பாம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (Robot: Modifying se:Gearpmaš to se:Gearpmašat
வரிசை 254: வரிசை 254:
[[scn:Scursuni]]
[[scn:Scursuni]]
[[sco:Snake]]
[[sco:Snake]]
[[se:Gearpmaš]]
[[se:Gearpmašat]]
[[sh:Zmija]]
[[sh:Zmija]]
[[si:ශ්‍රී ලංකාවේ සර්පයෝ]]
[[si:ශ්‍රී ලංකාවේ සර්පයෝ]]

03:57, 14 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

பாம்பு
பவளப் பாம்பு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பாம்பினம் ()

சாதி

ஐலுரோபோடா - (Ailuropoda)
உர்சுஸ் - (Ursus)
டிரெமாக்டஸ் - (Tremarctos)
ஆர்க்டோடஸ் - (Arctodus) (அழிந்துவிட்டது)

வடிகால் குழாய் மேல் பச்சைப் பாம்பு ஒன்று.

பாம்பு ஊர்வன வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். முதுகெலும்புள்ள நீளமான உடலும் சிறு தலையும் கொண்ட விலங்கு. இவை கால்கள் அற்றவை ஆனாலும் உடலால் நிலத்தை உந்தி வேகமாக நகரவல்லவை. சில பாம்புகள் நீரிலும் நன்றாக நகரவல்லவை. பாம்பு வகையில் 2,700க்கும் அதிகமான வகைகள் உண்டு. சில பாம்புகளே நச்சுப்பாம்புகள். நூற்றில் ஒரு விழுக்காடுக்கும் குறைவானவையே நச்சுப்பாம்புகள் (< 1% ). இந்தியாவிலுள்ள நல்ல பாம்பு (நாகப்பாம்பு), கட்டுவிரியன் போன்றவை நச்சுப் பாம்புகள். இவ்வகை நச்சுப் பாம்புகள் தம்மைக் காப்பாற்றிக்கொள்ள எதிரி விலங்குளைப் பற்களால் கவ்விக் கடிக்கையிலே பாம்பின் பல்லுக்குப் பின்னே உள்ள நச்சுப்பையில் இருந்து நச்சுப்பொருளை எதிரி விலங்கின் உடலுள்ளே செலுத்துகின்றது. கடிபட்ட விலங்கு விரைவில் இறக்க நேரிடும்.

இந்தியாவிலே 230 வகையான பாம்பினங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 50 இனங்களே நச்சுடையவை. ஒருவகையான நச்சுப்பாம்புகளின் நஞ்சு நரம்பு மண்டலத்தைத் தாக்குகின்றது. இவ்வகையில் சேர்ந்ததே நாகப்பாம்பு, பவளப்பாம்பு, கட்டுவிரியன் என்பன. வேறு சில நச்சுப்பாம்புகள் இரத்தக் குழாய்களைத்தாக்கி அழிக்க வல்லன. கண்ணாடி விரியன் என்னும் பாம்பு இவ்வகையைச் சேர்ந்தது. இவற்றின் தோல் செதில்களைக் கொண்டுள்ளது. நாகப்பாம்பு, கட்டுவிரியன் போன்ற சில பாம்புகள் நச்சுத்தன்மை கொண்டவை. இலங்கையில் சுமாராக 216 வகைப் பாம்பு இனங்கள் உள்ளன. நச்சுத் தன்மையுடைய பாம்பின் தலையில் <> வடிவம் காணப்படும்.

உடலமைப்பு

தோலும் நிறமும்

பாம்பின் தோலானது செதில்களால் சூழப்பட்டிருக்கும். குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை இவை தங்கள் தோலை உரித்து விடுகின்றன. பாம்புகளின் மீண்டும் புதுப்பித்துக்கொள்ளும் பண்பின் காரணமாக இவை மருத்துவத் துறையின் குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனாலாயே கிரேக்கக் குறியீடான அஸ்லெபியசின் தடியில் (Rod of Asclepius) உள்ளது. இக்குறியீடு மருந்துகள் மூலம் குணமடைவதைக் குறிக்கிறது.

பாம்பின் தாடை நுண்ணியமாக அதிர்கையில், இந்த ஸ்டேப்ஸும் அதிரும். இந்த அதிர்ச்சியை அதன் மூளை ‘கேட்கிறது’. பாம்பிற்கு காது மடல் இல்லை.

எலும்புச் சட்டம்

உள் அங்கங்கள்

1: esophagus2: trachea3:tracheal lungs4: rudimentary left lung4: right lung6: heart7: liver8 stomach9: air sac10: gallbladder11: pancreas12: spleen13: intestine14: testicles15: kidneys
பாம்பின் உள்ளுறுப்புகள். 1 உணவுக்குழாய் 2 மூச்சுக்குழல் 3 மூச்சுக்குழாய்ப்பை, 4 வளர்ச்சியடையாத இடதுநுரையீரல், 5 வலது நுரையீரல், 6 இதயம், 7 கல்லீரல், 8 இரைப்பை, 9 காற்றுப்பை 10 பித்தப்பை 11 கணையம், 12 மண்ணீரல், 13 குடல், 14 விரைகள், 15 சிறுநீரகங்கள்.

