிவுகளில் கலந்து கொள்ளத் தமிழகம் சார்பாகச் சென்று வயது மிகைமை காரணத்தினால் பங்கேற்க இயலாமல் திரும்பினார்.

முன்னாள் மாணவர்கள்

தகவல் ஆதாரம்

மேற்கோள்கள்

  1. மாலைமலர்