பன்றித் தட்டைப்புழு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவு
சி r2.7.2) (தானியங்கிஅழிப்பு: eo:Teniinfekto, pt:Tênia#Taenia solium
வரிசை 47: வரிசை 47:
[[பகுப்பு:ஒட்டுண்ணிகள்]]
[[பகுப்பு:ஒட்டுண்ணிகள்]]


[[ar:شريطية الخنزير]]

[[az:Donuz soliteri]]
[[bg:Свинска тения]]
[[ca:Taenia solium]]
[[cs:Tasemnice dlouhočlenná]]
[[de:Schweinebandwurm]]
[[en:Taenia solium]]
[[en:Taenia solium]]
[[eo:Teniinfekto]]
[[es:Taenia solium]]
[[et:Nookpaeluss]]
[[pt:Tênia#Taenia solium]]
[[fa:تنیا سولیوم]]
[[fr:Taenia solium]]
[[id:Cacing pita babi]]
[[it:Taenia solium]]
[[ko:갈고리촌충]]
[[la:Taenia solium]]
[[lt:Kiaulinis kaspinuotis]]
[[nl:Varkenslintworm]]
[[pl:Tasiemiec uzbrojony]]
[[ru:Свиной цепень]]
[[sk:Pásomnica dlhočlánková]]
[[sr:Свињска пантљичара]]
[[sv:Svinbandmask]]
[[te:టీనియా సోలియమ్]]
[[vi:Sán dải lợn]]
[[zh:猪肉绦虫]]

17:03, 21 சூன் 2013 இல் நிலவும் திருத்தம்

பன்றித் தட்டைப்புழு
(Taenia solium)
பன்றித் தட்டைப்புழுவின் தலை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
தட்டைப்புழுத் தொகுதி (Platyhelminthes)
வகுப்பு:
நாடாப்புழு வகுப்பு (Cestoda)
வரிசை:
குடும்பம்:
தட்டைநாடாப்புழு குடும்பம் (Taeniidae)
பேரினம்:
இனம்:
T. solium
இருசொற் பெயரீடு
தட்டைநாடாப்புழு சோலியம் '
(Taenia solium)

Linnaeus, 1758

பன்றித் தட்டைப்புழு (இலத்தீன் பெயர் தேனியா சோலியம், Taenia solium) என்பது பன்றிக்கு நோயுண்டாக்கி, பன்றிக்கறியைச் சரியாக சமைக்காது உண்ணும் மாந்தர்களுக்கும் நோய் உண்டாக்கும் ஒரு தட்டையான நாடா போன்ற வடிவம் கொண்ட தட்டைப்புழு. இதன் தாக்கம் ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, தென் ஐரோப்பாவின் சில பகுதிகள், வட அமெரிக்காவின் சில பகுதிகளில் காணப்படுகின்றது. மாந்தர்களுக்கு ஏற்படும் இந்தப் பன்றித் தட்டைப்புழு நோயை 3000 ஆண்டுகளுக்கு மேலாகவே வரலாற்றில் அறிந்து இருக்கின்றார்கள்[1]. முட்டைப்புழு ("குடம்பி") நிலையில் மாந்தர்களின் உடலில் இருக்க நேர்ந்தால் மாந்த உடலில் சில பகுதிகள் மரத்துப்போதல், வலிப்பு ஏற்படுதல்(காக்காய் வலிப்பு போன்று கைகால்கள் அதிர்தல் அல்லது வலிப்பு என்னும் இழுப்பு ஏற்படுதல்) ஆகியவை நிகழ்கின்றன. இந்தத் தட்டைப்புழு வெள்ளை நிறத்தில் காணப்படுகின்றன, இவற்றின் தலைப்பகுதியில் நான்கு உறிஞ்சுபகுதிகளும் (உறிஞ்சான்கள்), இரண்டு வரிசையாக அமைந்த கொக்கிகளும் உள்ளன.