பாம்புகளின் இடது நுரையீரல் மிகவும் சிறியது சிலவற்றில் இல்லாமலும் இருப்பதுண்டு. எனவே பாம்புகளில் நுரையீரல்களில் ஒன்று மட்டுமே வேலை செய்கிறது.

உணவுப்பழக்கம்

எல்லாப் பாம்புகளும் ஊனுண்ணிகள் ஆகும். இவை சிறு விலங்குகளை உணவாகக் கொள்கின்றன. சிறிய ஊர்வன, எலி, பறவைகள், அவற்றின்முட்டைகள், மற்றும் பூச்சிகளை இவை உணவாகக் கொள்கின்றன. சில பாம்புகள் தனது நச்சுக்கடியின் மூலம் இரையைக் கொள்கின்றன. சில பாம்புகள் இரையை சுற்றி வளைத்து நெருக்கிக் கொல்கின்றன. சில பாம்புகள் தனது இரையை உயிருடன் முழுதாக விழுங்கி விடுகின்றன.

வாழ்முறை இனப்பெருக்கம்

பாம்புகள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. ஆனால் சில பாம்புகள் குட்டி போடுகின்றன. உ.ம். விரியன்கள், பச்சைப்பாம்பு. மண்பாம்பில் கருமுட்டை வயிற்றில் வளர்ந்து குட்டியாகப்பிறக்கிறது. பாம்புகள் முட்டைகளுக்கு அதிகப்பாதுகாப்பு தருவதில்லை. சில் பாம்புகள் முட்டைகளை அடைக்காக்கின்றன. ரீனல் பாம்பு தரையில் இலைகளை கூடாகக்கட்டி அதில் முட்டை இடுகின்றன. பாம்புகளில் குருட்டு(அல்லது புழு)ப்பாம்பு மட்டும் ஆணில்லாமல் கருவடைகிறது. இதில் பெண் இனம் மட்டுமே கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இனவகைகள்

A phylogenetic overview of the extant groups
Modern snakes
Scolecophidia

Leptotyphlopidae

 

Anomalepididae

Typhlopidae

Alethinophidia

Anilius

Core Alethinophidia
Uropeltidae

Cylindrophis

 

Anomochilus

Uropeltinae

Macrostomata
Pythonidae

Pythoninae

Xenopeltis

Loxocemus

Caenophidia

Colubridae

Acrochordidae

Atractaspididae

Elapidae

Hydrophiidae

Viperidae

Boidae

Erycinae

Boinae

Calabaria

Ungaliophiinae

Tropidophiinae

பாம்பியல் அறிஞர்கள் 2,700க்கும் அதிகம் உள்ள பாம்பினங்களில் உட்பிரிவுகள் 11 என்றும் 15 என்றும் வேறுபடுகிறார்கள்.

நச்சுப்பாம்புகள்:

மலைப்பாம்பு

நச்சற்ற பாம்புகள்:

மனித நாகரிகங்களில் பாம்பு

பாரசீகம், இந்தியா, இலங்கை, சீனா, சப்பான், பர்மா, சாவா, அரேபியா, எகிப்து, கிரீசு, இத்தாலி, பெரு, அமெரிக்கா முதலிய நாடுகளிலெல்லாம் பாம்பு வழிபாட்டின் அடையாளங்கள் காணப்படுகின்றன. சில நாடுகளில் பாம்பு நல்ல தெய்வமாகவும் சிலவற்றில் கெட்ட தெய்வமாகவும் கொள்ளப்பட்டது.[1]

பாம்புக்கடி

படிமம்:Snake bite impact.png
உலகத்தின் பல பாகங்களில் நச்சுப் பாம்புக்க்கடியால் மக்களுக்கு ஏற்படும் இறப்பு மற்றும் உடற்குறைபாடுகளின் எண்ணிக்கை காட்டும் வரைபடம்

பாம்புக்கடியால் நஞ்சு பாய்ந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் சாகின்றனர். அமெரிக்காவில் மட்டுமே ஆண்டுதோறும் 8,000 பேர் நச்சுப் பாம்புக்கடியால் இறக்கின்றனர் .[2] உலகில் ஆண்டுதோறும் ஏறத்தாழ 125,000 மக்கள் நச்சுப் பாம்புக்கடியால் இறக்கின்றனர் என்று கணிக்கப்பட்டுள்ளது [3].

பழமொழிகள்

  • பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பது ஒரு கூற்று.
  • பாம்பின் கால் பாம்பறியும்

வெளியிணைப்புகள்

இவற்றையும் பார்க்க

பாம்புக் கடி

மேற்கோள்கள்

  1. "பாம்பு வணக்கம்" (pdf).
  2. "First Aid Snake Bites". University of Maryland Medical Center. பார்க்கப்பட்ட நாள் 2007-12-30.
  3. "Snake-bites: appraisal of the global situation" (PDF). Who.com. பார்க்கப்பட்ட நாள் 2007-12-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாம்பு&oldid=1299103" இலிருந்து மீள்விக்கப்பட்டது