சட்டப் பேரவை உறுப்பினர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎பாக்லாந்து தீவுகள்: *விரிவாக்கம்*
சி →‎பிரேசில்: *விரிவாக்கம்*
வரிசை 31: வரிசை 31:


==பிரேசில்==
==பிரேசில்==
பிரேசில் நாட்டின் 26 சட்டப் பேரவைகளின் உறுப்பினர்களும் ''மாநில துணையாளர்கள்'' (''deputados estaduais'') எனப்படுகின்றனர். கூட்டாட்சி மாவட்ட சட்டப் பேரவை சட்ட அறை ({{lang-pt|Câmara Legislativa}}) எனவும் உறுப்பினர்கள் ''மாவட்ட துணையாளர்கள்'' (''deputados distritais'') எனவும் அழைக்கப்படுகின்றனர். [[ஈரவை முறைமை|இரண்டு அவைகள்]] கொண்ட கூட்டாட்சி அமைப்பைப் போலன்றி பிரேசிலின் மாநில சட்டப் பேரவைகள் [[ஓரவை முறைமை]] பாவிப்பன. கூட்டாட்சி நாடாளுமன்றத்தின் கீழவை உறுப்பினர்களும் துணையாளர்கள் என்று அழைக்கப்பட்டாலும் அவர்கள் ''கூட்டாட்சி துணையாளர்கள்'' (''deputados federais'') என வேறுபடுத்தப்படுகின்றனர்.


==வடக்கு அயர்லாந்து==
==வடக்கு அயர்லாந்து==

05:44, 23 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

சட்டப் பேரவை உறுப்பினர் (Member of the Legislative Assembly, சுருங்க MLA) அல்லது சட்டமன்ற உறுப்பினர் (Member of the Legislature, சுருங்க ML), உள்நாட்டு ஆட்சிப்பகுதி ஒன்றின் சட்டமன்றம் அல்லது சட்டப் பேரவைக்கு தேர்தல் தொகுதியின் வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாவர். நாட்டின் தேசிய சட்ட மன்ற உறுப்பினர்கள் பொதுவாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப்படுகின்றனர். ஊடகங்களில் சிலர் ஆங்கிலச் சுருக்கமான எம்.எல்.ஏ எனப் பயன்படுத்துகின்றனர்.

ஆத்திரேலியா

ஆத்திரேலியாவின் நியூ சவுத் வேல்சு[1] மற்றும் குயின்சுலாந்து[2] சட்டமன்ற உறுப்பினர்கள் எம்பி (நாடாளுமன்ற உறுப்பினர்) என்றே அழைக்கப்படுகின்றனர். மேற்கு ஆஸ்திரேலியா, வட ஆட்புலம் மற்றும் ஆத்திரேலியத் தலைநகர ஆட்புலம் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்எல்ஏ என்று அழைக்கப்படுகின்றனர். இருப்பினும் இவர்களும் எம்பி என்ற பின்னொட்டைப் பயன்படுத்துவதுண்டு. தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் தாசுமேனியா உறுப்பினர்கள் எம்எச்ஏ என்று அழைக்கப்படுகின்றனர். விக்டோரியா மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் எம்பி அல்லது எம்எல்ஏ என்ற பதவிப்பெயர்களில் எதையும் பயன்படுத்தலாம்.[3]


நாட்டின் கூட்டாட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்பி என அழைக்கப்படுகின்றனர்.[4]

ஆங்காங்

ஆங்காங்கின் சட்டமன்ற உறுப்பினர்கள் லெஜிஸ்லேடிவ் கௌன்சில் என்பதன் சுருக்கமாக லெக்கோ உறுப்பினர்கள் எனப்படுகின்றனர்.

இந்தியா

இந்தியாவில் மாநிலங்களுக்கான சட்டப் பேரவைக்கு அதற்கான தேர்தல் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் சட்டப் பேரவை உறுப்பினர்கள் என அழைக்கப்படுகின்றனர். இரு அவைகள் இயங்கும் சட்ட மன்றங்களில் கீழவை உறுப்பினர்கள் சட்டப் பேரவை உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ) எனவும் மேலவை உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.சி) எனவும் அழைக்கப்படுகின்றனர்.

ஐக்கிய அமெரிக்கா

ஐக்கிய அமெரிக்காவில் நாட்டின் 50 மாநிலங்களின் சட்ட அமைப்புக்களின் உறுப்பினர்கள் பொதுவான சட்டமன்றத்தினர் (லெஜிஸ்லேடர்) என்ற சொல்லால் குறிக்கப்படுகின்றனர்.

