மனித மேம்பாட்டுச் சுட்டெண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.5) (தானியங்கி இணைப்பு: sco:Human Development Index
வரிசை 511: வரிசை 511:
[[ru:Индекс развития человеческого потенциала]]
[[ru:Индекс развития человеческого потенциала]]
[[sah:Киhи сайдыытын индекса]]
[[sah:Киhи сайдыытын индекса]]
[[sco:Human Development Index]]
[[sh:Indeks ljudskog razvoja]]
[[sh:Indeks ljudskog razvoja]]
[[simple:Human Development Index]]
[[simple:Human Development Index]]

20:46, 13 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

மனித வளர்ச்சிச் சுட்டெண் (2010) அடிப்படையில் உலக வரைபடம், நவம்பர் 4 ஆம் நாள் 2010 வெளியிடப்பட்டது)[1]
  0.900 உம் அதற்கு மேலும்
  0.850–0.899
  0.800–0.849
  0.750–0.799
  0.700–0.749
  0.650–0.699
  0.600–0.649
  0.550–0.599
  0.500–0.549
  0.450–0.499
  0.400–0.449
  0.350–0.399
  0.300–0.349
  0.300 க்கும் கீழே
  தரவுகள் கிடைக்கவில்லை
மனித வளர்ச்சிச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்டு நாடுகளைப் பகுத்துக் காட்டும் உலக வரைபடம் 2010[2]):
  மிக அதிகம் (வளர்ந்த நாடுகள்
  நடுத்தரம் (அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள்)
  குறைவு (அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள்)
  தரவுகள் கிடைக்கவில்லை

மாந்த வளர்ச்சிச் சுட்டெண் அல்லது மனித வளர்ச்சிச் சுட்டெண் (Human Development Index, HDI) என்பது ஐக்கிய நாடுகள் அவையினால் ஒரு நாட்டில் வாழும் மாந்தர்களின் வாழ்க்கை வளத்தை அளவிடும் ஒர் எண்ணாகும். இது ஒரு நாட்டில் வாழும் மக்களின் ஆயுள் எதிர்பார்ப்பு, எழுத்தறிவு, அவர்கள் பெறும் கல்வி, வாழ்க்கைத்தரம், மற்றும் சுற்றுப்புற சூழ்நிலையின் தரம், தனிநபர் வருமானம், மாந்த உரிமைகள் (முக்கியமாக குழந்தைகள் உரிமை), ஆண்-பெண் உரிமைகள், அறமுறைகள், முதியோர் பராமரிப்பு போன்ற பல்வேறு அளவுகோல்களை உள்வாங்கி ஐக்கிய நாடுகள் அவையினால் பல நாடுகளுக்கும், சில தன்னாட்சி நிலப்பகுதிகளுக்கும் கணித்து அடையப்படும் அளவீடாகும்.
இந்தச் சுட்டெண்ணைக் கொண்டு நாடுகள் வளர்ந்த நாடுகள் (developed countries), வளர்ந்துவரும் நாடுகள் (developing countries), வளர்ச்சியடையாத நாடுகள் (undeveloped countries) என்று பிரிக்கப்படுகின்றது. அத்துடன் மாந்தரின் வாழ்க்கைத் தரத்தில் நாட்டில் பொருளாதாரக் கொள்கைகளின் தாக்கம் அல்லது விளைவைத் தீர்மானிக்கவும் உதவுகின்றது. இந்தச் சுட்டெண்ணானது 1990 அம் ஆண்டில் பாகிஸ்தான் பொருளியலாளர் Mahbub ul Haq இனாலும்[3], இந்திய பொருளியலாளர் Amartya Sen இனாலும்[சான்று தேவை] உருவாக்கப்பட்டது.

2004 ஆம் ஆண்டு ஆய்வின் படி மனித வளர்ச்சிச் சுட்டெண் தர வரிசையில் இந்தியா 126 ஆவது இடத்தை நிரப்பியிருக்கிறது.

