புதிய தலைமுறை (தொலைக்காட்சி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி →செய்திக்குழு: நடுநிலை எழுத்தாக்கம் |
→வெளி இணைப்புகள்: தேவையற்ற இணைப்பு நீக்கம் |
||
வரிசை 54: | வரிசை 54: | ||
== வெளி இணைப்புகள் == |
== வெளி இணைப்புகள் == |
||
* [http://puthiyathalaimurai.tv/ புதிய தலைமுறை தொலைக்காட்சி இணையதளம்] |
* [http://puthiyathalaimurai.tv/ புதிய தலைமுறை தொலைக்காட்சி இணையதளம்] |
||
* [http://www.puthiyathalaimurai.com/ புதிய தலைமுறைஇதழ் இணையதளம்] |
|||
17:46, 12 சூன் 2013 இல் நிலவும் திருத்தம்
புதிய தலைமுறை (தொலைக்காட்சி) | |
---|---|
உண்மை உடனுக்குடன் | |
ஒளிபரப்பு தொடக்கம் | 24 ஆகத்து 2011 |
உரிமையாளர் | நியூ ஜெனரேசன் மீடியா கார்ப்பரேசன் பிரைவேட் லிட் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தலைமையகம் | சென்னை, தமிழ்நாடு |
வலைத்தளம் | www.puthiyathalaimurai.tv |
புதிய தலைமுறை தொலைக்காட்சி, 24X7 நேரலை செய்திகள் ஒளிபரப்பை கடந்த 2011-ம் ஆண்டு, ஆகஸ்ட் 24-ம் தேதி துவக்கியது. செய்திப் பிரிவு சுதந்திரமாக செயல்படுவதால் புதியதலைமுறை தொலைக்காட்சி குறுகிய காலத்தில் இந்தியாவிலும், உலக அளவிலும் மிகவும் பிரபலமாகியது. இன்றும் அது தொடர்கிறது. புதிய தலைமுறை தொலைக்காட்சி, பிரச்னைகளை சாதாரண மனிதரின் கண்ணோட்டத்தில் அணுகுவதோடு மட்டுமின்றி, அவர்களது கருத்துக்களை தெரிவிக்கவும் சிறந்த தளமாக உள்ளது. தனி நபர், கொள்கை, குழு, அரசு மற்றும் நிறுவனங்கள் என யாருக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ செய்திகளை வெளியிடுவதில்லை என்கின்ற வலிமையான நெறிமுறைகள் மற்றும் கோட்பாடுகளை அடிப்படையாக கொண்டு செய்திப் பிரிவு கட்டமைக்கப்பட்டுள்ளது.
நோக்கம்
பாரபட்சமில்லாமல் சமூக கண்ணோட்டத்தடன் துல்லியமாக செய்திகளை தர வேண்டும் என்பது புதிய தலைமுறை தொலைக்காட்சியின் முதன்மையான நோக்கமாகும். இது மட்டுமல்லாமல் நடப்புச் செய்திகளை நேரடியாக ஒளிபரப்பு செய்வதோடு விளையாட்டு, வணிகம், மற்றும் உலகச் செய்திகளையும் வழங்கி வருகிறது. மேலும் வார இறுதி நாட்களில் சமூக அக்கறையுடன் கூடிய பல்வேறு தரப்பட்ட நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகிறது.
நிறுவனம்
சென்னையை மையமாகக் கொண்ட நியூ ஜென் மீடியா கார்ப்பரேஷன் நிறுவனம் புதிய தலைமுறை தொலைக்காட்சியை நடத்தி வருகின்றது. இந்நிறுவனம், புதிய தலைமுறை மற்றும் புதிய தலைமுறை கல்வி ஆகிய இரண்டு தமிழ் இதழ்களையும் சிறப்பாக நடத்தி வருகின்றது.
செய்திக்குழு
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு தமிழகம் முழுவதும் செய்தியாளர்கள் உள்ளனர். வட மாநிலச் செய்திகளை வழங்குவதற்கான மையம் டெல்லியில் உள்ளது. செய்திகளை சேகரித்து, சிறப்பாக தொகுத்து வழங்கும் வகையில் நன்கு பயிற்சி பெற்ற செய்தியாளர்களையும் சிறப்பான தொழில்நுட்ப வசதிகளையும் புதிய தலைமுறை கொண்டிருக்கிறது.
அன்றாட நிகழ்ச்சிகள்
- புதிய விடியல் [1]
- புது புது அர்த்தங்கள் [2]
- வணிகம்[3]
- ஓடி விளையாடு[4]
- கற்க கசடற[5]
- உங்கள் ஊர் உங்கள் குரல்[6]
- இன்றைய தினம்[7]
- நேர்படப்பேசு[8]
- நாளைய நாளிதழ்
- விரைவு செய்திகள்
வார நிகழ்ச்சிகள்
- ரௌத்ரம் பழகு [9]
- அக்னி பரிட்சை[10]
- களம் இறங்கியவர்கள்[11]
- ஆயுதம் செய்வோம்[12]
- நண்பர்கள்[13]
- சினிமா 360 டிகிரி[14]
இதழ்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்