நுரையீரல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:மூச்சுத்தொகுதி சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (Robot: Modifying es:Pulmón to es:Pulmones
வரிசை 54: வரிசை 54:
[[en:Lung]]
[[en:Lung]]
[[eo:Pulmo]]
[[eo:Pulmo]]
[[es:Pulmón]]
[[es:Pulmones]]
[[et:Kopsud]]
[[et:Kopsud]]
[[eu:Birika]]
[[eu:Birika]]

12:42, 19 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

நுரையீரல்கள். நடுவே தெரியும் குழாய் மூச்சுக்குழாய், அது இரு கிளைகளாகப் பிரிந்து நுரையீரலில் உள்ள நுண்ணறைகளுக்கு உள்ளிழுக்கப்பட்ட காற்றை எடுத்துச் செல்லுகின்றன

நுரையீரல் என்பது உயிரினங்கள் மூச்சுக் காற்றை இழுத்து வெளிவிடும் முக்கிய உள்/அக உடல் உறுப்புக்களில் ஒன்றாகும். மூச்சுக் காற்றை இழுத்து விடுதலுக்கு மூச்சுவிடல் என்று பெயர். வாயுப்பரிமாற்றம் இவ்வுறுப்பின் முக்கிய பணியாகும். மேலும் சில முக்கிய வேதிப் பொருட்களை உருவாக்குவதும், வேறு சில வேதிப்பொருட்களை செயலிழக்க செய்வதும் இதன் பணியாகும். நுரையீரலானது உடலியக்கத்திற்கு ஆற்றல் தரும் ஆக்சிசனை உள் எடுத்துக்கொள்வதற்கும் காபனீரொக்சைட்டு வளிமத்தை வெளியேற்றுவதற்கும் முக்கிய உறுப்பாக செயல்படுகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 22,000 முறை மூச்சு விடும் நாம், கிட்டதட்ட 255 கன மீட்டர் (9000 கன அடி) காற்றை உள்ளிழுத்து வெளியிடுகிறோம்.

மருத்துவத்தில் பயன்படும் நுரையீரல் தொடர்பான இலத்தீன் அடிப்படைச் சொல் பல்மோ- (pulmo-) என்னும் முன்னொட்டு கொண்டிருக்கும். இது இலத்தீன் மொழிச்சொல்லாகிய பல்மொனாரியசு (pulmonarius = "நுரையீரல் தொடர்பான") என்னும் பொருளடியான சொல்லில் இருந்து பெற்றது. இன்னுமொரு பொதுவான மருத்துவக் கலைச்சொல் கிரேக்கமொழிச் சொல்லில் இருந்து பெற்ற நியுமோ- (pneumo-) என்னும் முன்னொட்டு கொண்டிருக்கும். இச்சொல் நுரையீரலைக் குறிக்கும் ப்நியுமோன் (πνεύμων) என்னும் கிரேக்கச் சொல்லில் இருந்து பெற்றது.

மூக்கின் வழியாக நாம் உள்ளிழுக்கும் காற்று, மூச்சுக்குழாய் வழியாக நுரையீரலுக்கு செல்கிறது. மூச்சுக்குழாய் மார்புப்பகுதியில் இரண்டாக பிரிந்து வலது, இடது நுரையீரல்களுக்கு செல்கிறது. வலது நுரையீரல் மூன்று பாகமாகவும் (lobes)இடது நுரையீரல் இரண்டு பிரிவாகவும் உள்ளது. இரண்டாக பிரியும் மூச்சுக் கிளைக் குழாய்கள் (பிரான்கியல் குழாய்கள்) பல நுண் கிளைகளாக பிரிந்து மில்லியன் கணக்கான நுண்காற்றறைகள் ஆகிய அல்வியோல் எனப்படும் காற்றுப்பைகளில் (நுண்வளிப்பைகளில்) முடிவுறும். அல்வியோலை எனப்படும் இவ் நுண்காற்றுப்பைகள் மிக மென்மையான தசைகளை கொண்டவை. இதில் பல நுண்ணிய இரத்தக்குழாய்கள் இருப்பதால், நுரையீரல் தமனி மூலமாக வந்த கார்பன்-டை-ஆக்சைடு நிறைந்த இரத்தத்தில் உள்ள கார்பன்-டை-ஆக்சைடை வெளியேற்றி, புதிய ஆக்சிசனை ஏற்றுக்கொண்டு, நுரையீரல் சிறைகள் மூலமாக இதயத்திற்கு செல்கிறது. இந்த நுண்வளிப்பைகளில்தான் வளிமப் பரிமாற்றம் நிகழ்கின்றது. நுண்காற்றறைகள் (ஆல்வியோலை) சுருங்கி விரிதலையும் சில நோய்களால் நுரையீரல் பாதிக்கப்படும் போது எப்படி சுருங்கி விரியும்.

பொதுவாக நுரையீரலில் சுரக்கும் சளி போன்ற நீர்மம் சில தூசிகளை அகற்றி வெளியேற்றும். காற்றுக்குழாயில் உள்ள சீலியா மேல் நோக்கி தூசுகளை கொண்ட மியுக்கசை வெளியேற்ற, நாம் அறியாமலே அவற்றை விழுங்கிவிடுகிறோம். உடல் நலம் சரியில்லாமல் போனால் மட்டுமே அவை சளியாக மூக்கின் வழியாக வெளியேறும். மூக்கினுள்ளே உள்ள மயிர் கூட தூசுகளை வடிகட்டும். இதையும் தாண்டி ஏதேனும் தூசு உள் நுழைந்தால் இருமல், தும்முதல் முதலானவற்றால் வெளியேறிவிடும்.


மூச்சு

காற்றில் உள்ள ஆக்சிசனை (ஆக்சிசன் = உயிர்வளி, பிராணவாயு) இரத்ததில் சேர்ப்பதும் இரத்ததில் உள்ள காபனீரொக்சைடை (க ரிமக்காடி வளிமம் அல்லது கரியமிலவாயு)வை பிரித்து உடலிலிருந்து வெளியேற்றுவதும் நுரையீரலின் முக்கிய பணியாகும்.

புதிர்க்கதிர்கள் மூலம் அறியப்பட்ட மாந்தரின் நுரையீரல்கள்.

மூச்சு இழுத்துவிடுதல் தவிர இதர பணிகள்

வாயுப்பறிமாற்றம் தவிர நுரையீரல் வேறு சில பணிகளையும் செய்கிறது

  • இருதயத்திற்கு இரு புறமும் பாதுகாப்பாக இருப்பது மற்றும் இதயத்தை அதிர்வுகளில் இருந்து காப்பது
  • சிரைகளில் ஏற்படும் இரத்தக் கட்டுகளை உடலின் பிற பகுதிகளுக்கு செல்லாமல் தடுப்பது
  • சில முக்கிய வேதிப் பொருட்களை உற்பத்தி செய்வது
  • வேறு சில வேதிப் பொருட்களை செயலிழக்க செய்வது

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நுரையீரல்&oldid=1302646" இலிருந்து மீள்விக்கப்பட்டது