2011 மனித வளர்ச்சி அறிக்கை

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தின் மூலம் பெறப்படும், 2011 ஆம் ஆண்டுக்கான மனித வளர்ச்சி அறிக்கையின்படி, நோர்வே மீண்டும் மனித வளர்ச்சிச் சுட்டெண்ணின்படி முதலாம் இடத்தில் இருக்கின்றது[4]. 2011 ஆம் ஆண்டிற்கான பெறுமதிகளைக் கணக்கில்கொண்டு செய்யப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையிலேயே 2011 ஆம் ஆண்டிற்கான இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டு 2011, நவம்பர் 2 ஆம் நாள் வெளியிடப்பட்டது.

குறிப்பு: பச்சை அம்புக்குறி (), சிவப்பு அம்புக்குறி (), நீலக்கோடு () என்பன 2010 ஆம் ஆண்டுக்கான மனித வளர்ச்சிச் சுட்டெண்ணுடன் ஒப்பிட்டு, 2011 ஆம் ஆண்டுக்கான மாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.

  1.  நோர்வே 0.943 ()
  2.  ஆத்திரேலியா 0.929 ()
  3.  நெதர்லாந்து 0.910 ( 4)
  4.  ஐக்கிய அமெரிக்கா 0.910 ()
  5.  நியூசிலாந்து 0.908 ( -2)
  6.  கனடா 0.908 ( 2)
  7.  அயர்லாந்து 0.908 ( -2)
  8.  லீக்கின்ஸ்டைன் 0.905 ( -2)
  9.  செருமனி 0.905 ( 1)
  10.  சுவீடன் 0.904 ( -1)
  11.  சுவிட்சர்லாந்து 0.903 ( 2)
  12.  சப்பான் 0.901 ( -1)
  13.  ஆங்காங் 0.898 ( 8)
  14.  ஐசுலாந்து 0.898 ( -3)
  15.  தென் கொரியா 0.897 ( -3)
  16.  டென்மார்க் 0.895 ( 3)

  1.  இசுரேல் 0.888 ( -2)
  2.  பெல்ஜியம் 0.886 ()
  3.  ஆஸ்திரியா 0.885 ( 6)
  4.  பிரான்சு 0.884 ( -6)
  5.  சுலோவீனியா 0.884 ( 8)
  6.  பின்லாந்து 0.882 ( -6)
  7.  எசுப்பானியா 0.878 ( -3)
  8.  இத்தாலி 0.874 ( -1)
  9.  லக்சம்பர்க் 0.867 ( -1)
  10.  சிங்கப்பூர் 0.866 ( 1)
  11.  செக் குடியரசு 0.865 ( 1)
  12.  ஐக்கிய இராச்சியம் 0.863 ( -2)
  13.  கிரேக்க நாடு 0.861 ( -7)
  14.  ஐக்கிய அரபு அமீரகம் 0.846 ( 2)
  15.  சைப்பிரசு 0.840 ( 4)
  16.  அந்தோரா 0.838 ( -2)

  1.  புரூணை 0.838 ( 4)
  2.  எசுத்தோனியா 0.835 ()
  3.  சிலவாக்கியா 0.834 ( -4)
  4.  மால்ட்டா 0.832 ( -3)
  5.  கத்தார் 0.831 ( 1)
  6.  அங்கேரி 0.816 ( -2)
  7.  போலந்து 0.813 ( 2)
  8.  லித்துவேனியா 0.810 ( 4)
  9.  போர்த்துகல் 0.809 ( -1)
  10.  பகுரைன் 0.806 ( -3)
  11.  லாத்வியா 0.805 ( 5)
  12.  சிலி 0.805 ( 1)
  13.  அர்கெந்தீனா 0.797 ( 1)
  14.  குரோவாசியா 0.796 ( 5)
  15.  பார்படோசு 0.793 ( -5)

ஐக்கிய நாடுகள் உறுப்பினர் அல்லாதவை (UNDP யால் கணக்கிடப்படவில்லை)

சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித வளர்ச்சிச் சுட்டெண்

மேலேயுள்ள மனித வளர்ச்சிச் சுட்டெண் பட்டியலின் மேல் கால்மத்தில் உள்ள நாடுகளை சமமின்மை சரிசெய்யப்பட்ட பின்னர் பட்டியலிட்டபோது பின்வரும் பட்டியல் கிடைத்திருந்தது.[6]

குறிப்பு: பச்சை அம்புக்குறி (), சிவப்பு அம்புக்குறி (), நீலக்கோடு () என்பன 2010 ஆம் ஆண்டுக்கான மனித வளர்ச்சிச் சுட்டெண்ணுடன் ஒப்பிட்டு, 2011 ஆம் ஆண்டுக்கான மாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.

  1.  நோர்வே 0.890 ()
  2.  ஆத்திரேலியா 0.856 ()
  3.  சுவீடன் 0.851 ( 5)
  4.  நெதர்லாந்து 0.846 ( 1)
  5.  ஐசுலாந்து 0.845 ( 5)
  6.  அயர்லாந்து 0.843 ()
  7.  செருமனி 0.842 ()
  8.  டென்மார்க் 0.842 ( 4)
  9.  சுவிட்சர்லாந்து 0.840 ()
  10.  சுலோவீனியா 0.837 ( 7)
  11.  பின்லாந்து 0.833 ( 7)
  12.  கனடா 0.829 ( 7)

  1.  செக் குடியரசு 0.821 ( 9)
  2.  ஆஸ்திரியா 0.820 ( 1)
  3.  பெல்ஜியம் 0.819 ( 1)
  4.  பிரான்சு 0.804 ()
  5.  எசுப்பானியா 0.799 ( 2)
  6.  லக்சம்பர்க் 0.799 ( 3)
  7.  ஐக்கிய இராச்சியம் 0.791 ( 4)
  8.  சிலவாக்கியா 0.787 ( 7)
  9.  இசுரேல் 0.779 ( 8)
  10.  இத்தாலி 0.779 ( 2)
  11.  ஐக்கிய அமெரிக்கா 0.771 ( 19)
  12.  எசுத்தோனியா 0.769 ( 2)

  1.  அங்கேரி 0.759 ( 3)
  2.  கிரேக்க நாடு 0.756 ( 2)
  3.  சைப்பிரசு 0.755 ( 2)
  4.  தென் கொரியா 0.749 ( 17)
  5.  போலந்து 0.734 ()
  6.  லித்துவேனியா 0.730 ()
  7.  போர்த்துகல் 0.726 ()
  8.  மொண்டெனேகுரோ 0.718 ( 7)
  9.  லாத்வியா 0.717 ( 1)
  10.  செர்பியா 0.694 ( 9)
  11.  பெலருஸ் 0.693 ( 10)

சமமின்மை சரிசெய்யப்பட்ட பட்டியலில் வராத நாடுகள்: நியூசிலாந்து, லீக்டன்ஸ்டைன், சப்பான், ஹொங்கொங், சிங்கப்பூர், சீனக் குடியரசு (தாய்வான்), ஐக்கிய அரபு அமீரகம், அண்டோரா, புரூணை, மால்டா, கட்டார், பஹ்ரேய்ன், சிலி, ஆர்ஜென்டீனா மற்றும் பார்படோஸ்.

சேர்த்துக் கொள்ளப்படாத நாடுகள்

முக்கியமாக தரவுகள் போதாமையால் சில நாடுகள் கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. ஐக்கிய நாடுகள் அங்கத்துவம் உடைய பின்வரும் நாடுகள் சேர்க்கப்படவில்லை[7]: வட கொரியா, மார்ஷல் தீவுகள், மொனாகோ, நவூரு, சான் மேரினோ, சோமாலியா, துவாலு.

