ஐக்கிய நாடுகள் அவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: pa:ਸੰਯੁਕਤ ਰਾਸ਼ਟਰ
வரிசை 59: வரிசை 59:
[[af:Verenigde Nasies]]
[[af:Verenigde Nasies]]
[[als:Vereinte Nationen]]
[[als:Vereinte Nationen]]
[[am:የተባበሩት መንግስታት]]
[[am:የተባበሩት መንግሥታት ድርጅት]]
[[an:Organización d'as Nacions Unitas]]
[[an:Organización d'as Nacions Unitas]]
[[ar:الأمم المتحدة]]
[[ar:الأمم المتحدة]]

04:54, 24 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

ஐக்கிய நாடுகள் அவை

ஐக்கிய நாடுகள், அல்லது ஐநா அல்லது யூஎன், என்பது, நாடுகளைக் கொண்ட ஒரு பன்னாட்டு அமைப்பு. கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளும் இதில் உறுப்பினராக இருக்கின்றன. இது, வாஷிங்டனில் நடைபெற்ற டம்பார்ட்டன் ஓக்ஸ் மகாநாட்டைத் தொடர்ந்து அக்டோபர் 24, 1945ல், கலிபோர்னியாவிலுள்ள, சான் பிரான்சிஸ்கோவில் தொடங்கப்பட்டது. எனினும், 51 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய முதலாவது பொதுச்சபை, ஜனவரி 10 1946 இல், இலண்டனிலுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நகரின் மெதடிஸ்த மத்திய மண்டபத்தில் கூடியது. 1919 இலிருந்து 1946 வரை, இதற்கு முன்னோடியாகக் கொள்ளக்கூடிய, இதையொத்த தேசங்களின் அணி (League of Nations) என்னும் அமைப்பு இருந்து வந்தது. ஐநா அங்கத்தினர் தகுதி, ஐநா சாசனத்தில் உள்ள நிபந்தனைகளை ஏற்று, அந்நிபந்தனைகளை செயல்படுத்த முடியும் என ஐநாவினால் நம்பத்தகுந்த எல்லா 'சமாதான விரும்பி' நாடுகளுக்கும் உண்டு. பாதுகாப்புச் சபையின் பரிந்துரைப்படி, பொதுச்சபை அனுமதி பற்றித் தீர்மானம் எடுக்கிறது. செப்டெம்பர் 2010 நிலைவரப்படி, 192 உறுப்புநாடுகள் இருந்தன. சூலை 9, 2011 இல் தெற்கு சூடான் சுதந்திரம் பெற்று ஐ.நா வில் இணைந்ததுடன் தற்போது வரை 193 உறுப்பு நாடுகள் உள்ளன.

வரலாறு

தேசங்களின் அணி இரண்டாம் உலகப்போர் நடக்காமல் தடுக்கத் தவறியதால் வலிமை மிக்க ஒரு புதிய அமைப்புகளுக்கான தேவை எழுந்தது. மேலும் இரண்டாம் உலகப்போர் முடிவில் மற்றொரு உலகப்போர் நடைபெற்றுவிடக் கூடாது என மக்கள் அஞ்சத் தொடங்கினர். அவ்வாறு மீண்டும் ஒரு போர் மூண்டால் மனிதகுலம் தங்காது எனக்கருதியதால் வலிமையான ஒரு அமைப்பு தேவைப்பட்டது. ஐக்கிய நாடுகள் அல்லது ஒருங்கிணைந்த நாடுகள் என்ற வார்த்தை முன்னால் அமெரிக்க ஜனாதிபதி பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்டால் 1939 ஆம் ஆண்டு முதலில் உபயோகப்படுத்தப்பட்டது. ஐக்கிய நாடுகள் என்ற வார்த்தை 1942 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியில் அதிகரப்பூர்வமாக பயன்படுதப்பட்டது.

1943 அக்டோபரில் அமெரிக்கா சீனா, பிரித்தானியா, ரஷ்யா, ஆகிய நாடுகள் மாஸ்கோவில் ஒன்றுகூடி, உலகில் அமைதியை ஏற்படுத்த ஒரு தனி நிறுவனம் அமைகவேண்டும் என்று முடிவு செய்தனர். அதன் விளைவாக 1945 இல் நடைபெற்ற சான்பிரான்சிஸ்கோ மாநாடு நடைபெற்றது. இதில் அச்சு நாடுகளுக்கு எதிராக 50 நாடுகள் கலந்துகொண்டன. அக்டோபர் 24 ஆம் நாள் ஐக்கிய நாடுகளின் நிறுவனம் நிறுவப்பட்டது. இதற்கென சனி சாசனம் வரையப்பட்டது. அதில் நிறுவனத்தின் நோக்கம், அதில் அமைக்கப்பட்ட சபைகள், அவற்றின் செயல்கள் ஆகியனபற்றித் தெளிவாகக் கூறப்பட்டன.

