விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 148: வரிசை 148:
#இரு நாட்களும் கலந்துகொள்கிறேன். உதவித்தொகை ஏதும் தேவையில்லை. --[[User:Surya Prakash.S.A.|<span style="color:#480607;text-shadow:#66FF00 0.2em 0.2em 0.3em">&nbsp;'''சூர்யபிரகாஷ்'''&nbsp; </font></span>]] '''<sup><small>[[User talk:Surya Prakash.S.A.|உரையாடுக]]</small></sup>''' 16:42, 30 சூன் 2013 (UTC)
#இரு நாட்களும் கலந்துகொள்கிறேன். உதவித்தொகை ஏதும் தேவையில்லை. --[[User:Surya Prakash.S.A.|<span style="color:#480607;text-shadow:#66FF00 0.2em 0.2em 0.3em">&nbsp;'''சூர்யபிரகாஷ்'''&nbsp; </font></span>]] '''<sup><small>[[User talk:Surya Prakash.S.A.|உரையாடுக]]</small></sup>''' 16:42, 30 சூன் 2013 (UTC)
# கலந்துகொள்ள விருப்பம். உதவித் தொகை தேவையில்லை. ஏதேனும் புதிதாக கற்றுத் தந்தால் நலம். புதியவர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியாவினை பயன்படுத்த தூண்டும் வகுப்பு, விக்கியர்களுக்கு ஏதாவது கருவிகள்/மென்பொருள் பற்றிய பயிற்சி வகுப்பு இருத்தால் சிறப்பு, தேவையாயின் இருநாட்கள் கூட முன்னதாகவே வந்து ஒழுங்குகளில் பங்கெடுக்கவும் முடியும்--[[பயனர்:Yokishivam|Yokishivam]] ([[பயனர் பேச்சு:Yokishivam|பேச்சு]]) 16:14, 4 சூலை 2013 (UTC).
# கலந்துகொள்ள விருப்பம். உதவித் தொகை தேவையில்லை. ஏதேனும் புதிதாக கற்றுத் தந்தால் நலம். புதியவர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியாவினை பயன்படுத்த தூண்டும் வகுப்பு, விக்கியர்களுக்கு ஏதாவது கருவிகள்/மென்பொருள் பற்றிய பயிற்சி வகுப்பு இருத்தால் சிறப்பு, தேவையாயின் இருநாட்கள் கூட முன்னதாகவே வந்து ஒழுங்குகளில் பங்கெடுக்கவும் முடியும்--[[பயனர்:Yokishivam|Yokishivam]] ([[பயனர் பேச்சு:Yokishivam|பேச்சு]]) 16:14, 4 சூலை 2013 (UTC).
# இரு நாட்களும் கலந்து கொள்வேன். உதவித்தொகை தேவை இருக்காது. செப்டம்பர் 10-25 வரை இந்தியாவில் இருப்பேன். --[[பயனர்:Karthickbala|கார்த்திக்]] ([[பயனர் பேச்சு:Karthickbala|பேச்சு]]) 21:52, 4 சூலை 2013 (UTC)


===கலந்து கொள்வோர் (உறுதி இல்லை) ===
===கலந்து கொள்வோர் (உறுதி இல்லை) ===

21:52, 4 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்

வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி, தமிழ் விக்கிப்பீடியா தொடங்கி பத்தாண்டுகள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டு ஏதேனும் நிகழ்ச்சிகள் / போட்டிகள் / வேறு எதையாவது :) செய்ய முடிந்தால் நல்ல பரப்புரை வாய்ப்பாக இருக்கும். பரிந்துரைகள் தேவை. பொறுப்பேற்பவர்களும் தேவை :)--இரவி (பேச்சு) 07:32, 9 மே 2013 (UTC)[பதிலளி]

முதன்மையான தமிழ் இதழ்களில் கட்டுரை வடிவில் இதனை குறிப்பிடலாம். தேனியார் செய்வது போல. பயனர் சந்திப்புகளை ஆங்காங்கே நிகழ்த்தலாம். நிகழ்ச்சிகள், போட்டிகளில் பங்கு பெற முடியாதவர்கள், ஒவ்வொருவரும் தமிழ் விக்கிப்பீடியாவை பத்து பேருக்கு அறிமுகப்படுத்தி அவர்களை விக்கிப்பீடியா படிப்பாளர்களாகவும், ஆலோசகர்களாகவும், பங்களிப்பாளர்களாகவும் ஆக்க கூடியமட்டில் உதவலாம். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:55, 10 மே 2013 (UTC)[பதிலளி]
கூடிய மட்டிலும் இதனை சிறிய அளவிலாவது உலகின் பல நாடுகளிலும் விழாவாக எடுக்க வேண்டும். அதிக ஆடம்பரம் இல்லாமல், ஆனால் தமிழ் விக்கிப்பீடியா எட்டிய நிலைகளை எடுத்து இயம்புவதும், சிறு அறிமுகங்கள் செய்வதும் தகும். கிழமை, மாத இதழ்களிலும் நாளிதழ்களிலும் கூட சிறு கட்டுரைகள் எழுத வேண்டும். தமிழ் எழுத்துலக வரலாற்றில் தமிழ் விக்கிப்பீடியாவின் பங்களிப்பு தனிச்சிறப்பானது. இது வெறும் புகழ்ச்சி இல்லை உண்மை. ஒரே ஓர் எழுத்தைத் திருத்தி இருந்தாலும் அவர் இந்த கூட்டாக்கத்துக்கு உதவி செய்து சிறப்பு செய்தவர் என்று போற்றத்தக்கவர். சூன், சூலை ஆகத்து ஆகிய மூன்று மாதங்கள் உள்ளதால், ஓரளவுக்குத் திட்டமிட்டு இந்த பத்தாண்டு விழாவை அழகாகக் கொண்டாடலாம். சிம்மி வேல்சு போன்ற விக்கிப்பீடியா நிறுவன முன்னோடிகளிடம் இருந்தும் வாழ்த்துரை மடல்கள் பெறலாம். நம் குறிக்கோள், இதுகாறும் எட்டிய நிலைகளை எடுத்துக்கூறி பதிவு செய்வதும், மேலும் பலருக்கும் உந்துதல் தந்து ஈடுபாடு கொள்ளச் செய்வதும் ஆகும். --செல்வா (பேச்சு) 01:28, 17 மே 2013 (UTC)[பதிலளி]
பத்தாண்டுகளில் த.வி இன் அடைவுகளை முன்வைக்கும் விழா, தமிழ் விக்கிப்பீடியர் ஒன்றுகூடவும், விக்கி அறிமுகத்தைச் செய்யவும், விக்கியை மேலும் வளர்க்கவும் உதவும் வகையில் திட்டமிடப்பட வேண்டும். தனிப்பட்ட வகையில் அறிமுகப்படுத்துதல், பொது அறிமுகப் பட்டறைகள், மற்றும் சந்திப்புகள், வேறு கலை இலக்கிய நிகழ்வுகளில் அறிமுகப்படுத்துதல், மற்றும் இதழ்களில் கட்டுரை வரைதல் எனப் பல்வேறுவகையிலும் பயனர்கள் பங்களிக்கலாம்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 03:58, 17 மே 2013 (UTC)[பதிலளி]
தமிழ் விக்கிப்பீடியா கடந்த 10 ஆண்டுகளில் தொய்வுகள் எதுவும் இல்லாமல் ஏறுமுகமாகவே வளர்ந்து வந்திருக்கிறது என்பது நம்மெல்லோரையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும் விடயம். இந்திய மொழி விக்கிப்பீடியாக்களில் இவ்வாறான வளர்ச்சியைப் பேணிவருவன மிகச் சிலவே. இதற்காக உழைத்த ஏறத்தாழ 900 தமிழ் விக்கிப்பீடியர்கள் பாராட்டுக்கு உரியவர்கள். தற்போதைய வளர்ச்சிவிகித அடிப்படையில் பத்தாண்டு நிறைவுக்கு முன் இது 1000ஐத் தாண்டிவிடும். புதிதாக வருபவர்கள் குறிப்பாக இளைஞர்கள் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டு வளர்ச்சியை மேலும் முனைப்பாக முன்னெடுத்துச் செல்வது தமிழ் விக்கியைப் பொறுத்தவரை மிகவும் வரவேற்கத் தக்க விடயமாக உள்ளது. இந்த நம்பிக்கையூட்டும் சூழலில், இந்தப் பத்தாண்டு நிறைவை, இதுவரை நாம் கடந்துவந்த பாதையைத் திரும்பிப் பார்த்து மதிப்பீடு செய்துகொள்ளவும், எதிர்கால வளர்ச்சிக்கான இலக்குகள் குறித்துச் சிந்திப்பதற்குமான ஒரு வேளையாகப் பயன்படுத்திக்கொள்வது பயன் தரும். கூடிய அளவு விக்கிப்பீடியர்கள் நேரடியாகச் சந்தித்துக் கலந்து பேசி அறிமுகம் செய்துகொள்ளக்கூடிய வகையில் நிகழ்வுகளை ஒழுங்கு செய்வது நல்லது. தமிழர்களுக்குத் தமிழ் விக்கிப்பீடியாவின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தல், அதை சமூகத்துக்கு மேலும் பயனுள்ள வகையில் வளர்த்து எடுப்பதற்கான வழிமுறைகளை ஆராய்தல், பயனர்களின் கூட்டுழைப்பை வலுப்படுத்துதல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு நிகழ்வுகளைத் திட்டமிடலாம். ---மயூரநாதன் (பேச்சு) 08:23, 24 மே 2013 (UTC)[பதிலளி]

செப்ரம்பர் - தமிழ் விக்கிப்பீடியா சிறப்பு இதழ்கள்

தாய்வீடு, தமிழ் கம்பியூட்டர், கணியம் போன்ற இதழ்களில் தமிழ் விக்கிப்பீடியா சிறப்பு இதழ்கள் கொண்டு வருவது பற்றி உரையாடலாம். --Natkeeran (பேச்சு) 15:19, 24 மே 2013 (UTC)[பதிலளி]

நல்ல பரிந்துரை. பத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான ஊடக ஒருங்கிணைப்புக்குச் சிறப்பான கவனம் தர வேண்டும். --இரவி (பேச்சு) 05:31, 28 மே 2013 (UTC)[பதிலளி]

பாராட்டுப் பத்திரம்

கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு பலரும் பங்களிப்பினை அளித்துள்ளனர். அதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பினைத் தந்துள்ள 100 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ‘பாராட்டுப் பத்திரம்’ வழங்கலாம். இது குறித்த சில பரிந்துரைகள்:

  1. ஜிம்மி வேல்ஸ் அவர்களின் கையெழுத்தினை அதில் பெற முயற்சிக்கலாம்.
  2. மூத்த பயனரான செங்கைப் பொதுவன் அவர்களின் கையெழுத்தை அதில் கொண்டுவரலாம்; அவருக்குரிய பாராட்டுப் பத்திரத்தில், நாம் அனைவரும் கையெழுத்தினை இடலாம்.
  3. பாராட்டுப் பத்திரம் ‘lamination’ செய்யப்படல் வேண்டும்.
  4. சென்னை, சேலம், மதுரை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கொழும்பு போன்ற நகரங்களில் சிறுசிறு விழாக்களின் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்டப் பயனர்களுக்கு இப்பத்திரத்தினை வழங்கலாம்.
  5. கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய, மலேசியா, ஆஸ்திரேலியா நாடுகளிலுள்ள பயனர்களுக்கு இந்தப் பத்திரத்தினை கூரியர் தபாலில் அனுப்பலாம்.
  6. பாராட்டுப் பத்திரம் என்பது விலைமதிப்பற்ற ஒரு அங்கீகாரம் என்பது மறுப்பதற்கில்லை. படித்து முடிக்கும் ஒருவருக்கு பல்கலைக்கழகம் பட்டம் தரும்போது அவர் எவ்வளவு மகிழ்வார்?! எங்கள் அலுவலகத்தில் ஒவ்வொரு காலாண்டுக்கும் சிலரைத் தேர்ந்தெடுத்து பாராட்டுப் பத்திரம் வழங்குவர். பெரும் உவகையுடன் வீட்டிற்கு எடுத்துச் செல்வோம். இதற்கு பணமதிப்பு இல்லை; உங்கள் பணிக்கு கிடைத்த ஒரு அங்கீகாரம்!
  7. பங்களிப்பு என்பது பலவாறாக இருக்கலாம். சிலர் நிறைய கட்டுரைகள் எழுதியிருப்பர். சிலர் மென்பொருள் நுட்பத்தில் குறிப்பிடத்தக்க பணி செய்திருப்பர். சிலர் நிறைய பயனர்களைக் கொணர்ந்து வழிகாட்டியிருப்பர். ஆக அந்த 100 நபர்களை தேர்ந்தெடுப்பது கடினமான காரியமே. விக்கிப்பீடியாவில் ஆரம்பத்திலிருந்து பணியாற்றிக்கொண்டிருக்கும் மயூரநாதன், ரவி, கனகரத்தினம் சிறீதரன், செல்வா, நற்கீரன், மாஹிர், மணியன், தேனி சுப்பிரமணி, அராபத் ரியாத், கலையரசி, கார்த்திக், குறும்பன் ஆகியோரைக் கொண்ட அணிக்கு இந்தப் பொறுப்பினைத் தந்துவிடலாம்!
  8. அந்த 100 நபர்கள் தற்போதும் தங்களின் பங்களிப்பினைத் தருபவர்களாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.
  9. பத்திரங்களை உருவாக்கும் செலவு மற்றும் அனுப்பிவைக்கும் செலவு இவைகளை எப்படி திரட்டுவது என்பது குறித்தும் பார்க்கவேண்டும்!
  10. 100 என்பது ஒரு சிறப்பு எண். 10 என்றால் குறைவான நபர்களையே பெருமைப்படுத்த முடியும். எனவேதான் 100 ஐத் தேர்ந்தெடுத்தேன்.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:08, 25 மே 2013 (UTC)[பதிலளி]
மே 26, சென்னை சந்திப்பில் இதைப் பற்றி உரையாடினோம். இதைப் போன்ற ஒரு "நன்றிப் பத்திரம்"பலருக்கும் ஊக்கமளிக்கக் கூடிய ஒன்றாக இருக்கும் என்று கருதப்பட்டது. கண்டிப்பாக இதைச் செய்யலாம். விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள 59 பேரையும் இதில் உள்ளடக்கலாம். மீதம் 41 பேரை தெரிவு செய்தால் போதுமானது. இதில் யாரேனும் விடுபடுவது போல் தோன்றினால் கூடுதல் பத்திரங்களையும் தரலாம். இதில் இறுக்கமான எண்ணிக்கை தேவையில்லை. அதே போல், ஒரு தமிழ் விக்கிப்பீடியரே அனைத்துப் பத்திரங்களிலும் கையெழுத்திடாமல் அனைவருமோ இயன்ற இன்னும் ஒரு சிலருமோ கூடிக் கையெழுத்திட்டுத் தருவது, இது அனைவருக்கும் சொந்தமான திட்டம் என்ற எண்ணத்தை உறுதிப்படுத்தும். திட்டத்தின் உருவாக்குனர் என்ற முறையில் சிம்மி வேல்சிடம் இருந்து கையெழுத்து பெறவும் முயல்வோம். நன்றி. --இரவி (பேச்சு) 05:31, 28 மே 2013 (UTC)[பதிலளி]

பெண்களுக்கான கட்டுரைப் போட்டி

பத்தாண்டு நிறைவை ஒட்டி பெண்களுக்கான தமிழ் விக்கி பங்களிப்பை ஈர்க்கும் நோக்கத்தோடு 'இந்திய உணவு வகைகள்' பற்றிய கட்டுரைப்போட்டி ஒன்றை வைத்தால் என்ன? தக்கபடி ஊடகங்களில் விளம்பரம் செய்தால் பெரும்பாலான இல்லத்தரசிகள் இதில் பங்கேற்க வாய்ப்புண்டு இதன் மூலம் பங்களிக்கும் பெண்களை அப்படியே ஊக்குவித்து தக்கவைத்தும் கொள்ளலாம்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 06:05, 26 மே 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:31, 27 மே 2013 (UTC)[பதிலளி]
பெண்கள் என்றாலே உணவு / சமையல் / ஆன்மிகம் என்ற பொதுப்புத்தியைத் தான் நாமும் முன்வைக்க வேண்டுமா? எத்தனையோ ஆசிரியர்கள், பேராசிரியர்கள், அறிவியலாளர்கள் பெண்களாக இருக்கிறார்களே? இவர்களையும் எப்படி ஈர்ப்பது என்பது குறித்துச் சிந்திக்க வேண்டும். --இரவி (பேச்சு) 05:31, 28 மே 2013 (UTC)[பதிலளி]
//பெண்கள் என்றாலே உணவு / சமையல் / ஆன்மிகம் என்ற பொதுப்புத்தியைத் தான் நாமும் முன்வைக்க வேண்டுமா?// ஆசிரியர்கள், பேராசிரியர்கள், அறிவியலாளர்கள் இவர்களுக்கான நேரம் குறைவாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் இது போன்ற தலைப்புகளில் பொதுவாக ஆர்வமுடன் ஈடுபடுவார்கள். நேரம் ஒதுக்கி பஙகளிக்கவும் கூடும். அதன் மூலம் அவர்களை விக்கியில் முதலில் பங்களிக்க வைக்கலாம். அப்படியே தக்க வைக்கலாம் என்றே கூறினேன். ஆனால் கண்டிப்பாக பெண்களுக்கான் ஒரு திட்டத்தை திட்டம் தீட்டி செயல்படுத்த வேண்டும். யோசிங்கப்பா யோசிங்க! -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:37, 29 மே 2013 (UTC)[பதிலளி]
யோசிக்கிறேங்க யோசிக்கிறேன் :) இப்படி ஒரு போட்டியின் மூலம் நிறைய சமையல்குறிப்புகள் தான் கிடைக்குமோ என்று ஒரு அச்சம் :) பெண்களுக்கான எந்தப் போட்டியாக இருந்தாலும் பொதுவான தலைப்புகளாக இருந்தால் நன்றாக இருக்கும். உலகின் பல்வேறு துறைகளில் உள்ள பெண் ஆளுமைகளைப் பற்றி பெண்களே எழுதும் ஒரு போட்டி வைக்கலாம். ஆனால், ஏற்கனவே திட்டமிட்டுள்ள தொடர் கட்டுரைப் போட்டியுடன் இன்னொரு கட்டுரைப் போட்டியையும் நடத்துவது குழப்புமோ என்று தோன்றுகிறது.--இரவி (பேச்சு) 18:58, 29 மே 2013 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கி மாநாடு

தமிழ் விக்கிக்கு என ஒரு மாநாடு / விக்கிமேனியா போல் செய்யலாம் என்று சஞ்சீவி சிவக்குமார், நற்கீரன் ஆகியோர் ஆலமரத்தடியில் தெரிவித்து இருந்தார்கள். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இதனைச் செய்யலாம் என்று எண்ணி பின்வரும் பரிந்துரையை முன்வைக்கிறேன்: நாட்கள்: செப்டம்பர் 28, 29 (சனி, ஞாயிறு), 2013

இடம்: சென்னை

நிகழ்ச்சி நிரல்:

முதல் நாள் - செப்டம்பர் 28.

இது தமிழ் விக்கிப்பீடியர்கள் மட்டும் கலந்து கொள்ளும் நிகழ்வாக இருக்கும். காலை, மாலை, இரவு / பகல் தங்குமிடத்தில், உணவு இடைவேளையில் கிடைக்கும் நேரத்தில் பயனர்கள் ஒருவருக்கு ஒருவர் அறிமுகப்படுத்திக் கொள்ளவும் நட்புறவாடவும் நேரம் இருக்கும்.

  • 10.00 - 01.00 - பயனர் அறிமுகங்கள் / உரையாடல்கள் (
  • 03.00 - 05.00 - தமிழ் விக்கிப்பீடியா கடந்த பத்தாண்டுகளைப் பற்றிய அலசல், அடுத்த கட்டத்துக்கான பயனர் ஆலோசனைகள்.

இரண்டாம் நாள் - செப்டம்பர் 29

  • 10.00 - 01.00 - இந்திய விக்கிமீடியா கிளை, விக்கிமீடியா அறக்கட்டளை, CSI - A2K, பிற இந்திய விக்கிமீடியா திட்ட விருந்தினர்களுடன் உரையாடல். (மேற்கண்ட அமைப்புகள், திட்டங்களில் இருந்து அழைக்கப்பட்ட விருந்தினர்கள் + தமிழ் விக்கிப்பீடியர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியை முன்னிறுத்தவும், பிறரிடம் இருந்து நாம் கற்றுக் கொள்வும் நம்மிடம் இருந்து பிறர் கற்றுக் கொள்ளவும் உதவும்.)
  • 03.00 - 05.00 - திறந்த நிகழ்வு - விக்கி ஆர்வலர்கள், ஊடக நண்பர்கள், தமிழார்வலர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு வேண்டலாம்.

சுருக்கமான தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம், கட்டுரைப் போட்டிக்கான பரிசு வழங்கல், நன்றிப் பத்திரம் வழங்கல், ஊடகங்களுக்கான கேள்வி நேரம், வாழ்த்துரை / நன்றியுரை ஆகியவற்றுக்கு இதில் நேரம் ஒதுக்கலாம்.

