வான்வெளிப் பொறியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 28: வரிசை 28:
[[பகுப்பு:விண்வெளியியல்]]
[[பகுப்பு:விண்வெளியியல்]]
[[பகுப்பு:வானூர்திகள்]]
[[பகுப்பு:வானூர்திகள்]]
[[பகுப்பு:பொறியியல்]]


[[cs:Aerokosmická technologie]]
[[cs:Aerokosmická technologie]]

14:31, 2 ஏப்பிரல் 2013 இல் நிலவும் திருத்தம்

வான்வெளிப் பொறியியலாளர்
அப்பல்லோ 13 திட்டத்தின்போது திட்ட கட்டுப்பாட்டு மையத்தில் நாசா பொறியியலாளர்கள் வானோடிகளின் உயிரைக் காக்க மிகவும் சமயோசிதமாக பணியாற்றினர்.
தொழில்
பெயர்கள் பொறியியலாளர்
வான்வெளிப் பொறியியலாளர்
வகை தொழில்முறைப் பணி
செயற்பாட்டுத் துறை வான்வெளியியல், விண்வெளியியல், அறிவியல்
விவரம்
தகுதிகள் தொழினுட்ப அறிவு, மேலாண்மைத் திறன்
தொழிற்புலம் தொழினுட்பம், அறிவியல், விண்வெளிப் பயணம், படைத்துறை
படிமம்:Aerospace vehicle examples.jpg
வான்வெளிப் பொறியியல்

வான்வெளிப் பொறியியல் (Aerospace engineering) வானூர்தி மற்றும் விண்கலம் குறித்த வடிவமைப்பு, கட்டமைப்பு மற்றும் அறிவியலின் முதன்மை பொறியியல் பிரிவாகும்.[1] இது இரு முதன்மையான ஒன்றையொன்று மேற்பொருந்திய பிரிவுகளைக் கொண்டுள்ளது: வானூர்திப் பொறியியல் மற்றும் விண்கலப் பொறியியல். முன்னது புவியின் வளிமண்டலத்தில் இயங்கும் வானூர்திகளைப் பற்றியும் மற்றது புவியின் வளிமண்டலத்திற்கு வெளியே விண்வெளியில் இயங்கும் விண்கலங்களைக் குறித்துமான கல்வியாகும்.

வான்வெளிப் பொறியியலில் வானூர்திகள், ஏவூர்திகள், பறக்கும் கலங்கள், விண்கலங்கள் ஆகியவற்றின் வடிவமைப்பு, கட்டமைப்பு மற்றும் இவற்றின் இயற்பியல் பண்புகளுக்கும் இயக்கும் விசைகளுக்கும் அடிப்படையான அறிவியலையும் பாடங்களாக கொண்டுள்ளது. மேலும் காற்றியக்கவியலின் பண்புகளையும் நடத்தைகளையும் காற்றிதழ், பறப்பு கட்டுப்பாட்டு பரப்புகள், உயர்த்துதல், காற்றியக்க இழுவை மற்றும் பிற பண்புகளையும் ஆராய்கிறது.

இத்துறை முன்னதாக வானூர்தியியல் பொறியியல் (Aeronautical engineering) என அறியப்பட்டிருந்தது. பறப்புத் தொழினுட்பம் மேம்பட்டு விண்வெளியில் இயங்கும் கலங்களுக்கும் பரவிய பின்னர் பரவலான "வான்வெளி பொறியியல்" என்பது பொதுவழக்கில் பயன்படுத்தப்படுகிறது.[2] வான்வெளி பொறியியல், குறிப்பாக விண்கலப் பொறியியல், தவறான பயன்பாடாக இருப்பினும், பொதுவழக்கில் "ஏவூர்தி அறிவியல்",[3] எனப்படுகிறது.

மேற்சான்றுகள்

  1. Encyclopedia of Aerospace Engineering. யோன் வில்லி அன் சன்ஸ். October 2010. ISBN 978-0-470-75440-5.
  2. Stanzione, Kaydon Al (1989). "Engineering". Encyclopædia Britannica (15) 18. 563–563. 
  3. Longuski, Jim (2004). Advice to Rocket Scientists: A Career Survival Guide for Scientists and Engineers. Reston, Virginia: AIAA (American Institute of Aeronautics and Astronautics). பக். 2. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-56347-655-X. "If you have a degree in aerospace engineering or in astronautics, you are a rocket scientist." 

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வான்வெளிப்_பொறியியல்&oldid=1393917" இலிருந்து மீள்விக்கப்பட்டது