தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + படங்கள்
வரிசை 1: வரிசை 1:
[[File:CarlvonLinne Garden.jpg|thumb|250px|[[உப்சாலா]]விலுள்ள லின்னேயசுத் தோட்டம்]]
[[File:CarlvonLinne Garden.jpg|thumb|250px|[[உப்சாலா]]விலுள்ள லின்னேயசுத் தோட்டம்]]
[[File:Bauhin Pinax 1623 p291.jpg|thumb|250px| ''Pinax Theatri Botanici'', 1623, கசுபர்டு பாகின்]]
[[File:Species plantarum 001.jpg|thumb|250px|''Species Plantarum'', 1753]]
[[File:Species plantarum 001.jpg|thumb|250px|''Species Plantarum'', 1753]]



11:40, 12 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்

உப்சாலாவிலுள்ள லின்னேயசுத் தோட்டம்
Pinax Theatri Botanici, 1623, கசுபர்டு பாகின்
Species Plantarum, 1753

தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை(ICBN), 2011 ஆம் ஆண்டு முதல் அனைத்துலக பாசிகள், பூஞ்சைகள், தாவரங்களுக்கான பெயரிடல் நெறிமுறை (ஆங்கிலம்:International Code of Nomenclature for algae, fungi, and plants (ICN) என பெயர்மாற்றம் பெற்றுள்ளது.[1][2][3][4] இதற்கு முன்னிருந்த நெறிமுறையின் சில பகுதிகள் மாற்றம் செய்யப்பட்டு (Vienna Code of 2005) புதிய நெறிமுறையாக்கம்(Melbourne Code of 2011 வரவுள்ளது. அதுவரை முன்னிருந்த நெறிமுறைகளே பின்பற்றப்படும்.[5]

தோற்றம்

தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை (ஆங்கிலம்:ICBN-International Code of Botanical Nomenclature) என்பது தாவரங்களுக்கான பெயரிடலைக் கட்டுப்படுத்த உருவாக்கப்பட்டது.1930 ஆம் ஆண்டு, ஐந்தாவது அகிலஉலக தாவரவியல் கூட்டம், இங்கிலாந்து நாட்டில் கேம்ப்ரிட்சு என்னுமிடத்தில், தாவரங்களின் பெயரிடுமுறையின் அடிப்படை விதிமுறைகளை விவாதிக்க கூடியது. 12 – வது அகில உலக தாவரவியல் கூட்டம், சூலை 1975 இல், சோவியத் ரசியாவிலுள்ள லெனின்கிராட் என்னுமிடத்தில் கூடியது. இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில், தற்போதைய அகிலஉலக தாவரவியல் பெயர் சூட்டுச்சட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை(ICBN), தற்போது 1978 முதல் நடைமுறைக்கு வந்தது.

தோற்றச்சுவடு

இந்த நெறிமுறையாக்கம் கடந்துவந்த பதிப்புகள், கீழே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.

நடைமுறை வருடம் பொதுப்பெயர்
1905 வியன்னா விதிகள் (Vienna Rules)
1935 கேம்பிரிட்சு விதிகள் (Cambridge Rules)
1952 சுடாக்கோம் நெறிமுறை (Stockholm Code)
1969 சியாட்டில் நெறிமுறை(Seattle Code)
1975 லெனின்கிரேடு(Leningrad Code)
1981 சிட்னி நெறிமுறை(Sydney Code)
1987 பெர்லின் நெறிமுறை(Berlin Code)
1993 டோக்கியோ நெறிமுறை(Tokyo Code)
1999 புனித லூயிசு நெறிமுறை(St Louis Code, The Black Code)
2005 வியன்னா நெறிமுறை(Vienna Code)
2012 மெல்பர்ன் நெறிமுறை(Melbourne Code)

நெறிமுறைகள்(ICBN)

தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறையின் சில முக்கிய கூறுகள் வருமாறு;-