குறிப்புகள்:

  • வழக்கமான மாநாடு போல் ஆய்வுக் கட்டுரை வாசிப்பது, திறந்த அழைப்பு, பெரும் கூட்டம் -> பெரும் செலவு என்றில்லாமல், உயர் தர உரையாடல் / அறிமுகம், அதற்கான நேரம் என்ற நோக்கில் நிகழ்ச்சி நிரல் இருக்க வேண்டும்.
  • பத்தாண்டுகளில் முதல் முறையாக சிறப்பாக தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று செய்யும் நிகழ்வு என்பதால் நிறைய பேர் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். குறைந்தது 30 பேராவது வர வேண்டும் என்று ஒரு ஆசை. வர விரும்புவோம் முன்கூட்டியே தெரிவித்து விட்டால், வருதற்கான பயணச் செலவு / தங்கும் செலவு ஆகியவற்றுக்கும் சேர்த்து நல்கை பெறலாம். உரிய ஏற்பாடுகளைச் செய்யலாம்.
  • மலையாளம், தெலுங்கு, வங்காளம் (பெரிய / சீரான வளர்ச்சியுடைய இந்திய விக்கிகள்), ஒடிசா, அசாமிய விக்கிகளில் (தொடக்க நிலையில் உள்ள ஆனால் ஓரளவு முனைப்பான சமூகம் உள்ள விக்கிகளில்) இருந்து விக்கிக்கு இருவர் என்று அவர்களே தெரிவு செய்து விருந்தினர்களாக அனுப்பி வைக்குமாறு கோரலாம். இதே போல், ஆங்கில விக்கிப்பீடியாவில் ஈடுபாடு உள்ள இந்திய விக்கிப்பீடியர்கள் இருவர், மீடியாவிக்கி நுட்பம் அறிந்து இருவர் என்று வரக் கோரலாம். இதே போல் இந்திய விக்கிமீடியா கிளை, விக்கிமீடியா அறக்கட்டளை, CSI - A2Kஇல் இருந்தும் விருந்தினர்களை அழைக்கலாம். இதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவின் இருப்பு / வளர்ச்சி பற்றிய நல்ல ஒரு அறிமுகத்தைத் தர முடியும் என்பதுடன் ஒருவருக்கு ஒருவர் மற்ற விக்கிகளில் இருந்து கற்றுக் கொள்ளலாம். நம்ம வீட்டு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு அண்டை வீட்டார், உறவினர்களை அழைப்பது போல் இதனைக் கருதலாம். ஒரு சில விக்கிகள், அதிலும் விக்கிக்கு இரண்டு விருந்தினர் மட்டுமே என்பதற்கான காரணம், நமக்கு இருக்கிற வளங்களை வைத்து தரமான ஒரு நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க வேண்டுமே என்ற நோக்கில் மட்டுமே. கூட்டம் கூடும் போது செலவு, உழைப்பு எல்லாமே கூடும்.
  • முடிந்த அளவு நிகழ்ச்சிக்கான இடம் / விருந்தினர்களுக்கான தங்குமிடம் ஆகியவற்றை இலவசமாகப் பெற முயல வேண்டும். ஏதேனும் பல்கலை / கல்லூரியின் ஆதரவு கிடைத்தால் தோதாக இருக்கும்.
  • செப்டம்பர் 29, மாலை நடக்கும் திறந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை அச்சடித்து பரவலான சுற்றுக்கு விட வேண்டும்.
  • சென்னையில் இருந்து ஏற்பாடுகளைக் கவனிக்க குறைந்தது 5 தன்னார்வலர்களாவது தேவை. நிகழ்வு நடக்கும் அன்று அவரவர் நண்பர்கள் / உறவினர்களையும் அழைத்து வந்தால் ஒருங்கிணைப்பதற்கான ஆள்வளம் கிடைக்கும். --இரவி (பேச்சு) 07:27, 29 மே 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:14, 29 மே 2013 (UTC)[பதிலளி]
நல்ல முயற்சி. நிறைய கூட்டுழைப்பு அவசியம். விக்கித் தொழில்நுட்பம் சார்ந்தும், தமிழ் விக்கி வளர்ச்சி முன்னெடுப்புகள் சார்ந்தும் கட்டுரைகள் அமையுமாயின் சிறப்பாயிருக்கும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 08:35, 30 மே 2013 (UTC)[பதிலளி]
சென்னையில் மட்டுமல்லாது யாழ்பாணத்திலும் நடாத்த நிகழ்ச்சி நிரல் போடவும்.:)  ???????? யாழ்பாணத்திலும் நடாத்தலாம்--ஆதவன் (பேச்சு) 14:52, 29 மே 2013 (UTC)[பதிலளி]

யாழ்பாணத்தில் தான் அதிக பங்களிப்பாளர்கள் இருக்கிறார்களே? முன்னின்று நடாத்த விளம்பரம் செய்யலாம் :) --ஆதவன் (பேச்சு) 14:52, 29 மே 2013 (UTC)[பதிலளி]

ஆதவன், உங்கள் ஆர்வத்தைக் காண மகிழ்ச்சியாக உள்ளது. யாழ்ப்பாணத்திலும் ஒரு நிகழ்ச்சியை ஒழுங்கு செய்யவேண்டும் என்பதுதான் எனது விருப்பமும். பெரிய அளவில் இல்லாவிட்டாலும் சிறிய அளவிலாவது ஒரு நிகழ்வை ஒழுங்கு செய்யலாம். அங்குள்ள விக்கிப்பீடியர்கள் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்வதற்கு இது முதலாவது வாய்ப்பாகவும் அமையும். எத்தனை விக்கிப்பீடியர்கள் இப்போது யாழ்ப்பாணத்தில் இருக்கிறார்கள். இவ்வாறான நிகழ்ச்சி ஒன்றை நடத்துவதற்கு அவர்களில் எத்தனை பேர் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதை முதலில் அறிய வேண்டும். இடம் ஒழுங்கு செய்தல் போன்ற பணிகளை அங்கே இருப்பவர்கள் யாராவது செய்வது தான் வசதி. வெளியில் இருப்பவர்கள் வெளியில் இருந்து செய்யக்கூடிய உதவிகளைச் செய்வதுடன் நிகழ்ச்சியில் பங்குபற்றவும் முயலலாம். நிகழ்ச்சியை ஒழுங்கு செய்வதில் பங்களிக்கக்கூடியவர்கள் இங்கே தமது விருப்பத்தை வெளிப்படுத்தலாம். பின்னர், இதற்காகத் தனியான பக்கம் ஒன்றை ஏற்படுத்தி அங்கே விரிவாகக் கலந்துரையாடலாம். --- மயூரநாதன் (பேச்சு) 17:45, 29 மே 2013 (UTC)[பதிலளி]
மயூரநாதனின் கருத்துகளை வழிமொழிகிறேன். யாழ்ப்பாணம் / கொழும்பு அல்லது இலங்கையின் ஏதாவது ஒரு மையப்பகுதியில் நிகழ்ச்சி நடத்தினால் அனைவருக்கும் மகிழ்ச்சியே. இதற்கும் தமிழ்நாட்டில் நடக்கும் நிகழ்ச்சிக்கும் ஒரு வார இடைவெளி இருந்தால் இரு நிகழ்வுகளிலும் யாராவது கலந்து கொள்ள விரும்பினால் ஏதுவாக இருக்கும். உரிய முன்னேற்பாடுகளைச் செய்து விட்டு, உத்தேச செலவுகள் பற்றி தெரிவிக்க முடியுமானால், இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் சேர்த்தே நிதி கோர முடியும்.--இரவி (பேச்சு) 19:04, 29 மே 2013 (UTC)[பதிலளி]
//வழக்கமான மாநாடு போல் ஆய்வுக் கட்டுரை வாசிப்பது, திறந்த அழைப்பு, பெரும் கூட்டம் -> பெரும் செலவு என்றில்லாமல், உயர் தர உரையாடல் / அறிமுகம், அதற்கான நேரம் என்ற நோக்கில் நிகழ்ச்சி நிரல் இருக்க வேண்டும்//
இது நல்ல விடயம். பொதுவான கலந்துரையாடல்களோடு, தமிழ் விக்கிப்பீடியா எதிர் நோக்குகின்ற சில முக்கியமான விடயங்களை முன்னரே அடையாளம் கண்டு அவை பற்றிக் கலந்துரையாடுவதற்கும் நேரம் ஒதுக்கலாம். இது, பங்குபற்றுவோர் முன்னரே இவை பற்றிச் சிந்திப்பதற்கு உதவியாக இருப்பதுடன், கலந்துரையாடல்களும் கூடிய பயனுள்ளவையாக அமையும். இன்னும் ஏறத்தாழ நான்கு மாதங்கள் இருப்பதால், விக்கிப்பீடியர்கள் முன்னரே திட்டமிட்டுக் குறித்த நாட்களை இதற்காக ஒதுக்கி வைக்க முடியும் என்பதால், பல தமிழ் விக்கியர்கள் கலந்து கொள்வார்கள் என எண்ணுகிறேன். ---மயூரநாதன் (பேச்சு) 18:13, 29 மே 2013 (UTC)[பதிலளி]
கலந்துரையாடல் தலைப்புகளை முன்பே இனங்காணலாம் என்பது நல்ல பரிந்துரை. பலரும் பங்கேற்க வேண்டும் என்பதே நான்கு மாதங்கள் முன்கூட்டியே திட்டமிடுவதற்கான காரணம். குறிப்பாக, தமிழ்நாடு / இந்தியாவுக்கு வெளியே உள்ளோர் வந்து கலந்து கொள்வதற்கு இந்த அவகாசம் தேவை.--இரவி (பேச்சு) 19:04, 29 மே 2013 (UTC)[பதிலளி]
மாநாட்டின் பயன் பற்றி தெளிவாக அறிந்த பின்னரே இதனை முன்னெடுப்பது நல்லது என்று நினைக்கிறேன். விக்கியூடகப் போட்டி போன்று குறைந்த செலவுடன் கூடிய பலன் தரும் செயற்திட்டங்கள் போன்றவற்றுக்கு நாம் முன்னுருமை தரலாம். பெரிய நேர, பொருட் செலவுடன் மாநாடு நடத்தினால் அதனால் விளையக் கூடிய பலன்கள் என்ன? விக்கி பயனர்களுக்குள்ளேயே என்றால் பலன் அவ்வளவு கிடைக்காது என்றே நினைக்கிறேன். ஏன் என்றால் அதை நாம் இணையம் ஊடாகவே செய்யலாம் இல்லையா. தமிழிய அமைப்புகள், கல்லூரி, பல்கலைக்கழக மட்டத்தில் ஈடுபாடு இருக்குமானால் அது பயன் தரும் என்று நினைக்கிறேன். --Natkeeran (பேச்சு) 00:56, 30 மே 2013 (UTC)[பதிலளி]
//தமிழிய அமைப்புகள், கல்லூரி, பல்கலைக்கழக மட்டத்தில் ஈடுபாடு இருக்குமானால் அது பயன் தரும்// என்ற கருத்து முக்கியமானது. மாநாட்டில் பலகலை மட்ட பங்களிப்பை கூட்டக் கூடியதாக சில திட்டங்களை வகுப்பது பற்றியும் யோசிக்கலாம். எ.கா: பல்கலைக் கழக ஆய்வாளர்களின் ஆய்வுக்கட்டுரைகளைப் பெறத் தூண்டுவது. பல்கலைக்கழக மட்டப் போட்டிகளை நடாத்தி மாநாட்டில் பரிசளிப்பது, விக்கிப்பீடியர்கள் பல்கலை மட்டத்தில் விக்கிப் பயன்பாடு பற்றி ஆய்வு செய்வது முதலானவை.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 08:45, 30 மே 2013 (UTC)[பதிலளி]
  • தமிழர்களுக்குத் தமிழ் விக்கிப்பீடியாவின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தல், அதை சமூகத்துக்கு மேலும் பயனுள்ள வகையில் வளர்த்து எடுப்பதற்கான வழிமுறைகளை ஆராய்தல், பயனர்களின் கூட்டுழைப்பை வலுப்படுத்துதல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு நிகழ்வுகளைத் திட்டமிடலாம். ---மயூரநாதன்
  • பத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான ஊடக ஒருங்கிணைப்புக்குச் சிறப்பான கவனம் தர வேண்டும். --இரவி
  • பாராட்டுப் பத்திரம் என்பது விலைமதிப்பற்ற ஒரு அங்கீகாரம் --மா. செல்வசிவகுருநாதன்
  • விக்கி பயனர்களுக்குள்ளேயே என்றால் பலன் அவ்வளவு கிடைக்காது ,தமிழிய அமைப்புகள், கல்லூரி, பல்கலைக்கழக மட்டத்தில் ஈடுபாடு இருக்குமானால் அது பயன் தரும் --Natkeeran
👍 விருப்பம்--ஸ்ரீதர் (பேச்சு) 14:33, 30 மே 2013 (UTC)[பதிலளி]

