திருவரங்கம் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
No edit summary
சி Guy of india பக்கம் ஸ்ரீரங்கம் வட்டம்திருவரங்கம் வட்டம் க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நக...
(வேறுபாடு ஏதுமில்லை)

05:08, 28 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்

ஸ்ரீரங்கம் வட்டம் , தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஒன்பது வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக ஸ்ரீரங்கம் இருக்கிறது. இந்த வட்டத்தின் கீழ் 66 வருவாய் கிராமங்கள் உள்ளன.முன்னர் ஸ்ரீரங்கம் நகராட்சியாக இருந்தது பின்னர் திருச்சி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.[2].

மேற்கோள்கள்


திருவரங்கம் பெயர் காரணம்

ஆற்றின் நடுவில் அமைந்த இடை குறை துருத்தி (துருத்தி என்றால் ஆற்றின் இடையில் உள்ள தீவு என்று பொருள் படும் ) என வழங்கப்படும். வட மொழியில் இதனை ரங்கம் என்பர். இந்த ஊர் சிறந்த வைணவ தலம். இத்தலம் காவிரி ஆற்றுக்கும், கொள்ளிடம் ஆற்றுக்கும் இடையில் இருப்பதால் திருவரங்கம் என்ற பெயர் பெற்றது. கோவிலில் எழுந்தருளிய எம்பெருமான் அரங்கநாதர். எம்பெருமான் திருநாமத்தால் திருவரங்கம் என்று பெயர் பெற்றது என்றும் கூறுவர். இத்தலத்திற்கு அரங்கம், கோவில், போகமண்டபம், பூலோக வைகுண்டம் என்னும் பெயர்களும் உண்டு. கல்வெட்டில் இத்திருதலம் வீங்கு நீர் துருத்தி என்று குறிப்பிடப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவரங்கம்_வட்டம்&oldid=1468561" இலிருந்து மீள்விக்கப்பட்டது