2010 மனித வளர்ச்சி அறிக்கை

2010 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தின் மூலம் பெறப்படும், மனித வளர்ச்சி அறிக்கையின், நவம்பர் 4 2010 இல் வெளியிடப்பட்ட அறிக்கை. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் நாடுகள் "மிக உயர் வளர்ச்சியுடைய" நாடுகளாகும்:[8]

  1.  நோர்வே 0.938 ()
  2.  ஆத்திரேலியா 0.937 ()
  3.  நியூசிலாந்து 0.907 ( 17)
  4.  ஐக்கிய அமெரிக்கா 0.902 ( 9)
  5.  அயர்லாந்து 0.895 ()
  6.  லீக்கின்ஸ்டைன் 0.891 ( 13)
  7.  நெதர்லாந்து 0.890 ( 1)
  8.  கனடா 0.888 ( 4)
  9.  சுவீடன் 0.885 ( 2)
  10.  செருமனி 0.885 ( 12)
  11.  சப்பான் 0.884 ( 1)
  12.  தென் கொரியா 0.877 ( 14)
  13.  சுவிட்சர்லாந்து 0.874 ( 4)
  14.  பிரான்சு 0.872 ( 6)

  1.  இசுரேல் 0.872 ( 12)
  2.  பின்லாந்து 0.871 ( 4)
  3.  ஐசுலாந்து 0.869 ( 14)
  4.  பெல்ஜியம் 0.867 ( 1)
  5.  டென்மார்க் 0.866 ( 3)
  6.  எசுப்பானியா 0.863 ( 5)
  7.  ஆங்காங் 0.862 ( 3)
  8.  கிரேக்க நாடு 0.855 ( 3)
  9.  இத்தாலி 0.854 ( 5)
  10.  லக்சம்பர்க் 0.852 ( 13)
  11.  ஆஸ்திரியா 0.851 ( 11)
  12.  ஐக்கிய இராச்சியம் 0.849 ( 5)
  13.  சிங்கப்பூர் 0.846 ( 5)
  14.  செக் குடியரசு 0.841 ( 8)

  1.  சுலோவீனியா 0.828 ()
  2.  அந்தோரா 0.824 ( 2)
  3.  சிலவாக்கியா 0.818 ( 11)
  4.  ஐக்கிய அரபு அமீரகம் 0.815 ( 3)
  5.  மால்ட்டா 0.815 ( 5)
  6.  எசுத்தோனியா 0.812 ( 6)
  7.  சைப்பிரசு 0.810 ( 3)
  8.  அங்கேரி 0.805 ( 7)
  9.  புரூணை 0.805 ( 7)
  10.  கத்தார் 0.803 ( 5)
  11.  பகுரைன் 0.801 ()
  12.  போர்த்துகல் 0.795 ( 6)
  13.  போலந்து 0.795 ()
  14.  பார்படோசு 0.788 ( 5)

சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித வளர்ச்சிச் சுட்டெண்

2010 அறிக்கையே இவ்வாறான ஒரு சமமின்மை சரிசெய்யப்பட்ட முதலில் வெளியான அறிக்கையாகும். வருமானம், ஆயுள் எதிர்பார்ப்பு, கல்வி ஆகிய மூன்று காரணிகளே சரி செய்யப்பட்டன. இந்த வகையில் பெறப்பட்ட மிக உயர் வளர்ச்சி கொண்ட நாடுகளாகும்.[9] பச்சை அம்புக்குறி (), சிவப்பு அம்புக்குறி (), மற்றும் நீலக்கோடு () ஆகியன 2010ம் ஆண்டின் மனித வளர்ச்சிச் சுட்டெண் நிலையுடனான ஒப்பீட்டு நிலையைக் காட்டுகிறது.

  1.  நோர்வே 0.938 ()
  2.  ஆத்திரேலியா 0.864 ()
  3.  சுவீடன் 0.824 ( 6)
  4.  நெதர்லாந்து 0.818 ( 3)
  5.  செருமனி 0.814 ( 5)
  6.  சுவிட்சர்லாந்து 0.813 ( 7)
  7.  அயர்லாந்து 0.813 ( 2)
  8.  கனடா 0.812 ()
  9.  ஐசுலாந்து 0.811 ( 8)
  10.  டென்மார்க் 0.810 ( 9)

