தினை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 45: வரிசை 45:


==மருத்துவ பயன்கள்==
==மருத்துவ பயன்கள்==
* இதயத்தை பலப்படுத்துவதற்கு உதவுகிறது.
* இதயத்தை பலப்படுத்துவதற்கு உதவுகிறது.


== வெளி இணைப்புக்கள் ==
== வெளி இணைப்புக்கள் ==

09:49, 4 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம்

தினை
வயலில் விளைந்து நிற்கும் தினை
தினை உருண்டை

தினை (Foxtail millet) ஒரு தானிய வகை. இதை மனிதர்களும் விலங்குகளும் உணவாகப் பயன்படுத்துகின்றனர். தினை உலகிலேயே அதிகம் உற்பத்தி செய்யப்படும் தானியங்களில் ஒன்று. இது கிழக்காசியாவில் 10,000 ஆண்டுகளாகப் பயிரிடப்படுவதாகக் கூறப்படுகிறது.

ஆங்கிலத்தில் இது மில்லட் எனும் வகையில் வகைப்படுத்தப்பட்டுள்ள தானியமாகும். தினைக்கதிர் என்பது நரி வாலைப் போல பச்சை நிறத்தில் காட்சியளிப்பதால் இது ஃபாக்ஸ் டைல் மில்லட் என அழைக்கப்படுகின்றது. இது இட்டாலியன் மில்லட் எனவும் ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.

தினை மாவு அதிக சத்து கொண்ட உணவுகளில் ஒன்று. இதற்கு இறடி, ஏளல், கங்கு என்ற வேறு பெயர்களும் உண்டு.

தினை உற்பத்தியில் இந்தியா முதலிடம்

1,06,10,000 டன்கள் தினை உற்பத்தி செய்து உலகளவில் இந்தியா முதலிடம் வகிக்கின்றது. நைச்சீரியா, சீனா போன்ற நாடுகளும் தினை உற்பத்தியில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன.

தினை உலகிலேயே அதிகம் பயிரிடப்படும் இரண்டாவது தானிய வகையாகும். இதில் இந்தியா இரண்டாவது இடத்தையும் சீனா முதலிடத்தையும் வகிக்கின்றன. பழங்காலத்தில் முதலாவதாக பயிரிடப்பட்டு மனிதனால் உபயோகிக்கப்பட்ட தானிய வகை தினை தான். அதுவும் 6000 கி.மு விலேயே சீனாவில் பயிரடப்பட்டு உபயோகிக்கப்பட்டு வந்துள்ளது. தற்பொழுதும் சீனாவின் வட மாநிலங்களில் அதிகம் பயிரிடப்பட்டு உபயோகமாகி வரும் தானியம் தினை.

சாகுபடி முறை

  • தினை சாகுபடி செய்ய, வடிகால் வசதியுள்ள மணல்பாங்கான மண்வகை ஏற்றது.
  • இதன் சாகுபடி காலம் 3 மாதங்கள். ஆடி, ஆவணி ஆகிய பட்டங்கள் ஏற்றவை.
  • முதலில் இரண்டு சால் சட்டிக் கலப்பையிலும், அடுத்து இரண்டு சால் கொக்கிக் கலப்பையிலும் குறுக்கு-நெடுக்காக உழவு செய்ய வேண்டும்.
  • இரண்டு கிலோ விதையை 5 கிலோ மணலுடன் கலந்து, 2 லிட்டர் பீஜாமிர்தத்தில் முக்கி எடுத்து நிழலில் உலர்த்தி விதைநேர்த்தி செய்ய வேண்டும்.
  • பிறகு விதைத்து கொக்கிக் கலப்பை மூலம் ஒரு உழவு செய்ய வேண்டும்.
  • மண்ணில் இருக்கும் ஈரப்பதத்திலேயே 7-ம் நாளில் முளைப்பு எடுத்து விடும்.
  • மழை இல்லாத நேரங்களில் மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து 15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கட்டினாலே போதுமானது. * இருபதாம் நாளில் களை எடுக்க வேண்டும். அதற்கு மேல் பயிர் வளர்ந்து மூடிக் கொள்ளும்.
  • இருபதாம் நாள் மற்றும் 40 மற்றும் 60-ம் நாட்களில் 60 லிட்டர் தண்ணீரில் 6 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்து, வயல் முழுவதும் தெளிக்க வேண்டும்.
  • இதற்கு மேல் எந்த உரமுத் இடத் தேவையில்லை.
  • தினையைப் பூச்சி, நோய் தாக்காது.
  • எழுபதாம் நாளில் கதிர் பிடித்து, 90-ம் நாளில் கதிர் முற்றி, அறுவடைக்குத் தயாராகி விடும்.
  • ஏக்கருக்கு சராசரியாக 800 கிலோ வரையில் விளைச்சல் கிடைக்கும்.

