இலூயீ நீல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (Robot: Modifying fa:لوییس نیل to fa:لوئی نل
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: eo:Louis Néel
வரிசை 68: வரிசை 68:
[[de:Louis Néel]]
[[de:Louis Néel]]
[[en:Louis Néel]]
[[en:Louis Néel]]
[[eo:Louis Néel]]
[[es:Louis Eugène Félix Néel]]
[[es:Louis Eugène Félix Néel]]
[[fa:لوئی نل]]
[[fa:لوئی نل]]

10:33, 18 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

இலூயீ யூழ்சீன் ஃபெலி நீல்
Louis Eugène Félix Néel
பிறப்பு(1904-11-22)22 நவம்பர் 1904
இலியோன், பிரான்சு
இறப்பு17 நவம்பர் 2000(2000-11-17) (அகவை 95)
துறைதிண்மநிலை இயற்பியல்
கல்வி கற்ற இடங்கள்ஈக்கோலே நோர்மாலெ சுப்பீரியர் மற்றும் இசிற்றாசுபூர்கு பல்கலைக்கழகம்
விருதுகள்இயற்பியலுக்கான நோபல் பரிசு (1970)

இலூயீ யூழ்சீன் பெலி நீல் (Louis Eugène Félix Néel, 22 நவம்பர் 1904 – 17 நவம்பர் 2000) பிரான்சிய இயற்பியலாளர்[1]. இவர் 1970 இல் திண்மங்களின் காந்தப் பண்புகளைப் பற்றி செய்த ஆய்விற்காக இயற்பியல் நோபல் பரிசு பெற்றார்.

இவர் இலியான் நகரில் உள்ள பார்க்கு உயர்நிலைப் பள்ளியில் (Lycée du Parc) படித்தார். பின்னர் பாரிசில் உள்ள ஈக்கோல் நோர்மால் சுப்பீரியர் (École Normale Supérieure) என்னும் உயர் கல்விக்கழகத்தில் பயின்றார். அதன் பின்னர் இசிற்றாசுபூர்கு பல்கலைக்கழகத்தில் (University of Strasbourg) அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார். இவர் 1970 இல் சுவீடிய விண்ணியற்பியலாளர் (astrophysicist) ஃகானெசு ஆல்ஃவென் (Hannes Alfvén) உடன் சேர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.[2]. இவருடைய திண்மநிலை காந்தப் பண்புகளின் ஆராய்ச்சியால் கணினி நினைவக உறுப்புகளில் மிகப்பல முன்னேற்றங்கள் நிகழ்ந்தன. ஏறத்தாழ 1930 இல் இவர் முற்றிலும் புதிய ஒருவகையான காந்தப்பண்பு இருக்கக்கூடும் என்று கூறினார். இது மறுதலை இரும்பியக் காந்தம் (antiferromagnetism) என்று அழைக்கப்படுகின்றது. இரும்புக் காந்தம்போல், ஆனால் ஒரு பொருளின் உள்ளே உள்ள காந்தத்தன்மையுடைய அணுக்கூறுகள் ஒரே திசையில் காந்தப் புலம் கொள்ளாமல் எதிரெதிர் திசையில் நின்று ஏறத்தாழ காந்தத்தன்மை இல்லாதது போல் இருக்கும், ஆனால் தாழ்ந்த வெப்பநிலையில் ஓரளவுக்குக் காந்தத்தன்மை கொண்டிருக்கும். வெப்பநிலை உயர்ந்தால் இந்தக் காந்தத் தன்மையை இழந்துவிடும். இதே போன்ற, ஆனால் சிறிதளவு எதிரெதிர் காந்தச் சாய்வுகள் கொண்ட தன்மையுடைய சிறுமுரண் இரும்பியக் காந்தப் பண்பையும் இவர் 1947 இல் கண்டுபிடித்தார். இந்த சிறுமுரண் இரும்பியக் காந்தத்தன்மையும் நீல் வெப்பநிலை என்னும் வெப்பநிலை எய்தியவுடன் மறைந்துவிடும். இலூயிசு நீல், பாறைகளில் காணப்படும் மென்மையான காந்தத் தன்மைக்கும் தக்க விளக்கம் தந்தார். இவருடைய ஆய்வின் பயனாக நில உருண்டையின் காந்தப்புல வரலாற்றை அறிய முடிகின்றது[3]

இவற்றையும் பார்க்க

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்

  1. Friedel, J.; Averbuch, P. (1 December 2003). "Louis Eugène Félix Néel. 22 November 1904 - 17 November 2000". Biographical Memoirs of Fellows of the Royal Society 49: 367–384. doi:10.1098/rsbm.2003.0021. 
  2. Néel, L. (3 December 1971). "Magnetism and Local Molecular Field". Science 174 (4013): 985–992. doi:10.1126/science.174.4013.985. பப்மெட்:17757022. 
  3. Néel, Louis (1 April 1955). "Some theoretical aspects of rock-magnetism". Advances in Physics 4 (14): 191–243. doi:10.1080/00018735500101204. 
  • Barbara, B.; Lacroix, Claudine (2000). "Retrospective in Science: Louis Neel (1904–2000)". Science 291 (5506): 1000. doi:10.1126/science.1059052. 
  • Coey, Michael (2001). "Obituary: Louis Néel (1904–2000)". Nature 409 (6818): 302–302. doi:10.1038/35053274. 
  • Coey, J. M. D. (2003). "Louis Néel: Retrospective (invited)". Journal of Applied Physics 93 (10): 8224–8229. doi:10.1063/1.1557815. 
  • Dunlop, David J. (2003). "Partial thermoremanent magnetization: Louis Néel’s legacy in rock magnetism (invited)". Journal of Applied Physics 93 (10): 8236–8240. doi:10.1063/1.1558640. 
  • "Louis Néel - Biography". Nobel Lectures, Physics 1963–1970. Elsevier Publishing Company. 
  • Néel, Louis (1991). Un siècle de physique. Paris: Jacob. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-2738101402. 
  • "Louis Néel, un siècle de science à Grenoble". 2004. பார்க்கப்பட்ட நாள் 27 October 2011.
  • Kurti, Nicholas, தொகுப்பாசிரியர் (1988). Selected works of Louis Néel. New York: Gordon and Breach. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-2881243004. 

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலூயீ_நீல்&oldid=1327810" இலிருந்து மீள்விக்கப்பட்டது