ஒலிம்பிக்கு விளையாட்டுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
No edit summary |
||
வரிசை 5: | வரிசை 5: | ||
ஆதி கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கி.மு.776 இல் [[கிரேக்கம்|கிரேக்க]] நாட்டிலுள்ள [[ஒலிம்பியா]]வில் தொடங்கி கி.பி.393 வரை நடைபெற்றன. கிரேக்க கவிஞர் [[பானாஜியோடிஸ் ஸௌட்ஸாஸ்]] கி.பி.1833இல் எழுதிய "இறந்தவர்களின் உரையாடல்" என்னும் கவிதை இப்போட்டிகளை மீண்டும் தொடங்கும் ஆர்வத்தை உருவாக்கியது. |
ஆதி கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கி.மு.776 இல் [[கிரேக்கம்|கிரேக்க]] நாட்டிலுள்ள [[ஒலிம்பியா]]வில் தொடங்கி கி.பி.393 வரை நடைபெற்றன. கிரேக்க கவிஞர் [[பானாஜியோடிஸ் ஸௌட்ஸாஸ்]] கி.பி.1833இல் எழுதிய "இறந்தவர்களின் உரையாடல்" என்னும் கவிதை இப்போட்டிகளை மீண்டும் தொடங்கும் ஆர்வத்தை உருவாக்கியது. |
||
20 ஆம் 21 ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட ஒலிம்பிக் இயக்கத்தின் வளர்ச்சி ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், ஊனமுற்றோருக்கான [[பராஒலிம்பிக் விளையாட்டுகள்]], பதின்ம வயதினருக்கான [[இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுகள்]] என்பன தொடங்கப்பட்டமை இம் மாற்றங்களுட் சில. பனிக்கால விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் பொருட்டு [[1924]] முதல் [[குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள்]] நடத்தப்படுகின்றன. தொடக்கத்தில் கோடை கால மற்றும் குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஒரே ஆண்டில் நடத்தப்பட்டு வந்தன. [[1994]] முதல் [[கோடை கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள்]] முடிந்து இரண்டு ஆண்டுகள் கழித்து குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடத்தப்படுகின்றன. பொருளாதாரம், அரசியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சிகளுக்கு ஏற்ப ஒலிம்பிக் குழுவும் பல்வேறு மாற்றங்களைச் செய்யவேண்டியிருந்தது. இது, தொழில்முறை சாராத போட்டியாளர்கள் பங்குபெறும் போட்டியாக இருக்கவேண்டும் என்றே இவ்வியக்கத்தை உருவாக்கிய கூபேர்ட்டின் எண்ணியிருந்தார். ஆனாலும், ஒலிம்பிக் குழு இந்த விதியை மாற்றித் தொழில்முறை விளையாட்டு வீரர்களையும் போட்டிகளில் பங்குபற்ற அனுமதித்தது. |
20 ஆம் 21 ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட ஒலிம்பிக் இயக்கத்தின் வளர்ச்சி ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், ஊனமுற்றோருக்கான [[பராஒலிம்பிக் விளையாட்டுகள்]], பதின்ம வயதினருக்கான [[இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுகள்]] என்பன தொடங்கப்பட்டமை இம் மாற்றங்களுட் சில. பனிக்கால விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் பொருட்டு [[1924]] முதல் [[குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள்]] நடத்தப்படுகின்றன. தொடக்கத்தில் கோடை கால மற்றும் குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஒரே ஆண்டில் நடத்தப்பட்டு வந்தன. [[1994]] முதல் [[கோடை கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள்]] முடிந்து இரண்டு ஆண்டுகள் கழித்து குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடத்தப்படுகின்றன. பொருளாதாரம், அரசியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சிகளுக்கு ஏற்ப ஒலிம்பிக் குழுவும் பல்வேறு மாற்றங்களைச் செய்யவேண்டியிருந்தது. இது, தொழில்முறை சாராத போட்டியாளர்கள் பங்குபெறும் போட்டியாக இருக்கவேண்டும் என்றே இவ்வியக்கத்தை உருவாக்கிய கூபேர்ட்டின் எண்ணியிருந்தார். ஆனாலும், ஒலிம்பிக் குழு இந்த விதியை மாற்றித் தொழில்முறை விளையாட்டு வீரர்களையும் போட்டிகளில் பங்குபற்ற அனுமதித்தது. மக்கள் ஊடகங்களின் முக்கியத்துவம் வளர்ந்து வந்தபோது, நிறுவன விளம்பர ஆதரவு முறை உருவாகி இப்போட்டிகள் வணிகமயமாக்கப்பட்டன. |
