இசுருமுனிய: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[File:ISURUMUNIYA ROCK TEMPLE.JPG|thumb|right|250px|இசுருமுனிய புத்த கோயில்]]
[[File:ISURUMUNIYA ROCK TEMPLE.JPG|thumb|right|250px|இசுருமுனிய புத்த கோயில்]]
[[File:Isurumuniya temple front view.JPG|thumb|இசுருமுனிய கோயிலின் முன்புறத் தோற்றம்]]
[[File:Isurumuniya temple front view.JPG|thumb|250px|இசுருமுனிய கோயிலின் முன்புறத் தோற்றம்]]
'''இசுருமுனிய''' என்பது இலங்கையின் பழங்காலத் தலைநகரமான அனுராதபுரத்தில் உள்ள திசவாவிக்கு அண்மையில் அமைந்துள்ள ஒரு புத்த கோயில் ஆகும்.
'''இசுருமுனிய''' என்பது இலங்கையின் பழங்காலத் தலைநகரமான அனுராதபுரத்தில் உள்ள திசவாவிக்கு அண்மையில் அமைந்துள்ள ஒரு புத்த கோயில் ஆகும்.



11:47, 2 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

இசுருமுனிய புத்த கோயில்
இசுருமுனிய கோயிலின் முன்புறத் தோற்றம்

இசுருமுனிய என்பது இலங்கையின் பழங்காலத் தலைநகரமான அனுராதபுரத்தில் உள்ள திசவாவிக்கு அண்மையில் அமைந்துள்ள ஒரு புத்த கோயில் ஆகும்.

வரலாறு

இக்கோயில் பண்டைக்காலத்தில் இலங்கையை ஆண்ட தேவாநாம்பிய தீசன் என்னும் மன்னனால் கட்டுவிக்கப்பட்டது. 500 உயர் சாதிப் பிள்ளைகளை பிக்குகளாக நிலைப்படுத்திய பின்னர், அனர்கள் வசிப்பதற்காக இது கட்டப்பட்டது. மன்னன் முதலாம் கசியபன் (கிபி 473-491) இதைத் திருத்திய பின்னர் "போபுல்வன் கசுப்கிரி ரத்மகா விகாரை" எனப் பெயர் இட்டான். மன்னனுடைய பெயரையும் அவனது இரு பெண் மக்களுடைய பெயரையும் இணைத்து இப்பெயர் உருவானது. அங்கிருந்த குகையுடன் தொடர்புடையதாக விகாரையும், மேலே மலை உச்சியில் ஒரு சிறிய தாதுகோபுரமும் உள்ளன. இத் தாதுகோபுரம் தற்காலக் கட்டுமான அமைப்புடையது. இங்கு குளம் ஒன்றில் இருந்து வெளிவருவது போல் அமைந்துள்ள ஒர் பாறையில் யானைகள், குதிரை ஆகியவற்றின் சிற்பங்கள் உள்ளன. இவ்விடத்திலேயே புகழ் பெற்ற இசுருமுனிய காதலர்கள் எனப் பெயருடைய சிற்பமும் உள்ளது. இச் சிற்பத்தைக் கொண்ட கற்பலகை வேறொரு இடத்திலிருந்து இவ்விடத்துக்குக் கொண்டு வந்து வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. இவ்விகாரைக்கு அண்மையிலேயே ரன்முசு உயன எனப்படும் பூங்காவனம் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுருமுனிய&oldid=1313326" இலிருந்து மீள்விக்கப்பட்டது