விக்கிப்பீடியா:ஆலமரத்தடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivam29 (பேச்சு | பங்களிப்புகள்)
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 469: வரிசை 469:


[http://shop.wikimedia.org/ அட்ரா சக்க. அட்ரா சக்க. அட்ரா சக்க.]--[[பயனர்:தென்காசி சுப்பிரமணியன்|தென்காசி சுப்பிரமணியன்]] ([[பயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன்|பேச்சு]]) 11:03, 14 சனவரி 2013 (UTC)
[http://shop.wikimedia.org/ அட்ரா சக்க. அட்ரா சக்க. அட்ரா சக்க.]--[[பயனர்:தென்காசி சுப்பிரமணியன்|தென்காசி சுப்பிரமணியன்]] ([[பயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன்|பேச்சு]]) 11:03, 14 சனவரி 2013 (UTC)

== நினைவுபடுத்தல் - தமிழ் ஆவண மாநாடு - கட்டுரைப் பொழிவு அனுப்பும் திகதி அண்மித்துவிட்டது ==

[http://noolahamfoundation.org/wiki/index.php?title=%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_2013 தமிழ் ஆவண மாநாட்டுக்கான] ஆய்வுக்கட்டுரையின் பொழிவை (abstract) சமர்ப்பிப்பதற்கான திகதி நாளை (சனவரி 15, 2012) ஆகும். நன்றி. --[[பயனர்:Natkeeran|Natkeeran]] ([[பயனர் பேச்சு:Natkeeran|பேச்சு]]) 01:55, 15 சனவரி 2013 (UTC)

01:55, 15 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

இந்த வாரக் கூட்டு முயற்சியான மார்க்சியம் கட்டுரையை மேம்படுத்தி உதவுங்கள். நன்றி.
குறுக்கு வழி:
WP:VP
WP:AM
ஆலமரத்தடியின் கிளைகள்

ஆலமரத்தடி
புதிய தலைப்பு | கவனிக்க | தேடுக

ஆலமரத்தடிக்கு வருக! இங்கு விக்கிப்பீடியா குறித்த செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புதிய சிந்தனைகள், உதவிக் குறிப்புகள் போன்றவை இடம்பெறுகின்றன. நீங்களும் இப்பக்கத்தில் உங்கள் கருத்துகளைப் பிற பயனர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்தப் பக்கத்தில் இருக்கும் பழைய, முடிவடைந்த கலந்துரையாடல்கள் அவ்வப்போது இங்கிருந்து நீக்கப்பட்டு காப்பகத்தில் சேர்க்கப்பட்டு விடும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.


தொழினுட்பம்
புதிய தலைப்பு | கவனிக்க | தேடுக

இது விக்கிப்பீடியாத் தொழினுட்பம் சார்ந்த செய்திகளுக்கும் சிக்கல்களுக்குமான ஆலமரத்தடி ஆகும். விக்கி மென்பொருளிலுள்ள வழுக்களை முறையிடுவதற்கு, பக்சில்லாவைப் பயன்படுத்தவும்.

தொகுப்பு

காப்பகம் (தொகுப்புகள்)


நிலுவையில் உள்ள பணிகள்



0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17b 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83




வார்ப்புரு:ஆலமரத்தடி இடையிணைப்புகள் .

சிறப்புக் கட்டுரை - நட்சத்திரக் குறியீடு

ஆங்கில விக்கிப்பீடியாவில் சிறப்புக் கட்டுரைகள் நட்சித்திரக் குறியீடு பெற்றுள்ளன.. (இங்கு சொடுக்கிப் பார்க்கவும்) அதே போல் நமது சிறப்புக் கட்டுரைகளையும் குறியிட இயலுமா? :) --sethupathy (பேச்சு) 14:28, 28 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

தமிழிலும் சிறப்புக் கட்டுரைகள் உள்ளன. (ஏறத்தாழ 50 என நினைக்கிறேன். ஆங்கிலத்தில் 1000 கட்டுரைகள்.). கட்டுரைகளை குறியிட முடியாது. சிறப்புக் கட்டுரையாக்கக் கோரலாம். தற்போது தமிழில் சிறப்புக் கட்டுரைகள் அவ்வளவாக நடைமுறையில் இல்லை. சிறப்புக் கட்டுரை அனைத்துத் தகுதிகளையும் பெற்றிருக்க வேண்டும். - தமிழ்க்குரிசில்

சரி :) --sethupathy (பேச்சு) 15:04, 28 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

[1] என்பதனுள் தற்போதய தமிழ் விக்கிப்பீடியா சிறப்புக்கட்டுரைகள் அடங்கியுள்ளன, அக்கட்டுரைகளின் வலது மூலையில் நட்சத்திரக்குறி இருக்கும், ஒரு கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக்க விரும்பினால் முதலில் சிறப்புக்கட்டுரையாக்க பரிந்துரைக்க வேண்டும், மேலதிக தகவலிற்கு இதை வாசித்துப்பாருங்கள் விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள்--சங்கீர்த்தன் (பேச்சு) 15:38, 28 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

மீண்டும் சிறப்பு கட்டுரைப்பணியை ஆரம்பித்தால் என்ன? 50,000 கட்டுரைகளை நெருங்கும் தமிழ் விக்கியில் 10 சிறப்பு கட்டுரைகள் மட்டும் தான் உள்ளன. 1000த்துக்கு ஒன்றாவது இருந்தால் நன்றாக இருக்கும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:50, 2 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

செய்வோம். :) சிறப்புக் கட்டுரைகளாகத் தகுதி பெறும் கட்டுரைகள் பல உள்ளன. எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். கூடிய விரைவில் செய்வோம். :)

வேடிக்கை என்னவென்றால் தற்போது சிறப்புக்கட்டுரைகளாக குறிப்பிடப்பட்டுள்ள அரைவாசிக் கட்டுரைகளில் ஒரு மேற்கோளேனும் சுட்டப்படவில்லை.--சங்கீர்த்தன் (பேச்சு) 12:27, 2 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

Navigation menu

விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (தொழினுட்பம்) பக்கத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:15, 7 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

கட்டுரைகளின் தரம்

தமிழ் விக்கிக் கட்டுரைகள் தரமுயருவதற்கு உக்திகள் வகுக்கப்பட்டிருக்கின்றனவா? Particularly, owing to the collaborative editing system followed, readability of content will suffer. Is there any way of overcoming problems arising as a result of collaborative editing in use. How can we bridge the gap between stylistic differences found in the language used by collaborative editors of the Tamil wikipedia. If you have any information on the above kindly send me for reference.−முன்நிற்கும் கருத்து Musanage (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

