கிழக்கு ராண்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 26°10′38″S 28°13′19″E / 26.17722°S 28.22194°E / -26.17722; 28.22194
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 6 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 17: வரிசை 17:




[[ca:Rand de l'Est]]
[[en:East Rand]]
[[es:East Rand]]
[[pt:East Rand]]
[[ro:East Rand]]
[[zu:EEast rand]]


[[பகுப்பு:தென்னாப்பிரிக்காவில் இனவொதுக்கல்]]
[[பகுப்பு:தென்னாப்பிரிக்காவில் இனவொதுக்கல்]]

07:43, 9 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்


கௌடெங் வரைபடத்தில் கிழக்கு ராண்ட் அமைவிடம்.

கிழக்கு ராண்ட் (East Rand) மகா ஜோகானஸ்பேர்க் பெருநகர்ப் பகுதியுடன் செயற்திட்டங்களுக்காக இணைந்துள்ள விட்வாடர்சுராண்டின் கிழக்கு நகரப் பகுதியாகும். 1886ஆம் ஆண்டு தங்கம் பொதிந்த கடற்பாறை கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் ஐரோப்பியர் குடியேற்றம் நிகழ்ந்த பகுதியாகும். இங்கு துவங்கிய தங்க வேட்டையே ஜோகானஸ்பேர்க் குடியேற்றத்திற்கு காரணமாக அமைந்தது.

நிறவெறிக் கொள்கை முடிவிற்கு வரும் தருவாயில் இங்குள்ள கறுப்பின நகரப்பகுதிகளில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இங்காதா விடுதலை கட்சித் தொண்டர்களுக்கும் பலத்த கைகலப்புகள் ஏற்பட்டன. .

இந்த வலயம் மேற்கில் கெர்மிஸ்டனிலிருந்து கிழக்கே ஸ்பிரிங்ஸ் வரையும் தெற்கே நிகெல் வரையும் பரவியுள்ளது. இப்பகுதியில் போக்ஸ்பர்க், பெனோனி, பிராக்பன், கெம்ப்டன் பார்க், ஈடென்வேல், பெட்பார்வியூ ஆகிய நகரங்கள் உள்ளடங்கி உள்ளன.

தென்னாபிரிக்காவின் நகராட்சிகளின் சீர்திருத்தத்தின்போது கிழக்கு ராண்டின் உள்ளூராட்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு 1999ஆம் ஆண்டு ஒரே நகராட்சியாக அமைதியின் இடம் எனப் பொருள்பட "எகுர்யுலேனி பெருநகர மாநகராட்சி" (Ekurhuleni Metropolitan Municipality) எனப் பெயரிடப்பட்டது.

மேற்கு ராண்ட் போலவே இதுவும் தனி மாநகராட்சியாக இருந்தபோதும் மகா ஜோகானஸ்பேர்க் பெருநகர்ப் பகுதியுடன் இப்பகுதி இணைக்கப்பட்டுள்ளது. எனவே கிழக்கு ராண்டின் தொலைபேசி அழைப்புக் குறியீடு ஜோகானஸ்பேர்கின் 011 ஆக உள்ளது. கிழக்கு ராண்ட் பகுதியில் வசிப்போர் ஜோனஸ்பேர்கில் பணியாற்றுவதும் அதேபோல ஜோகானஸ்பேர்க் மக்கள் இங்கு பணியாற்றுவதும் வழமையானதே.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கிழக்கு_ராண்ட்&oldid=1361828" இலிருந்து மீள்விக்கப்பட்டது