நற்கீரன்,

//மாநாட்டின் பயன் பற்றி தெளிவாக அறிந்த பின்னரே இதனை முன்னெடுப்பது நல்லது என்று நினைக்கிறேன். விக்கியூடகப் போட்டி போன்று குறைந்த செலவுடன் கூடிய பலன் தரும் செயற்திட்டங்கள் போன்றவற்றுக்கு நாம் முன்னுருமை தரலாம். //

விக்கியூடகப் போட்டி போன்று குறைந்த செலவுடன் பயன் தரும் செயற்றிட்டங்கள் செய்ய வேண்டும் என்பது தான் நம் அனைவரின் விருப்பமும். அந்த வகையிலே தான் தற்போது நடைபெறும் தொடர் கட்டுரைப் போட்டியைத் திட்டமிட்டுள்ளோம். ஆனால், போட்டிகளை நடத்துவதை மட்டுமே நம்முடைய ஒற்றைச் செயற்றிட்டமாக கொள்ள இயலாதே? திட்டங்களின் தன்மை, நோக்கத்துக்கேற்ப செலவும் உழைப்பும் விளைவும் மாறுபடும் அல்லவா? 2010 கட்டுரைப் போட்டிக்குச் செலவே இல்லை. ஆனால், கடும் உழைப்பைக் கோரியது. வந்த விளைவு என்ன என்று உடனடியாக அலசியிருந்தோம் என்றால் நிறைவான பதில் கிடைத்திருக்காது. ஆனால், தமிழ் விக்கிப்பீடியா மைல்கற்களைத் திரும்பிப் பார்த்தால் 2010க்குப் பிறகு பெரும் வளர்ச்சி கண்டிருக்கிறோம். எனவே, விளைவு என்ன என்பதை முன்கூட்டியே உறுதியாக அறுதியிடுவது என்பது பொருத்தமாக இருக்காது.

//பெரிய நேர, பொருட் செலவுடன் மாநாடு நடத்தினால் அதனால் விளையக் கூடிய பலன்கள் என்ன? விக்கி பயனர்களுக்குள்ளேயே என்றால் பலன் அவ்வளவு கிடைக்காது என்றே நினைக்கிறேன். ஏன் என்றால் அதை நாம் இணையம் ஊடாகவே செய்யலாம் இல்லையா. //

முழுக்க முழுக்க இணையத்திலேயே செயற்படும் திட்டங்கள் பலவும் ஆண்டுக்கு ஒரு முறையோ அவ்வப்போதோ நேரில் கூடி உரையாடுவது வழமை தான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெரும் பொருட் செலவில் இந்திய விக்கிப்பீடியா மாநாடு நடந்தது. செய்த செலவுக்கும் உழைப்புக்கும் ஏற்ற விளைவு கிடைத்ததா என்பதில் மாற்றுக் கருத்துக்கள் உள்ளன. ஆனால், அதன் மூலம் இந்தியாவில் உள்ள சிறிய விக்கிப்பீடியாக்களுக்கு நல்ல வளர்ச்சி கிடைத்தது என்று தெரிய வருகிறது. மலையாள விக்கிப்பீடியர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே விக்கி சங்கமம் நடத்தி வருகிறார்கள்.

என்னைப் பொருத்தவரை, விக்கிப்பீடியா அறிமுகக் கூட்டங்கள், பட்டறைகளுக்குக் கூட பெரும் உழைப்பைச் செலுத்துகிறோம். அதனால் என்ன பயன் என்று கேட்டால், நேரடிப் பயன் குறைவு தான். ஆனால், இதன் மூலம் புதிய பயனர்கள் வருகிறார்களோ இல்லையோ ஏற்கனவே உள்ளவர்கள் சந்தித்து உரையாடுவதன் மூலம் ஒரு வகை புரிந்துணர்வு வருகிறது. இளைய, புதிய விக்கிப்பீடியர்களுக்கு நம்பிக்கை கூடி மேலும் பல புதிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதைக் கவனித்திருக்கிறேன். இந்த வகையில் ஏற்கனவே உள்ள விக்கிப்பீடியா சமூகத்தின் பிணைப்புக்கு நேரடிச் சந்திப்புகள் பெரிதும் உதவுகின்றன என்று உறுதியாக கூற முடியும். கடந்த பத்தாண்டுகளில் பல இடங்களில் இருந்து அரிய பங்களிப்புகளைச் செய்த அனைவரும் ஒரே இடத்தில் கூடுவது என்பது மிகுந்த பயனைத் தரும் என்றே உறுதியாக நம்புகிறேன்.

இந்த மாநாட்டு ஏற்பாட்டைப் பொறுத்தவரை, செலவும் உழைப்பும் தான் பிரச்சினை என்றால், அதனை எப்படிச் சரியாகத் திட்டமிட்டுச் செய்வோம் என்று பார்ப்போம். மற்ற பல விக்கிப்பீடியாக்களும் செய்யக்கூடிய வகையில் ஒரு எடுத்துக்காட்டாக அமையுமாறு செய்ய வேண்டும் என்றே விரும்புகிறேன். இரண்டு நாட்கள் செய்வது சிக்கலாக இருந்தால், ஒரே நாளில் செய்வது போன்றும் நிகழ்ச்சி நிரலை மாற்றலாம். ஆனால், மாநாடுகளின் வெற்றி என்பது மாநாட்டு உரைகளுக்கு வெளியே கூடும் உரையாடல்களினால் தான் என்பதால், இது விக்கிப்பீடியர்கள் தங்களிடையே கூடிப் பேசுவதற்குப் போதுமான நேரத்தைத் தராது என்று நினைக்கிறேன்.

//தமிழிய அமைப்புகள், கல்லூரி, பல்கலைக்கழக மட்டத்தில் ஈடுபாடு இருக்குமானால் அது பயன் தரும் என்று நினைக்கிறேன். //

பயன் தரும் என்பது உண்மை தான். ஆனால், அதற்கான ஒருங்கிணைப்பு / பரப்புரையைச் செய்ய தற்போது நமக்கு நேரமும் ஆள்வளமும் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இன்னொன்று உழைப்பும் செலவும் கூடும். இந்த அடிப்படையிலே தான் விக்கிப்பீடியர்களுக்கு மட்டுமான ஒரு நிகழ்வாகவேனும் செய்வோமே என்று எண்ணினேன்.

இரவி சொல்வதுபோல் செலவு, நேர உள்ளீடு அதிகம் ஆயினும் மாநாடுகளில் சந்தித்து ஒருவருக்கொருவர் பகர்வுகளைச் செய்வது உத்வேகத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கும். நீடித்த தனியாள் தொடர்புகளையும் அது வளர்க்கும். இத்தகைய தொடர்புகள் விக்கி வளர்ச்சிக்கு உறுதுணை பண்ணும் என்பது எனது கருத்து. நேரடியான முன்வைப்புகள், தொழில்நுட்ப அறிவூட்டம் நமக்குள் அவசியம் எனப்படுகின்றது. அதற்காகவே ஒரு நாளை முழுமையாக ஒதுக்குவது மற்றது. நிதி மற்றும் நேர திட்டமிடல் அவசியம்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 04:41, 17 சூன் 2013 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியர்களுக்கு இடையேயான சந்திப்புக்கும், கலந்துரையாடலுக்கும் முக்கியத்துவம் கொடுத்து மாநாட்டை ஒழுங்கு செய்வதே நல்லது என்பது எனது கருத்து. மாநாட்டு நேரத்தில் பயனர்களுக்கு அதிக வேலைப் பழுவை ஏற்படுத்திக் கொள்ளாமல் கலந்து பேசுவதற்கு அதிகமான நேரத்தை உருவாக்குவதில் கூடிய கவனம் செலுத்துவது பயனுள்ளது. இரண்டு நாட்களில் ஒரு நாளை சென்னைக்கு வெளியே சற்றுத் தொலைவில் ஏதாவது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடத்தில் கூட வைத்துக்கொள்ளலாம். ஒன்றாகவே ஒரு வண்டியை ஒழுங்குபடுத்திச் சென்று வரலாம். இடங்களைச் சுற்றிப்பார்த்தல், ஒளிப்படங்கள் எடுத்தல் போன்றவற்றுக்கும் ஓரிரு மணி நேரங்களைச் செலவிடலாம். 2010 விக்கிமேனியா மாநாட்டுக்குச் சென்றிருந்தபோதும், அண்மையில் வேறொரு மாநாட்டுக்காக இலண்டன் சென்றிருந்தபோதும் இத்தகைய நடவடிக்கைகளினால் ஏற்படக்கூடிய பயன்களை நேரடியாகக் கண்டிருக்கிறேன். நீண்டகாலம் நினைவில் இருக்கக்கூடியவற்றை ஒன்றாகப் பகிர்ந்து அனுபவிப்பது பயனர்களிடையே நீண்டகாலப் புரிந்துணர்வுக்கும் அடிப்படையாக அமையக்கூடும். ---மயூரநாதன் (பேச்சு) 19:30, 17 சூன் 2013 (UTC)[பதிலளி]

செப்டம்பர் மாதத்தில் மாநாடு நடத்துவதாயின் இப்பவே திட்டமிட்டு செயற்பட வேண்டும். நிதிவளம் கோருவதில் கால அவகாசம் தேவைப்படலாம். மற்றும் மாநாட்டு ஏற்பாடுகள் என... பத்தாண்டு நிகழ்வுகள் குறித்து பல்வேறு இடங்களிலுமான உள்ளூர் சந்திப்புகள், பட்டறைகள், போட்டிகள் குறித்தும் கவனம் செலுத்துவோம். இலங்கையில் மட்டக்களப்பு, மலையகம், யாழ்ப்பாணம் என்பவற்றில் விக்கி அறிமுகப் பட்டறைகலை நடாத்துவது மற்றும் உள்ளூர் சிற்றிதழ்களில் த.வி குறித்த கட்டுரைகள் என்பவற்றை எழுதுதல் என்பனவும் பரப்புரையாக செய்யலாம்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:25, 18 சூன் 2013 (UTC)[பதிலளி]

மயூரநாதனின் பரிந்துரை பிடித்திருக்கிறது. சென்னைக்கு அருகிலான வரலாற்று / பண்பாட்டு முக்கியத்துவம் உள்ள இடம் எனில் மாமல்லபுரம், காஞ்சிபுரம் ஆகியன போய் வரும் தூரத்தில் உள்ளன.--இரவி (பேச்சு) 06:50, 20 சூன் 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் -- சுந்தர் \பேச்சு 07:02, 20 சூன் 2013 (UTC)[பதிலளி]

கலந்து கொள்வோர்

இந்தக் கூடலில் எத்தனைப் பேர் கலந்து கொள்ள விரும்புகிறார்கள், எங்கிருந்து வர இருக்கிறார்கள், எத்தனை நாட்கள் தங்கப் போகிறார்கள், இருப்பிடம் / பயணச் செலவுக்கான தேவை என்ன என்பதை உடனடியாக அறிந்தால் தான் திட்டத்தை இறுதி செய்து முன்னெடுக்க முடியும். உங்கள் தேவைகளைக் கீழே தெரிவியுங்கள்.