திரு முருகையன், விக்கிப்பீடியா:சமுதாய வலைவாசல்#கையேடுகள் என்னும் பகுதியைப் பாருங்கள். இவற்றைப் பயனர்கள் பயன்படுத்தலாம். கட்டுரையின் நீளம், செறிவு, நடை, சீர்மை, பொதுவாகத் தரம் என்பன யாவுமே கூட்டாக உழைத்து நிலைநிறுத்துவது, மேம்படுத்துவது. அதற்கு ஒருபக்கச் சாய்வு இல்லாமல், நடுநிலை காத்து எழுதுதல் (விக்கித்தூண்களில் ஒன்று) போன்று பல கொள்கைகளும் பரிந்துரைகளும் உள்ளன. கட்டுரையின் தரத்தைச் செம்மைப் படுத்துவதும் உயர்த்துவதும் கூட்டாக்கப் பங்களிப்பாளர்கள் கையில்தான் இருக்கின்றன. ஒரு செய்திக்குறிப்பைத் திருத்தினாலோ, விரிவு படுத்தினாலோ, அது தரம் உயர்த்தப்படும் நோக்கில்தான். நீங்கள் கூறுவது போல "readability of content will suffer" என்று பொதுப்பட சொல்ல இயலாது என நினைக்கின்றேன். சில இடங்களில் அப்படியும் ஆகலாம், அப்பொழுது அடுத்து வருபவர்கள் சீர் செய்யலாம், செய்ய வேண்டும். மேலே உள்ள கையேடுகளும் நடையை மேம்படுத்தப் பயன்படும். விக்கிப்பீடியா:நடைக் கையேடு என்னும் பக்கத்தில் உதவக்கூடிய பல செய்திகள் உள்ளன, பார்க்கவும். இதனையும் விரிவுப்படுத்தலாம். தகவல் செறிவு முதல் நடையமைப்பு வரை அனைத்துமே கூட்டாக்க தொடர் வினையால் மேம்பட வேண்டும், மேம்படும் என்பதே விக்கிப்பீடியா போன்ற கூட்டாசிரியப் படைப்பின் அடிப்படை நம்பிக்கையும் எதிர்பார்ப்பும். மிக மிகப் பெரும்பாலும் இதுவே உண்மையாகவும் உணர்கின்றேன் (மிக மிக சில விதிவிலக்குகள் இருக்கலாம், மறுக்கவில்லை). பொதுவாக கூட்டாக்க கூட்டுத் தொகுப்பில் நேரும் பெரிய குறைபாடு நடையில் சீரின்மை. இதற்குத் தீர்வு, ஒருவரோ பலரோ சிலமுறையாவது படித்துப்பார்த்துச் சீர்மை பெருக்க வேண்டும். ஒரு கட்டுரையில் ஆக்சிசன் என இரண்டு மூன்று பத்திகள் இருந்து, பின்னர் வேறு ஒருவர் வந்து விரிவாக்கும்பொழுது ஆக்சிஜன் என்று எழுதுவதும், இன்னொருவர் வந்து அடுத்த சில பத்திகளில் ஆக்ஸிஜன் என்று எழுதுவதும் சீர்மையற்ற போக்குகள். ஒரே சீராக ஆக்சிஜன் என்றோ, ஆக்சிசன் என்றோ, ஆக்ஸிஜன் என்றோ இருத்தல் வேண்டும். இங்கு பரிந்துரைகள் ஏற்று செயல்பட வேண்டும். அறியாது செய்ய நேர்ந்தால், பின்னர் வருபவர் திருத்தி சீர்மை நாட்ட வேண்டும். இது வெறும் ஒரு சொல்லின் வடிவம். இது போக ஒருவர் செயற்பாட்டு வினைகளை அதிகம் பயன்படுத்தியிருக்கலாம், மற்றொருவர் நேர்மொழியாக (செய்மொழியாகவே) எழுதியிருக்கலாம். இங்கெல்லாம், சீர்மைப்படுத்துதல் தேவை. ஒருவரே எழுதிய கட்டுரை அல்லது நூல் என்றாலும் கூட இப்பிழைகள் அல்லது மாறுபாடுகள் வர நேரிடலாம் (கூட்டாக்கத்தால் மட்டுமே வர வேண்டும் என்றில்லை). எப்படி ஒரு தொகுப்பாசிரியர் (editor) சீரொழுக்கம் கூட்டுவாரோ, அதே போல நாமும் செய்ய வேண்டும். --செல்வா (பேச்சு) 19:03, 7 சனவரி 2013 (UTC)[பதிலளி]

கட்டுரையின் தரத்தைச் செம்மைப் படுத்துவதும் உயர்த்துவதும் கூட்டாக்கப் பங்களிப்பாளர்கள் கையில்தான் இருக்கின்றன. என்பது நல்லது. ஆனால் இந்த செம்மைப் படுத்தவதிலும் உயர்த்துவதிலும் உங்களுடைய கூட்டாக்கப் பங்களிப்பு எத்தகையது என்பதை நான் அறிய விளைகிறேன்.

பொதுவாக கூட்டாக்க கூட்டுத் தொகுப்பில் நேரும் பெரிய குறைபாடு நடையில் சீரின்மை. நடையில் சீரின்மை என குறிப்பிடும் நீங்கள் உங்களின் நடைக்கு உகந்தவாறு நடை இருப்பதே சீரான நடை என்பது போல் பல இடங்களில் பேசி இருப்பதை நான் காண்கிறேன். நீங்கள் உங்கள் கொள்கைகளை வலிந்து மற்றவர் மீது திணிப்பது சரியா எனவும் கேட்டறிய விளைகிறேன்.

ஒருவரோ பலரோ சிலமுறையாவது படித்துப்பார்த்துச் சீர்மை பெருக்க வேண்டும். இதனை நீங்கள் செய்கிறீர்களா? ஒரு நாளைக்கு எத்தனை முறை? நீங்கள் செய்யாமல் மற்றவர்களை அப்படி செய்ய வேண்டும் இப்படி செய்ய வேண்டும் என்பது ஒரு அதிகாரி தனது கீழ் வேலை செய்யும் தொழிலாளிகளின் மீது அதிகாரம் செய்வது போன்று உள்ளது.

எப்படி ஒரு தொகுப்பாசிரியர் (editor) சீரொழுக்கம் கூட்டுவாரோ, அதே போல நாமும் செய்ய வேண்டும். நாமும் செய்ய வேண்டும் என்கிறீர்கள் நீங்கள் செய்துவருகிறீர்களா? நீங்கள் செய்யாமல் மற்றவர்களை செய்ய வேண்டும் என்பது நீங்கள் ஒரு ஆசிரியராகவும் மற்றவர்கள் மாணவர்களாகவும் உங்கள் சொல் கேட்டு நடக்கவேண்டும் என்பது போது போன்ற கடுமையான அதிகாரம் தெரிகிறது. இது நல்லதா? இதனை இங்கே உள்ள எல்லோரும் ஏற்கிறார்களா? இங்கே பலர் கருத்துக்கந்தசாமிகளாகவும், கட்டப் பஞ்சாயத்து தலைவர்களாகவும் தகவமைத்துக்கொண்டுள்ளதையும் பார்க்க முடிகிறது. இது போன்ற அதிகார அலப்பறைகளினால் தமிழுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்று வரும் பலர் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விடுவது உங்களுக்கு தெரியுமா? எனவும் கேட்டறிய விளைகிறேன். வணக்கம்.--சாட்டை (பேச்சு) 08:16, 8 சனவரி 2013 (UTC)[பதிலளி]

சாட்டை, புதிய பயனர் ஒருவரின் ஐயத்துக்குச் செல்வா பொதுப்படவே விளக்கமளித்துள்ளார். இதே விளக்கம் எல்லா விக்கிப்பீடியாக்களுக்கும் பொருந்தும். செல்வாவின் பங்களிப்புகளை அவரது பயனர் பக்கத்தில் காணலாம். உரையாடலுக்குத் தொடர்பில்லாத தனியாள் தாக்குதலில் ஈடுபடாமல் வளர்முக பங்களிப்புகளை நல்க வேண்டுகிறேன். தங்களிடம் இருந்து இதே போக்கு தொடருமானால் தங்கள் பயனர் கணக்கைத் தடை செய்ய வேண்டி வரும். நன்றி.--இரவி (பேச்சு) 12:30, 8 சனவரி 2013 (UTC) :👍 விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:13, 9 சனவரி 2013 (UTC)[பதிலளி]

