செயற்றிட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: uk:Проект (управління проектами)
வரிசை 66: வரிசை 66:
[[th:โครงการ]]
[[th:โครงการ]]
[[tr:Proje]]
[[tr:Proje]]
[[uk:Проект (управління проектами)]]
[[vi:Dự án]]
[[vi:Dự án]]
[[zh:项目]]
[[zh:项目]]

13:51, 21 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

செயற்றிட்டம் (project) என்பது குறித்த இலக்குகளை அடைந்து கொள்ளும் முகமாக முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட குறித்த பாதீட்டுத் தொகைக்குள்ளும், வரையறுக்கப்பட்ட கால நேரத்துக்குள்ளும், வரையறுக்கப்பட்ட வளங்களுக்குள்ளும் அடைந்து கொள்ளும் முகமாக திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டு செயற்படுத்தப்படுகின்ற ஒவ்வொரு முயற்சிகளும் அல்லது செயற்பாடுகளும் செயற்திட்டம் என வரையரை செய்யலாம். இங்கு மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகள் வழமை அல்லாத மீண்டும் மீண்டும் தொடர் தன்மை அல்லாதவையாகவோ மற்றும் குறித்த காலம் முடிவடையும் போது முடிவுறுத்தப்படுபவையாகவோ இருக்கும். இதனால் ஒரு நிருவனத்தின் வழமையான செயற்பாடுகளை விட்டு முற்று முழுதாக வேறுபட்டவையாகக் காணப்படும். செயற்றிட்டத்தை கொண்டு நடத்தும் மேலாண்மையானது, செயற்திட்ட மேலாண்மை என அழைக்கப்படும். (செயற்திட்ட முகாமைத்துவம் - ஈழ வழக்கு)

செயற்றிட்டத்தின் தன்மைகள்

  • குறிக்கப்பட்ட தனியான நோக்கத்தினைக் கொண்டிருத்தல்
  • தெளிவான தொடக்கமும் முடிவும் கொண்டிருத்தல்
  • செலவினங்கள் முன்கூட்டியே பதிப்பிடக்கூடியதாக அல்லது பாதீட்டினைக் கொண்டதாக இருத்தல்
  • அவற்றுக்கென பிரத்தியேகமாக வளங்கள் ஒதுக்கப்பட்டிருத்தல்
  • ஒருமுறை மட்டும் செய்யப்படல்
  • தெளிவாக வரையறுக்கப்பட்ட முடிவுகளுக்கான திட்டத்தைப் பின்பற்றுதல்
  • பல்வேறுபட்ட தொழில்வல்லுனர்களை வேண்டிநிற்பதுடன் பல்வேறு தொழிற்பாட்டுப்பகுதியுடனும் தொடர்புபட்டதாகக் காணப்படும்

வெளி இணைப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=செயற்றிட்டம்&oldid=1281162" இலிருந்து மீள்விக்கப்பட்டது