மார்கழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சி பதிப்புரிமை மீறல்+கலைக்களஞ்சியத்திற்கு ஏற்ற தகவல் இல்லை+original research
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:Month_Markali.jpg|thumb|300px|right|மார்கழி மாதத்தில் சூரியனின் நிலை.]]
[[படிமம்:Month_Markali.jpg|thumb|300px|right|மார்கழி மாதத்தில் சூரியனின் நிலை.]]

'''மார்கழி''' என்பது [[சூரியமானம்|சூரியமான]] முறையில் கணிக்கப்படும் தமிழ் காலக் கணிப்பு முறைப்படி ஆண்டின் ஒன்பதாவது [[மாதம்]] ஆகும். சூரியன் [[தனு இராசி]]யுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 29 [[நாள்]], 20 [[நாடி]], 53 [[விநாடி]] கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த [[மாதம்]] 29 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும்.
[[சூரியமானம்|சூரியமான]] முறையில் கணிக்கப்படும் தமிழ் காலக் கணிப்பு முறைப்படி ஆண்டின் ஒன்பதாவது [[மாதம்]] '''மார்கழி''' ஆகும். சூரியன் [[தனு இராசி|தனு இராசியுட்]] புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 29 [[நாள்]], 20 [[நாடி]], 53 [[விநாடி]] கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த [[மாதம்]] 29 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும்.


==மார்கழியின் சிறப்பு==
==மார்கழியின் சிறப்பு==
வரிசை 6: வரிசை 7:


இந்த மாதத்தில் [[திருப்பதி]] [[திருமலை]]யில் காலையில் [[சுப்ரபாதம்]] பாடுவதற்கு பதிலாக ஆண்டாளின் [[திருப்பாவை]] பாடுவார்கள். <ref>http://groups.google.com/group/minTamil/msg/03d1d7b8c1e5e32b</ref><ref>http://verygoodmorning.blogspot.com/2006/12/blog-post_15.html</ref>. இந்த மாதத்தில் எல்லா [[விஷ்ணு|பெருமாள்]] கோயில்களிலும் சுப்ரபாதத்துக்கு பதில் திருப்பாவை பாடுவார்கள். <ref>http://koodal1.blogspot.com/2007/08/blog-post_4904.html</ref>
இந்த மாதத்தில் [[திருப்பதி]] [[திருமலை]]யில் காலையில் [[சுப்ரபாதம்]] பாடுவதற்கு பதிலாக ஆண்டாளின் [[திருப்பாவை]] பாடுவார்கள். <ref>http://groups.google.com/group/minTamil/msg/03d1d7b8c1e5e32b</ref><ref>http://verygoodmorning.blogspot.com/2006/12/blog-post_15.html</ref>. இந்த மாதத்தில் எல்லா [[விஷ்ணு|பெருமாள்]] கோயில்களிலும் சுப்ரபாதத்துக்கு பதில் திருப்பாவை பாடுவார்கள். <ref>http://koodal1.blogspot.com/2007/08/blog-post_4904.html</ref>



மகிழ்வைத் தரும் மார்கழி


( நான் எழுதிய இக்கட்டுரை 12.01.2003 தினமணியில் 'அந்தக் காலம் - இந்தக்காலம்'
என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. இப்போது மேலும் சில விவரங்களுடன்)

மாதங்களில் மிகவும் பெருமைக்குரியது மார்கழி . மாதங்களில் நான் மார்கழி என்கிறான்
கீதை சொன்ன கண்ணன். " பீடுடைய " - பெருமைக்குரிய மார்கழியை நாம் " பீடை "
மாதம் என்று சொல்வது அபத்தம்.

மார்கழி வந்துவிட்டால் , அந்தநாள் மார்கழிக் கொண்டாட்டங்கள் நினைவுக்கு
வந்து விடுகின்றன.சூரிய உதயத்துக்கு முன்பே எழுந்து குளித்து, வாசல் எந்த
அளவுக்குப் பெரியதோ அந்த அளவுக்குக் கோலம் போடுவார்கள்.

கோலத்தின் நடுவில் சாணிப்பிள்ளையாரை வைத்து அவர் தலையில்
தங்கஅரளியோ, செம்பருத்திப்பூவோ அல்லதுபூசணிப் பூவோ வைப்பார்கள்.
இதிலே பெண்கள், சிறுமிகளுக்குள் போட்டியே நடக்கும்.

" நீ இன்னைக்குப் பதினோரு பிள்ளையார் வெச்சியா ? நாளைக்கு நான்
இருபத்தொன்று வைக்கிறேன் பார் " என்று சவால் விடுவார்கள்.