பயனர் சாட்டை, என்னுடைய பங்களிப்புகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் மேலே இரவி சொன்னது போல பார்க்கலாமே. பல கட்டுரைகளைப் படித்து தகவல் சேர்ப்பது, படம் சேர்ப்பது, தகவல் பிழை திருத்துவது, உரை திருத்துவது, கணிதச் சமன்பாடு சேர்த்தல் போன்ற பற்பல பணிகளை எனக்கு நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் நான் செய்து வருகின்றேன். ஆனால் புதிதாகச் சேர்ந்துள்ள பயனர் Musanage மேலே கேட்ட கேள்விக்கு நான் எனக்குத் தெரிந்த மறுமொழியை இட்டுள்ளேன். அவ்வளவுதான். நீங்கள் என் கூற்றுகளைப் பிறழ உணர்ந்து தனிமாந்தக் காய்தல் காட்டுவதாகத் தோன்றுகின்றது. --செல்வா (பேச்சு) 15:01, 8 சனவரி 2013 (UTC)[பதிலளி]

இந்தி விக்சனரியில் தமிழ்ச் சொற்கள்

இந்தி விக்சனரியில் பல சொற்கள் புரியாதவாறு உள்ளன. இவை தமிழ் எழுத்துகளைக் கொண்டு எழுதப்பட்ட மந்திரங்கள் என்று நினைக்கிறேன். என்ன பிழை என்று யாராவது பாருங்களேன். குப்பையாய் இருந்தால் நீக்கக் கோரலாம். --தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:55, 11 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

இவை தானியங்கியால் உருவாக்கப்பட்டுள்ளன. குப்பை தான். நீக்குமாறு கோரலாம்.--Kanags \உரையாடுக 10:34, 11 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

எஸ்.ஆர்.எம் பல்கலையில் 17 அன்று பட்டறை

தமிழ் விக்கி மின் குழுமம், மற்றும் [சென்னை விக்கி மின் குழுமம் ஆகியவற்றில் வந்த மின்னஞ்சல்கள் உங்கள் பார்வைக்கு. வருகிற 17ம் தேதி அன்று சென்னை எஸ்ஆர்எம் பல்கலையில் விக்கிமீடியாவைச் சேர்ந்த நூபூர் ராவல் விக்கி பட்டறைக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். இன்னொரு மின்னஞ்சல்: டிங்கி காய்ச்சல் பற்றிய கட்டுரைக்கு அழைப்பு. நன்றி -- மாகிர் (பேச்சு) 15:07, 13 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா குறித்து தமிழ்நாடு அரசு செயலாளர் பேச்சு

16-12-2012 அன்று சென்னையில் நடைபெற்ற கணித்தமிழ் வளர்ச்சி மாநாட்டிற்குத் தலைமையேற்றுப் பேசிய தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் செயலாளர் முனைவர் மூ. இராசாராம் இ.ஆ.ப அவர்கள் கணினித் தமிழ் குறித்துப் பேசும்பொழுது, உலக இணையதள பயன்பாட்டில், "விக்கிபீடியா" தமிழுக்கு தனி இடத்தைப் பெற்றுத் தந்துள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் பேசிய செய்தியின் கடைசிப் பகுதி மட்டும் இங்கு பார்வைக்காக...

”கணினி தமிழ் வளர்ச்சிக்கு, அரசு மட்டுமே செயல்பட வேண்டும் என இருக்கக் கூடாது. தமிழ் மொழியில் ஆர்வம் உள்ள எவரும் முன்வரலாம். ஆன்மிகம், இலக்கியம், அறிவியல், தொழிற்நுட்பம், கல்வி என, 25 ஆயிரத்துக்கும் அதிகமான தலைப்புகளில் தமிழ் வலைப்பூக்கள், தனியாரால் உருவாக்கப்பட்டுள்ளன.

"விக்கிபீடியா" உலக இணையதள பயன்பாட்டில், தமிழுக்கு தனி இடத்தைப் பெற்றுத் தந்துள்ளது. உலகில் உள்ள 285 மொழிகளில், "விக்கிபீடியா' உள்ளது. இதில், இந்திய மொழிகளான இந்திக்கு 40வது இடமும், தெலுங்குக்கு 60வது இடமும், தமிழுக்கு 61வது இடமும் கிடைத்து உள்ளது.இந்திய மொழிகளுக்குள்,தமிழ் விக்கிபீடியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், தமிழில் சிறந்த நூல்களுள் ஒன்றாக, தமிழ் விக்கிப்பீடியா நூலுக்கும் பரிசளிக்கப்பட்டு உள்ளது.” என்று பேசினார். (பார்க்க: தினமலர் செய்தி)

தமிழ் விக்கிப்பீடியா குறித்தும், நான் எழுதிய “தமிழ் விக்கிப்பீடியா” நூலுக்குப் பரிசளிக்கப்பட்டது குறித்தும் பேசிய அரசுச் செயலாளர் அவர்களுக்கு நன்றி.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 09:14, 17 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

தகவலுக்கு நன்றி தேனி.--Kanags \உரையாடுக 10:15, 17 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி தேனி சுப்பிரமணி. அரசுச் செயலாளர் தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றியும் தமிழ் விக்சனரியைப் பற்றியும் விரிவாகவும் பெருமையாகவும் தன் பேச்சில் குறிப்பிட்டார். தேனி சுப்பிரமணி எழுதிய நூலுக்கு அரசு பரிசளித்ததைப் பற்றியும் குறிப்பிட்டார். மயூரநாதன் அவர்கள் தமிழ் விக்கிப்பீடியாவைத் தொடக்கியதையும் தெளிவாகக் குறிப்பிட்டார் ("இலங்கையில் பிறந்து வளைகுடா நாடான அபுதாபியில் கட்டிடப் பொறியாளராகப் பணியாற்றி வரும் இ. மயூரநாதன் என்பவர் 2003 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கான முதற்பக்கத்தை உருவாக்கினார்."). திசம்பர் 16, 2012 அன்று இலயோலா கல்லூரில் நிகழ்ந்த கணினித்தமிழ் வளர்ச்சி மாநாட்டில் தமிழக அரசுச் செயலாளர் முனைவர் மூ.இராசாராம் அவர்கள், இம்மாநாட்டைத் திட்டமிட்டு நடத்திய பேராசிரியர் தெய்வசுந்தரம் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்திப் பெருமை செய்த காட்சி அருகே காட்டப்பட்டுள்ளது.

