விலா எலும்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: cv:Аяк пĕрчи
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: ba:Ҡабырға
வரிசை 28: வரிசை 28:
[[av:ХьабалухъагӀучӀ]]
[[av:ХьабалухъагӀучӀ]]
[[az:Qabırğa sümüyü]]
[[az:Qabırğa sümüyü]]
[[ba:Ҡабырға]]
[[be:Рабро]]
[[be:Рабро]]
[[bg:Ребро]]
[[bg:Ребро]]

02:17, 3 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

எலும்பு: விலா எலும்பு
மனித விலா எலும்புக் கூடு
இலத்தீன் costae


முள்ளந்தண்டு உடற்கூற்றியலில், விலா எலும்புகள் (Rib bones) என்பன மார்புக் கூட்டை அல்லது விலா எலும்புக்கூட்டை (rib cage) உருவாக்கும் நீண்டு வளைந்த எலும்புகளாகும். பெரும்பாலான விலங்குகளில் விலா எலும்புகள் மார்பைச் சுற்றி அமைந்து, நுரையீரல், இதயம் போன்ற உள்ளுறுப்புக்களைப் பாதுகாக்கின்றன. சில விலங்குகளில், குறிப்பாகப் பாம்புகளில், விலா எலும்புகள் முழு உடம்பையுமே தாங்குகின்றன.

மனித விலா எலும்புகள்

மனிதர்களில், ஆண், பெண் இருபாலாருக்குமே 24 விலா எலும்புகள் (12 இணை) அமைந்துள்ளன. முதல் 7 இணை எலும்புகளும், மார்பு நடு எலும்புடன், அவற்றுக்குரிய தனித்தனியான குருத்தெலும்புகளினால் இணைக்கப்பட்டுள்ளன. ஏனைய 5 இணை எலும்புகளும், போலி விலா எலும்புகள் எனப்படுகின்றன. இவற்றுள் முதல் மூன்று இணைகளும், மார்பு நடு எலும்புடன் ஒன்றாகவே இணைக்கப்பட்டுள்ளன. கடைசி இரண்டு இணை எலும்புகளும் மிதக்கும் விலா எலும்புகள் எனப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விலா_எலும்பு&oldid=1313758" இலிருந்து மீள்விக்கப்பட்டது