முடுக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சான்றில்லை
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: yo:Ìyára
வரிசை 104: வரிசை 104:
[[war:Akselerasyon]]
[[war:Akselerasyon]]
[[yi:פארגיכערונג]]
[[yi:פארגיכערונג]]
[[yo:Ìyára]]
[[zh:加速度]]
[[zh:加速度]]
[[zh-classical:加速度]]
[[zh-classical:加速度]]

15:29, 10 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

முடுக்கம் என்பது திசைவேகம் மாறும் வீதம் ஆகும். வேக-நேர வரைபொன்றில் உள்ள ஏதாவதொரு புள்ளியில் முடுக்கத்தின் அளவு அப்புள்ளியில் உள்ள தொடலியின் சாய்வு விகிதத்தால் தரப்படும்.

இயங்கியலில் முடுக்கம் அல்லது ஆர்முடுகல் (acceleration) என்பது திசைவேகம் மாறும் வீதத்தைக் குறிக்கும். இது நேரத்தின் தொடர்பில் திசைவேகத்தின் முதல் வகைக்கெழு (derivative) என வரைவிலக்கணம் கூறுவர். நேரத்தின் தொடர்பில் நிலையத்தின் (position) இரண்டாவது வகைக்கெழு என்றும் இதனை வரையறுக்கலாம். இது L T−2 என்னும் பரிமாணங்களைக் கொண்ட ஒரு திசையன் (காவி) அளவு ஆகும். அனைத்துலக அளவு முறையில் முடுக்கம் செக்கன் வர்க்கத்துக்கு மீட்டர்கள் (மீ/செ2) என்ற அலகில் அளக்கப்படும்.

பொது வழக்கில் முடுக்கம் என்பது வேக அதிகரிப்பைக் குறிக்கும். வேகம் குறைவது எதிர்முடுக்கம் அல்லது அமர்முடுகல் எனப்படும். இயற்பியலில், வேக அதிகரிப்பு, வேகக் குறைவு இரண்டுமே முடுக்கம் என்றே குறிக்கப்படுகிறது. திசைவேகத்தின் திசை மாற்றமும் முடுக்கமே. இது மைய நோக்கு முடுக்கம் எனப்படுகிறது. வேகம் மாறும் வீதம் தொடுகோட்டு முடுக்கம் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முடுக்கம்&oldid=1274814" இலிருந்து மீள்விக்கப்பட்டது