தமிழக அரசுச் செயலாளர் முனைவர் மூ.இராசாராம் அவர்கள், இம்மாநாட்டைத் திட்டமிட்டு நடத்திய பேராசிரியர் தெய்வசுந்தரம் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்திப் பெருமை செய்த காட்சி

இந்நிகழ்ச்சியில் நேரில் கலந்துகொள்ளும் நல்வாய்ப்பைப் பெற்றேன். --செல்வா (பேச்சு) 10:33, 17 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் -- சுந்தர் \பேச்சு 12:58, 18 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் --தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:18, 18 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

50,000 கட்டுரைகள்

50,000மாவது கட்டுரையாக பெ. மாதையன் கட்டுரையை எழுதிய தேனி சுப்பிரமணிக்கு வாழ்த்துகள் :) எப்படியும் நான் தான் போட வேண்டும் என்று கட்டுரையை எழுதி வைத்துக் கொண்டு விடிய விடிய காத்திருந்ததில் தூங்கிப் போய் விட்டேன் :)--இரவி (பேச்சு) 05:20, 18 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

//எழுதி வைத்துக் கொண்டு விடிய விடிய காத்திருந்ததில் தூங்கிப் போய் விட்டேன்// அப்படியா...இரவி?! அதனை அப்படியே 1,00,000 கட்டுரையாக போடுவதற்கு தயார் நிலையில் வைத்துக்கொள்ளுங்கள். :) --HK Arun (பேச்சு) 11:03, 18 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

1,00,000ஆவது கட்டுரையை எழுத முன்பதிவு செய்த தேனியார் அதை வாபஸ் பெற வேண்டும். இல்லையேல் உண்ணாவிர்ஃஅதம் தான். :)- --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:53, 18 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:19, 18 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]
மற்றொரு மைல்கல்லில் நாம்.......--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:57, 18 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--Anton (பேச்சு) 07:24, 18 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:19, 18 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]
ஆங்கில விக்கிபீடியாவின் முதல் பக்கத்தில் மொழிவாரி பட்டியலில்
More than 50,000 articles: български · eesti · Ελληνικά · English (simple) · euskara · galego · עברית · hrvatski · norsk (nynorsk)‎ · slovenščina · srpskohrvatski / српскохрватски · ไทย
தமிழ் இடம்பெறுவது எப்போது? --ஸ்ரீதர் (பேச்சு) 07:50, 18 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]
அருமையான செய்தி. :) ஆங்கில விக்கியின் முதல் பக்கத்தில் 50,000+ வரிசையில் தமிழை இணைத்துள்ளேன். -- சுந்தர் \பேச்சு 09:28, 18 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]
நன்றி சுந்தர்! --செல்வா (பேச்சு) 10:46, 18 திசம்பர் 2012 (UTC) 👍 விருப்பம்--HK Arun (பேச்சு) 11:06, 18 திசம்பர் 2012 (UTC)👍 விருப்பம்--சங்கீர்த்தன் (பேச்சு) 04:00, 24 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]
அனைவருக்கும் எனது வாழ்த்துகளும் மகிழ்ச்சியும்.--Kanags \உரையாடுக 10:21, 18 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் எனதும்!!--தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:19, 18 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் --அஸ்வின் (பேச்சு) 15:30, 18 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]
அடடா!!!! வட போச்சே......?  :) (ஒரு வாரமாகவே இணையக் கோளாறு இல்லையென்றால் நான் தான்..... தயாராக இருந்தேன்)-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:12, 18 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

ஐம்பதாயிரம் கட்டுரைகள் என்பது மிக்க மகிழ்ச்சியானதுதான் (பிரியாணி போடலாம்). இனி நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தைக் கூட்டுவதைப் பற்றி ஆராய்ந்தாக வேண்டும். விக்கியில் எத்தனையோ கட்டுரைகளை மிகச் சிறப்பாக ஆக்க வேண்டுமென்ற எண்ணம் என்னுள்ளும் இருந்து கொண்டே இருந்தாலும், வேலைப் பளு எங்கே விட்டது? இங்கே ஜகார்த்தாவில் எல்லோரும் உறக்கத்திலிருக்கும் வேளையில், தன்னந்தனியாக வேலை செய்து கொண்டிருக்கிறேன். எனினும் இடையிடையே விக்கிப்பீடியாவையும் எட்டிப் பார்க்கிறேன். பாரவதிஸ்ரீ, நீங்கள் வடை போச்சே என்கிறீர்கள். நான் இங்கே வடை எங்கு கிடைக்குமெனத் தேடுகிறேன்.--பாஹிம் (பேச்சு) 16:29, 18 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பீடியா அரை இலட்சம் கட்டுரைகளைக் கடந்து முன்னேறிச் செல்வதைக்காண மகிழ்ச்சியாக உள்ளது. இதில் பங்களித்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். அடுத்த 50,000 கட்டுரைகளை மிகக் குறுகிய காலத்தில் எட்டுவதற்கு உழைப்போமாக. ---மயூரநாதன் (பேச்சு) 18:31, 18 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--Nan (பேச்சு) 18:52, 18 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்----மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:57, 19 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]
வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். ஒரு முக்கிய மைல்கல். ஒடியல் கூழ் காச்சலாம், வாங்கோ. --Natkeeran (பேச்சு) 01:14, 19 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--சிவம் 00:16, 24 திசம்பர் 2012 (UTC)

மிக்க மகிழ்ச்சி! அனைவருக்கும் வாழ்த்துகள்! --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 02:12, 19 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

வாழ்த்துகள்! நானும் மீண்டும் வந்து விட்டேன்... --மதனாகரன் (பேச்சு) 06:49, 20 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

அதிகம் எழுதப்படும் கட்டுரைகள் பகுப்பில் மாதிரி கட்டுரைகளை உருவாக்குவதன் மூலம் தரத்தைக் கூட்டலாம்

இங்கு அவ்வப்போது கட்டுரைகளின் தரம் குறித்து விவாதிக்கப்பட்டு கிடப்பில் போடப்படுகிறது. அதை பற்றிய பேச்சில தொடர்ச்சி இல்லை. தரத்தைக்கூட்டுவது என்றால் எப்படி அதை எளிதாக்குவது என்பதையும் தெளிவாக அறிய வேண்டுமல்லவா. அதற்கான மாதிரிக்கட்டுரைகளை உருவாக்கினால் என்ன?

உதாரணத்திற்கு திரைப்படங்கள் பற்றியும் நடிகர்கள் பற்றியும் ஊர் பற்றியும் அதிக கட்டுரைகள் வரும் என நினைக்கிறேன். ஆனால் அதற்கான தரவு தளங்கள் எல்லாம் ஒரே கட்டுரையில் வருமாறு உருவாக்கினால் பின்னர் அதைப்போன்று வேறு கட்டுரைளுக்கான தரவுகளை புதியவரும் எளிதாக பெற முடியும். தமிழ் நாட்டு ஊர் பற்றிய கட்டுரைகள் என்றால் தமிழக அரசின் தலங்களில் அதை மாவட்டம், வட்டம், கிராமம் வாரியாக கொடுத்திருப்பார்கள் அது போன்ற தளங்களை மேற்கோள்களாக அம்மாதிரி கட்டுரைகளில் இடலாம். அதைப்பார்ப்பவர் அவருடைய ஊருக்கு அதே தரவுகளை அத்தளங்கள் மூலம் பெற வழி வகுக்கும். வேறு எந்தெந்த பகுப்பில் அதிக கட்டுரைகல் உருவாக வாய்புளதோ அதில் ஒவ்வொன்றிலும் மாதிரி கட்டுரைகளை உருவாக்க வேண்டும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 04:35, 19 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--ஸ்ரீதர் (பேச்சு) 10:32, 19 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--பாஹிம் (பேச்சு) 11:50, 19 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

ஓர் ஐயம்!