  1. இரண்டு நாட்களும் கலந்து கொள்கிறேன். ஓரிரு நாள் முன்பாக சென்னை வந்து நிகழ்ச்சி ஏற்பாடுகளிலும் பங்கெடுக்க முடியும். பயணச் செலவு தேவையில்லை. அனைத்து விக்கிப்பீடியரும் ஒரு இடத்தில் தங்குவது போன்ற ஏற்பாடு இருந்தால், அறையைப் பகிர்ந்து கொள்ள விருப்பம். --இரவி (பேச்சு) 07:04, 20 சூன் 2013 (UTC)[பதிலளி]
  2. நான் சென்னையில் இருப்பதால் இரண்டு நாட்களும் கலந்துகொள்ள இயலும்; செலவுக்கான தேவை எதுவும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:41, 20 சூன் 2013 (UTC)[பதிலளி]
  3. இரு நாட்களும் கலந்து கொள்வேன். உதவித்தொகை தேவை இருக்காது. -- சுந்தர் \பேச்சு 14:49, 20 சூன் 2013 (UTC)[பதிலளி]
  4. இரு நாட்களும் கலந்து கொள்ள விருப்பம். தேவையாயின் ஒருநாள் முன்னதாகவே வந்து ஒழுங்குகளில் பங்கெடுக்கவும் விருப்பம். உதவித்தொகை கிடைத்தால் நன்று.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 07:10, 21 சூன் 2013 (UTC)[பதிலளி]
  5. கலந்துகொள்ள விருப்பம். உதவித் தொகை தேவையில்லை. ஏதேனும் புதிதாக கற்றுத் தந்தால் நலம். புதியவர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியாவினை பயன்படுத்த தூண்டும் வகுப்பு, விக்கியர்களுக்கு ஏதாவது கருவிகள்/மென்பொருள் பற்றிய பயிற்சி வகுப்பு இருத்தால் சிறப்பு -தமிழ்க்குரிசில்
  6. கலந்துகொள்ள விருப்பம். உதவித்தொகை தேவையில்லை. ஒன்றாகத் தங்குவதற்கும் விருப்பமே எனக்குரிய தங்கும் செலவுகளையும் நானே ஏற்றுக்கொள்வேன். ---மயூரநாதன் (பேச்சு) 09:11, 22 சூன் 2013 (UTC)[பதிலளி]
  7. மலேசியாவில் இருந்து நானும் என் மனைவியும் கலந்து கொள்கிறோம். உறுதிப்படுத்துகின்றோம். விமானப் பதிவை நாளை செய்து விடுகிறேன். கண்டிப்பாக நாங்கள் வருகிறோம். என் மனைவி ருக்குமணிக்கு பார்வதி ஸ்ரீ துணையாக இருக்க வேண்டும். திருச்சியில் எங்களின் வழித்தோன்றல்கள், சொந்த பந்தங்கள் இருக்கின்றார்கள். இனிமேல்தான் ஆராய்ச்சி செய்து தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். தாய்மண்ணில் எங்கள் பாதங்கள் படுவது பெருமை அல்ல. ஒரு பெரிய புண்ணியம்.(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்) (பேச்சு)--ksmuthukrishnan 06:03, 22 சூன் 2013 (UTC)[பதிலளி]
  8. ஒரு நாளாவது கலந்து கொள்கிறேன். உதவித்தொகைத் தேவை இல்லை.--சோடாபாட்டில்உரையாடுக 12:28, 22 சூன் 2013 (UTC)[பதிலளி]
  9. இரு நாட்களும் கலந்து கொள்ள விருப்பம். உதவித்தொகை கிடைத்தால் மறுப்பதற்கில்லை.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 16:50, 23 சூன் 2013 (UTC)[பதிலளி]
  10. இரு நாட்களும் கலந்து கொள்கிறேன். உதவித்தொகை தேவையில்லை. சென்னைப் புறநகரில் இருப்பதும், எதிர்பாராத வேலைகளும் தவிர நிகழ்ச்சி முன்னேற்பாடுகளில் பங்கெடுக்க வேறு தடைகளில்லை. --நீச்சல்காரன் (பேச்சு) 17:25, 23 சூன் 2013 (UTC)[பதிலளி]
  11. நானும் எனது மகள் பயனர் அபிராமியும் கலந்துகொள்கிறோம். இருவருக்குமான உதவித்தொகை கிடைத்தால் மறுப்பதற்கில்லை.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:48, 23 சூன் 2013 (UTC)[பதிலளி]
  12. கண்டிப்பாக இரு நாட்களும் கலந்து கொள்வேன். முன்னதாக வந்து மாநாட்டு நிகழ்ச்சி ஏற்பாடுகளில் ஈடுபடுவது சற்று கடினம். உதவித் தொகை தேவைப்படாது.--அராபத் (பேச்சு) 07:56, 24 சூன் 2013 (UTC)[பதிலளி]
  13. என் நிலை அறிவீர்கள். என் மனைவி துணையுடன் வந்தாக வேண்டும். இருவரும் வருகிறோம். உதவித்தொகை வேண்டாம். தங்குமிடம் தேவை. இரு நாட்களும் இருக்கலாம். --Sengai Podhuvan (பேச்சு) 12:28, 24 சூன் 2013 (UTC)[பதிலளி]
  14. நான் கலந்து கொள்வதில் ஆவலாய் உள்ளேன். எத்திகதிகளில் நடத்த ஏற்பாடாகிறது என்பதை முற்கூட்டியே தெரிவித்தால் நலம். இந்திய விசா எடுத்து வைத்துக் கொள்வதுநலமென நினைக்கிறேன். கொழும்பில் நடைபெற்ற விக்கிப்பீடியர் சந்திப்புக்கு வரலாம் என்றிருந்த போதிலும் அதற்கு முந்திய நாளிற்றான் இலங்கைக்கு வந்து சேர்ந்திருந்ததால் மிகவும் களைப்படைந்திருந்தேன். ஆதலினாற் கலந்து கொள்ள முடியவில்லை. சென்னையில் நடைபெறும் இந்நிகழ்விற் கலந்து கொண்டு இந்தியப் பயனர்கள் பலரையும் கண்டு, பேசி மகிழலாம் என நினைக்கிறேன்.--பாஹிம் (பேச்சு) 12:47, 24 சூன் 2013 (UTC)[பதிலளி]
  15. நானும் எனது மகன் கிருஷ்ணபிரசாத் ம் இரு நாட்களும் கலந்து கொள்ள விருப்பம் . உதவித்தொகை கிடைத்தால் மறுப்பதற்கில்லை.--ஸ்ரீதர் (பேச்சு) 13:06, 24 சூன் 2013 (UTC)[பதிலளி]
  16. சென்னைவாசி என்பதால் உதவித்தொகை இல்லாமலேயே கலந்து கொள்கிறேன். அத்துடன் நான் சைதையில் ஒரு படுக்கை அறையுடன் கூடிய வாடகை வீட்டில் வசிக்கிறேன். தங்குமிடம் தேவைப்படும் வெளியூர் விக்கிப்பீடியர்களை வரவேற்கிறேன். மூன்றாவது மாடி என்பதால் மூட்டு வலியில்லாத வெளியூர் விக்கிப்பீடியருக்கு ஏற்றதாக இருக்கும். அன்னையுடன் வசிப்பதால் வீட்டுச் சாப்பாடும் கிடைக்கும் என்று உறுதியளிக்கிறேன். :-) இருவர் தாராளமாக தங்கலாம். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:36, 24 சூன் 2013 (UTC)[பதிலளி]
  17. இருநாளும் கலந்துகொள்கிறேன். உதவித்தொகை கிடைத்தால் மறுப்பதற்கில்லை. --அரிஅரவேலன் (பேச்சு) 01:46, 25 சூன் 2013 (UTC)[பதிலளி]
  18. இருநாளும் கலந்துகொள்கிறேன்.--கிருஷ்ணாபேச்சு 03:05, 25 சூன் 2013 (UTC)[பதிலளி]
  19. கண்டிப்பாக இரு நாட்களும் கலந்து கொள்வேன்.உதவித்தொகை கிடைத்தால் மறுப்பதற்கில்லை.ஹிபாயத்துல்லா
  20. இரு நாட்களும் கலந்து கொள்கிறேன்.உதவித்தொகை கிடைத்தால் மறுப்பதற்கில்லை.--V.B.Manikandan (பேச்சு) 02:32, 27 சூன் 2013 (UTC)[பதிலளி]
  21. இருநாட்களிலும் பங்குபெற விருப்பம்.உதவித்தொகை வேண்டாம்.தமிழ் ஆர்வலர்களை காண வாய்பினை உருவாக்கிக் கொடுப்பதே நல்ல பயனுள்ள செயலாகும்.முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள். அருண்தாணுமாலயன்
  22. இரு நாட்களும் கலந்து கொள்கிறேன்.உதவித்தொகை கிடைத்தால் நன்று.--முனைவர். துரை. மணிகண்டன் (பேச்சு) 07:14, 28 சூன் 2013 (UTC)[பதிலளி]
  23. இருநாளும் கலந்துகொள்கிறேன். உதவித்தொகை கிடைத்தால் மறுப்பதற்கில்லை.--வெண்முகில் (பேச்சு) 10:14, 29 சூன் 2013 (UTC)[பதிலளி]
  24. இரு நாட்களும் கலந்துகொள்கிறேன். உதவித்தொகை ஏதும் தேவையில்லை. -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 16:42, 30 சூன் 2013 (UTC)[பதிலளி]
  25. கலந்துகொள்ள விருப்பம். உதவித் தொகை தேவையில்லை. ஏதேனும் புதிதாக கற்றுத் தந்தால் நலம். புதியவர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியாவினை பயன்படுத்த தூண்டும் வகுப்பு, விக்கியர்களுக்கு ஏதாவது கருவிகள்/மென்பொருள் பற்றிய பயிற்சி வகுப்பு இருத்தால் சிறப்பு, தேவையாயின் இருநாட்கள் கூட முன்னதாகவே வந்து ஒழுங்குகளில் பங்கெடுக்கவும் முடியும்--Yokishivam (பேச்சு) 16:14, 4 சூலை 2013 (UTC).[பதிலளி]
  26. இரு நாட்களும் கலந்து கொள்வேன். உதவித்தொகை தேவை இருக்காது. செப்டம்பர் 10-25 வரை இந்தியாவில் இருப்பேன். --கார்த்திக் (பேச்சு) 21:52, 4 சூலை 2013 (UTC)[பதிலளி]