அதிகாலையில் வைத்த பிள்ளையாரை , காலை பத்து மணிக்கு மேல் சிறு
வறட்டியாகத் தட்டிகாய வைப்பார்கள்.

மார்கழி மாதக் காலை நேரங்களில் பஜனைகள் நடக்கும். பத்துப் பனிரெண்டு
வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமியர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டு
கோஷ்டியாகப் பாடுவார்கள் . அதிகாலை ஆறுமணிக்கு முன்பே ஏதாவது
ஒரு கோவில் முன்பு கூடிவிடுவார்கள். யாராவது ஒரு பெரியவர் இவர்களை
வழி நடத்த, அவர் தலைமையில் இவர்கள் கோஷ்டியாக, திருப்பாவை,
திருவெம்பாவை பாடல்களைப் பாடிக்கொண்டே போவார்கள். கோவில்களில்
இந்த கோஷ்டிக்காக சிறப்புக் கற்பூர ஆரத்தி செய்து பிரசாதம் தருவார்கள்.
பஜனைக்கோஷ்டி தெருக்களின் வழியே பாடிக் கொண்டேஒவ்வொரு கோவிலாக
போய் வரும். இவர்கள் தங்கள் தெருக்களின் வழியே வரும்போது, சிலவீடுகளில்
இவர்களை, தங்கள் வீட்டு வாசல் முன் நிற்கச் சொல்வார்கள். இவர்கள்
பாடல்களைப் பாடிக் கொண்டிருக்கும் போதே இவர்களுக்கு காப்பி, பிஸ்கட்,
சுண்டல் என்று ஏதாவது ஒன்றை விநியோகம் செய்வார்கள். சில வீடுகளில்
பெண்குழந்தைகளுக்கு ரிப்பன், வளையல் போன்றவற்றைப் பரிசாகத்
தருவார்கள். சிறுவர்களுக்கும் அன்பளிப்புகள் உண்டு.

டிசெம்பர் பிறந்ததுமே வீடுகளுக்கு சுண்ணாம்பு பூசும் வேலை ஆரம்பமாகிவிடும்
அது கிறிஸ்துமஸ் வருகிற மாதம். ஆகையால் கிறிஸ்தவர்கள் வீடுகளும்வெள்ளை
யடிக்கப் பட்டு மின்னும்..

தைப் பொங்கலன்று அதிகாலையில் வீட்டு வாசல் முன்பாக விளக்கைக்
கொண்டு வந்து வைத்து அதன் கை முன்பாக வெற்றிலை, பாக்கு, வகை
வகையான காய்கறிகள் பழங்கள், கரும்பு, இஞ்சி மஞ்சள் கொத்து , பனங்
கிழங்கு ஆகியவற்றை வைப்பார்கள். பொங்கலுக்காக பிரத்தியேகமாக
களி மண்ணால் செய்து காய வைத்து, சுண்ணாம்பும் காவியும் பூசிய அடுப்புக்
கட்டிகளை வீட்டு வாசலில் போடப்பட்டுள்ள கோலத்தின் மேல் வைத்து
அதன் மீது புதுப்பானை வைத்து , பனையோலைகளை வைத்து அடுப்பை
எரியவிடுவார்கள். பானைக்குள் புது அரிசியைக் களைந்து விட்ட தண்ணீர்
இருக்கும். அந்தத் தண்ணீர் சூடேறி பொங்கி வரும்போது மங்கலக்குலவை
இடுவார்கள். அரிசிப் பொங்கல், சர்க்கரைப் பொங்கல் தயாரானதும் அதை
ஏற்கனவே படைக்கப் பட்டுள்ள பொருட்கள் முன்பாக வைத்து படையல்
போடுவார்கள்.

