அடிபந்தாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: bn:বেসবল
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: min:Bisbol
வரிசை 102: வரிசை 102:
[[lv:Beisbols]]
[[lv:Beisbols]]
[[mhr:Бейсбол]]
[[mhr:Бейсбол]]
[[min:Bisbol]]
[[ml:ബേസ്‌ബോൾ]]
[[ml:ബേസ്‌ബോൾ]]
[[mn:Бэйсбол]]
[[mn:Бэйсбол]]

17:28, 9 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

சிக்காகோவின் ரிக்லி ஃபீள்ட் பேஸ்பால் மைதானம்

வட அமெரிக்காவில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் அடிப்பந்தாட்டம்(Baseball) அல்லது பேஸ்போல் விளையாட்டு உருவானது. ஐக்கிய அமெரிக்காவின் (USA) தேசிய விளையாட்டான இது ஹாலிவுட் படங்களினாலும், தொலைக்காட்சியினாலும் மற்றவர்களுக்கு சற்றேனும் அறிமுகமானதாக இருக்கிறது.

ஆடுகளம்

அடிப்பந்தாட்டக்களம்

விளையாட்டு களம் சற்று முக்கோண வடிவில் அமைந்துள்ளது. இதன் கூர்முனையில் டைமண்ட் வடிவிலான சதுரம் அமைக்கப்பட்டிருக்கும். இந்த முக்கோணத்தின் கூர்முனையில் பந்தை அடிப்பவர் (Batter) கையில் பேஸ்பால் மட்டையுடன் நின்று கொண்டிருப்பார். டைமண்ட் சதுரத்தின் மையத்தில் நின்று பந்தை எறிபவர் (Pitcher) அவரை நோக்கி பந்தை ஓங்கி எறிவார்.

முக்கோணத்தின் கூர்முனையில் நின்று பந்தை அடிக்கும் போது அந்த இடத்திலிருந்து விரிந்து செல்லும் முக்கோணத்தின் இருபக்க கோட்டிற்கு வெளியே செல்லாமல் அடிக்க வேண்டும். இவ்வாறு அடித்து விட்டு டைமண்ட் சதுரத்தை இடப்புறமாக சுற்றி ஓட வேண்டும். இது ரன் எனப்படும்.

பந்தை அடிப்பவரை அவுட் ஆக்கும் முறைகள்

1.மட்டையிலிருந்து எழும்பி வரும் பந்தை தரையில் படுமுன் பிடித்தல்.

2.அடிப்பவரின் தோளுக்கும் முழங்காலுக்கும் இடைப்பட்ட உயரத்தில் தொடர்ந்து மூன்று முறை எறியப்பட்ட பந்து அடிபடாமல் தாண்டிச் செல்லுதல்.

3.அவ்வாறு மூன்றாம் முறை எறியப்பட்ட பந்து மட்டையில் பட்டு முக்கோண் கோட்டிற்கு வெளியே செல்லுதல் (Foul territory).

4.பந்தை மட்டையால் இருமுறை அடித்தல்.

இந்த வழிகளில் ஒரு அணியின் மூன்று மட்டையாளர்கள் (Batters) அவுட் ஆவது ஒரு இன்னிங்ஸ் எனப்படும். ஒரு ஆட்டத்திற்கு ஒன்பது இன்னிங்ஸ் ஆட வேண்டும்.

உபகரணங்கள்

மட்டை உருட்டுக் கட்டை போன்ற வடிவில் 107செ.மீ (42") வரை நீளம் கொண்டதாக இருக்கும்.

பந்து மையத்தில் கார்க், அதனை சுற்றி நூல், வெளிப்புறத்தில் மாட்டுத் தோல் என்று கிரிக்கெட் பந்தைப் போன்று சற்றுப் பெரிய அளவில் செய்யப்பட்டிருக்கும்.

களத்தில் இருப்பவர்கள் பந்தைப் பிடிப்பதற்காக ஒரு கரத்தில் பெரிய அளவு கையுறை அணிந்திருப்பார்கள். மேலெழும்பி வரும் பந்தை பிடிக்க வசதியாக இந்தக் கையுறையில் ஆள்காட்டி விரலுக்கும், கட்டை விரலுக்கும் இடையில் வலை பின்னப்பட்டிருக்கும்.

மட்டையாளர்கள் தலைக்கவசமும், மட்டையாளருக்கு பின் நின்று பந்தை பிடிப்பவர் தலை, மார்பு, கால் முதலியவற்றிற்கு கவசமும் அணிந்திருப்பார்.

மேலும் காண்க


வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடிபந்தாட்டம்&oldid=1318017" இலிருந்து மீள்விக்கப்பட்டது