கலந்து கொள்வோர் (உறுதி இல்லை)

  1. கலந்து கொள்ள விருப்பம். ஆனால் உறுதி இல்லை. விடுப்பு, தனிப்பட்ட வேலைகள் இடையூறாக வரலாம். உதவித்தொகை தேவை இல்லை. சென்னையில் யாராவது வழிகாட்ட முடிந்தால் நன்று. --Natkeeran (பேச்சு) 13:23, 21 சூன் 2013 (UTC)[பதிலளி]
  2. கலந்து கொள்ள விருப்பம். ஆனால் ஊரில் இருப்பேனா என்பது உறுதியில்லை. காடாறுமாதம் ஏகவில்லை எனில் கலந்துகொள்ள உதவித்தொகை அல்லது இருப்பிடம் தேவையில்லை.--மணியன் (பேச்சு) 09:28, 22 சூன் 2013 (UTC)[பதிலளி]
  3. செப்டம்பரில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உள்ளது (70-80%) ஆனால் உறுதியில்லை. உதவித்தொகை வேண்டாம். செப்டம்பரில் எனக்கு வகுப்புகள் கிடையாது, எனவே இயலும். --செல்வா (பேச்சு) 12:38, 24 சூன் 2013 (UTC)[பதிலளி]
  4. கலந்து கொள்ள விருப்பம். செப்டம்பர் முற்பகுதியில் தெரிந்துவிடும். உதவித்தொகை தேவை இல்லை. --Anton (பேச்சு) 13:57, 24 சூன் 2013 (UTC)[பதிலளி]
  5. விருப்பம். விடுப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை. தங்குமிடம் உள்ளது. உதவித்தொகை தேவையில்லை. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 08:09, 25 சூன் 2013 (UTC)[பதிலளி]
  6. கலந்துகொள்ள விருப்பம். ஆனால் ஊரில் இருப்பேனா என்பது தெரியவில்லை. இருந்தால் கண்டிப்பாகக் கலந்து கொள்வேன். உதவித்தொகை தேவையில்லை.--Booradleyp1 (பேச்சு) 13:27, 26 சூன் 2013 (UTC)[பதிலளி]
  7. தமிழ் விக்கி மாநாட்டில் கலந்து கொள்ள மிகவும் விருப்பம், எனினும் பல சூழ்நிலைகள் இடையூறை ஏற்படுத்துகின்றன. புதிதாகக் கனடாவில் குடியேறியபடியால் இங்கிருந்து இந்தியா வருவதற்குரிய பயணச்செலவுகள் உட்பட நேரமின்மை போன்ற சில சூழல்கள் உகந்ததாக அமையவில்லை. மாநாடு நிகழும்போது இசுகைப்பில் ஒளிபரப்பு நிகழ்ந்தால் கலந்து கொள்ளாதோர் பார்க்கலாம். (பத்தாண்டு நிறைவு நாளையிட்ட வேறு ஏதேனும் பணிகள் [படிம வேலைகள், இணைய பரப்புரைகள் போன்றவை] செய்யக் காத்திருக்கின்றேன்.--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 23:36, 26 சூன் 2013 (UTC)[பதிலளி]
  8. கலந்துகொள்ள ஆர்வமாய் இருக்கிறேன், எனினும் ஏதும் தனிப்பட்ட வேலைகளினால் இதற்கு இடையூறு ஏற்படுமோ தெரியவில்லை, உதவித்தொகை கிடைத்தால் கிடைத்தால் நன்று--சங்கீர்த்தன் (பேச்சு) 05:51, 28 சூன் 2013 (UTC)[பதிலளி]
  9. நான் செப்டம்பரில் தமிழ்நாட்டில் இருந்து கூடல் சனி ஞாயிறுகளில் இருந்தால் வருகிறேன். நிலைமை என்ன என்று அப்போது தான் தெரியும். உதவித்தொகை கிடைத்தால் நன்று. ஆனால் சங்கீர்தனன் இரண்டு மடங்கு உதவித்தொகை கேட்பது போல் தெரிகிறது. அப்படி கொடுக்க வேண்டாம் என வேண்டுகிறேன். :)- --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:23, 28 சூன் 2013 (UTC)[பதிலளி]
  10. ஆகத்து மாதத்தில் இருவார விடுமுறையில் ஊர் வருவதால், மீண்டும் செப்டம்பரில் அங்கு வருவது பற்றி உறுதியில்லை. இணையவழியில் கலந்து கொள்ள முடியும். --மாகிர் (பேச்சு) 10:40, 28 சூன் 2013 (UTC)[பதிலளி]
  11. கலந்து கொள்ள விருப்பம். ஆனால், சில தனிப்பட்ட காரணங்களால் இயலாமல் உள்ளது. வேறு வகைகளில் உதவ முடியும்.--Kanags \உரையாடுக 11:27, 29 சூன் 2013 (UTC)[பதிலளி]

கூடல் ஏற்பாடுகள்

நிறைய பேர் கூடலில் கலந்து கொள்ள விரும்புவது குறித்து மகிழ்ச்சி. இதற்கான நிதி ஆதாரம் தொடர்பாக விக்கிமீடியா அறக்கட்டளையிடம் விண்ணப்பிக்க எண்ணியுள்ளேன். அந்த ஏற்பாடுகள் முடிந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இங்கு இற்றைப்படுத்துகிறேன்.--இரவி (பேச்சு) 07:17, 1 சூலை 2013 (UTC)[பதிலளி]

ரவி, முதல் வரைவை எழுதி இங்கு பகிருங்கள். பிற பயனர்களும் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். ஓரளவு திட்டங்கள் முழுமையான/உறுதியான பின்புதான் செலவுகள் தெளிவுபெறும். சோடாவின் கருத்துக்கள் இங்கு முக்கியம். அவருக்கு அவர்கள் என்ன எதிர்பாக்கிறார்கள், எப்படி எழுத வேண்டும் என்று மிக நுட்பமாகத் தெரியும். --Natkeeran (பேச்சு) 13:29, 4 சூலை 2013 (UTC)[பதிலளி]

மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டி

ஏன்? மாணவர்கள் கட்டுரைப்போட்டி என்றால் விரும்பமாட்டார்கள் தான். ஆனால் விகிபீடியாவால் நடாத்தப்பட்டால் சிறப்பாக வருவார்கள். இவ்வாறு ஒன்று நடாத்தலாமே?--ஆதவன் (பேச்சு) 13:56, 29 மே 2013 (UTC)[பதிலளி]

கட்டுரைப்போட்டியாக இல்லாவிடிலும் பட்டறை,விக்கி பங்களிப்பு போன்ற பல்வேறு வழிகளில் செய்யலாமே?--ஆதவன் (பேச்சு) 14:46, 29 மே 2013 (UTC)[பதிலளி]
ஆதவன், 2010ல் உலகம் தழுவிய கட்டுரைப் போட்டி நடத்தினோம். அதில் மாணவர்களை ஈர்க்க பெரும் முயற்சி செய்தோம். ஆனால், அது உரிய பலனைத் தரவில்லை. அதில் இருந்து பெற்றுக் கொண்ட படிப்பினைகளைக் கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது. பட்டறை, விக்கி பங்களிப்பு என்று பல வகையிலும் மாணவர்களை ஈர்ப்பது அவசியம் தான். எப்படிச் செய்யலாம், என்ன திட்டங்கள் வகுக்கலாம் எனபதற்கு ஆலோசனைகளை வரவேற்கிறேன். --இரவி (பேச்சு) 19:01, 29 மே 2013 (UTC)[பதிலளி]
நான் நினைக்கிறேன் மாணவர்கள் வாழுமிடத்தில் பட்டறைகளுடன் சேர்த்து போட்டிகளை வைத்தாலென்ன?. வாழுமிடத்தில் நடப்பதால் பலர்பங்குகொள்ள நினைப்பார்கள்.உலகளாவிய அல்லது இணையம் மூலான போட்டிகளை நடாத்தினால் அக்கறை இல்லாமல் இருந்திருக்கக் கூடும் அல்லது சற்று தயக்கம் ஏற்பட்டிருக்கலாம்.மாணவர்களுக்கான பட்டறை என வரவழைத்து சில விக்கிதொகுப்பு பற்றி கூறி போட்டிகளை நடாத்தலாம். மாணவர்களுக்கு அறிவிப்பதன் மூலம் வரவழைக்கலாம்.யாழ்ப்பான மானவர்களைப்பற்றி சொல்லவா வேண்டும்.இவ்வாறான நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள பலர் உள்ளனர்.(என்னால் சிலரை வரவழைக்க முடியும்.இதைப்பற்றிய கருத்துத் தேவை.--ஆதவன் (பேச்சு) 09:32, 30 மே 2013 (UTC)[பதிலளி]
யாழ்ப்பாணத்தில் ஒழுங்கமைப்புச் செய்ய நூலகம் அறக்கட்டளை ஊடாக நான் உதவி செய்ய முடியும். இடம், ஒழுங்கமைப்பு, பரப்புரை ஆகியவற்றில் உதவ முடியும். --Natkeeran (பேச்சு) 13:40, 30 மே 2013 (UTC)[பதிலளி]
நன்றி நற்கீரன். எனினும் ஒரு பிரச்சினை உண்டு முன்னின்று நடாத்த பயனர்கள்,தன்னார்வலர்கள் தேவையே?.இத்தேவையை யார் நிவர்த்தி செய்வார்கள்?--ஆதவன் (பேச்சு) 14:32, 30 மே 2013 (UTC)[பதிலளி]
ஆகத்து மாதத்திற்கு பின்னான காலமாக இருப்பின் யாழ்ப்பாணம் வர முடியும். எதிர்வரும் மூன்று மாதமும் சற்று வேலைப்பழு. --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 07:54, 31 மே 2013 (UTC)[பதிலளி]
யாழ்பாணம் எனில் பன்கேற்க ஆவலாக உள்ளேன்--கலாநிதி 15:45, 24 சூன் 2013 (UTC)