விளக்கம்

பன்றித் தட்டைப் புழு (தேனியா சோலியம், T. Solium). உடல் உள்பகுப்புகளாகிய கணுக்களைக் காணலாம்

பன்றி தட்டைப்புழு வெள்ளை நிறத்தில் ஏறத்தாழ 6 மிமீ அகலமும் 2 முதல் 7 மீ நீளமும் கொண்டிருக்கும். ஏறத்தாழ 800 வரை இணைக்கப்பட்ட பகுதிகளும் (கணுக்களும்) உண்டு. மாட்டிறைச்சியில் காணப்படும் மாட்டுக்கறித் தட்டைப்புழு (தேனியா சாச்சினாட்டா, Taenia saginata) எனப்படும் தட்டைப்புழுவைப்போலவே இதுவும் இருக்கும் ஆனால் சற்றி நீளம் குறைவானதாகவும் தலைப்பகுதி சற்று வேறானதாகவும் இருக்கும். பன்றித் தட்டைப்புழுவின் உயிர்வளர்ச்சி நிலைகளும் ஏறத்தாழ மாட்டுக்கறித் தட்டைப்புழுவினதைப் போன்றவையே. முட்டை வடிவில் இருக்கும்பொழுது இவை இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளை அறிவது கடினம். இரண்டுவகைத் தட்டப்புழுக்களின் முட்டைகளுமே 31-43 மைக்குரோமீட்டர் விட்டமுள்ள கருவுள்ள முட்டைகளாகும்[2].

நோய்ப் பரவல் முறை

இந்தப் பன்றித் தட்டைப்புழு (தேனியம் சோலியம்) உலகம் முழுவதும் பரவி உள்ளது. இந்தத் தட்டைப்புழுவின் இடைக்கால உறைவிடம் பன்றிகள்; ஆனால் இது முழு வளர்ச்சி அடைய மாந்தர்கள் பன்றிகளோடு சேர்ந்து வாழும் சூழல் தேவைப்படுகின்றது. பன்றியின் கறியைச் சரிவர சமைக்காது உண்டால் இப்புழு மாந்தர் உடலில் இடம்பற்றுகின்றது. போதிய தூய்மை பேணாவிட்டாலும், நீரில் கலந்தோ மண்னில் இருந்தோ உணவை அடைந்து நோயூட்டுகின்றது. அமெரிக்காவில் இந்நோய் தாக்கப்படுவது பற்றி ஆய்வு செய்ததில் இருந்து, மெக்சிக்கோ, நடு அமெரிக்கா, தென் அமெரிக்கா போன்ற பகுதிகளில் இருந்து தென்கிழக்கு ஆசியாவில் இருந்தும் வந்து குடியேறுபவர்கள் வாயிலாகப் பரவுவதாகக் கருதுகின்றனர்[3]. இந்தப் பன்றித் தட்டைப்புழு நோய் இசுலாமியரிடையேயும் இசுலாமிய நாடுகளிலும் மிகக் குறைவாக உள்ளது ஏனெனில் பன்றிக்கறி உண்பதில்லை. மாந்தர்களுக்கு ஏற்படும் இந்தப் பன்றித் தட்டைப்புழு நோய், மாந்தர்களின் மலக்கழிவில் இருக்கக்கூடிய தட்டைப்புழுவின் முட்டைகளை எவ்வாறோ பன்றிகளின் வழியாக உட்கொள்ள நேரும் பொழுது இந்நோய் உண்டாகின்றது. இப்புழுவின் உயிர் வளர்ச்சியில் பன்றியும், மாந்தர்களும் நெருங்கி வாழும் சூழல் தேவைப்படுகின்றது.

1990-1991 இல் நான்கு பழமரபு யூதர்களுக்கு வலிப்புகளும் (இழுப்புகளும்), மூளைத்தாக்கமும் ஏற்பட்டது, இவை இந்தப் பன்றித்தட்டைபுழுவால் என்றும் அறிந்தனர், ஆனால் அவர்கள் தங்கள் சமயப் பழக்கத்தின் படி பன்றிக்கறி உண்ணுவதில்லை, எனினும் இவர்கள் இந்நோய்க்கு எவ்வாறு உள்ளானார்கள் என்று காரணங்களை அலசிய பொழுது வீட்டில் வேலை செய்வதற்காக இலத்தீன் அமெரிக்காவை (தென் அமெரிக்காவை)ச் சேர்ந்த பணியாட்கள் வழி இந்நோய் உண்டாயிற்று என்று கண்டனர். இந்தப் பணியாட்களின் உடலில் பன்றித் தட்டைப்புழு நோயெதிர்ப்புப் பொருள்கள் இருப்பது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது, எனவே இதுவே காரணமாக இருக்க அதிக வாய்ப்புக்கூறுகள் உடையது எனக் கண்டனர்.[4][5]