  1.  பின்லாந்து 0.806 ( 5)
  2.  ஐக்கிய அமெரிக்கா 0.799 ( 8)
  3.  பெல்ஜியம் 0.794 ( 5)
  4.  பிரான்சு 0.792 ()
  5.  செக் குடியரசு 0.790 ( 13)
  6.  ஆஸ்திரியா 0.787 ( 9)
  7.  எசுப்பானியா 0.779 ( 3)
  8.  லக்சம்பர்க் 0.775 ( 6)
  9.  சுலோவீனியா 0.771 ( 10)
  10.  கிரேக்க நாடு 0.768 ( 2)

  1.  ஐக்கிய இராச்சியம் 0.766 ( 5)
  2.  சிலவாக்கியா 0.764 ( 9)
  3.  இசுரேல் 0.763 ( 8)
  4.  இத்தாலி 0.752 ( 1)
  5.  அங்கேரி 0.736 ( 11)
  6.  எசுத்தோனியா 0.733 ( 8)
  7.  தென் கொரியா 0.731 ( 15)
  8.  சைப்பிரசு 0.716 ( 7)
  9.  போலந்து 0.709 ( 11)
  10.  போர்த்துகல் 0.700 ( 10)

தரவுகள் போதாமையால் சில நாடுகள் கணக்கெடுப்பில் சேர்க்கப்படவில்லை. அவையாவன:நியூசிலாந்து, லீக்டன்ஸ்டைன், சப்பான், ஹொங்கொங், சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், அண்டோரா, புரூணை, மால்டா, கட்டார், பஹ்ரேய்ன் மற்றும் பார்படோஸ்.

சேர்த்துக் கொள்ளப்படாத நாடுகள்

முக்கியமாக தரவுகள் போதாமையால் சில நாடுகள் கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. ஐக்கிய நாடுகள் அங்கத்துவம் உடைய பின்வரும் நாடுகள் சேர்க்கப்படவில்லை[10] கியூபா தன்னைச் சேர்த்துக் கொள்ளாததற்கு உத்தியோகபூர்வமான எதிர்ப்பை தெரிவித்தது. The UNDP explained that Cuba had been excluded due to the lack of an "internationally reported figure for Cuba’s Gross National Income adjusted for Purchasing Power Parity". All other indicators for Cuba were available, and reported by the UNDP, but the lack of one indicator meant that no ranking could be attributed to the country.[11][12]

ஆபிரிக்கா

அமெரிக்கா

ஆசியா

ஐரோப்பா

ஓசியானியா

ஐக்கிய நாட்டு அங்கத்துவமில்லாத நாடு (UNDP யால் கணக்கெடுக்கப்படவில்லை)

2009 மனித வளர்ச்சிச் சுட்டெண் அறிக்கை

அக்டோபர் 5, 2009 இல், 2007 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குரிய அறிக்கை வெளியிடப்பட்டது. மேல் தரத்தை எட்டிய நாடுகள் வளர்ந்த நாடுகள் என அடையாளப்படுத்தப் பட்டன.[14] அவையாவன:

  1.  நோர்வே 0.938 ()
  2.  ஆத்திரேலியா 0.970 ( 2)
  3.  ஐசுலாந்து 0.969 ( 2)
  4.  கனடா 0.966 ( 1)
  5.  அயர்லாந்து 0.965 ()
  6.  நெதர்லாந்து 0.964 ()
  7.  சுவீடன் 0.963 ()
  8.  பிரான்சு 0.961 ( 3)
  9.  சுவிட்சர்லாந்து 0.960 ( 1)
  10.  சப்பான் 0.960 ( 2)
  11.  லக்சம்பர்க் 0.960 ( 2)
  12.  பின்லாந்து 0.959 ()
  13.  ஐக்கிய அமெரிக்கா 0.956 ( 2)