||
== ஒலிம்பிக்சு நடந்த இடங்கள் == |
== ஒலிம்பிக்சு நடந்த இடங்கள் == |
19:48, 4 ஏப்பிரல் 2013 இல் நிலவும் திருத்தம்
ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Olympic Games அல்லது Olympics) என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் மாற்றி மாற்றி பல்வேறு விளையாட்டுக்களுக்கு நடத்தப்படும் அனைத்துலகப் போட்டி ஆகும். இதில் ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கு பெறுகின்றனர். உலகின் முதன்மையான விளையாட்டுப் போட்டியாகக் கருதப்படும் ஒலிம்பிக்கில் 200 நாடுகளுக்கு மேல் கலந்து கொள்கின்றன. பண்டைய கிரீஸ் நாட்டில் இந்தப் போட்டிகளை நடத்தும் வழக்கம் இருந்து வந்தது. பின்னர், Pierre de Coubertin|Pierre Frèdy, Baron de Coubertin என்ற பிரான்ஸ் நாட்டு பிரபுவால் (nobleman) 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தப் போட்டிகளை நடத்தும் வழக்கம் மீண்டும் வந்தது. இவர் 1894 ஆம் ஆண்டு அனைத்துலக ஒலிம்பிக் குழுவை உருவாக்கினார். இதன் அமைப்பும், அதிகாரமும் ஒலிம்பிக் பட்டயத்தினால் வரையறுக்கப்படுகின்றன. அனைத்துலக ஒலிம்பிக் குழுவே ஒலிம்பிக் இயக்கத்தை நிர்வகித்து வருகிறது. உலகப் போர் நடைபெற்ற ஆண்டுகள் தவிர்த்து, 1896 முதல், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடைபெற்று வருகின்றன.
ஆதி கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கி.மு.776 இல் கிரேக்க நாட்டிலுள்ள ஒலிம்பியாவில் தொடங்கி கி.பி.393 வரை நடைபெற்றன. கிரேக்க கவிஞர் பானாஜியோடிஸ் ஸௌட்ஸாஸ் கி.பி.1833இல் எழுதிய "இறந்தவர்களின் உரையாடல்" என்னும் கவிதை இப்போட்டிகளை மீண்டும் தொடங்கும் ஆர்வத்தை உருவாக்கியது.
20 ஆம் 21 ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட ஒலிம்பிக் இயக்கத்தின் வளர்ச்சி ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், ஊனமுற்றோருக்கான பராஒலிம்பிக் விளையாட்டுகள், பதின்ம வயதினருக்கான இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுகள் என்பன தொடங்கப்பட்டமை இம் மாற்றங்களுட் சில. பனிக்கால விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் பொருட்டு 1924 முதல் குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடத்தப்படுகின்றன. தொடக்கத்தில் கோடை கால மற்றும் குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஒரே ஆண்டில் நடத்தப்பட்டு வந்தன. 1994 முதல் கோடை கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் முடிந்து இரண்டு ஆண்டுகள் கழித்து குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடத்தப்படுகின்றன. பொருளாதாரம், அரசியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சிகளுக்கு ஏற்ப ஒலிம்பிக் குழுவும் பல்வேறு மாற்றங்களைச் செய்யவேண்டியிருந்தது. இது, தொழில்முறை சாராத போட்டியாளர்கள் பங்குபெறும் போட்டியாக இருக்கவேண்டும் என்றே இவ்வியக்கத்தை உருவாக்கிய கூபேர்ட்டின் எண்ணியிருந்தார். ஆனாலும், ஒலிம்பிக் குழு இந்த விதியை மாற்றித் தொழில்முறை விளையாட்டு வீரர்களையும் போட்டிகளில் பங்குபற்ற அனுமதித்தது. மக்கள் ஊடகங்களின் முக்கியத்துவம் வளர்ந்து வந்தபோது, நிறுவன விளம்பர ஆதரவு முறை உருவாகி இப்போட்டிகள் வணிகமயமாக்கப்பட்டன.
