கூட்டன்பர்கு திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: bar:Project Gutenberg
சி தானியங்கி இணைப்பு: xmf:პროექტი გუტენბერგი
வரிசை 76: வரிசை 76:
[[uk:Проект Гутенберг]]
[[uk:Проект Гутенберг]]
[[vi:Dự án Gutenberg]]
[[vi:Dự án Gutenberg]]
[[xmf:პროექტი გუტენბერგი]]
[[zh:古腾堡计划]]
[[zh:古腾堡计划]]

05:22, 26 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

குட்டன்பேர்க் திட்டம் (Project Gutenberg) இணையத்தில் மின்னூல்களை வெளியிடும் திட்டங்களில் முதலாவதாகக் கருதப்படுகிறது. 1971 இல் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் 1990 இலிருந்து வேகம் பெற்றுத் தொடர்ந்து செயற்படுகின்றது. இதுவரை 19,000 நூல்கள் மின்னூல்களாக வெளியிடப்பட்டுள்ளன.

குட்டன்பேர்க் திட்டம், இணையவழியாக ஆயிரக்கணக்கான மின்னூல்களைக் கொண்டு உலகிலேயே மிகப் பெரிய திட்டமாக விளங்குகிறது. மிக்கேல் ஹார்ட் என்பார் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் தளத்தில் ஆங்கிலம், எசுப்பானியம் பிரெஞ்சு ஆகிய மொழிகளில் மின்னூல்கள் உள்ளன. இவை காப்புரிமையற்றவை என்பதால் இலவசமாக பதிவிறக்கிக் கொள்ளலாம்.

மின்னூல்கள் மட்டுமின்றி, ஒலிக்கோப்புகளும் கிடைக்கின்றன. நூற்றுக்கணக்கான இணைய ஆர்வலர்களும் இணைந்து இத்தளத்தின் மேம்பாட்டிற்கு உதவி வருகின்றனர். அதிகம் படிக்கப்பட்ட நூல்கள், சிறுவர்க்கானவை என்று வகைப்படுத்தப்பட்ட பலவிதமான மின்னூல்கள் கிடைப்பது இத்தளத்தின் சிறப்பு. விக்கிப்பீடியா போன்றே மின்நூல்களுக்கான களஞ்சியம் என்பதால் யாவரும் தொகுக்கலாம் என்பதும் திறந்த மூலம் என்பதும் இதன் சிறப்பு.


இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூட்டன்பர்கு_திட்டம்&oldid=1333218" இலிருந்து மீள்விக்கப்பட்டது