நோக்கங்கள்

  • கூட்டு நடவடிக்கைகளின் மூலம் ஆக்கிரமிப்புகளை ஒடுக்குதல்;
  • பன்னாட்டுச் சட்டங்களின்படி நாடுகளுக்கிடையே ஏற்படும் தகராறுகளைத் தீர்த்து உலக அமைதியை ஏற்படுத்துதல்.
  • மக்களின் சம உரிமைகளையும் சுயநிர்ணய உரிமைகளையும் மதித்தல்
  • மனிதனின் உரிமைகளையும் அடிப்படை சுதந்திரங்களையும் காத்து, இன மொழி அல்லது சமய வேறுபாடுகளை நீக்கிப் பன்னாடுகளின் சமுதாய பொருளாதார, பண்பாட்டுப் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தல்.
  • இந்நிறுவனத்தின் உறுப்பினர்கள அனைவரும் சமமானவர்களே.
  • உறுப்பு நாடுகள் தங்களுக்கிடையே ஏற்படும் பிரச்சினைகளை உலக அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் ஆபத்து ஏற்படாத வகையில் சமாதான முறையில் தீர்த்துக் கொள்ள வேண்டும்.
  • உறுப்பு நாடுகள் எக்காரணம் கொண்டும் பிற நாட்டின் உள் விவகாரத்தில் தலையிடக் கூடாது.

ஐக்கிய நாடுகள் முறைமை

ஐக்கிய நாடுகள் முறைமை 6 முக்கிய அமைப்புகளைக் கொண்டது:

ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய அமைப்புகள்
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை
- அனித்து ஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகளினதும் ஒன்று கூடல். ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு வாக்கு. -
ஐக்கிய நாடுகள் செயலகம்
- ஐக்கிய நாடுகள் சபையின் பிரதான நிர்வாக அலகு - இதன் தலைவரே ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளராவார் -
அனைத்துலக நீதிமன்றம்
- சர்வதேச சட்டங்களுக்கான நீதிமன்றம் (based in The Hague) -
UN General Assembly hall
Headquarters of the UN in New York City
International Court of Justice
  • நாடுகளுக்கான கட்டாயமற்ற அறிவுறுத்தல்களை வழங்கல் (ஒரு பாராளுமன்றம் அல்ல)
  • ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கான புதிய உறுப்பு நாடுகளைத் தெரிவு செய்தல்
  • வரவு-செலவுத் திட்டத்தை உருவாக்கல்
  • ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கான நிரந்தரமற்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்தல், ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபைக்கான அனைத்து உறுப்பினர்களையும் தெரிவு செய்தல்,அனைத்துலக நீதிமன்றத்தின் 15 நீதிபதிகளையும் தெரிதல்.
  • மற்றைய ஐக்கிய நாடுகள் அமைப்புகளின் நிர்வாகத்தில் உதவுதல்
  • இதன் தலைவர், ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் ஐந்து வருடங்களுக்கு தெரிவு செய்யப்படுவார்
  • நியூ யோர்க்கிலுள்ள தலைமையகத்தைத் தவிர ஜெனிவா, நெயிரோபி மற்றும் வியன்னா ஆகிய இடங்களில் முக்கிய அலுவலகங்கள் உள்ளன.
  • நாடுகளிடையே உள்ள பிணக்குகளை அனைத்துலக சட்டத்தின் அடிப்படையில் தீர்த்தல்
  • இதன் 15 நீதிபதிகளும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் 9 வருடங்களுக்குத் தெரிவு செய்யப்படுவர். பெரும்பான்மையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படும்.
  • இங்கே நாடுகளிடையேயுள்ள பிணக்குகள் மாத்திரமே விசாரிக்கப்படும். (சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துடன் குழம்ப வேண்டாம்)
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை
- சர்வதேச பாதுகாப்பைக் கட்டுப்படுத்தும் அமைப்பு -
ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை
-சர்வதேச பொருளாதார மற்றும் சமூக நடவடிக்கைகளில் பங்கு கொள்ளும் -
ஐக்கிய நாடுகள் பொறுப்பாட்சி மன்றம்
- (தற்போது செயற்பாட்டில் இல்லை) -
UN security council
UN Economic and Social Council
UN Trusteeship Council
  • சர்வதேச பாதுகாப்பைத் தக்க வைக்கும் பொறுப்பை உடையது.
  • ஐக்கிய நாடுகள் அவையின் மிகவும் சக்தி வாய்ந்த அமைப்பு.
  • ஐக்கிய நாடுகள் சமாதானப் படையின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தல், கண்காணித்தல்.
  • 15 உறுப்பு நாடுகளை உடையது.
  • பொருளாதார மற்றும் சமூகத் தரங்களில் நாடுகளிடையே கூட்டுறவைப் பேணுதல்
  • நாடுகளை அபிவிருத்தி செய்வதற்காக பல்வேறு செயற்பாட்டு அங்கங்களைக் கொண்டது.
  • பல்வேறு துணை நிறுவனங்களிடையே கூட்டுறவைப் பேணல்.
  • 54 உறுப்பினர்களைக் கொண்டது.
  • இறுதியாக நமீபியா சுதந்திரம் பெற்றதுடன் செயற்பாடு அற்றுப் போயுள்ளது.
  • 1994இலிருந்து செயற்பாடற்றுள்ளது.

வெளியிணைப்புகள்

வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐக்கிய_நாடுகள்_அவை&oldid=1305645" இலிருந்து மீள்விக்கப்பட்டது