பண்டைக் கிரேக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 38: வரிசை 38:


== சமய நம்பிக்கை ==
== சமய நம்பிக்கை ==
உலகின் ஏனைய நாகரிகங்களைப்போன்றே இங்கும் இயற்கையையே வழிபட்டனர். எ-கா- காற்று, சந்திரன், மின்னல்
உலகின் ஏனைய நாகரிகங்களைப்போன்றே இங்கும் இயற்கையையே வழிபட்டனர். எ-கா- காற்று, சந்திரன், மின்னல்.

=== தெய்வங்கள் ===
பூகோளம் - சியுசு
சூரியன் - அப்பலோ
சமுத்திரம் - போசைடன்
யுத்தம் - கோரானா
மின்னல் - அதீனா
==== சியுசு ====
இவர் பூகோளத்தின் அதிபதியாவார்.எல்லாக் கடவுள்களினதும் அதிபதியாக சியுசைக் கருதினர்.கோரான எனும் பெண் தெய்வம் இவரது மனைவியாவாள்.கேர்கியூலிசு இவரது மகனாவார்.ஒலிம்பிக் ஆரம்பிக்கப்படும் போது சியுசு தெய்வத்திற்கே முதலிடம் வழங்கப்பட்டது.

==== கோரானா ====
டைடேன் எனும் பராக்கிரமசாலியின் மகளான இவள் சியுசு தெய்வத்தின் மனைவியாவாள்.எரசு இவளது மகனாவான்.இவள் யுத்தத்தின் அதிபதியாக கருதப்படுகிறாள்.அத்தோடு பொறாமை மிக்க தெய்வமாகவும் கருதப்படுகிறாள்.







15:23, 6 சூன் 2013 இல் நிலவும் திருத்தம்

பார்த்தினன். பண்டைக் கிரேக்கப் பண்பாட்டின் மிகப் பொருத்தமான குறியீடும், பண்டைக் கிரேக்கரின் சிக்கலான வேலைப்பாடுகளுக்கான எடுத்துக் காட்டும்.

பண்டைக் கிரேக்கம் என்பது கிரேக்க வரலாற்றில் கிமு 1100 அளவில் கிரேக்கத்தின் இருண்ட கால முடிவு தொடக்கம் கிமு 146 இல் ரோமர் கிரீசைத் தோற்கடிக்கும் வரையிலான காலப்பகுதியில் இருந்த கிரேக்கப் பண்பாட்டைக் குறிக்கும். பொதுவாக மேற்கத்திய நாகரிகத்தின் அடிப்படையாக அமைந்தது இதுவே எனக் கொள்ளப்படுகிறது. கிரேக்கப் பண்பாடு ரோமப் பேரரசின் மீது வலுவான செல்வாக்கைக் கொண்டிருந்தது. அது கிரேக்கப் பண்பாட்டின் ஒரு வடிவத்தை ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் பரப்பியது. மொழி, அரசியல், கல்வி முறை, மெய்யியல், அறிவியல், கலைகள் ஆகியவற்றில் கிரேக்கப் பண்பாடு பெரும் செல்வாக்குக் கொண்டிருந்தது. அத்துடன் இது மேற்கு ஐரோப்பாவில், மறுமலர்ச்சியை உருவாக்குவதிலும், 18 ஆம் 19 ஆம் நூற்றாண்டுகளில் பல புதிய செந்நெறி மீள்விப்புக்களை ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய இடங்களில் உருவாக்குவதிலும் அடிப்படையாக இருந்தது.

ஆரம்பமும் பரம்பலும்

வரலாற்று மூலாதாரங்கள் குறிப்பிடும் வகையில் கிரேக்க வரலாறு ஆயிரம் ஆண்டிற்கு முன் தொடங்கியுள்ளது.அதன் ஆரம்பக் குடிகள் மத்திய ஆசியாவிலிருந்து வந்த ஆரியர்களே என்று கருதப்படுகிறது.

நிர்வாக நடவடிக்கைகள்

ஆரம்பத்தில் குடியேறிய ஆரியர்கள் சிறு கிராமங்களாக தமது குடியிருப்புகளை அமைத்தனர்.பின் இக்கிராமங்கள் நகரங்களாக வளர்ச்சியடைந்தன.பின்னர் நகர அரசுகள் வளர்ச்சியடைந்தன.கிரேக்கம் இந்நகரங்களை மத்தியநிலையமாகக் கொண்டே வளர்ச்சியடைந்தது.

