லீ சாட்டிலியர் தத்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: ar, bg, ca, cs, da, de, es, et, fa, fi, fr, he, hr, it, ja, kk, ko, mk, nl, no, pl, pt, ru, simple, sr, sv, th, tr, uk, zh மாற்றல்: en; மேலோட்டமான மாற...
சி தானியங்கி இணைப்பு: mn:Ле Шателье-Брауны зарчим
வரிசை 35: வரிசை 35:
[[ko:르 샤틀리에의 원리]]
[[ko:르 샤틀리에의 원리]]
[[mk:Принцип на Ле Шателје и Браун]]
[[mk:Принцип на Ле Шателје и Браун]]
[[mn:Ле Шателье-Брауны зарчим]]
[[nl:Principe van Le Châtelier]]
[[nl:Principe van Le Châtelier]]
[[no:Le Chateliers prinsipp]]
[[no:Le Chateliers prinsipp]]

20:02, 20 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

லீ சாட்டிலியர் தத்துவம் (Le Chatelier's Principle) வேதிச்சமநிலையின் முதன்மை விளக்கங்களுள் ஒன்று. வேதிவினையின் வெப்பநிலை, வேதிவினையின் அழுத்தம், வேதிப் பொருட்களின் செறிவு ஆகிய மூன்றும் மாறும் போது வேதிச்சமநிலை மாறும் விதத்தை இத்தத்துவம் விளக்குகிறது. எடுத்துக்காட்டாக, வேதியியல் அமைப்பின் அழுத்தம் அதிகரிக்கப்படுமாயின் வேதிச்சமநிலை குறைவான அழுத்தம் உள்ள திசையில் நகரும்.

அம்மோனியா உருவாதல் வினையை உதாரணமாகக் கொண்டு பின்வரும் விளைவுகள் விளக்கப்படுகின்றன.

N2 + 3 H2 2 NH3    ΔH = -92 kJ mol-1

வேதிச்செறிவு மாற்ற விளைவு

நான்கு மூலக்கூறுகள் ஒருபுறமும் இரண்டு மூலக்கூறுகள் ஒரு புறமும் இருக்கின்றன. நைதரசனையோ ஐதரசனையோ அதிகமாக்கினால் முன்னோக்கு வினையான அம்மோனியா உருவாதல் சாதகமாக நடைபெறும்.

வெப்பமாற்ற விளைவு

அம்மோனியா உருவாதல் ஒரு வெப்ப உமிழ்வினை. எனவே குறைவான வெப்பநிலையில் அம்மோனியா உருவாதல் சாதகமாகும்.

அழுத்த மாற்ற விளைவு

அம்மோனியா உருவாதலில் நான்கு மூலக்கூறுகள் சேர்ந்து இரண்டு மூலக்கூறுகளைத் தருவதால் கனஅளவு குறைகிறது. எனவே அழுத்தத்தை அதிகரிப்பது கனஅளவு குறையும் வினையான அம்மோனியா உருவாதலை ஆதரிக்கும்.

மந்தவாயு சேர்க்கை விளைவு

கனஅளவு மாறாத நிலையில் வாயுச் சமநிலை வினைகளில் மந்தவாயுவைச் சேர்ப்பது எந்த மாற்றத்தையும் உருவாக்காது.

வினையூக்கி விளைவு

வினையூக்கி முன்னோக்கு மற்றும் பின்னோக்கு வினை இரண்டின் வேகத்தையும் சமநிலையில் அதிகரிக்கும். எனவே வேதிச்சமநிலையை வினையூக்கி எந்த விதத்திலும் பாதிப்பதில்லை. அம்மோனியா உருவாதல் வினையில் இரும்பு அல்லது மாலிப்டினம் வினையூக்கியாகச் செயலாற்ற வல்லவை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லீ_சாட்டிலியர்_தத்துவம்&oldid=1329241" இலிருந்து மீள்விக்கப்பட்டது