மாணவர்கள் உள்ள இடத்துக்கே சென்று பட்டறையுடன் கூடிய போட்டி நடத்தலாம் என்பது நல்ல யோசனை. இந்த நோக்கில், பத்தாண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு உடனடியாகச் செய்ய முடியாது என்றாலும் ஒரு யோசனை தோன்றியது. இலங்கைக்குச் சென்றிருந்த காலத்தில் பலரும் அங்குள்ள பள்ளிகளில் உள்ள தேசிய அளவிலான வாதப் போட்டி (debate competion) பற்றி குறிப்பிட்டார்கள். அது போல் தமிழ் விக்கிப்பீடியா சார்பாக, தேசிய அளவிலான கட்டுரைப் போட்டி ஒன்றை நடத்த முடிந்தால் நன்றாக இருக்கும். ஒருங்கிணைப்பும் ஆள்வளமும் பெரிய அளவில் தேவைப்படும் என்பது மட்டுமே...--இரவி (பேச்சு) 18:17, 8 சூன் 2013 (UTC)[பதிலளி]

நிச்சயம் தேவைப்படும். ரவி நீங்கள் கூறுவது OK.--ஆதவன் (பேச்சு) 01:35, 9 சூன் 2013 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பீடியா அஞ்சல் தலைகள்

தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் தொடர்பாக ஒரு அஞ்சல் தலை வெளியிட முயல்வோமா? சென்னை, பெங்களூரில் இதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முடியும் என்பதால் அங்குள்ள பயனர்கள் உதவி தேவை. நல்ல அஞ்சல் தலையை வடிவமைக்க வரைகலை வல்லுனர்கள் உதவியும் தேவை. மற்ற நாடுகளில் வாழ்வோரும் இது போல் வசதி இருந்தால் முயன்று பார்க்கலாம். இது பரப்புரைக்கு ஏற்ற ஒரு செயற்பாடாக இருக்கும் என்று கருதுகிறேன். --இரவி (பேச்சு) 11:21, 24 சூன் 2013 (UTC)[பதிலளி]

எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க :) நல்ல யோசனை. கண்டிப்பாக செய்யலாம்.--அராபத் (பேச்சு) 12:29, 24 சூன் 2013 (UTC)[பதிலளி]

சட்டைகள்

கூடவே T-shirt ஒன்றை கொடுக்கலாமா??? இதற்கான செலவுகளை நம்மில் இயன்றவர்களே பகிர்ந்து கொள்ளலாம்.--அராபத் (பேச்சு) 12:29, 24 சூன் 2013 (UTC)[பதிலளி]

tshirt அடிப்பது நல்ல யோசனை. பத்தாண்டுக் கொண்டாட்டம் தொடர்பான முறையான யோசனைகளுக்கு ஆகும் செலவுகளுக்கு, விக்கிமீடியா அறக்கட்டளையிடம் மொத்தமாக நல்கை வாங்கும் வழி உள்ளதால், நியாயமான செலவு பிடிக்கும் யோசனைகளை முன்வைக்கத் தயங்க வேண்டாம். இதை வடிவமைத்து அச்சிடும் பொறுப்பை யாராவது எடுத்துக் கொண்டால் நலம். பல்வேறு அளவுகளையும் உள்ளடக்கி குறைந்தது 100 சட்டைகள் அடிக்கலாம்.--இரவி (பேச்சு) 12:50, 24 சூன் 2013 (UTC)[பதிலளி]


  • சட்டைகள் தருவது நல்ல யோசனையாகும். பார்வதி அவர்கள் கூறிய நிறுவனம் ரூபாய் 500க்கு தமிழ் மொழியிலான சட்டைகளை அடித்து தருகிறது என்று கேள்வியுற்றிருக்கிறேன். 100 என்ற பெரிய அளவில் தேவையுறுவதால் சற்று சலுகை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இணையத்தில் பழக்கமான [டிசனர்ஸ்] தனியாக வீட்டில் அச்சடித்து தருகிறார்கள். அதனால் நிறுவனத்தினை விட குறைவான விலையில் சட்டைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அவர்களிடம் கலந்துரையாடிவிட்டு மேலும் தகவல்களை நாளை தருகிறேன். அவர்களது தொலைப்பேசி எண் 9710779733. விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொண்டாலும் மகிழ்ச்சியே. நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:01, 24 சூன் 2013 (UTC)[பதிலளி]
குறைந்த செலவில் பணியை முடித்து தருவதாக கூறியிருக்கிறார். 100 என்ற எண்ணிக்கையில் எத்தனை மீடியம், லார்ஜ், XL, XXL போன்றவை எத்தனை தேவைப்படும்?. சட்டையின் வடிவமைப்பு வாசகம் என்ன?. முன்பக்க வடிவமைப்பு, பின்பக்க வடிவமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும்? என்பதைப் போன்ற உரையாடல்கலை இரவி அவர்களே அவரிடம் செய்தால் நன்றாக இருக்கும். அவருடைய கைப்பேசியின் தொடர்புகொள்ளலாம். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:15, 25 சூன் 2013 (UTC)[பதிலளி]
இரவி, ஜெகதீசுவரன், T-shirt வடிவமைப்புக்கு இந்தப் பக்கம் உதவக்கூடும். மேலும் அவர்களிடமே குறைந்த செலவில் கிடைக்குமா எனவும் கேட்டு அறியலாம்.--அராபத் (பேச்சு) 05:33, 27 சூன் 2013 (UTC) 👍 விருப்பம் --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:32, 29 சூன் 2013 (UTC)[பதிலளி]
அராப்பத், செகதீசுவரன், பார்வதி - ஆலோசனைகளுக்கு நன்றி. சரியான தரமும் விலையும் உள்ளவாறு பார்த்துக் கொள்வோம். இதற்கான நிதி ஆதாரத்தை உறுதிப்படுத்திக் கொண்டு இது குறித்து தொடர்ந்து பேசுவோம். பத்தாண்டுக் கொண்டாட்டம் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள், பணிகள் உள்ளதால் இயன்ற அளவு பணிகளைப் பிரித்துக் கொண்டு பொறுப்பெடுத்துச் செய்வதே வெற்றிகரமாகச் செயல்பட உதவும். சட்டைகளுக்கான வடிவமைப்பு, தயாரிப்பு உத்தரவு முதலிய ஒருங்கிணைப்புப் பணிகளை யாராவது பொறுப்பெடுத்துக் கொண்டால் நன்றாக இருக்கும். --இரவி (பேச்சு) 05:50, 28 சூன் 2013 (UTC)[பதிலளி]
வடிவமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்கள் என தெரிவியுங்கள் நண்பரே. பல்வேறு நிறுவனங்களை அனுகும் பொழுதே தரமான, விலை குறைவான சட்டைகள் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். 100 என்ற எண்ணிக்கையில் எத்தனை மீடியம், லார்ஜ், XL, XXL போன்றவை எத்தனை தேவைப்படும்?. சட்டையின் வடிவமைப்பு வாசகம் என்ன?. முன்பக்க வடிவமைப்பு, பின்பக்க வடிவமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும்? என என்னிடம் கேள்விகள் மட்டுமே உள்ளன. இவற்றைக் கொண்டு நிறுவனங்களிடம் விசாரிக்க இயலாத நிலை. அத்துடன் பட்ஜெட் எவ்வளவு என்று தெரிவிக்க வேண்டுகிறேன். இயன்றதைச் செய்ய காத்திருக்கிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:38, 29 சூன் 2013 (UTC)[பதிலளி]

எனக்கு பெரிய (L) அளவானதே தேவை. பலருக்கும் அவ்வாறே இருக்குமென நம்புகிறேன். கை நெடியதாக இருந்தால் மிக்க வசதியாக இருக்கும். மிக்க உயர் தரமானவையாக இருந்தால் நல்லது.--பாஹிம் (பேச்சு) 11:00, 29 சூன் 2013 (UTC)[பதிலளி]

பத்தாண்டுக் கொண்டாட்டம் தொடர்பாக விக்கிமீடியா அறக்கட்டளையிடம் நல்கை வேண்டி பெற்ற பிறகே இதற்கான நிதி எவ்வளவு என்று உறுதி செய்ய முடியும். எனவே, அது வரை சட்டை தயாரிப்பு நிறுவனங்களிடம் பேசுவது இயலாத ஒன்று. அதற்கு முன்பு சட்டை வடிவமைப்பு தொடர்பான முயற்சிகளை எடுக்கலாம். இது தொடர்பாக அன்டன், தாரிக் ஆகியோர் உதவலாம். என்னென்ன அளவில் எத்தனை சட்டைகள் என்பதைத் தோராயமாகத் தான் முடிவு செய்ய வேண்டும். small 5%, medium 20%, large 40% extra large 30%, XXL 5% என்பது போல் செய்யலாம்.--இரவி (பேச்சு) 07:25, 1 சூலை 2013 (UTC)[பதிலளி]

உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் வெளியான உங்களுக்குத் தெரியுமா? பகுதியிலுள்ள தகவல்களை அச்சு வடிவில் நூலாக்கம் செய்து வெளியிடலாம். விக்கிப்பீடியா பத்தாண்டுக் கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் அனைவருக்கும் இலவசமாகக் கொடுக்கலாம். விக்கிப்பீடியா குறித்த அறிமுகத்திற்கு இந்த நூல் உதவக்கூடும்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 08:04, 1 சூலை 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:12, 1 சூலை 2013 (UTC)[பதிலளி]

