ஏரன் சுவோற்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: sh:Aaron Swartz
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: fa:آرون سوارتز
வரிசை 33: வரிசை 33:
[[en:Aaron Swartz]]
[[en:Aaron Swartz]]
[[es:Aaron Swartz]]
[[es:Aaron Swartz]]
[[fa:آرون سوارتز]]
[[fr:Aaron Swartz]]
[[fr:Aaron Swartz]]
[[gu:એરન સ્વાર્ટઝ]]
[[gu:એરન સ્વાર્ટઝ]]

12:25, 13 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

ஏரன் சுவோற்சு
2008இல் ஏரன் சுவோற்சு
பிறப்பு(1986-11-08)நவம்பர் 8, 1986
சிகாகோ, இலினொய்
இறப்புசனவரி 11, 2013(2013-01-11) (அகவை 26)
புரூக்ளின், நியூ யோர்க் மாநிலம்
இறப்பிற்கான
காரணம்
தற்கொலை செய்து கொண்டார்
பணிகணினி நிரலாளர், எழுத்தாளர், இணையச் செயற்பாட்டாளர்
வலைத்தளம்
aaronsw.com

ஏரன் சுவோற்சு (Aaron H. Swartz; நவம்பர் 8, 1986 - சனவரி 11, 2013) ஓர் அமெரிக்க கணினி நிரலாளர், எழுத்தாளர், அரசியல் ஒழுங்கமைப்பாளர், இணையச் செயற்பாட்டாளர். இவர் இணையத்தில் தகவல்களைப் பகிரப் பயன்படும் ஆர்.எசு.எசு சீர்தரத்தின் முதல் பதிப்பின் இணை ஆக்கர். இவர் வெப்.பிவை (web.py) எனப்படும் வலைத்தள சட்டகத்தை எழுதினார். திறந்த நூலகத்துக்கான கட்டமைப்பை உருவாக்கினார். முன்னேற்றத்தைக் கோரு (Demand Progress) என்ற அமைப்பின் நிறுவனர். பூட்டப்பட்ட தரவுத்தளங்களை திறந்த வெளிக்கு கொண்டுவருவதற்கான பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டு இருந்தார். இணையத்தை அரசுகள் கட்டுப்படுத்த கொண்டுவந்த பல்வேறு சட்டங்களை முன்னின்று வெற்றிகரமாக எதிர்ப்பதில் முக்கிய பங்கு கொண்டார்.

சனவரி 11, 2013 அன்று தனது 26 வயதில் இவர் தற்கொலை செய்துகொண்டார். பூட்டப்பட்ட ஆய்விதழ்களை திறந்த வெளியில் கொண்டுவருவதற்கான இவரது கொந்தர் செயற்பாடுகளுக்காக இவர் மீது ஐக்கிய அமெரிக்க அரசால் பல்வேறு குற்ற வழக்குகள் தொடக்கப்பட்டு இருந்தன. இவற்றால் இவர் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருந்தார் என இவரது குடும்பம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.[1]

ஏரனின் இறப்பைப் பற்றி உலகளாவிய வலையின் கண்டுபிடிப்பாளர் ரிம் பேர்னேர்சு லீ பின்வரும் கூற்றைத் தெரிவித்துள்ளார். "அரோன் இறந்துவிட்டான். உலகில் அலைபவர்களே, நாம் ஒரு விவேகமான மூத்தவனை இழந்துவிட்டோம். நல்லதுக்கான கொந்தர்களே, எம்மில் ஒருவன் வீழ்ந்துவிட்டான். எல்லாப் பெற்றோர்களே, நாம் ஒரு குழந்தையை இழந்துவிட்டோம். அனைவரும் அழுவோம்.[2]

மேற்கோள்கள்

  1. Reddit co-founder Aaron Swartz dies at 26
  2. "Aaron dead," he wrote. "World wanderers, we have lost a wise elder. Hackers for right, we are one down. Parents all, we have lost a child. Let us weep."Internet activist, programmer Aaron Swartz dead at 26
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏரன்_சுவோற்சு&oldid=1298725" இலிருந்து மீள்விக்கப்பட்டது