நாகப்பட்டினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 10°46′N 79°50′E / 10.77°N 79.83°E / 10.77; 79.83
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 23 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 62: வரிசை 62:


[[பகுப்பு:தேர்வு நிலை நகராட்சிகள்]]
[[பகுப்பு:தேர்வு நிலை நகராட்சிகள்]]

[[mg:Nagapattinam]]
[[ms:Nagapattinam]]

20:32, 9 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

நாகப்பட்டினம்
—  தேர்வு நிலை நகராட்சி  —
நாகப்பட்டினம்
இருப்பிடம்: நாகப்பட்டினம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°46′N 79°50′E / 10.77°N 79.83°E / 10.77; 79.83
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாகப்பட்டினம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், இ. ஆ. ப [3]
நகராட்சித் தலைவர் மஞ்சுளாசந்திரமோகன்
ஆணையர் அப்துல் லத்தீப்
மக்களவைத் தொகுதி நாகப்பட்டினம்
மக்களவை உறுப்பினர்

ம. செல்வராசு

சட்டமன்றத் தொகுதி நாகப்பட்டினம்
சட்டமன்ற உறுப்பினர்

ஆளூர் ஷா நவாஸ் (விசிக)

மக்கள் தொகை

அடர்த்தி

93,148 (2001)

6,243/km2 (16,169/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 14.92 சதுர கிலோமீட்டர்கள் (5.76 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.municipality.tn.gov.in/Nagapattinam
ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டோருக்கான நிரந்தர குடியிருப்பு

நாகப்பட்டினம் நகரம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள நாகப்பட்டினம் மாவட்டத் தலைநகரமாகும். இந்நகரம் நாகை என்றும் அழைக்கப்படுகிறது. இம்மாவட்டம் அக்டோபர் 18, 1991 அன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனித்து இயங்குகிறது. இது வங்காள விரிகுடா கடலோரத்தில் உள்ளது. டிசம்பர் 26, 2004 இல் ஏற்பட்ட ஆழிப்பேரலையால் பெரிதும் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் நாகப்பட்டினமும் ஒன்றாகும்.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 92,525 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[1] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள்.நாகப்பட்டினம் மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே.[4]

அமைவிடம்

வங்காள குடாக் கடலை அண்டிய தமிழ் நாட்டின் கிழக்குக் கரையில், வட அகலக்கோடுகள் 10.10' க்கும் 11.20' க்கும் இடையிலும், கிழக்கு நெடுங்கோடுகள் 79.15', 79.50' ஆகியவற்றுக்கிடையிலும் அமைந்துள்ளது. ஒரு தீபகற்பக் கழிமுகப் (peninsular delta) பகுதியான இதற்குக் கிழக்கே வங்கள குடாக்கடலும், தெற்கில் பாக்கு நீரிணையும், மேற்கிலும் வடக்கிலும் நிலப்பகுதியும் அமைந்துள்ளன.

வரலாறு

நாகப்பட்டினம் ஒரு வரலாற்றுச் சிறப்புக்கொண்ட இடமாகும். பண்டைத் தமிழ் நாடுகளில் ஒன்றான சோழ நாட்டில் ஒரு பகுதியாகிய நாகப்பட்டினம், முற்காலச் சோழர் காலத்திலேயே ஒரு முக்கிய துறைமுக நகராக விளங்கியது. பிற்காலத்தில், இராஜராஜ சோழனின் விருதுப்பெயர்களில் ஒன்றான சத்திரிய சிகாமணி என்னும் பெயரில் அமைந்த பகுதியின் தலைமை இடமாகவும் இது விளங்கியது. நாகபட்டினம் முற்காலத்தில் சோழகுலவல்லிப் பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது. கி.மு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பர்மா நாட்டு வரலாற்று நூலொன்றில் நாகபட்டினம் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. இதே நூலில், அசோகப் பேரரசன் கட்டிய புத்த விகாரம் ஒன்று இங்கே இருந்தது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனப் பயணியான ஹியுவென் சாங் (Hiuen Tsang) என்பவனும் தனது நூலில் இங்கிருந்த புத்த விகாரம் பற்றிக் குறிப்பிட்டுள்ளான். பண்டைய புத்த இலக்கியங்களில், நாகபட்டினம், படரிதித்த என்ற பெயரிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று நாகபட்டினத்தின் ஒரு பகுதியின் பெயரான அவுரித்திடல், படரிதித்த என்பதன் திரிபாக இருக்கலாமென ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். படரிதித்த என்பது இப் பகுதியில் அதிகமாகக் காணப்படும் ஒரு பழமரம் ஆகும்.

நாகப்பட்டினம் சோழப் பேரரசின் பழமைவாய்ந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. இது "நாவல் பட்டிணம்" -கப்பல்களின் நகரம் என்றும் அழைக்கப்பட்டது.

கல்வி நிறுவனங்கள்

  • அரசு தொழில் பயிற்சி நிறுவனம்
  • வலிவலம் தேசிகர் பல்வகைதொழில்நுட்பக் கல்லூரி
  • இடையாதாங்குடி ஜி. எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரி
  • ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரி
  • ஏ டி ம் கலைக் கல்லூரி (மகளிர்)
  • ஏ டி ஜெ பல்வகைதொழில்நுட்பக் கல்லூரி (மகளிர்)

அருகிலுள்ள ஊர்கள்

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகப்பட்டினம்&oldid=1371792" இலிருந்து மீள்விக்கப்பட்டது