ஒலிம்பிக்சு நடந்த இடங்கள்
வருடம் | இடம் | ஆண்டு | இடம் |
1896 | ஏதென்ஸ், கிரேக்கம் | 1900 | பாரிஸ், பிரான்சு |
1904 | செயிண்ட் லூயிஸ், ஐக்கிய அமெரிக்கா | 1908 | இலண்டன், இங்கிலாந்து |
1912 | ஸ்டாக்ஹோம், சுவீடன் | 1920 | ஆண்ட்வெர்ப், பெல்ஜியம் |
1924 | பாரிஸ், பிரான்சு | 1928 | ஆம்ஸ்டர்டாம், ஹாலந்து |
1932 | லாஸ் ஏஞ்சலீஸ், ஐக்கிய அமெரிக்கா | 1936 | பெர்லின், ஜெர்மனி |
1948 | லண்டன், இங்கிலாந்து | 1952 | ஹெல்சின்கி, பின்லாந்து |
1956 | மெல்போர்ன், ஆஸ்திரேலியா | 1960 | ரோம், இத்தாலி |
1964 | டோக்கியோ, ஜப்பான் | 1968 | மெக்ஸிகோ சிட்டி, மெக்சிக்கோ |
1972 | ம்யூனிச், ஜெர்மனி | 1976 | மாண்ட்ரீல், கனடா |
1980 | மாஸ்கோ, சோவியத் ஒன்றியம் | 1984 | லாஸ் ஏஞ்சல்ஸ், ஐக்கிய அமெரிக்கா |
1988 | சியோல், தென் கொரியா | 1992 | பார்சிலோனா, எசுப்பானியா |
1996 | அட்லாண்டா, ஐக்கிய அமெரிக்கா | 2000 | சிட்னி, ஆஸ்திரேலியா |
2004 | ஏதென்ஸ், கிரேக்கம் | 2008 | பெய்ஜிங், மக்கள் சீனக் குடியரசு |
2012 | இலண்டன், ஐக்கிய இராச்சியம் | 2016 | ரியோ டி ஜனேரோ, பிரேசில் |
உலகப் போர் சமயங்களில் மட்டும் (1916, 1940 & 1944) ஒலிம்பிக்ஸ் நடைபெறவில்லை.
இன்றைய ஒலிம்பிக்ஸ் 1896ல் ஏதென்ஸ் நகரில் தான் துவங்கியது. அடுத்த கோடை கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் 2016ம் ஆண்டில் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜனேரோ நகரில் நடக்கவுள்ளது.
பனி ஒலிம்பிக்ஸ் நடந்த இடங்கள்
வருடம் | இடம் | ஆண்டு | இடம் |
1924 | சாமொனிக்ஸ், பிரான்ஸ் | 1928 | செயிண்ட் மோரிட்ஜ், ஸ்விட்சர்லாந்து |
1932 | ப்ளாசிட் ஏரி, ஐக்கிய அமெரிக்கா | 1936 | கார்மிஷ்ச், ஜெர்மனி |
1948 | செயிண்ட் மோரிட்ஜ், ஸ்விட்சர்லாந்து | 1952 | ஆஸ்லோ, நார்வே |
1956 | கார்டினா, இத்தாலி | 1960 | ஸ்குவாவ் வேலி, ஐக்கிய அமெரிக்கா |
1964 | இன்ஸ்ப்ரக், ஆஸ்திரியா | 1968 | க்ரெநோபில், பிரான்ஸ் |
1972 | சாப்போரோ, ஜப்பான் | 1976 | இன்ஸ்ப்ரக், ஆஸ்திரியா |
1980 | ப்ளாசிட் ஏரி, ஐக்கிய அமெரிக்கா USA | 1984 | சாராஜெவோ, யுகோஸ்லாவியா |
1988 | கால்கேரி, கனடா | 1992 | ஆல்பர்ட்வில்லே, பிரான்ஸ் |
1994 | லில்லேஹாம்மர், நார்வே | 1998 | நாகானோ, ஜப்பான் |
2002 | சால்ட் லேக் சிட்டி, ஐக்கிய அமெரிக்கா | 2006 | தோரீனோ, இத்தாலி |
2010 | வான்கூவர், கனடா | ||
2014 | சோச்சி, இருசியா |
உலகப் போர் சமயங்களில் மட்டும் (1940 & 1944) பனி ஒலிம்பிக்ஸ் நடைபெறவில்லை.
1992 வரை பனி ஒலிம்பிக்சும் கோடைக்கால ஒலிம்பிக்சும் ஒரே ஆண்டிலேயே நடைபெற்று வந்தது. இதை மாற்ற வேண்டி 1994ல் மீண்டும் ஒரு பனி ஒலிம்பிக்சை நடத்தினார்கள். அதன்படி தற்பொழுது கோடைக்கால ஒலிம்பிக்சு நடந்து 2 ஆண்டுகள் கழித்து பனி ஒலிம்பிக்சு நடக்கும்.
அடுத்த பனி ஒலிம்பிக்சு, 2014ல் இருசியாவின் சோச்சி நகரில் நடக்க இருக்கிறது.