படையல் என்பது, ஒரு சிறு இலைத்துண்டில், அன்று பொங்கிய அரிசி சாதம்,
சர்க்கரைப் பொங்கல் சிறிது, ஒரு துண்டு தேங்காய், பழம், சிறிது நெய்
சேர்ந்த ஒன்றாகும். அந்தந்த குடும்பத்தினரின் எண்ணிக்கையோடு காகத்தின்
எண்ணிக்கையையும் சேர்த்து படையல் வைப்பார்கள். முதலில் சூரியனுக்கு
கற்பூர ஆரத்தி, பின் விளக்கு பூஜை. இவை எல்லாம் முடிந்ததும், படையலில்
உள்ள காகத்தின் பங்கை அவற்றுக்குக் கொடுத்து விட்டு, மீதமுள்ளதை
ஆளுக்கு ஒன்றாக எடுத்துக் கொள்வார்கள். கரும்புத் துண்டுகளைக் கடித்துக்
கொண்டு குழந்தைகள் வெளியேற, வீட்டிலுள்ள பெண்கள் சமையல்
வேலையை ஆரம்பித்து விடுவார்கள். அவியல்,பொரியல், பச்சடி, கூட்டு,
அப்பளம் ' அது இது 'ன்னு பிரமாதமாக அறுசுவை உணவு தயாராகி இருக்கும்.
அன்று அனைவரும் ஒன்று சேர்ந்து சாப்பிடுவார்கள்.
அன்று மாலை, கோவில்களில், மார்கழி முப்பது நாளும் பஜனையில் கலந்து
கொண்ட குழந்தைகளுக்குப் பரிசுப் பொருட்கள் கிடைக்கும். பாடல் போட்டி
உண்டு. கும்மி கோலாட்டம் உண்டு.

திருநெல்வேலியில் பொங்கலுக்கு மறுநாள் 'கரிநாள்' என்ற பெயரில்
கொண்டாடப் படுகிறது. ( ஆனால் சென்னை போன்ற பெருநகரங்களில்,
பொங்கல் முடிந்த இரண்டாம் நாள் காணும் பொங்கலென்று கொண்டாடப்
படுகிறது ) அன்று கட்டுச்சாதக் கூடைகளுடன் காலையிலேயே தங்கள்
குடும்பத்தோடு கிளம்பி அருகிலுள்ள ஆற்றங்கரைக்கோ, நீர் நிலைகளுக்கோ
செல்வார்கள். அங்கே உள்ள நீர்நிலைகளில் துணி துவைத்து, குளித்து விட்டு
ஈரத்துணிகளை வெயிலில் உலர்த்தி விட்டு, கோவில்களில் தரிசனம்
முடித்துவிட்டு , ஆறு அல்லது குளக்கரை மர நிழல்களில் அமர்ந்து கொண்டு
வந்துள்ள சாப்பாட்டை முடித்து விட்டு , பெரியவர்கள் ஊர்க்கதைகளைப் பேசி
ஓய்வாக அமர்ந்திருக்க குழந்தைகள்ஓடிப்பிடித்து விளையாட ஆரம்பித்து
விடுவார்கள். இந்த விளையாட்டு சாயங் காலம் வரை நீடிக்கும்.

குழந்தைகளைக் கவர , ராட்டினங்களும்,பலூன் பொம்மை பஞ்சுமிட்டாய்
கடைகளும் போட்டி போடும். மாலையில் வீடு திரும்பும்போது , அடுத்த
மார்கழி எப்போது வரும் என்ற ஏக்கம் ஆரம்பித்து விடும்.
பொங்கலை ஒட்டி, வீட்டு முற்றங்களில் சிறு வீடு கட்டுவார்கள். அதாவது
வீடு கட்டுவதற்கு போடப்படும் பிளானை பார்த்திருப்பீர்கள் அல்லவா ?
அதே மாதிரி, சுண்ணாம்பு. காவிக்கலவையால், சமையலறை, பூஜை அறை
விளக்கு மாடம் என்று வெளி முற்றத்திலோ அல்லது வீட்டு வாசல்
ஓரமாகவோவரைவார்கள். அதில் குழந்தைகள், பொங்கலிடுவதற்க்காக,
தனியாக செய்த சிறு அடுப்புக் கட்டிகளை வைத்து நெருப்பு மூட்டி பால்
காய்ச்சி பொங்கல் விடுவார்கள் குழந்தைகள். இது அந்தந்த வீட்டுப்
பெரியவர்கள் முன்பாக நடைபெறும். பொங்கலிட்டு பூசை செய்தபின்,
காகத்தைக் கூப்பிட்டு உணவளித்து விட்டு, சிறு அளவு பொங்கலை வீட்டில்
வைத்துவிட்டு மீதியை எடுத்துக்கொண்டு ஆறு குளங்களுக்குப் போவார்கள் .
ஏற்கனவே மார்கழி மாதக் காலையில் வைத்திருந்த சாணிப் பிள்ளையாரை
வறட்டி தட்டி வைத்திருந்தார்கள் அல்லவா , அதையும் எடுத்துக் கொண்டு
போவார்கள். ஒவ்வொரு வறட்டியின் மீதும் எருக்கிலை, அல்லது சிறு துண்டு
வாழை இலையைப் போட்டு அதன் மீது கொண்டு வந்துள்ள பொங்கலை சிறிது
சிறிதாக வைத்து நீருக்குள் விடுவார்கள். அது மீன்களுக்கு உணவாகிவிடும்.
இன்றும் சில ஊர்களில் ( திருநெல்வேலி போன்ற தென்மாவட்டங்களில் )
இந்த சடங்கு சம்பிரதாயம் கடைப் பிடிக்கப் படுகிறது.ஆனால், இன்றோ நகர
வாழ்க்கையில் பொங்கல் என்பது கவிஞர் பொன்மணி வைர முத்து கூறியது
போல் 'மற்றொரு ஞாயிற்றுக் கிழமை '.அவ்வளவுதான்.!

