கத்தரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.5) (தானியங்கி இணைப்பு: gl:Berenxena
சி r2.6.6) (தானியங்கி அழிப்பு: ckb:باینجان (خواردن)
வரிசை 46: வரிசை 46:
[[ca:Albergínia]]
[[ca:Albergínia]]
[[chr:ᏕᎭᎷᎨ ᎠᏓᏛᏍᎩ]]
[[chr:ᏕᎭᎷᎨ ᎠᏓᏛᏍᎩ]]
[[ckb:باینجان (خواردن)]]
[[cs:Lilek vejcoplodý]]
[[cs:Lilek vejcoplodý]]
[[cy:Planhigyn ŵy]]
[[cy:Planhigyn ŵy]]

11:40, 3 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

கத்தரி
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
துணைவகுப்பு:
Asteridae
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
S. melongena
இருசொற் பெயரீடு
Solanum melongena
லி.

கத்தரி சமையலிற் பயன்படும் கத்தரிக் காய்களைத் தரும் செடியினமாகும். இதனைப் பழந்தமிழில் வழுதுணங்காய் என்றனர் (சங்கக் காலத்து ஔவையார் வரகசிரிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்).

கத்தரிக்காய்ச் செடியின் உயிரியற் பெயர் சொலனும் மெலோங்கெனா (Solanum melongena) என்பதாகும். கத்தரிச் செடிகள் பூக்கும் செடிகொடிகளைச் சேர்ந்த சொலானனேசியே (Solanaceae) என்னும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு செடிவகை. சொலான்னேசியேக் குடும்பத்தில் தக்காளி, உருளைக்கிழங்கு போன்ற பிறவும் அடங்கும். தென்னிந்தியாவும் இலங்கையுமே இதன் தாயக விளைநிலங்களாகும். ஆங்கிலேயரும் ஐரோப்பியரும் இதனை 16-17 ஆவது நூற்றாண்டில்தான் அறிந்து கொண்டார்கள்[1]. கத்த்ரிக்காய்ச் செடி 40 முதல் 150 செ.மீ உயரமாக வளர்கிறது. கத்தரிக் காய்கள் ஊதா அல்லது வெள்ளை நிறமானவை. தெற்கு, கிழக்காசியப்பகுதிகளில் வரலாற்றுக்கு முந்திய காலத்திலிருந்து பயிரிடப்பட்டதாகத் தெரிகிறது, இடைக்காலத்தில் அராபியர்களால் நடுநிலக்கடற் பகுதியில் அறிமுகமானது. இக்காயைத் தமிழர்கள் கறியாகவோ பொரித்தோ, வதக்கியோ, மசித்தோ உண்பார்கள்.

தமிழ்நாட்டில் விளையும் கத்தரிக்காயின் இனங்களில் பன்மியம் (diversity) உள்ளது. இவை தமிழ்நாட்டில் பயிரிடப்படும் இடங்களிலும், பயிரிடும் முறைகளிலும் வேறுபாடுகள் நிலவுகின்றன. எடுத்துக்காட்டாக நாகை மாவட்டத்தில் பொய்யூர் கத்தரிக்காய், திருச்செங்கோட்டில் பூனைத்தலை கத்தரிக்காய், வேலூரில் முள்ளுக் கத்தரிக்காய், தஞ்சாவூரில் தூக்கானம்பாளையம் கத்தரிக்காய், கல்லணை வட்டாரத்தில் சுக்காம்பார் கத்தரிக்காய் திருச்சியில் அய்யம்பாளையம் கத்தரிக்காய் நெல்லையில் வெள்ளைக் கத்தரிக்காய் எனப் பல வகைகள் உண்டு[2]

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. ஆங்கிலத்தில் brinjal என்னும் சொல் 1611 இல் இருந்தும், eggplant என்னும் சொல் 1767 இல் இருந்தும் வழக்கில் உள்ளது. இச்சொற்களின் வழக்குகளை ஆக்ஃசுபோர்டு ஆங்கில அகரமுதலியில் காணலாம்
  2. முனைவர் நம்மாழ்வார் கட்டுரை

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரன் பட்டினத்தில் கிடைக்கும் இளம் பச்சை நிறமுள்ள குண்டுக் கத்தரிக்காய் தமிழ் நாடு மட்டுமல்லாது அண்டை நாடுகளான இலங்கை, மாலத் தீவுகளிலும் மிகவும் பிரபலம். பண்டைய காலங்களில் இவ்வூரிலிருந்து அண்டை நாடுகளுக்கு இவ்வகையான கத்தரிக்காய்கள் ஏற்றுமதியாகி இருக்கின்றன.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கத்தரி&oldid=1337582" இலிருந்து மீள்விக்கப்பட்டது