அன்பார்ந்த நண்பர்களே! வணக்கம்! வெகுநாட்களுக்குப் பிறகு வந்திருக்கிறேன். ஓர் ஐயத்துடன். இங்கே, விக்கிப்பீடியாவின் கட்டுரைகளிலும், விக்கி பொது ஊடகத்திலும் உள்ள படங்கள் முதலான கோப்புகள் காப்புரிமைக்கு அப்பாற்பட்டவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே, இவற்றை எப்படி வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாமா? காப்புரிமையற்ற கோப்புகள், குனு தளையற்ற ஆவணத் திட்டத்தின் கீழ் வரும் கோப்புகள் ஆகியவற்றை விக்கிப்பீடியாவிற்கு வெளியே வணிக ரீதியாகப் பயன்படுத்திக் கொள்ளலாமா? --இ.பு.ஞானப்பிரகாசன் (பேச்சு) 10:12, 19 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா உள்ளடக்கங்கள் போன்று, விக்கி பொது ஊடகத்தில் உள்ள அனைத்து படிமங்களும் வெளியில் பயன்படுத்தக் கூடியவை அல்ல. அவற்றில் பயன்படுத்தக் கூடியவையும் முடியாதவையும் உள்ளன. ஒவ்வொரு படிமங்களிலும் இடப்பட்டிருக்கும் காப்புரிமை வார்ப்புருக்களை பார்க்கவும். விக்கி பொது ஊடகக் காப்புரிமைக்கும், விக்கிப்பீடியாவின் காப்புரிமைக்கும் இடையில் வேறுபாடுகள் உண்டு. குறிப்பாக விக்கிப்பீடியாவில் பயன்படுத்தப்படும் நியாயப் பயன்பாட்டு படிமங்களை விக்கி பொது ஊடகத்தில் பதிவேற்றவும் முடியாது; வேறு எங்கும் பயன்படுத்தவும் இயலாது. நன்றி!--HK Arun (பேச்சு) 10:16, 19 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]
மிகப்பெரும்பாலான படங்களையும், எழுத்துகளையும் பிறவற்றையும் வணிக நோக்கிலும் பயன்படுத்தலாம், ஆனால் உரிமம் கூறும்படி பின்பற்ற வேண்டும். அட்ரிபியூசன் என்னும் படைப்பாளியின் அல்லது நிறுவனத்தின் பெயர் குறிப்பிடல் பலவற்றுக்குத்தேவைப் படலாம் (பெயர் குறிப்பீட்டுவிட்டால் பயன்படுத்தலாம், ஆனால் காப்புரிமக்கட்டணம் ஏதும் தேவை இல்லை). சில படைப்புகளை ஏதும் மாற்றம் செய்யாமல் பயன்படுத்த வேண்டும் என்றோ வெவ்வேறு வகையான கட்டுப்பாடுகளோ இருக்கலாம். ஆனால் அவற்றை முறைப்படி பின்பற்றி வணிக நோக்கிலும் (விற்பனை) காப்புரிமக் கட்டணம் (இராயல்ட்டி) ஏதும் கட்டாமல் பயன்படுத்தலாம்.--செல்வா (பேச்சு) 15:36, 19 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]
ஆம்! விக்கிப் பொது ஊடகத்தில் நியாயப் பயன்பாட்டு படிமங்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதால் செல்வாவின் விளக்கத்திற்கு ஏற்ப பயன்படுத்தலாம். மேலும் "வணிக நோக்கற்ற பயன்பாட்டிற்கு மட்டும்", "விக்கிப்பீடியா பயன்பாட்டிற்கு மட்டும்" போன்ற நியாயப் பயன்பாட்டு படிமங்கள் பற்றிய விளக்கங்களை இங்கே பார்த்து அறிந்துக்கொள்ளலாம்: Non-Free, Non-Free Content, Non Free Content Criteria.--HK Arun (பேச்சு) 18:36, 19 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]
மிக்க நன்றி நண்பர்களே! உங்கள் வழிகாட்டுதல்படியே நடக்கிறேன்.

--இ.பு.ஞானப்பிரகாசன் (பேச்சு) 08:47, 20 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

தமிழ் இனி...

தமிழர் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு குரும்படம்: தமிழ் இனி...--HK Arun (பேச்சு) 10:24, 19 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

சிறப்பாக இருந்தது.

புலம்பெயர்ந்தோரின் நிலை என்னவோ! :-( −முன்நிற்கும் கருத்து 101.220.39.171 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

புறநானூறு - பன்னாட்டு மாநாடு

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை மற்றும் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம் ஆகியவை இணைந்து ”புறநானூறு” எனும் தலைப்பில் பன்னாட்டு மாநாடு ஒன்றை நடத்தவுள்ளது. இந்த மாநாடு வாசிங்டன் வட்டாரத்தில் ஆகஸ்ட் 31 2013 தொடங்கி செப்டம்பர் 2 2013 வரை நடக்கவுள்ளது. புறநானூறு குறித்த கட்டுரைப் போட்டிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்கு... பார்க்கலாம்]--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 12:11, 23 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]


நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள்

அனைத்து விக்கி உறவுகளுக்கும் எனது இதயம் கனிந்து நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள்.−முன்நிற்கும் கருத்து Sivam29 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

இனிய நல்வாழ்த்துகள்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 03:14, 25 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]
அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான நத்தார், புத்தாண்டு வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 03:20, 25 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

அனைவருக்கும் நத்தார்ப் பண்டிகை வாழ்த்துகள்! --மதனாகரன் (பேச்சு) 03:24, 25 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

நத்தார் வாழ்த்துக்கள். விடுமுறைகள் வாழ்த்துக்கள். --Natkeeran (பேச்சு) 04:30, 25 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]
அனைவருக்கும் இனிய நத்தார்ப் பண்டிகை நல்வாழ்த்துகள்!--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 06:57, 25 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

காலம்/ஆண்டு, இடம்/நாடு, வகை/துறை வாரியாகப் பிரிக்கப்பட வேண்டியவை (தமிழ், தமிழர்)

எடுத்துக்காட்டுக்குப் பார்க்க: en:2012, en:Category:2012 works. தமிழ் விக்கியில் தமிழ்ப் படைப்புகளுக்குச் சிறப்புக் கவனம் தரலாம். --Natkeeran (பேச்சு) 03:25, 25 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 03:58, 25 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்
மேலும்
பகுப்பு:தமிழ் நபர்கள்
பகுப்பு:தமிழ் எழுத்தாளர்கள்

--ஸ்ரீதர் (பேச்சு) 05:06, 25 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

இலங்கை வரலாறு

பார்க்க: பேச்சு:முதலாம் விஜயபாகு --மதனாகரன் (பேச்சு) 11:16, 25 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியாவில் எழுதலாம் வாங்க

விக்கிப்பீடியாவில் பங்களிப்பது குறித்து தமிழ் கம்ப்யூட்டர் இதழில் நான் எழுதும் தொடர் கட்டுரை “விக்கிப்பீடியாவில் எழுதலாம் வாங்க” எனும் தலைப்பில் வெளியாகிறது. தமிழ் கம்ப்யூட்டர் ஜனவரி 1 - 15, 2013 இதழில் முதல் பகுதி வெளியாகியுள்ளது. --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 07:39, 2 சனவரி 2013 (UTC)[பதிலளி]

பல ஊடகங்களில் ஊடுருவி விக்கி பரப்புரை செய்யும் தேனியாருக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:24, 2 சனவரி 2013 (UTC)[பதிலளி]

