நுளம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Anton பயனரால் நுளம்பு, மாட்டைக் கடிக்கும் ஈ என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
வரிசை 13: வரிசை 13:


[[பகுப்பு:பூச்சிகள்]]
[[பகுப்பு:பூச்சிகள்]]

[[en:Abricta curvicosta]]

03:11, 30 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

மாட்டைக் கடிக்கும் நுளம்பு

நுளம்பு (Abricta curvicosta) என்பது மாட்டைக் கடிக்கும் ஈ. இது மாட்டின் கண்ணோரம் மேயும். காதுகளில் கடிக்கும். மாட்டின் பிற உறுப்புப் பகுதியில் எப்போதாவது கடிப்பதும் உண்டு. ஈழத் தமிழில் இது ஆளைப் படிக்கும் கொசுவைக் குறிக்கவும் பயன்படுகிறது. இதனை மொழியியலார் பொருளேற்றம் semantics என்கின்றனர்.

உறைபனி பொழிந்த பின் ஊதைக் காற்று வீசிக் குளிர் நடுக்கம் தரும் யாம நேரம். அப்போது நுளம்பு பசுவைக் கடிக்கிறது. அது தலையை ஆட்டி நுளம்பை ஓட்டுகிறது. அப்போது மாட்டின் கழுத்தில் கட்டியிருந்த மணி ஒலிக்கிறது. மீண்டும் கடி. மீண்டும் தலையாட்டம். மீண்டும் மணியொலி. மணியோசை கேட்டதும் வீடில் உள்ளவர் விழித்துக்கொள்கின்றனர். இது தலைவன்-தலைவி கள்ளக்காதல் உறவுக்கு இடையூறாக உள்ளதாம்.[1]

அடிக்குறிப்பு

  1. சிறை பனி உடைந்த சேயரி மழைக் கண்
    பொறை அரு நோயொடு புலம்பு அலைக் கலங்கி,
    பிறரும் கேட்குநர் உளர்கொல்?-உறை சிறந்து,
    ஊதை தூற்றும் கூதிர் யாமத்து,
    ஆன் நுளம்பு உலம்புதொறு உளம்பும்
    நா நவில் கொடு மணி நல்கூர் குரலே. (குறுந்தொகை 86)

"https://ta.wikipedia.org/w/index.php?title=நுளம்பு&oldid=1311032" இலிருந்து மீள்விக்கப்பட்டது