குர்-இ அமீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கி மாற்றல்: uz:Goʻri Amir Maqbarasi
சி r2.6.5) (தானியங்கி இணைப்பு: ja:グーリ・アミール廟
வரிசை 18: வரிசை 18:
[[fr:Gour Emir]]
[[fr:Gour Emir]]
[[it:Gur-e Amir]]
[[it:Gur-e Amir]]
[[ja:グーリ・アミール廟]]
[[nl:Gur-e Emir]]
[[nl:Gur-e Emir]]
[[pnb:گورِ امیر]]
[[pnb:گورِ امیر]]

18:14, 24 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

குர்-இ அமீர் என்பது ஆசியாவைக் கைப்பற்றி ஆண்ட தைமூர் அல்லது தாமர்லான் என்பவரின் சமாதிக் கட்டிடம் ஆகும். இது இன்றைய உசுபெகிசுத்தானில் உள்ள சமர்க்கண்ட் என்னும் இடத்தில் உள்ளது. பிற்காலத்து முகலாயக் கட்டிடக்கலை சார்ந்த சமாதிக் கட்டிடங்களுக்கு முன்னோடியாக அமைவதால் இசுலாமியக் கட்டிடக்கலை வரலாற்றில் இது சிறப்பிடம் பெறுகிறது எனலாம். தைமூரின் வழிவந்தவர்களும் வட இந்தியாவை ஆட்சி செலுத்தியவர்களுமான முகலாயப் பேரரசர்கள் இதனை பின்பற்றிக் கட்டிய கட்டிடங்களுள் உமாயூனின் சமாதி, தாஜ் மகால் என்பவை குறிப்பிடத்தக்கவை. இக் கட்டிடம் பிற்காலத்தில் பெருமளவு திருத்த வேலைகளுக்கு உள்ளாகியுள்ளது.

கட்டிட வரலாறு

கட்டிடத்தைச் சூழவுள்ள வெளியிடத்தில் இருந்து கட்டிடத்தின் தோற்றம்.

இச் சமாதிக் கட்டிடத்தின் கட்டிட வேலைகள் 1403 ஆம் ஆண்டில், தைமூரின் மகனும் முடிக்குரிய வாரிசுமாகிய முகம்மது சுல்தானும், பேரனும் சடுதியாக இறந்தபோது அவர்களுக்காகக் கட்டப்பட்டது. தைமூர் தனக்காக ஒரு சிறிய சமாதிக் கட்டிடத்தை சகிரிசாப்சு என்னும் இடத்தில் அவரது அக்- சாரய் மாளிகைக்கு அருகில் கட்டியிருந்தார். ஆனால், 1405 ஆம் ஆண்டில் சீனா மீது படையெடுத்துச் செல்லும்போது தைமூர் இறந்தார். சகிரிசாப்சுக்குச் செல்லும் வழி பனிமூடி இருந்ததால் தைமூரை இவ்விடத்திலேயே அடக்கம் செய்யவேண்டி ஏற்பட்டது. தைமூரின் இன்னொரு பேரனான உலுக் பெக் இக் கட்டிடத்தைக் கட்டி முடித்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குர்-இ_அமீர்&oldid=1332241" இலிருந்து மீள்விக்கப்பட்டது