  1.  ஆஸ்திரியா 0.955 ()
  2.  எசுப்பானியா 0.955 ( 1)
  3.  டென்மார்க் 0.955 ( 2)
  4.  பெல்ஜியம் 0.953 ()
  5.  இத்தாலி 0.951 ( 1)
  6.  லீக்கின்ஸ்டைன் 0.951 ( 1)
  7.  நியூசிலாந்து 0.950 ()
  8.  ஐக்கிய இராச்சியம் 0.947 ()
  9.  செருமனி 0.947 ()
  10.  சிங்கப்பூர் 0.944 ( 1)
  11.  ஆங்காங்0.944 ( 1)
  12.  கிரேக்க நாடு 0.942 ()
  13.  தென் கொரியா 0.937 ()

  1.  இசுரேல் 0.935 ( 1)
  2.  அந்தோரா 0.934 ( 1)
  3.  சுலோவீனியா 0.929 ()
  4.  புரூணை 0.920 ()
  5.  குவைத் 0.916 ()
  6.  சைப்பிரசு 0.914 ()
  7.  கத்தார் 0.910 ( 1)
  8.  போர்த்துகல் 0.909 ( 1)
  9.  ஐக்கிய அரபு அமீரகம் 0.903 ( 2)
  10.  செக் குடியரசு 0.903 ()
  11.  பார்படோசு 0.903 ( 2)
  12.  மால்ட்டா 0.902 ( 3)

கணக்கில் சேர்க்கப்படாத நாடுகள்

பல்வேறு காரணங்களுக்காக இவை சேர்த்துக் கொள்ளப்படவில்லை. சில ஐநாவில் இல்லாத நாடுகள், சில சரியான தகவல்களைத் தரத் தயங்கும் நாடுகள், வேறு சில நாடுகளில் சரியான தகவல்களை குறிப்பிட்ட காலப்பகுதியில் பெறுதல் கடினம். கீழே உள்ள நாடுகள் சேர்க்கப்படவில்லை.

ஆபிரிக்கா

ஆசியா

ஐரோப்பா

ஓசியானியா

முன்னைய வருடங்களில் முன்னணியில் இருந்த நாடுகள்

கீழுள்ள பட்டியலில், ஒவ்வொரு வருடமும் மனித வளர்ச்சிச் சுட்டெண்ணில் முன்னணியில் இருந்த நாடுகள் ஒழுங்கில் பட்டியலிடப்பட்டுள்ளன. நோர்வே பத்து தடவைகள் முதலிடத்தில் வந்துள்ளது. கனடா எட்டு தடவைகளும், யப்பான் மூன்று தடவைகளும் ஐஸ்லாந்து இரண்டு தடவைகளும் முதலிடத்தைப் பெற்றுள்ளன.

கொடுக்கப்பட்டிருக்கும் ஆண்டு அறிக்கை வழங்கப்பட்ட ஆண்டையும், அடைப்புக் குறிக்குள் கொடுக்கப்பட்டிருக்கும் ஆண்டு சுட்டெண் கணக்கிடப்பட்ட ஆண்டையும் குறிக்கின்றது.

மேற்கோள்கள்

  1. Human Development Index (HDI) - 2010 Rankings, United Nations Development Programme
  2. Indices & Data | Human Development Reports (HDR) | United Nations Development Programme (UNDP)
  3. "History of the Human Development Report". United Nations Development Programme. பார்க்கப்பட்ட நாள் 26 March 2009.
  4. மனித வளர்ச்சிச் சுட்டெண்
  5. http://udn.com/NEWS/BREAKINGNEWS/BREAKINGNEWS6/6732674.shtml
  6. 2011 Human Development Complete Report
  7. International Human Rights Development Indicators, UNDP
  8. 2010 மனித வளர்ச்சிச் சுட்டெண்
  9. 2010 Human Development Complete Report
  10. International Human Rights Development Indicators, UNDP
  11. "Samoa left out of UNDP index", Samoa Observer, January 22, 2010
  12. Cuba country profile, UNDP
  13. Report of Directorate General of Budget, Accounting and Statistics, Executive Yuan, R.O.C.(Taiwan)
  14. http://hdr.undp.org/en/media/HDR_2009_EN_Complete.pdf Human Development Report 2009[ (p. 171, 204)


இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்