அயல்நாட்டுத் தமிழ் இலக்கியங்கள் - தேசியக் கருத்தரங்கம்

தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலான உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சிறப்புமிக்க தமிழ் உயராய்வு மையமாகச் செயல்பட்டு வருகின்றது. இந்நிறுவனத்தில் அயல்நாட்டுத் தமிழர் புலம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வரும் தமிழர்களைப் பற்றிய முழுமையான தகவல்களைச் சேகரித்துப் பராமரிப்பதும் அவர்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளுதலும் இப்புலத்தின் முக்கிய நோக்கங்களாக இருக்கின்றன. இந்நிறுவனப் பணிகளின் தொடர்ச்சியாக இப்புலம் “அயல்நாட்டுத் தமிழ் இலக்கியங்கள்” எனும் பொருண்மையில் இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கினை 2013 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 14, 15 ஆகிய நாட்களில் நடத்தத் திட்டமிட்டுள்ளது. தேசியக் கருத்தரங்கத் தொடக்கவிழா மற்றும் நிறைவு விழா உள்ளிட்டு 6 அமர்வுகளாக நடத்தப்படும் இக்கருத்தரங்கின் கட்டுரைகள் தொகுப்பாக இந்நிறுவன வெளியீடாகக் கருத்தரங்க நாளன்று வெளியிடப்பட உள்ளது. கீழ்க்காணும் ஏதாவது ஒரு பொருண்மையில் இக்கருத்தரங்கில் அளிக்கப் பெறும் ஆய்வுக் கட்டுரைகளை அமைத்து வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

  • அயலகத் தமிழரும் தமிழ் இலக்கியப் படைப்புகளும்
  • அயல்நாட்டுத் தமிழ்ப் படைப்பாளிகள்
  • அயலகத் தமிழ் இலக்கிய வரலாறு
  • அயலகத் தமிழ் இலக்கியமும் சமூகமும்
  • அயலகத் தமிழர்களின் இணையதள இலக்கியப் படைப்புகள்
  • அயலகத் தமிழ் இலக்கியங்களில் மொழிநடை
  • அயலகத் தமிழர் படைப்பிலக்கியங்களின் பரவலாக்கமும் மொழிபெயர்ப்பும்

இத்தேசியக் கருத்தரங்கிற்கான கட்டுரைகள் அனுப்ப விரும்புபவர்கள் அயல்நாட்டுத் தமிழ் இலக்கியங்கள் - தேசியக் கருத்தரங்கம் பக்கத்தைப் பார்வையிடலாம். --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 16:47, 5 சனவரி 2013 (UTC)[பதிலளி]

இக்குறித்த தகவல்கள் அனைத்தும் அயல்நாட்டுத் தமிழ் இலக்கியங்கள் - தேசியக் கருத்தரங்கம் பக்கத்தில் இருந்து பிரதியாக்கம் செய்யப்பட்டவை

/உரையாடுக

விருபா, நீங்கள் தந்துள்ள இணைப்பையே தேனியாரும் தந்துள்ளார். இதில் என்ன தவறு கண்டீர்கள் ஐயா.--Kanags \உரையாடுக

பெரும்பாலும் தேனியார் வரிக்கு வரி அக்குறிப்பிட்ட இணைய முகவரியில் உள்ளவற்றை அப்படியே எடுத்துள்ளார் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்பினேன். .--viruba \உரையாடுக

பொதுவாக இவ்வாறான தகவல்களைத் தரும் போது வெறும் இணைப்பாக இல்லாமல் அதில் உள்ள தகவலையும் தந்தாலேயே சிறப்பாக இருக்கும். பலர் வெறும் இணைப்பைத் தேடிப் போவதில்லை. அந்த விளம்பரம் பதிப்புரிமை கொண்டதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. மேலும், இத்தகவல் தமிழ் விக்கிப்பீடியாவில் தனிக்கட்டுரையாகத் தரப்படவில்லை என்பதையும் கவனியுங்கள். நூலகத்தின் ஆவண மாநாடு பற்றிய தகவலும் ஆலமரத்தடியில் எழுதப்பட்டுள்ளது. இது பொதுவாக இணையத்தில் நடைமுறையில் உள்ள ஒன்று தான்.--Kanags \உரையாடுக 11:36, 8 சனவரி 2013 (UTC)[பதிலளி]
இவ்வாறு தகவல் தந்தது தவறா என்பது குறித்து முனைவர் கு. சிதம்பரம் அவர்கள் கருத்துத் தெரிவித்தால் நல்லது.--Kanags \உரையாடுக 11:40, 8 சனவரி 2013 (UTC)[பதிலளி]
கருத்தரங்க அறிவிப்பை அப்படியே பிரதி செய்யாமல் என் போக்கில் மாற்றி எழுத வேண்டும் என்று விருபா விரும்புகிறாரோ என்னவோ...? அப்படிச் செய்தால் அதை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஏற்றுக் கொள்ளுமா? விருபாவின் கருத்துக்கள் ஏதோ விருப்பமில்லாக் கருத்துக்களாக உள்ளன...--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 11:41, 8 சனவரி 2013 (UTC)[பதிலளி]
விக்கிப்பீடியாவின் ஆலமரத்தடியில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டது குறித்த மின்னஞ்சல் 5 சனவரி 2013 அன்றே நண்பர் முனைவர் கு. சிதம்பரம் அவர்களுக்கு அனுப்பப்பட்டு விட்டது. அவரும் எனக்கு நன்றி தெரிவித்து விட்டார். இதில் தவறு ஏதுமிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் கருத்தரங்கிற்கு விக்கிப்பீடியா வழியிலான ஒரு சிறு பரப்புரை அவ்வளவுதான். இதில் தவறு ஏதுமிருக்கிறது என்று விருபா கருதுவாரேயானால் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் நண்பர் முனைவர் கோ. விசயராகவன் அவர்களிடம் நான் நேரிலோ/தொலைபேசி வழியாகவோ பேசிக் கொள்கிறேன். விருபாவிற்கு எந்தக் கவலையும் வேண்டாம்...--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 14:29, 8 சனவரி 2013 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிபிடியாவிற்கு தேவையான கருவிகள்

IIT சென்னையில் மீடியாவிக்கி நிரல் திருவிழா நடைபெறுகிறது. தமிழ் விக்கிபிடியாவிற்கு தேவையான கருவிகள், gadgets போன்றவற்றை வரிசைப்படுத்தினால், அவற்றை செய்ய முயலுவேன். --Tshrinivasan (பேச்சு) 11:58, 6 சனவரி 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்

வாழ்த்துக்களும் நன்றிகளும் சீனிவாசன்! தேவையான பட்டியலைத் தயாரிப்போம் தேடும் பணிக்குச் செல்கிறேன். :) இது பற்றிய செய்தியை, இணையதளத்தைத் தந்தால் அதையும் கட்டுரை வடிவில் எழுதலாம், --தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:47, 6 சனவரி 2013 (UTC)[பதிலளி]

சீனி, மீடியாவிக்கியின் math நீட்சியில் ஒருங்குறி ஏற்பு இல்லை. யுவராஜ் பாண்டியனிடமும் இது பற்றி சொல்லியிருக்கிறேன். நீங்களும் கொஞ்சம் கவனியுங்களேன்.--சோடாபாட்டில்உரையாடுக 14:24, 6 சனவரி 2013 (UTC)[பதிலளி]
இதனை நானும் பலமுறை சொல்லியுள்ளேன். இது மிக மிகத் தேவையான ஒரு வசதி. சீனி இதற்கான உதவி செய்தால் நன்றாக இருக்கும். கணிதச் சமன்பாடுகள் கோவைகளில் உரோமன் (இலத்தீன்), கிரேக்கம், சில எபிரேய எழுத்துகள், குறியீடுகள் இருப்பது போன்று தமிழ் எழுத்துகள் அனைத்தையும் இட்டு எழுதுமாறும் செய்தல் மிகவும் தேவையானது. அண்மையில் மாத்திசியாக்ஃசு (http://www.mathjax.org/) என்னும் மென்கலம் வழியாக வலைத்தளங்களிலே எளிதாக கணிதக் குறியீடுகளை இட வசதியாக உருவாக்கி இருக்கின்றார்கள். இதனை நான் இன்னும் செய்தேர்வு செய்து பார்க்கவில்லை. --செல்வா (பேச்சு) 15:00, 6 சனவரி 2013 (UTC)[பதிலளி]
வார்ப்புருக்களில் இருந்து தரவுகளை extract செய்வதற்கு சீரான செயலிகள் இருந்தால் நன்று. எ.கா வார்ப்புரு:சஞ்சிகை தகவல் சட்டம் என்ற வார்ப்புருவைப் பயன்படுத்தும் அனைத்து பக்கங்களில் இருந்தும் தரவுகளை எடுத்து ஒரு csv கோப்பாகத் தந்தால் உதவியாக இருக்கும். சுந்தர் போன்றவர்களிடம் ஏற்கனவே இதற்கான நிரல் துண்டுகள் (scripts) உண்டு, ஆனால் ஒரு அடிப்படை இடைமுகம் உதவியாக இருக்கும். --Natkeeran (பேச்சு) 17:16, 6 சனவரி 2013 (UTC)[பதிலளி]

