இயந்திரத் துப்பாக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கிஅழிப்பு: sr:Аутоматско оружје
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: sr:Митраљез
வரிசை 69: வரிசை 69:
[[sk:Guľomet]]
[[sk:Guľomet]]
[[sl:Mitraljez]]
[[sl:Mitraljez]]
[[sr:Митраљез]]
[[sv:Kulspruta]]
[[sv:Kulspruta]]
[[sw:Bombomu]]
[[sw:Bombomu]]

03:21, 19 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

ஒரு .50 கலிபர் எம்2 இயந்திரத் துப்பாக்கி. சுற்றியுள்ளவை பயன்படுத்தப்பட்ட வெற்றுத் தோட்டாக்கள்: ஜான் பிரவுண் வடிவமைப்பு நீண்டகாலம் பயன்பாட்டிலுள்ள வெற்றிகரமான வடிவமைப்பு ஆகும்.

இயந்திரத் துப்பாக்கி (machine gun) முழுத் தன்னியக்கம் கொண்டதும், நிலையாகப் பொருத்தப்பட்ட அல்லது இடத்துக்கிடம் எடுத்துச் செல்லத் தக்கதுமான ஒரு சுடுகலன் ஆகும். இது துப்பாக்கிக் குண்டுகளை விரைவாக, நிமிடத்துக்குப் பலநூறு குண்டுகளை ஒன்றன்பின் ஒன்றாகச் சுடுவதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகின்றது. முதல் இயந்திரத் துப்பாக்கி சர். ஹிராம் மக்சிம் என்பவரால் 1884 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இது மக்சிம் துப்பாக்கி என அழைக்கப்பட்டது. ஐக்கிய அமெரிக்கச் சட்டங்களின்படி முழுத்தன்னியக்கம் கொண்ட சுடுகலன்களும், பொதுவான சுடுகலன்களைத் தன்னியக்கம் கொண்டவையாக மாற்றக்கூடிய உதிரிப்பாகம் அல்லது கூறுகளும் இயந்திரத் துப்பாக்கிகளாகக் கருதப்படுகின்றன.

இயந்திரத் துப்பாக்கிகள் பொதுவாக துணை இயந்திரத் துப்பாக்கிகள், இயந்திரத் துப்பாக்கிகள், தன்னியக்கப் பீரங்கிகள் என வகைப்படுத்தப்படுகின்றன. துணை இயந்திரத் துப்பாக்கிகள் கைத்துப்பாக்கிகளுக்கான குண்டுகளையும், இயந்திரத் துப்பாக்கிகள் ரைபிள் களுக்கான குண்டுகளையும் பயன்படுத்துகின்றன. இயந்திரத் துப்பாக்கிக்கும், தன்னியக்கப் பீரங்கிகளுக்கும் இடையிலான வேறுபாடு "கலிபர்" எனப் பொதுவாக அழைக்கப்படும் துப்பாக்கிக் குளாயின் உள் விட்ட அளவால் தீர்மானிக்கப்படுகிறது. தன்னியக்கப் பீரங்கிகள் 15 மில்லிமீட்டருக்கு மேற்பட்ட குளாய் உள் விட்டம் கொண்டவை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயந்திரத்_துப்பாக்கி&oldid=1302455" இலிருந்து மீள்விக்கப்பட்டது