காந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: my:သံလိုက်
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: ka:მაგნიტი
வரிசை 52: வரிசை 52:
[[ja:磁石]]
[[ja:磁石]]
[[jv:Magnèt]]
[[jv:Magnèt]]
[[ka:მაგნიტი]]
[[kk:Магнит]]
[[kk:Магнит]]
[[kn:ಅಯಸ್ಕಾಂತ]]
[[kn:ಅಯಸ್ಕಾಂತ]]

01:19, 23 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

Iron filings in a magnetic field generated by a bar magnet

காந்தம் (magnet) என்பது காந்தப்புலத்தை உருவாக்க வல்ல ஒரு பொருளாகும். இந்த காந்தப்புலம் கண்ணுக்குப் புலப்படாதது. இதுவே இரும்பு போன்ற ஃபெர்ரோ காந்தப் பொருட்களை கவர்வதற்கு காரணமாகும். ஃபெர்ரோகாந்தப் பொருள் என்பது காந்தத்தால் கவரப்படக் கூடிய அதே வேளையில் தானும் காந்தமாக மாற வல்ல ஒரு பொருளாகும். இரும்பு, நிக்கல், கோபால்ட் போன்றவை ஃபெர்ரோ காந்தப் பொருட்களாகும்.

நிரந்தர காந்தம் என்பது தானாகவே காந்தப்புலத்தை உண்டாக்கவல்ல காந்தமாக்கப்பட்ட ஒரு பொருளாகும்.

தற்காலிக காந்தம் என்பது தற்காலிகமாய்க் காந்தப்புலத்தை உண்டாக்கும் அமைப்பு ஆகும். எ.கா: மின்காந்தம்

சொல் விளக்கம்

காந்தம் என்றால் தமிழில் இழுத்தல் என்று பொருள். இயற்கையில் கிடைக்கும் சில கற்கள் இரும்பை ஈர்ப்பதை, இழுப்பதை[1] மாந்தர்கள் நெடுங்காலமாக அறிந்திருந்தனர். இரும்பை ஈர்க்கும் கல்லை காந்தக்கல் என்று அழைத்தனர். சீனர்கள் இவ்வகைக் கற்களைக் கொண்டு திசையறியும் கருவியை கி.மு.200-கி.பி.200 ஆண்டுகளில் செய்திருந்தனர். இயற்கையாக சில பொருட்கள் காந்த தன்மை வாய்ந்தவை. அவற்றுள் Magnetite (Fe3O4) உலகில் இயற்கையாக காணப்படும் அதி கூடிய காந்த தன்மை கொண்ட பொருள் ஆகும்.

குறிப்பு

  1. காந்துதல் என்றால் வலித்தல் என்றும் பொருள். வலித்தல் = இழுத்தல். சூரியகாந்தி என்னும் பூ சூரியனின் ஒளியால் ஈர்கப்பட்டு கதிரவன் போகும் திசையில் திரும்பும் பூ.

மேற்கோள்கள்

  1. காந்துதல் என்றால் வலித்தல் என்றும் பொருள். வலித்தல் = இழுத்தல். சூரியகாந்தி என்னும் பூ சூரியனின் ஒளியால் ஈர்க்கப்பட்டு கதிரவன் போகும் திசையில் திரும்பும் பூ.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காந்தம்&oldid=1304909" இலிருந்து மீள்விக்கப்பட்டது