குனூ தளையறு ஆவண உரிமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot: Migrating 99 interwiki links, now provided by Wikidata on d:q22169 (translate me)
வரிசை 15: வரிசை 15:


[[பகுப்பு:சட்டம்]]
[[பகுப்பு:சட்டம்]]
[[பகுப்பு:க்னூ]]
[[பகுப்பு:குனூ]]

16:47, 16 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்

க்னூ சின்னம்

குனூ தளையறு ஆவண உரிமம் (GNU Free Documentation License, GFDL) என்பது திறந்தநிலை உள்ளடக்கத்திற்கான காப்புரிமைக்கு எதிரான உரிமம் ஆகும். இது கட்டற்ற மென்பொருள் இயக்கம் (FSF) க்னூ திட்டத்திற்காக உருவாக்கியதாகும். துவக்கத்தில் மென்பொருள் ஆவணப்படுத்தலில் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டாலும் பிற படைப்புகளுக்கும், காட்டாக விக்கிப்பீடியா, பயனாகிறது. ஓர் காப்புரிமை உரிமமாக குனூ தளையறு ஆவண உரிமம், நூல், விக்கிப்பீடியா கட்டுரை, இசைத்துண்டு அல்லது ஓவியம் படைக்கும் படைப்பாளிக்கும் பிற பயன்படுத்துவோருக்குமிடையே உள்ள ஓர் உடன்பாடாகும். படைப்பாக்கத்தின் பயனைத் தடுக்காது மேலும் மேலும் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதால் இது பொதுவாக எதிர்காப்புரிமம் என வழங்கப்படுகிறது.

இதன்படி ஒரு படைப்பாளி உரிமம் வழங்குகிறார் என்றால் குனூ தளையறு ஆவண உரிமம் வரையறைகளின் கீழ் எவரும் தனது ஆக்கத்தை மீண்டும் வெளியிடவோ, பகிரவோ, மாற்றவோ அவருக்கு அனுமதி அளிக்கிறார். இந்த வரையறைகளில் முதன்மையானது எந்த ஓர் ஆக்கமும் குனூ தளையறு ஆவண உரிமம் கீழ் உள்ள ஆக்கத்திலிருந்து பெறப்பட்டால் அந்த ஆக்கமும் குனூ தளையறு ஆவண உரிமம் கீழேயே அமையும். தளையறு ஆவண உரிம ஆக்கங்களை மாற்றியமைத்து காப்புரிமை ஆக்கங்கள் செய்யவியலாது. எனவே இந்த உரிமம் அந்தப் படைப்பின் உடனேயே தங்கியிருப்பதால் சிலநேரங்களில் இது நுண்ணுயிரி உரிமம் எனவும் அழைக்கப்படுகிறது.

மேலும் ஓர் படைப்பை பகிரவோ மாற்றவோ செய்கையில் பயனர் முந்தைய ஆக்குனர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன் மாற்றங்களை பட்டியலிடவும் வேண்டும் என குனூ தளையறு ஆவண உரிமம் வலியுறுத்துகிறது.

இறுதியாக, இந்த உரிமத்தின் கீழ் வெளியாகும் எந்தப் படைப்பும் ஏதாவது ஓரிடத்தில் இந்த உரிமத்தின் முழுமையான உள்ளடக்கத்தை கொண்டிருக்க வேண்டும். இது அனைத்து நேரங்களிலும் சாத்தியப்படாது என விமரிசனங்கள் எழுந்துள்ளன. ஓர் புத்தகத்தில் இறுதியில் முழு உள்ளடக்கத்தையும் வெளியிட முடியும்; ஆனால் ஓர் ஒளிப்படத்தில் அல்லது இசைத்துண்டில் சாத்தியமில்லை.

இவற்றையும் பார்க்கவும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=குனூ_தளையறு_ஆவண_உரிமம்&oldid=1457852" இலிருந்து மீள்விக்கப்பட்டது