மொத்த உள்நாட்டு உற்பத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 94 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 10: வரிசை 10:


[[பகுப்பு:பொருளாதார அளவீடுகள்]]
[[பகுப்பு:பொருளாதார அளவீடுகள்]]

[[tl:Kabuuan ng Gawang Katutubo]]

03:21, 22 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

ஒரு நிலப்பகுதியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product அல்லது GDP) என்பது, அப்பகுதியின் பொருளாதாரத்தின் அளவை அறிய உதவும் அளவைகளுள் ஒன்றாகும். ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியுள், ஒரு ஒரு நிலப்பகுதியின் எல்லைக்குள் உற்பத்தி செய்யப்படுகின்ற மொத்தப் பொருட்களினதும், சேவைகளினதும் சந்தைப் பெறுமதியே மொத்த உள்நாட்டு உற்பத்தி என வரைவிலக்கணம் கூறப்படுகின்றது. மொத்த உள்நாட்டு உற்பத்தியை அளப்பதற்கும், விளங்கிக் கொள்வதற்கும் பொதுவாகப் பயன்படுவது செலவின முறையாகும் (expenditure method).

மொ.உ.உ = நுகர்வு + முதலீடு + அரச செலவினங்கள் + (ஏற்றுமதி - இறக்குமதி)

இதனுள் மூலதனப் பண்டங்களின் தேய்வும் சேந்திருப்பதன் காரணமாக மொத்த உற்பத்தி என்று குறிப்பிடப் படுகின்றது. இச் சமன்பாட்டில் நுகர்வும், முதலீடும் முற்றுப்பெற்ற பொருட்களினதும், சேவைகளினதும் மீதான செலவினங்களாகும். தற்காலத்தில் பொருளியலாளர்கள் நுகர்வை இரண்டு பகுதிகளாகப் பிரித்துக் கருதுகிறார்கள். அவை தனியார் நுகர்வு, பொதுத்துறைச் செலவினம் என்பனவாகும்.

உள்நாட்டு உற்பத்தி எதிர் தேசிய உற்பத்தி

மொத்த தேசிய உற்பத்தி ( மொ.தெ.உ, Gross National Product) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (மொ.உ.உ) இருந்து மாறுபட்டது. மொ.உ.உ ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியின் அளிவீடு. இதற்கு புவியியல் எல்லைகள் உண்டு. ஆனால் மொ.தெ.உ, உள்நாட்டு உற்பத்தி போலவே கணக்கிடப்பட்டாலும், அதற்குப் புவியியல் எல்லைகள் கிடையாது. எ.கா. ஒரு நாட்டின் மொ.உ.உ அந்நாட்டின் எல்லைகளுக்குள் உள்ள மக்கள் மற்றும் அமைப்புகளைக் கொண்டு மட்டுமே கணக்கிடப்படும். மொ.தே.உ கணக்கீட்டில் அந்நாட்டின் குடிமகன்கள் மற்றும் அவர்களது அமைப்புகள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்படும். (அவை நாட்டெல்லைக்கு வெளியே அமைந்திருந்தாலும்) மேலும் ஒரு நாட்டின் மொ.உ.உ கணக்கீட்டில் பிற நாட்டு குடிமகன்களின் அமைப்புகளும் நாட்டெல்லைக்குள் அமைந்திருந்தால் ஏற்றுக்கொள்ளப்படும் ஆனால் மொ.தெ.உ கணக்கீட்டில் அவை ஏற்றுக் கொள்ளப்படா.