உயிரணு வேற்றுமைப்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி மாற்றல்: fa:دگرگونی یاخته‌
வரிசை 17: வரிசை 17:
[[es:Diferenciación celular]]
[[es:Diferenciación celular]]
[[et:Diferentseerumine]]
[[et:Diferentseerumine]]
[[fa:دگرگونی یاخته‌]]
[[fa:دگرگونی یاخته]]
[[fr:Différenciation cellulaire]]
[[fr:Différenciation cellulaire]]
[[he:התמיינות תאים]]
[[he:התמיינות תאים]]

02:28, 1 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

உயிரணு வேற்றுமைப்பாடு அல்லது கல வேற்றுமைப்பாடு (Cell differentiation) என்பது எளிய உயிரணுக்களில் இருந்து, தனித்துவமான உயிரணுக்கள் உருவாதல் ஆகும். பல்கல உயிரினங்களில், கருவணுவில் இருந்து உயிரணுப்பிரிவு மூலம் உருவாகும் பல கலங்களும் பின்னர் அவற்றின் அமைப்பு, தொழிலுக்கேற்ப பல தடவைகள் சிறப்பாக்கத்தின் மூலம் தனித்துவமான உயிரணுக்களை உருவாக்கிக் கொள்ளும்.

பலகல உயிரினங்களின் வேறுபட்ட இழையங்களில் காணப்படும் உயிரணுக்களுக்கிடையிலான அமைப்பு வேறுபாடும், அவற்றின் தொழில் வேறுபாடும் இத்தகைய உயிரணு வேற்றுமைப்பாட்டினாலேயே ஏற்படும். உயிரினங்களின் முதிர்நிலையிலும் கூட இந்த உயிரணு வேற்றுமைப்பாடு நிகழும். குருத்தணுக்களில் நிகழும் உயிரணு வேற்றுமைப்பாட்டினால், வெவ்வேறு இழையங்களில் உள்ள இறந்த உயிரணுக்களை ஈடு செய்யவும், பாதிக்கப்பட்ட உயிரணுக்களைச் சீர்செய்யவும் முடிகின்றது.

இந்த உயிரணு வேற்றுமைப்பாடானது மிகவும் உயர் நிலையில் கட்டுப்படுத்தப்படும் மரபணு வெளிப்பாடு மாற்றங்களினால் ஏற்படும். மரபணுக்களின் வெளிப்பாடு, குறிப்பிட்ட உயிரணு உடலில் அமைந்திருக்கும் இடத்திற்கேற்ப, தேவைக்கேற்ப வேறுபடும். ஒரு சில விதிவிலக்கான நிலமைகள் தவிர்த்து, உயிரணு வேற்றுமைப்பாடானது, மரபணு வரிசையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. எனவே ஒரே மாதிரியான மரபணுத்தொகையைக் கொண்டிருக்கும் உயிரணுக்கள் வெவ்வேறு உடலியல் தொழிற்பாடுகளைக் கொண்டிருக்கின்றது. உயிரணு வேற்றுமைப்பாட்டினால் உயிரணுக்களின் அளவு, அமைப்பு, மென்சவ்வு அழுத்தம், வளர்சிதைமாற்ற செயற்பாடுகளில் பெரிய வேறுபாடுகள் காணப்படும்.

முளையத்தில் இருக்கும் குருத்தணுக்கள் எவ்வகையான உயிரணுக்களாகவும் வேற்றுமைப்படக் கூடிய இயல்பைக் கொண்டிருக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிரணு_வேற்றுமைப்பாடு&oldid=1336164" இலிருந்து மீள்விக்கப்பட்டது