ஆனால் முறையான பெயர் ஒவ்வொரு மாநிலத்திலும் மாறுபடுகிறது. 24 மாநிலங்களில் சட்டமியற்றும் அவைகள் சட்டமன்றம் (Legislature) என்றோ மாநில சட்டமன்றம் என்றோ (State Legislature) என்றோ அழைக்கப்படுகின்றன.19 மாநிலங்களில் இவை பொது மன்றம் (General Assembly) எனப்படுகின்றன. மாசச்சூசெட்சிலும் நியூ ஆம்ப்சையரிலும் இவை பொது நீதிமன்றம் (General Court) என்றும் வடக்கு டகோட்டாவிலும் ஓரிகனிலும் சட்டப் பேரவை (Legislative Assembly) என்றும் அழைக்கப்படுகின்றன.

வழக்குமொழியில் இவர்கள் சார்பாளர்கள் அல்லது சட்டமன்றத்தினர் என விளிக்கப்பட்டாலும் முறையான பெயராக மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களது சட்டமன்றங்களின் பெயர்களை ஒட்டி எம்எல், எம்எஸ்எல், எம்ஜிஏ, எம்ஜிசி மற்றும் எம்எல்ஏ என்ற சொற்களால் குறிக்கப்படுகின்றனர். மேலும் அனைவருமே சட்டமன்றத்தினர் எனக் குறிப்பிடப்படுவதால் எழும் குழப்பத்தைத் தவிர்க்க ஊடகங்கள் மாநிலச் சார்பாளர்கள் அல்லது மாநில சட்டமன்றத்தினர் என்று குறிப்பிடுகின்றனர்.

கனடா

கனடாவில் மாநிலங்களில் தேர்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் அனைவருமே எம்எல்ஏ என அழைக்கப்படுகின்றனர்; இதற்கு விலக்காக:

பாக்லாந்து தீவுகள்

பாக்லாந்து தீவுகளின் சட்டப் பேரவை உறுப்பினர்கள் எம்எல்ஏக்கள் எனப்படுகின்றனர். 1840இலிருந்து செயலில் இருந்த பாக்லாந்து தீவுகள் சட்ட மன்றம் 2009இல் புதிய சட்டப் பேரவையால் மாற்றப்பட்டது. இதனால் பழக்கத்தின் காரணமாக இன்னமும் சட்டபை பேரவை உறுப்பினர்கள் கௌன்சிலர்கள் என குறிக்கப்படுகின்றனர்.

பிரேசில்

பிரேசில் நாட்டின் 26 சட்டப் பேரவைகளின் உறுப்பினர்களும் மாநில துணையாளர்கள் (deputados estaduais) எனப்படுகின்றனர். கூட்டாட்சி மாவட்ட சட்டப் பேரவை சட்ட அறை (போர்த்துக்கேய மொழி: Câmara Legislativa) எனவும் உறுப்பினர்கள் மாவட்ட துணையாளர்கள் (deputados distritais) எனவும் அழைக்கப்படுகின்றனர். இரண்டு அவைகள் கொண்ட கூட்டாட்சி அமைப்பைப் போலன்றி பிரேசிலின் மாநில சட்டப் பேரவைகள் ஓரவை முறைமை பாவிப்பன. கூட்டாட்சி நாடாளுமன்றத்தின் கீழவை உறுப்பினர்களும் துணையாளர்கள் என்று அழைக்கப்பட்டாலும் அவர்கள் கூட்டாட்சி துணையாளர்கள் (deputados federais) என வேறுபடுத்தப்படுகின்றனர்.

வடக்கு அயர்லாந்து

வேல்சு

சான்றுகோள்கள்

  1. "The Role of Members of Parliament". parliament.nsw.gov.au. 28 February 2008. பார்க்கப்பட்ட நாள் 9 April 2011.
  2. Resolution of Commonwealth Parliamentary Association (Qld branch), 19 October 2000. Source: Queensland Parliamentary Library, 15 November 2005.
  3. "Members' titles". parliament.vic.gov.au. 25 October 2010. பார்க்கப்பட்ட நாள் 9 April 2011.
  4. "House of Representatives Practice". aph.gov.au. 30 September 2005. பார்க்கப்பட்ட நாள் 9 April 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சட்டப்_பேரவை_உறுப்பினர்&oldid=1331217" இலிருந்து மீள்விக்கப்பட்டது