2012 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டறிக்கை

ஆண்டுதோறும் தமிழ் விக்கிப்பீடியா ஆண்டறிக்கை தயாரித்து வந்த நக்கீரன் இந்த 2012 ஆம் ஆண்டுக்கான தமிழ் விக்கிப்பீடியா ஆண்டறிக்கையைப் புதிதாக யாராவது தயாரிக்கட்டும் என்று சொல்லிச் சிலரைப் பரிந்துரையும் செய்திருந்தார். ஆனால், இதுவரை 2012 ஆம் ஆண்டுக்கான தமிழ் விக்கிப்பீடியா ஆண்டறிக்கையைக் காணவில்லை. யாராவது 2012 ஆண்டறிக்கையைக் கண்டுபிடித்து விக்கிப்பீடியாவில் சேர்த்து விடுங்களேன்... --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 13:06, 7 சனவரி 2013 (UTC)[பதிலளி]

வணக்கம் தேனியாரே.... நான் முயல்கிறேன்... சண்முகம் புள்ளிவிவரங்கள் குறித்த பகுதிகளை இணைத்தால் நலம்.. இதற்கான தகவல் தரவுகள் எங்குள்ளன?-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:54, 7 சனவரி 2013 (UTC)[பதிலளி]

ak:Wikipedia:Community Portal

Be a Wikimedia fundraising "User Experience" volunteer!

Thank you to everyone who volunteered last year on the Wikimedia fundraising 'User Experience' project. We have talked to many different people in different countries and their feedback has helped us immensely in restructuring our pages. If you haven't heard of it yet, the 'User Experience' project has the goal of understanding the donation experience in different countries (outside the USA) and enhancing the localization of our donation pages.

I am (still) searching for volunteers to spend some time on a Skype chat with me, reviewing their own country's donation pages. It will be done on a 'usability' format (I will ask you to read the text and go through the donation flow) and will be asking your feedback in the meanwhile.

The only pre-requisite is for the volunteer to actually live in the country and to have access to at least one donation method that we offer for that country (mainly credit/debit card, but also real time banking like IDEAL, E-wallets, etc...) so we can do a live test and see if the donation goes through. **All volunteers will be reimbursed of the donations that eventually succeed (and they will be very low amounts, like 1-2 dollars)**

By helping us you are actually helping thousands of people to support our mission of free knowledge across the world. If you are interested (or know of anyone who could be) please email ppena@wikimedia.org. All countries needed (excepting USA)!!

Thanks!

Pats Pena
Global Fundraising Operations Manager, Wikimedia Foundation

Sent using Global message delivery, 21:19, 8 சனவரி 2013 (UTC)

ஆண்டறிக்கை

ஆண்டறிக்கை இங்கு தொகுக்கப்படுகிறது. ஏதேனும் விடுபட்டிருந்தாலோ, நீக்க வேண்டியிருந்தாலோ பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்க வேண்டுகிறோம். உரை திருத்தம் செய்ய வேண்டியிருந்தாலும் தயங்காமல் செய்யவும், நன்றி--சண்முகம்ப7 (பேச்சு) 05:34, 11 சனவரி 2013 (UTC)[பதிலளி]

ஆங்கில கட்டுரைகளை படியெடுப்பதில் கவனம்

நாம் அநேகமான கட்டுரை உருவாக்கத்திற்கு ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து அப்படியே படியெடுத்து மொழிமாற்றிவிடுகிறோம் அல்லது மொழிப்பெயர்ப்பு செய்கிறோம். கட்டுரை தொகுப்புக்கே நாம் முன்னுரிமை கொடுப்பதால், ஆங்கிலத்தில் உள்ள கட்டுரைகளின் தகவல்கள் சரியானதா என்பதை கவனிக்காமல் விட்டுவிடுகிறோம். அங்கே வழங்கப்பட்டிருக்கும் சான்றுகள் சரியானதா என உறுதிப்படுத்தவும் தவறிவிடுகிறோம். நான் அன்மையில் பார்த்ததில் அங்கே (அநேகமான இலங்கைச் சார்ந்த கட்டுரைகளில்) பக்கச்சார்பாக சிலரின் போலியான சான்றுகள், இல்லாத நூல்களை சான்றாக முன்வைத்தல், திசைத்திருப்பும் எரிதச் சான்றுகள், ஏமாற்றுச் சான்றுகள் என பல்வேறு சிக்கல்கள் இருப்பதை அவதானிக்க முடிந்தது. எ.கா: en:Colombo எனும் கட்டுரையில் கொலம்ப எனும் சொல்விளக்கத்திற்கு "Indrapala 2007, p. 70" என ஒரு சான்று வழங்கியுள்ளார்கள். தேடிப்பார்த்ததில் இப்படி ஒரு நூல் 2007ல் வெளிவரவில்லை. காணப்படவில்லை. இது ஒரு போலிச் சான்று. "கொழும்பு" எனும் சொல் தொடர்பில் தமிழில் சொல்விளக்கம் உள்ளது. இது குறித்த எந்த தகவலோ சான்றோ அங்கு வழங்கப்படவும் இல்லை. நாம் இங்கு வழங்கப்படவும் இல்லை. ஆங்கில கட்டுரையை அப்படியே படியெடுத்து இங்கே கொழும்பு கட்டுரையில் இட்டுள்ளோம். இது சரியான நடைமுறையல்ல. மேலும் en:Tea_production_in_Sri_Lanka கட்டுரையில் [2] ஒரு வெற்றுப்பக்கத்தை சான்றாக கொடுத்துள்ளனர். இப்படி இன்னும் பல சித்துவேலைகள் உள்ளன. எனவே ஆங்கில கட்டுரைகளை மொழிப்பெயர்ப்பு செய்யும் போது நாம் இவற்றையும் கவனம் கொள்ளல் வேண்டும். --HK Arun (பேச்சு) 07:26, 12 சனவரி 2013 (UTC)[பதிலளி]