கிரேக்க நகர அரசுகளின் விசேட இயல்புகள்

  • சிறிய நிலப்பிரதேசத்தைக் கொண்டவை.
  • நகரை மையமாகக் கொண்டவை.
  • குடிமக்கள்,பெண்களும் பிள்ளைகளும்,அடிமைகள்,அந்நியர்கள் என நான்கு தொகுதி மக்களைக் கொண்டிருந்தது.
  • குடியுரிமை கிரேக்க ஆண்களுக்கே இருந்தது.
  • தலைநகர் அக்ரோபோலிஸ் என அழைக்கப்பட்டது.இங்கு வர்த்தகம் நடைபெற்றது.
  • ஒவ்வொரு நகருக்கும் அதிபதிகளாக தெய்வங்கள் இருந்தனர்.
  • அத்தெய்வங்களுக்கு அந்நகரில் ஆலயங்கள் அமைக்கப்பட்டிருந்தது. எ-க. ஏதென்சில் அதீனாக்காக கட்டப்பட்ட பார்த்தீனன் ஆலயம்.

ஜனநாயகத்தின் தோற்றம்

இன்றைய உலகின் முக்கிய ஆட்சிமுறையான ஜனநாயக ஆட்சியின் பிறப்பிடமாக ஏதென்ஸ் உள்ளது.பராயமடைந்த ஆண்களே கிரேக்கத்தில் குடிமக்களாக கருதப்பட்டனர்.கிரேக்க ஆட்சியாளன் மக்களாலேயே தெரிவு செய்யப்பட்டான்.ஏதென்சில் உருவான அக்குடிஆட்சி 'நேரடி ஜனநாயக' முறையாக கருதப்படுகிறது.

விவசாயம், வர்த்தகம்

கிரேக்கத்தில் பிரதான தொழில் விவசாயமாகும்.அங்கு பயிரிடப்பட்ட பயிர்களில் கோதுமையும், பார்லியும் முக்கிய இடம் பெற்றன.இவற்றோடு மத்தியதரைக் காலநிலை காரணமாக திராட்சையும் ஆலிவும் பயிரிடப்பட்டன.விவசாய நடவடிக்கைகளுக்கும்,பாலைப்பெற்றுக்கொள்ளவும்,இறைச்சிக்காகவும் வெள்ளாடுகளும் செம்மறி ஆடுகளும் மாடுகளும் வளர்க்கப்பட்டன. கிரேக்க நகர அரசுகளில் வர்த்தக நடவடிக்கைகளில் முக்கியம் பெற்ற நகரம் ஏதென்சு ஆகும்.அக்காலத்தில் வர்த்தகம் செய்வது தாழ்ந்த தொழிலாகவே காணப்பட்டது.ஆகையால் அதில் அந்நியர்களே ஈடுபட்டனர்.எதேன்சிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களாவன: மட்பாண்டங்கள்,ஆலிவ் எண்ணெய்,அழகு சாதனங்கள்,வெள்ளிப்பொருட்கள்.இந்தியா,இலங்கை,சீனா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன.

விஞ்ஞானிகள், சிந்தனையாளர்கள்

சிந்தனையாளர்கள்

  • சோக்ரடீஸ்
  • பிளேட்டோ
  • அரிசுடோட்டேல்

விஞ்ஞானிகள்

  • கிப்போக்கிரடீசு
  • டிமோகிரடீசு
  • யூக்ளிட்
  • ஆர்கிமிடசு
  • பைதகரசு
  • அறிசுடாகசு

சமய நம்பிக்கை

உலகின் ஏனைய நாகரிகங்களைப்போன்றே இங்கும் இயற்கையையே வழிபட்டனர். எ-கா- காற்று, சந்திரன், மின்னல்.

தெய்வங்கள்

பூகோளம் - சியுசு சூரியன் - அப்பலோ சமுத்திரம் - போசைடன் யுத்தம் - கோரானா மின்னல் - அதீனா

சியுசு

இவர் பூகோளத்தின் அதிபதியாவார்.எல்லாக் கடவுள்களினதும் அதிபதியாக சியுசைக் கருதினர்.கோரான எனும் பெண் தெய்வம் இவரது மனைவியாவாள்.கேர்கியூலிசு இவரது மகனாவார்.ஒலிம்பிக் ஆரம்பிக்கப்படும் போது சியுசு தெய்வத்திற்கே முதலிடம் வழங்கப்பட்டது.

கோரானா

டைடேன் எனும் பராக்கிரமசாலியின் மகளான இவள் சியுசு தெய்வத்தின் மனைவியாவாள்.எரசு இவளது மகனாவான்.இவள் யுத்தத்தின் அதிபதியாக கருதப்படுகிறாள்.அத்தோடு பொறாமை மிக்க தெய்வமாகவும் கருதப்படுகிறாள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டைக்_கிரேக்கம்&oldid=1433747" இலிருந்து மீள்விக்கப்பட்டது