  1. பேரினப்பெயர் ஒற்றை பெயர்ச்சொல்லாகும். ஆங்கிலத்தில் எழுதும்போது, பேரினப்பெயரின் முதல் எழுத்து பெரிய/மேல் எழுத்துக்களில் எழுதப்பட வேண்டும். சிற்றினப்பெயர் ஒரு பண்புச்சொல்லாகும். இதனை ஆங்கிலத்தில் எழுதும்போது, முதல் எழுத்தை சிறிய/கீழ் எழுத்துக்களில் எழுதப்பட வேண்டும். இது பல மூலங்களிலிருந்து பெறப்பட்டதாகவும் ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளைக் கொண்டதாகவும் இருக்கும். (எ.கா) ஒரைசா சட்டைவா(Oryza sativa), ஒல்டன்லேண்டியா சைபீரி-கன்செசுடா (Oldenlandia sieberi var. congesta)
  2. பெயர் சிறியனவாகவும், துல்லியமாகவும் எளிதில் வாசிக்கக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.
  3. இருசொற்பெயர்களை அச்சிடும் போது சாய்வாகவோ, அடிக்கோட்டிட்டோ காட்ட வேண்டும். (எ.கா) ஒரைசா சட்டைவா (Oryza sativa);ஒரைசா சட்டைவா
  4. ஒரு தாவரத்திற்கு புதிய பெயர் சூட்டும்போது, அத்தாவரத்தின் உலர்தாவரகம் (Herbarium) தயார் செய்யப்பட்டு, ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட உலர்தாவரக நிறுவனத்தில், அதன் விளக்கத்துடன் சேமித்து வைக்க வேண்டும். இவ்வாறு சேமித்து வைக்கப்படும் தாவரப்பகுதி, மூல உலர்தாவர மாதிரி (Type specimen) எனப்படும். இது உலர்தாவரத்தாளில் பேணப்படவேண்டும்
  5. எந்த ஒரு நபர் தாவரத்திற்கு முதன்முறையாக பெயர் சூட்டி, அத்தாவரத்தின் விளக்கத்தை அளிக்கிறாரோ, அந்நபர், அத்தாவரத்தின் ஆசிரியர் எனக் கருதப்படுகிறார். ஒரு தாவரத்தின் இருசொற் பெயரில், சிற்றினப்பெயரின் இறுதியில், அத்தாவரத்திற்கு முதன்முதலில் விளக்கமளித்த ஆசிரியரின் பெயர் சுருக்கம் எழுதப்படும். இதற்கு ஆசிரியர் பெயர் குறித்தல் என்று பெயர். (எ.கா) லி = L என்றால் லின்னேயஸ் என்ற பொருளாகும். ராபர்ட் பிரௌன் என்றால், ரா.பி. எனவும், சர் ஜோசப் டால்டன் ஹக்கர் என்றால், ஹக். எனவும் பெயர் சுருக்கம் செய்யப்படும்.
  6. பெயர் சூட்டபட்டத் தாவரத்தின் முதன்மையான விளக்கம், இலத்தின் மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
  7. தவறான மூலத்திலிருத்து, ஒரு தாவரம் பெயர் சூட்டப்பட்டிருந்தால், அப்பெயர், தவறானப் பெயர் (Ambiguous name) எனக் கருதப்படும். இது நாமென் ஆம்பிகுவம் (Nomen ambiguum) என்றும் அழைக்கப்படும். இத்தகைய பெயர், உபயோகத்திலிருந்து முழுமையாக நிராகரிக்கப்படும்.
  8. ஒரு தாவரத்தின் பேரினச்சொல்லும், சிற்றினச் சொல்லும் ஒரே மாதிரியாக இருக்குமேயானால், அத்தகைய பெயர் டாட்டோனியம் (Tautonym) எனப்படும். (எ.கா) சாசாஃப்ரஸ் சாசாஃப்ரஸ் (Sassafras sassafras). சில சூட்டுமுறையில் (பேயர்) இது போன்று, ஒரே எழுத்துக்களுள்ள இருபெயரீட்டு முறை ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.

அடிக்குறிப்புகள்

  1. McNeill, J.; Barrie, F. R.; Buck, W. R.; Demoulin, V., eds. (2012), International Code of Nomenclature for algae, fungi, and plants (Melbourne Code), Adopted by the Eighteenth International Botanical Congress Melbourne, Australia, July 2011 (electronic ed.), Bratislava: International Association for Plant Taxonomy, பார்க்கப்பட்ட நாள் 2012-12-20 {{citation}}: Unknown parameter |lastauthoramp= ignored (help).
  2. Miller JS, Funk VA, Wagner WL, Barrie F, Hoch PC, Herendeen P (2011). "Outcomes of the 2011 Botanical Nomenclature Section at the XVIII International Botanical Congress". PhytoKeys 5: 1–3. doi:10.3897/phytokeys.5.1850. 
  3. John McNeill, 2011. Important decisions of the Nomenclature Section of the XVIII International Botanical Congress, Melbourne, 18–22 July 2011. Botanical Electronic News, ISSN=1188-603X, 441
  4. Botanists finally ditch Latin and paper, enter 21st century, Hannah Waters, Scientific American blog, December 28, 2011
  5. Knapp, S.; McNeill, J.; Turland, N.J. (2011). "Changes to publication requirements made at the XVIII International Botanical Congress in Melbourne - what does e-publication mean for you?". PhytoKeys 6 (0): 5–11. doi:10.3897/phytokeys.6.1960.