செட்டிநாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 136: வரிசை 136:
* [http://www.hinduonnet.com/fline/fl1717/17170650.htm Roja Muthiah chettiar - Article from Frontline - Sep 2000]
* [http://www.hinduonnet.com/fline/fl1717/17170650.htm Roja Muthiah chettiar - Article from Frontline - Sep 2000]
North America Nagarathar site * [http://www.achi.org NSNA]
North America Nagarathar site * [http://www.achi.org NSNA]

[[பகுப்பு:நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள்]]

07:25, 11 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம்

செட்டிநாடு
செட்டிநாடு

செட்டிநாடு என்பது தமிழ்நாடு|தமிழ்நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 56 ஊர்களையும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 20 ஊர்களையும் கொண்ட நிலப்பரப்பு ஆகும். [1] இவ்வூர்களில் தனவணிகர்கள் என்றும் நகராத்தார் என்றும் அழைக்கப்படும் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் பெரும்பான்மையினராக வாழ்வதால் இப்பகுதி செட்டிநாடு என அழைக்கப்படுகிறது.

செட்டிநாட்டின் எல்லைகள்

செட்டி நாட்டிற்கு கிழக்கே வங்காள விரிகுடாவும் மேற்கே சிவகங்கை, திருப்பத்தூர் ஆகியனவும் தெற்கே தேவகோட்டையும் வடக்கே புதுக்கோட்டையும் அமைந்து உள்ளன.

செட்டிநாட்டு ஊர்கள்

சோழநாட்டின் பூம்புகார் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து பாண்டிய நாட்டிற்கு வந்த நகரத்தார்கள் 96 ஊர்களில் நிலைகொண்டு வாழ்ந்தனர் என்றும் தற்பொழுது அவ்வூர்களின் எண்ணிக்கை 76ஆக சுருங்கிவிட்டது எனவும் கருதப்படுகிறது. இந்த 76 ஊர்களை பேராசிரியர் முனைவர் அர. சிங்காரவேலன் பின்வரும் இரண்டு வெண்பாகளில் பட்டியலிட்டுள்ளார்: [2]

கோட்டையிலே மூன்று குடிகளிலே ஆறாகும்
பாட்டைவளர் பட்டிஇரு பத்தொன்று - நாட்டமிகும்
ஊர்பத்தாம் ஏரிகுளம் ஊருணி ஒவ்வொன்றாம்
சேர்வயல்கள் ஐந்தென்று செப்பு.
மங்கலம் மூன்றுவரம் ஒன்றே ஆறுபுரம்
திங்கள்வகை ஒவ்வொன்று சீர்புரிகள் நான்கு
பிறஊர்கள் பத்து சிலைகுறிச்சி ஒன்றோ(டு)
அறம்வளர்ப்பார் ஊர்எழுபத் தாறு.

இவ்வெண்பாகளின்படி தற்போதைய செட்டிநாட்டில் அடங்கும் ஊர்கள் வருமாறு:

  1. அலாவக்கோட்டை
  2. தேவகோட்டை
  3. நாட்டரசன்கோட்டை
  4. அரியக்குடி
  5. ஆத்தங்குடி
  6. காரைக்குடி
  7. கீழப்பூங்குடி
  8. பலவான்குடி
  9. பனங்குடி
  10. ஆவினிப்பட்டி
  11. உலகம்பட்டி
  12. கடியாபட்டி என்னும் இராமச்சந்திரபுரம்
  13. கந்தவராயன்பட்டி
  14. கண்டவராயன்பட்டி
  15. கல்லுப்பட்டி
  16. கீழச்சிவல்பட்டி
  17. குருவிக்கொண்டான்பட்டி
  18. கொப்பனாபட்டி
  19. சிறுகூடற்பட்டி
  20. பனையப்பட்டி
  21. பொன்புதுப்பட்டி
  22. மகிபாலன்பட்டி
  23. மதகுப்பட்டி
  24. மிதிலைப்பட்டி
  25. தேனிப்பட்டி
  26. நற்சாந்துபட்டி
  27. நேமத்தான்பட்டி
  28. வலையபட்டி
  29. வேகுப்பட்டி
  30. வேந்தன்பட்டி
  31. அமராவதி புதூர்
  32. ஆ. தெக்கூர்
  33. உறையூர்
  34. ஒக்கூர்
  35. கண்டனூர்
  36. கோட்டையூர்
  37. செம்மபனூர்
  38. செவ்வூர்
  39. பள்ளத்தூர்
  40. வெற்றியூர்
  41. பாகனேரி
  42. கருங்குளம்
  43. தாணிச்சாவூரணி
  44. அரண்மனை சிறுவயல்
  45. ஆறாவயல்
  46. உ. சிறுவயல்
  47. சிறாவயல்
  48. புதுவயல்
  49. காளையார்மங்கலம்
  50. கொத்தமங்கலம்
  51. பட்டமங்கலம்
  52. ராயவரம்
  53. கொத்தமங்கலம் லட்சுமிபுரம்
  54. சொக்கனாதபுரம்
  55. சோழபுரம்
  56. நடராஜபுரம்
  57. நாச்சியாபுரம்
  58. வி. லட்சுமிபுரம்
  59. குழிபிறை
  60. விராமதி
  61. கே. அழகாபுரி
  62. கொ. அழகாபுரி
  63. கோட்டையூர் அழகாபுரி
  64. மேலச் சிவபுரி
  65. விரையாச்சிலை
  66. பூலாங்குறிச்சி
  67. அரிமளம்
  68. கண்டரமாணிக்கம்
  69. கல்லல்
  70. கானாடுகாத்தான்
  71. கோனாபட்டு
  72. சக்கந்தி
  73. நெற்குப்பை
  74. நேமம்
  75. மானகிரி
  76. ராங்கியம்

கோயில்கள்

செட்டிநாட்டில் உள்ள இளையாத்தன்குடி, மாத்தூர், வைரவன்கோயில், நெமங்கோயில், இலுப்பைக்குடி, சூரைக்குடி, வேலங்குடி, இரணிகோயில், பிள்ளையார்பட்டி ஆகிய ஒன்பது கோயில்கள் நகரத்தார்களின் கோயில்களாகக் கருதப்படுகின்றன. அந்தந்தக் கோயிலைச் சுற்றி அமைந்துள்ள ஊர்களில் வாழும் மக்கள் அக்கோயிலின் பங்காளிகள் என அழைக்கப்படுகின்றனர். அக்கோயில்களை பேராசிரியர் முனைவர் அர. சிங்காரவேலன் பின்வரும் வெண்பாவில் பட்டியல் இடுகிறார்: [3]

பிள்ளையார் பட்டியின் வயிரவன் கோயில்
எல்லையுள நேமம் இரணியூர் மாற்றூர்
இதரக் குடியிரண்டும் ஏனை இரண்டும்
நகரத்தார் கோயில் நகர்.

சான்றடைவு

  1. இராமச்சந்திரன் ச; நினைவில் வாழும் பதிப்புச்செம்மல் முனைவர் ச. மெய்யப்பன்; மணிவாசகர் பதிப்பகம், சென்னை; மு.பதி. சூலை 2004; பக். 6
  2. நித்யா சரஸ்வதி; செட்டிநாட்டு இலக்கியவாணர் அர. சிங்காரவடிவேலன்; பல்சுவை காவியம், மே - 2013 இதழ், சென்னை; பக்.42
  3. நித்யா சரஸ்வதி; செட்டிநாட்டு இலக்கியவாணர் அர. சிங்காரவடிவேலன்; பல்சுவை காவியம், மே - 2013 இதழ், சென்னை; பக்.45


மேலும் காண்க


Aruviyur Nagarathar

வெளி இணைப்புகள்

North America Nagarathar site * NSNA

"https://ta.wikipedia.org/w/index.php?title=செட்டிநாடு&oldid=1477928" இலிருந்து மீள்விக்கப்பட்டது