நல்ல பரிந்துரை. நூல் விக்கிப்பீடியா பின்பற்றும் கிரியெட்டிவ் காமன்சு உரிமத்தின் கீழ் வர வேண்டும். அதாவது, அதே நூலை யாரும் கூட திரும்ப அச்சிடலாம். படியெடுத்து இலவசமாகத் தரலாம். இதைப் புரிந்து கொண்டு பதிப்பகத்தார் யாராவது முன்வந்தால் கண்டிப்பாக நூல் வடிவம் கொடுக்கலாம். கூடல் நிகழ்வில் நூலை விற்பனைக்கே கூட வைக்கலாம்.--இரவி (பேச்சு) 08:26, 1 சூலை 2013 (UTC)[பதிலளி]
ஆம், நல்ல பரிந்துரை, தேனி. மு. சுப்பிரமணி. கிரியேட்டிவு அளிப்புரிமையின் மற்றொரு தேவை, பங்களிப்பாளர் பெயர் பட்டியலை இணைக்க வேண்டும் என்பது. விக்கிப்பக்கங்களை நூலாகத் தொகுக்க உதவும் கருவியில் தாமாகவே பக்க வரலாற்றிலிருந்து பயனர் பெயரைப் பெற்றுத் தொகுக்கும் வசதி இருந்தது. அப்படி இயலாவிட்டால் பக்க வரலாற்றில் பங்களிப்பாளர்களைக் காணலாம் என்று ஒரு குறிப்பை மட்டும் இடலாம் என நினைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 09:36, 1 சூலை 2013 (UTC)[பதிலளி]
நல்ல யோசனை தேனி. மு. சுப்பிரமணி. பயனுள்ள விடயமாக அமையும். அதிக அளவில் மலிவுப் பதிப்புகளாக அச்சிடுவது முழுமையாக மாணவர் சமூகத்தை சென்றடைய வசதியாகும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:36, 1 சூலை 2013 (UTC)[பதிலளி]
தமிழ்நாட்டில் உள்ள நூலகங்கள் அனைத்திற்கும் விக்கிப்பீடியாவின் பெயரால் நன்கொடையாக கூட தரலாம். அதற்கு விக்கிமேனியாவினை எதிர்ப்பார்க்க தேவையில்லை, பயனர்களின் நல்கையிலேயே கூட செய்யலாம். இணையம் தாண்டி விக்கப்பீடியாவின் நோக்கங்கள் நிறைவேறும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:59, 2 சூலை 2013 (UTC)[பதிலளி]
இதில் எவ்வளவு பலன் கிடைக்கும் என்று தெரியவில்லை. ஏன் என்றால் தமிழில் வெளிவரும் பெரும்பாலான "அறிவியல் நூல்கள்" இவ்வாறான துணுக்கு 50 வகைதான். மாற்றாக விக்கியூடகங்கள், விக்கிப்பீடியாவில் எப்படித் தொகுப்பது பற்றிய ஒரு கையேடு, அதன் ஒரு அங்கமாக சிறப்புக் கட்டுரைகள் இடம்பெற்றால் நல்லது என்று நினைக்கிறேன். --Natkeeran (பேச்சு) 13:56, 4 சூலை 2013 (UTC)[பதிலளி]
நக்கீரரே தங்களுடைய கையேடு யோசனை மிகவும் அருமை. விக்கிப்பீடியாவைப் பற்றி தேனியார் எழுதிவரும் தொடர் எளிமையாக உள்ளது. அதனில் கட்டுரையை தொகுப்பது, விக்கிப்பீடியாவின் படிமம் ஏற்றுதல், கட்டுரைத் திருத்தம் போன்ற பகுதிகளை அச்சிட்டு வழங்கலாம். தேனியார் முடிவெடுக்க வேண்டும். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:03, 4 சூலை 2013 (UTC)[பதிலளி]
நூல் ஒன்று வெளியிடுவது நல்ல யோசனைதான். பத்தாண்டு நிறைவின் ஒரு நினைவாகவும் இது அமையும். எனக்கும் நற்கீரனுடைய யோசனையே கூடிய ஏற்புடையதாகத் தெரிகிறது. விக்கிப்பீடியாவை எப்படித் தொகுப்பது, எவ்வாறு பயன்படுத்துவது போன்ற விடயங்களையும், விக்கிப்பீடியாத் திட்டத்தின் உலகளாவிய முக்கியத்துவம், தமிழ் விக்கிப்பீடியாவின் முக்கியத்துவம் என்பவற்றையும் உள்ளடக்கிய சிறு நூலாக இது அமையலாம். அச்சில் வெளியிடுவதைவிட இது இலகுவாகவும் செலவு குறைவாகவும் இருக்குமானால் சிறப்புக் கட்டுரைகளை குறுவட்டில் படியெடுத்து ஒரு இணைப்பாக அக் கையேட்டுடன் சேர்த்து வழங்கலாம். பொறுப்புக்களைப் பகிர்ந்து செய்யக்கூடியதாக இருந்தால்தான் இத்தகைய வேலைகளைச் செய்ய முடியும். நிகழ்வுக்கு முதல் நாள் இரவுவரை அச்சகத்தில் இருக்கும் நிலை இல்லாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். ---மயூரநாதன் (பேச்சு) 17:57, 4 சூலை 2013 (UTC)[பதிலளி]

மாநாட்டில் கட்டுரை சமர்ப்பித்தல்

மாநாட்டில் கட்டுரைகள் மற்றும் அறிக்கைகளை சமர்ப்பித்தல் தொடர்பிலான கருத்துக்களையும் ஆர்வங்களையும் இங்கு பதிவுசெய்யுங்கள். பலரது விருப்பத்துறைகள், வேண்டுகோள்களை பெற்றபின் திட்டப்பக்கத்தில் முடிவான முன்வைப்புகளுக்கான பட்டியலை தயாரித்து இடலாம்.

சஞ்சீவி சிவகுமார் கருத்து

  • பின்வரும் விடயங்கள் தொடர்பில் சமர்ப்பிப்புகள் இடம்பெறுவது பயனளிக்கும் எனக் கருதுகின்றேன்.
  1. . கிறியேற்றிவ் கொமன்சு பதிப்புரிமை வார்ப்புருக்கள் பற்றிய விளக்கங்கள்.
  2. . விக்கிச் செய்தி தொடர்பிலான சவால்களும் அவற்றை எதிர்கொள்ளக்கூடிய அணுகுமுறைகளும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 22:46, 1 சூலை 2013 (UTC) \--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 05:56, 2 சூலை 2013 (UTC)[பதிலளி]
வழக்கமான மாநாடு என்ற பெயரில் நடத்தினால், கட்டுரை, ஆய்வு என்பது போன்ற குழப்பம் வருகிறது என்று தான் கூடல் என்ற பெயரைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளேன். நிகழ்வின் முதல் நாள் நிகழ்வு அரங்குக்கு வெளியே பண்பாட்டுச் சுற்றுலாவாக நடக்க வாய்ப்புண்டு. அரங்கில் அமர்ந்து விக்கிப்பீடியா நுட்பங்கள் குறித்து பேசுவதற்கு இருக்கும் ஒரே நேரம் இரண்டாம் நாள் காலை மட்டுமே. கலந்து கொள்ளும் பலரும் புதிய விக்கிப்பீடியா நுட்பங்கள், வழிகாட்டல்கள் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்றுள்ளார்கள். எனவே, அந்த நோக்கில் சில அமர்வுகளை ஒழுங்குபடுத்த இயலும். இது unconference போல அமைவது சிறப்பாக இருக்கும். --இரவி (பேச்சு) 13:15, 4 சூலை 2013 (UTC)[பதிலளி]

சிறப்பு அழைப்பாளர்கள் அழைப்பு உண்டா?

//திறந்த நிகழ்வு - விக்கி ஆர்வலர்கள், ஊடக நண்பர்கள், தமிழார்வலர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு வேண்டலாம்//

தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்விற்கு தமிழ்நாடு அரசின் அமைச்சர்/அரசு அதிகாரிகள்/தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரிகள்/தமிழறிஞர்கள்/புகழ் பெற்ற எழுத்தாளர்கள் போன்ற சிறப்பு அழைப்பாளர்கள் அழைக்கும் திட்டம் உள்ளதா?--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 05:12, 4 சூலை 2013 (UTC)[பதிலளி]

செய்தால் நன்றாக இருக்கும். நம் விக்கியிலேயே உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இருந்த யாரோ பங்களித்த மாதிரி ஞாபகம். அவர் மூலம் அந்நிறுவன்த்தில் இருந்த தமிழ் அறிஞர்களை அழைக்க முயன்றால் நன்று. தமிழறிஞர்கள் எந்தெந்த வகை கட்டுரைகளை தேடுகிறார்கள் என பேசச் சொல்லலாம். மேலும் சிலவற்றையும் கேட்டுப் பார்க்கலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:13, 4 சூலை 2013 (UTC)[பதிலளி]

அரசு அதிகாரிகளையும், அமைச்சர் போன்ற அரசியல் சார்புடையவர்களை தவிர்த்தல் நலம். மற்றபடி தமிழறிஞர்கள், எழுத்தாளர்களை அழைப்பது சிறப்பான பலனைத் தரும் என எண்ணுகிறேன். புகழ் பெற்றவர்கள் வரும் பொழுது ஊடகத்தின் கவனமும் ஈர்க்கப்பட இது வழிவகுக்கும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 11:32, 4 சூலை 2013 (UTC)[பதிலளி]
இரண்டாம் நாள் மாலையில் 03.00 - 05.00 ஆகிய இரண்டு மணி நேரமே திறந்த அழைப்பு. இதில் கலந்து கொள்ளும் பொது மக்களுக்கும் ஊடகங்களும் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம் தருதல், நூல் வெளியீடு / பாராட்டுப் பத்திரம் வழங்கல் / இன்னும் வேறு பணிகள் போக எஞ்சுவது கொஞ்ச நேரமே. வழக்கமான சிறப்பு நிகழ்ச்சி போல் சிறப்பு விருந்தினர்கள், பேருரை என்று போனால் நிகழ்ச்சியைத் திட்டமிட்டபடி முடிப்பதில் சிரமம் வரலாம். அப்படியே சிறப்பு விருந்தினராக யாரையாவது அழைப்பது என்றால் திறமூல / விக்கிப்பீடியா இயக்கத்தில் இருந்தோ ஒத்த கருத்துடைய திட்டங்களில் இருந்தோ அழைப்பதே பொருத்தமாக இருக்கும். தமிழ்நாடு அரசின் அமைச்சர்/அரசு அதிகாரிகள்/தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரிகள்/தமிழறிஞர்கள்/புகழ் பெற்ற எழுத்தாளர்கள் போன்றோரை சிறப்பு விருந்தினர்களாக அழைத்தால் அவர்களைக் கவனிப்பதிலேயே கவனம் இருக்கும். ஒருத்தரைக் கவனித்து ஒருத்தரைக் கவனிக்கவில்லை என்ற குறைபாடுகள் வரும். இவரை அழைத்து அவரை ஏன் அழைக்கவில்லை என்ற சாய்வுகள் வரும்.
2010ஆம் ஆண்டு நடந்த கட்டுரைப் போட்டி தமிழ் விக்கிப்பீடியா பற்றிய நல்ல விழிப்புணர்வைத் தந்தது. அதற்கு அரசு, அதிகாரிகளின் ஒத்துழைப்பும் ஒரு காரணம். இந்த பத்தாண்டு நிகழ்ச்சியின் மூலம் தமிழ் விக்கிப்பீடியா பற்றிய விழிப்புணர்வைப் பல்வேறு இடங்களில் கொண்டு சேர்க்க முடிந்தால் நன்றாக இருக்கும். எனவே, யாரையும் ஒதுக்கத் தேவையில்லை. இந்த அடிப்படையில் அவரவர்கள் தங்களுக்குத் தெரிந்தோரை, தனிப்பட்ட முறையில், நட்பு நோக்கில், நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைத்து வந்தால் பிரச்சினை இல்லை. சிறப்பு விருந்தினர் என்று அறிவிப்பது, பேச நேரம் ஒதுக்குவது ஆகியன மட்டுமே சிக்கலாகத் தோன்றுகிறது.--இரவி (பேச்சு) 13:12, 4 சூலை 2013 (UTC)[பதிலளி]

நல்லது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:43, 4 சூலை 2013 (UTC)[பதிலளி]

"அரசு அதிகாரிகளையும், அமைச்சர் போன்ற அரசியல் சார்புடையவர்களை தவிர்த்தல் நலம்". "திறமூல / விக்கிப்பீடியா இயக்கத்தில் இருந்தோ ஒத்த கருத்துடைய திட்டங்களில் இருந்தோ அழைப்பதே பொருத்தமாக இருக்கும்". --Natkeeran (பேச்சு) 13:57, 4 சூலை 2013 (UTC)[பதிலளி]