பொங்கல் என்றால் என்னவென்று எங்கள் வீட்டு குழந்தைகளைக் கேட்டால்
'அன்னிக்கு எக்ஸ்ட்ராவா ஓரு சர்க்கரைப் பொங்கல் இருக்கும். மத்த நாளில்
சாமி கும்பிடாமே, பூஜை பண்ணாமே சாப்பிடுவோம். அன்னிக்கி மட்டும் நாம
பூஜை பண்ணிட்டு சாப்பிடுவோம் ' என்று அழகாக ( ? ! ) விளக்கம்
சொல்வார்கள்

- தொகுப்பு : அருணா S ஷண்முகம்


==இவற்றையும் பார்க்கவும்==
==இவற்றையும் பார்க்கவும்==
வரிசை 129: வரிசை 12:
* [[காலக்கணிப்பு முறைகள்]]
* [[காலக்கணிப்பு முறைகள்]]
* [[இந்திய வானியல்]]
* [[இந்திய வானியல்]]



==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
வரிசை 136: வரிசை 20:
*[http://www.chennaiiq.com/astrology/english_date_to_tamil_date_conversion.asp ஆங்கில தேதியிலிருந்து தமிழ் தேதி வருவித்தல்]
*[http://www.chennaiiq.com/astrology/english_date_to_tamil_date_conversion.asp ஆங்கில தேதியிலிருந்து தமிழ் தேதி வருவித்தல்]
*[http://www.chennaiiq.com/astrology/tamil_calendar.asp தமிழ் நாட்காட்டி]
*[http://www.chennaiiq.com/astrology/tamil_calendar.asp தமிழ் நாட்காட்டி]



{{வார்ப்புரு:தமிழ் மாதங்கள்}}
{{வார்ப்புரு:தமிழ் மாதங்கள்}}

11:39, 23 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

மார்கழி மாதத்தில் சூரியனின் நிலை.

சூரியமான முறையில் கணிக்கப்படும் தமிழ் காலக் கணிப்பு முறைப்படி ஆண்டின் ஒன்பதாவது மாதம் மார்கழி ஆகும். சூரியன் தனு இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 29 நாள், 20 நாடி, 53 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 29 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும்.

மார்கழியின் சிறப்பு

மார்கழி மாதத்தை சைவர்கள் தேவர் மாதம் என்று குறிப்பிடுவர். அதாவது கடவுளை வழிபடும் மாதமாகும். இறைவனை வழிபடுவதற்காக இம்மாதம் ஒதுக்கபட்டுள்ளதால் இம்மாதத்தில் எவ்வித மங்கல நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை. திருவெம்பாவை விரத காலத்தில் சைவர்கள் வீதி தோறும் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்களைப் பாடிக்கொண்டும் ஒவ்வொரு பாடல் முடிவிலும் சங்கு ஊதிக்கொண்டும் ஆலயங்களுக்குச் செல்வர். விஷ்ணு ஆலயங்களில் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாடுவர்.

இந்த மாதத்தில் திருப்பதி திருமலையில் காலையில் சுப்ரபாதம் பாடுவதற்கு பதிலாக ஆண்டாளின் திருப்பாவை பாடுவார்கள். [1][2]. இந்த மாதத்தில் எல்லா பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்கு பதில் திருப்பாவை பாடுவார்கள். [3]

இவற்றையும் பார்க்கவும்


மேற்கோள்கள்

  1. http://groups.google.com/group/minTamil/msg/03d1d7b8c1e5e32b
  2. http://verygoodmorning.blogspot.com/2006/12/blog-post_15.html
  3. http://koodal1.blogspot.com/2007/08/blog-post_4904.html

வெளியிணைப்புக்கள்



தமிழ் மாதங்கள்
சித்திரை | வைகாசி | ஆனி | ஆடி | ஆவணி | புரட்டாசி | ஐப்பசி | கார்த்திகை | மார்கழி | தை | மாசி | பங்குனி
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்கழி&oldid=1282637" இலிருந்து மீள்விக்கப்பட்டது