புராணத்தில் தினை

தினை என்றவுடன் தமிழ் கடவுள் முருகப் பெருமான் வயதான தோற்றத்துடன் சென்று வள்ளியிடம் சாப்பிட தினை மாவு கேட்டதாகவும், பின் வள்ளியை திருமணம் செய்ததாகவும் புராணத்தில் படித்த கதைகள் நம் நினைவுக்கு வரும். இதிலிருந்து, புராண காலம் தொட்டே தினையை பயன்படுத்தி வந்தது நமக்கு புரியும்.

இலக்கியங்களில் தினை

சங்க இலக்கியங்களில் மிகுதியாகக் கூறப்படுவது தினைப்புனமும், தினையும், இதற்கு ‘ஏனல்’ என்று பெயர். இது ஓராண்டுச்செடி. தினையரிசிக்காகப் பயிரிடப்படுவது, மலை மக்கள் தினைமாவில் தேனைச் சேர்த்து சாப்பிடுவர். விருந்தினருக்கும் தருவர். சங்க இலக்கியப் பெயர் ஏனல், தினை ஆகும்.

தினையின் தாள் பசுமையானது. இலை நீளமானது. தினைத் தாளின் அடியில் சுற்றிலும் பசிய வேர்கள் பரவி இருக்கும். இதனைக் குருகென்னும் பறவையின் காலுக்கு உவமையாகக் கூறுவர். முற்றிய தினைக்கதிர் வளைந்திருக்கும். கதிரில் பொன்னிற செல்விய தினை விளையும். இவை ஒன்றோடு ஒன்று இணைந்து, பிணைந்து இருக்கும். இதனை யானைக் கன்றுகளின் துதிக்கைகளுக்கு உவமை கூறியுள்ளார். புலவர் பெருங்கெளசிகனார் என்பவர், குறுந்தொகை, நற்றிணை, மலைபடு கடாம், ஐங்குறு நூறு, அகநானூறு, திருமுருகாற்றப்படை, பெரும்பானாற்றுப்படை ஆகிய நூல்களிலும் தினை பற்றி பாடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தினை மிகப்பழங் காலந்தொட்டு விளைந்து வருகின்றது என சங்க இலக்கியத் தாவரவகைப் பாட்டியல் நூல்கள் தெரிவிக்கின்றன. தினைப்புணத்தை மகளிர் காவல் காத்து வந்தனர். பெரிதும் கிளிகள் தினைக் கதிர்களைக் கவர்ந்து உண்ணும். மேலும் யானை மேய்ந்து அழிப்பதும் உண்டு. ஆதலால் இதனைக் காப்பதற்கு மலை உச்சியில் ஒரு பரண் அமைப்பர். அவற்றில் இருந்து தட்டை, கவண், தொண்டகச் சிறுபறை முதலியவற்றால் குருவிகளையும், கிளிகளையும் விரட்டுவர். யானை, பன்றி முதலியவை தினைப் புனத்தைக் கவர்ந்து அழிக்காமல் அவற்றை விரட்டுவதற்கு பறை ஒலி எழுப்புவதும் உண்டு. முற்றிய தினையை அறுக்கும் போது மகளிர் பாடுவது வழக்கமாகும்.

மருத்துவ பயன்கள்

  • இதயத்தை பலப்படுத்துவதற்கு உதவுகிறது.

வெளி இணைப்புக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தினை&oldid=1473740" இலிருந்து மீள்விக்கப்பட்டது