மருத்துவத் தீர்வுகள்

இத்தட்டைப் புழு உண்டாக்கும் மாந்த நோயைத் தீர்க்க பிராசிக்குவான்டெல் (Praziquantel) (PZQ)என்னும் வேதியியல் மருந்தைப் பயன்படுத்துகின்றார்கள்; சிலர் நைக்குளோசமைடு (niclosamide) என்னும் மருந்தை எல்லாத் தட்டைப்புழு நோய்களுக்கும் நல்ல தீர்வாகக் கருதுகின்றார்கள் [6] நீர்மம்முட்டைவழி நோய்க்கு (cysticercosis) ஒரு இசுடெராய்டுடன் (steroid) சேர்ந்த ஆல்பெண்டாசோல் (albendazole) எடுத்துக்கொண்டால் அது அழற்சியைக் குறைக்கும் என்னும் கருத்துள்ளது. நடுவண் நரம்பு மண்டத்தைத் தாக்கி இருந்தால், அறுவைத் தீர்வு தேவை ஆகலாம். அல்பெண்டாசோல் மருந்து நரம்பியல்-நீர்மமுட்டைவழி நோய்க்கும் பாதுகாப்பான தீர்வாக அமையக்கூடும் என்று கருதப்படுகின்றது[7][8]

பன்றித்தட்டைப்புழுவின் ஒரு பகுப்பின் (ஒரு கணுவின்) உட்கூறுகளைக் காட்டும் சாயம் ஏற்றப்பட்ட நுண்படம்

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. [1]
  2. [2]
  3. Flisser A. (May 1988). "Neurocysticercosis in Mexico". Parasitology Today 4 (5): 131–137. doi:10.1016/0169-4758(88)90187-1. பப்மெட்:15463066. 
  4. Dworkin, Mark S. (2010). Outbreak Investigations Around the World: Case Studies in Infectious Disease. Jones and Bartlett Publishers. பக். 192–196. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7637-5143-2. http://books.google.com/?id=cm5pTOiYEmsC&pg=PA192&lpg=PA192&dq=pork+tapeworm+orthodox+jews#v=onepage&q=pork%20tapeworm%20orthodox%20jews&f=false. பார்த்த நாள்: August 9, 2011. 
  5. Schantz, Peter M. et al.; Moore, Anne C.; Muñoz, José L.; Hartman, Barry J.; Schaefer, John A.; Aron, Alan M.; Persaud, Deborah; Sarti, Elsa et al. (September 3, 1992). "Neurocysticercosis in an Orthodox Jewish Community in New York City". New England Journal of Medicine 327 (10): 692–695. doi:10.1056/NEJM199209033271004. http://www.nejm.org/doi/pdf/10.1056/NEJM199209033271004. பார்த்த நாள்: August 9, 2011. 
  6. http://www.ncbi.nlm.nih.gov/pubmedhealth/PMH0002366/
  7. Garcia HH, Pretell EJ, Gilman RH, Martinez SM, Moulton LH, Del Brutto OH, Herrera G, Evans CA, Gonzalez AE, Cysticercosis Working Group in Peru. (2004). "A trial of antiparasitic treatment to reduce the rate of seizures due to cerebral cysticercosis". N Engl J Med. 350 (3): 249–258. doi:10.1056/NEJMoa031294. பப்மெட்:14724304. http://content.nejm.org/cgi/content/full/350/3/249. 
  8. Matthaiou DK, Panos G, Adamidi ES, Falagas ME. (2008). Carabin, Hélène. ed. "Albendazole versus Praziquantel in the Treatment of Neurocysticercosis: A Meta-analysis of Comparative Trials". PLOS Neglected Tropical Diseases 2 (3): e194. doi:10.1371/journal.pntd.0000194. பப்மெட்:18335068. 

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்றித்_தட்டைப்புழு&oldid=1442222" இலிருந்து மீள்விக்கப்பட்டது