இது போன்ற பிரச்சனைகள் இருப்பதை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, Indrapala என்பது அனேகமாக நூலாசிரியரின் பெயராக இருக்கலாம் என நம்புகின்றேன். ஒரு ஆண்டில் வெளிவந்த அனைத்து தமிழ்/ஆங்கில நூல்களையும் பட்டியலிடும் தளம் ஏதாவது இருக்கின்றதா? நூல் வெளிவரவில்லை என்ற கூற்றிற்கு போதுமான ஆதாரம் உண்டா? --சிவகோசரன் (பேச்சு) 15:41, 12 சனவரி 2013 (UTC)[பதிலளி]
//Indrapala என்பது அனேகமாக நூலாசிரியரின் பெயராக இருக்கலாம் என நம்புகின்றேன்.// நூலாசிரியரின் பெயரை நூலாக குறிப்பிடப்பட்டிருக்குமானால் அதுவும் ஒரு திசைத்திருப்பல் செயல்பாடுதான். //நூல் வெளிவரவில்லை என்ற கூற்றிற்கு போதுமான ஆதாரம் உண்டா?// தேடிப்பார்த்ததில் (திருத்தியுள்ளேன்) காணப்படவில்லை என்று வாசியுங்கள். மேலும் விக்கிப்பீடியா ஒரு மூன்றாவது தரவு தளம், இதில் முதலாம், இரண்டாம் நிலை தரவுகளின் ஊடாக சான்றுகளை முன்வைத்து தொகுத்து வைக்கப்படுகிறது. எனவே ஒரு நூலை சான்றாக வழங்கும் போது எவ்வாறு வழங்கப்பட வேண்டும் எனும் முறையுண்டு. பார்க்க: [3] குறிப்பாக ஒவ்வொரு நூலுக்கும் ISBN இலக்கம் உண்டு. ஒரு கட்டுரையை வாசிக்கும் ஒரு நபர் அக்கட்டுரையில் வழங்கப்பட்டிருக்கும் சான்றை உறுதிப்படுத்திக்கொள்ளவோ அல்லது மேலதிக வாசிப்பிற்காகவோ வழங்கப்பட்டிருக்கும் சான்று சரியாக இருக்கவேண்டும். இணையத்தளங்களை சான்றாக வழங்கியிருப்பவை, அவ்விணைத்தளம் செயல்பாட்டில் இல்லாதப் போது இணைப்பு நீக்கப்படுவதும் அதனால் தான்.
மேலும் எனது சுட்டிக்காட்டல் குறிப்பிட்ட ஒரு கட்டுரை தொடர்பானதல்ல. பிற விக்கிகளில் இருந்து மொழிப்பெயர்ப்பு செய்யும் போது நாம் கொள்ள வேண்டிய கவனம் தொடர்பான கோரிக்கை. --HK Arun (பேச்சு) 17:14, 12 சனவரி 2013 (UTC)[பதிலளி]
ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்க்கும்போது அங்குள்ள சான்றுகளையும் சரிபார்க்காமல் அப்படியே தருவதில் உள்ள பிரச்சினைகள் குறித்த அருணின் கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடு உண்டு. நூல்களைச் சான்றாகக் கொடுக்கும்போது அந்நூலின் முழு விபரங்களையும் கட்டுரையின் ஒரு இடத்திலாவது கொடுப்பது அவசியம். இந்த விபரங்கள், "எழுதியவர் பெயர், நூலின் பெயர், வெளியிட்ட நிறுவனம், வெளியிட்ட இடம், வெளியிட்ட ஆண்டு" என்பவற்றை இந்த ஒழுங்கில் உள்ளடக்கியிருப்பது வழக்கம். இவ்வாறான விபரங்களை கட்டுரையின் அடியில் உசாத்துணை நூல் பட்டியலாகக் கொடுத்தால், கட்டுரையின் உள்ளே எண்கள் கொடுத்துச் சான்றுகளை அடிக்குறிப்புகளாகத் தரும்போது "எழுதியவர் பெயர், ஆண்டு, பக்கம்" என்ற வடிவில் சுருக்கமாகக் கொடுக்கலாம். ஆனால் குறித்த கொழும்பு கட்டுரையில் எவ்விடத்திலும் நூலின் முழு விபரமும் கொடாமல், சுருக்க விபரங்களை மட்டும் கொடுத்துள்ளனர், இது சரியான முறையல்ல. கட்டுரையில் "Indrapala 2006, p. 70" என்பதற்குப் பதிலாகவே "Indrapala 2007, p. 70" எனப் பிழையாகக் கொடுத்துள்ளனர் எனக் கருதுகிறேன். மேற்படி குறிப்பு இந்திரபாலா அவர்கள் எழுதிய "The Evolution of an Ethnic Identity, The Tamils in Sri Lanka c. 300 BCE to c. 1200 CE" என்னும் நூலைக் குறிக்கிறது என்று எண்ணுகிறேன். இந்த நூலின் 70 ஆம் பக்கத்தில் கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள "Sidatsangarava" (தமிழில் பிழையாக "சிடசங்கரவ" என எழுதப்பட்டுள்ளது) பற்றிய குறிப்பு உள்ளது. இதன்படி "சிதத்சங்கராவ" என்னும் 13 ஆம் நூற்றாண்டுச் சிங்கள இலக்கண நூலில் சில சிங்களச் சொற்களை உள்நாட்டுக்கு உரியனவாக வகைப்படுத்தியிருப்பது பற்றிய தகவல் மட்டுமே உண்டு. அவற்றில் "கொழம்ப" என்னும் சொல் அடங்கியிருப்பது குறித்தோ அல்லது அதன் பொருள் குறித்தோ எவ்வித தகவலும் இல்லை. அதனால், இது கட்டுரை கூறும் விடயத்துக்குச் சான்றாக அமையவில்லை. --- மயூரநாதன் (பேச்சு) 18:53, 12 சனவரி 2013 (UTC)[பதிலளி]

பொங்கல் நல்வாழ்த்துகள்

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் பொங்கல் தின நல்வாழ்த்துகள்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 17:22, 13 சனவரி 2013 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியர்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துகள்--Kanags \உரையாடுக 21:24, 13 சனவரி 2013 (UTC)[பதிலளி]

இனிய பொங்கல் வாழ்த்துகள்!--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 21:54, 13 சனவரி 2013 (UTC)[பதிலளி]

பொங்கும் மங்கலம் எங்கும் தங்கட்டும்..அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 22:46, 13 சனவரி 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் - தமிழ்க்குரிசில்

பொங்கல் வாழ்த்துகள்! --மதனாகரன் (பேச்சு) 04:09, 14 சனவரி 2013 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியர்களுக்கும் விக்கிப்பீடியர்களாக இல்லாதவர்களுக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துகள். எப்பூடீஈஈஈஈஈஈஈஈ. :)- --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 08:27, 14 சனவரி 2013 (UTC)[பதிலளி]

அனைத்து விக்கி உறவுகளுக்கும் என் இனிய போங்கள் நல் வாழ்த்துக்கள். --சிவம் 01:47, 15 சனவரி 2013 (UTC)

வாக்கெடுப்பு

நிருவாகி தரத்துக்கான மூன்று நடப்பு வேண்டுகோள்களுக்குமான வாக்கெடுப்பு நிறைவு பெற்றுள்ளது. --மதனாகரன் (பேச்சு) 05:22, 14 சனவரி 2013 (UTC)[பதிலளி]

விக்கி மீடியா ஷாப்பிங்

அட்ரா சக்க. அட்ரா சக்க. அட்ரா சக்க.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:03, 14 சனவரி 2013 (UTC)[பதிலளி]

நினைவுபடுத்தல் - தமிழ் ஆவண மாநாடு - கட்டுரைப் பொழிவு அனுப்பும் திகதி அண்மித்துவிட்டது

தமிழ் ஆவண மாநாட்டுக்கான ஆய்வுக்கட்டுரையின் பொழிவை (abstract) சமர்ப்பிப்பதற்கான திகதி நாளை (சனவரி 15, 2012) ஆகும். நன்றி. --Natkeeran (பேச்சு) 01:55, 15 சனவரி 2013 (UTC)[பதிலளி]