விவிலிய ஞானிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:கிறித்தவ தொன்மவியல் சேர்க்கப்பட்டது
வரிசை 9: வரிசை 9:
[[பகுப்பு:கிறித்தவப் புனிதர்கள்]]
[[பகுப்பு:கிறித்தவப் புனிதர்கள்]]
[[பகுப்பு:விவிலிய நபர்கள்]]
[[பகுப்பு:விவிலிய நபர்கள்]]
[[பகுப்பு:கிறித்தவ தொன்மவியல்]]

08:32, 20 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

விவிலிய ஞானிகள், மூன்று அரசர்கள் அல்லது கிழக்கிலிருந்து வந்த ஞானிகள் எனப்படுவோர் கிறித்தவ பாரம்பரியப்படி, இயேசுவின் பிறப்புக்கு பின்பு, கிழக்கிலிருந்து வந்த குறிப்பிடத்தக்க வெளிநாட்டவர் ஆவர். இவர்கள் கிறித்துமசு குடில் முதலிய கிறிஸ்து பிறப்புக் கால கொண்டாட்டங்களில் முக்கிய இடம் பெறுகின்றார்கள். இவர்கள் மூன்று பேர் என்பதற்கோ அல்லது இவர்கள் இயேசு பிறந்த அதே இரவில் வந்ததாகவோ விவிலியத்தில் இல்லை. ஆனாலும் இவகள் இயேசுவுக்கு அளித்த பரிசுகளின் எண்ணிக்கையின வைத்து இவர்கள் மூவர் என நம்பப்படுகின்றது,

இவர்கள் வந்த நிகழ்வு மத்தேயு நற்செய்தியில் மட்டுமே இடம் பெறுகின்றது. இதன்படி கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து, ஏரோது அரசனிடம் 'யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்' என்றார்கள். இதைக் கேட்டதும் ஏரோது மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களை ஒன்று கூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான். அவர்கள் ஆராய்ந்து மீக்கா நூலில் உள்ளது படி மெசியா யூதேயாவிலுள்ள பெத்லகேமில் பிறக்க வேண்டும் என அறிவித்ததால் ஞானிகளை அங்கே அனுப்பி வைத்தான். முன்பு எழுந்த விண்மீன் தோன்றிக் குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்றது. அங்கே வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டு நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப்போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள். ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.[1]

ஆதாரங்கள்

  1. Matthew 2:11–12
"https://ta.wikipedia.org/w/index.php?title=விவிலிய_ஞானிகள்&oldid=1280274" இலிருந்து மீள்விக்கப்பட்டது