ஆங்கிலேய-சீக்கியப் போர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''ஆங்கிலேய-சீக்கியப் போர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சி r2.7.3) (Robot: Modifying en:Anglo-Sikh wars to en:Anglo–Sikh wars
வரிசை 5: வரிசை 5:
{{இந்திய விடுதலை இயக்கம்}}
{{இந்திய விடுதலை இயக்கம்}}


[[en:Anglo-Sikh wars]]
[[de:Sikh-Kriege]]
[[de:Sikh-Kriege]]
[[en:Anglo–Sikh wars]]
[[fr:Guerre anglo-sikhe]]
[[fr:Guerre anglo-sikhe]]

20:34, 9 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

ஆங்கிலேய-சீக்கியப் போர்கள் அல்லது ஆங்கில-சீக்கியப் போர்கள் (Anglo-Sikh wars) என்பது 19ம் நூற்றாண்டில் பிரித்தானிய இந்தியாவில் பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்துக்கும் சீக்கியப் பேரரசுக்கும் இடையே நடைபெற்ற போர்களைக் குறிக்கிறது. இவற்றின் விளைவாக சீக்கியப் பேரரசு அழிந்து, வடமேற்கு இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும் பகுதி ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் வந்தது.

ரஞ்சித் சிங்கின் மரணத்துக்குப் பின் சீக்கியப் பேரரசில் உட்பூசல் அதிகமானது. அவருக்குப் பின் பேரரசராவது யார் என்பது குறித்து பேரரசின் குறுநிலமன்னர்களிடையே வேறுபாடுகள் அதிகரித்தன. கிழக்கிந்தியக் கம்பனி நிருவாகத்துடன் மோதல்களும் அதிகரித்தன. 1845-56 இல் இம்மோதல்கள் போராக மாறின. முதலாம் ஆங்கிலேய-சீக்கியப் போரில் கிழக்கிந்தியக் கம்பனியின் படைகள் சீக்கியப் படைகளைத் தோற்கடித்தன. 1846 இல் கையெழுத்தான லாகூர் அமைதி ஒப்பந்தத்தின் விளைவாக சீக்கியப் பேரரசின் பல பகுதிகள் கம்பனியிடம் ஒப்படைக்கப்பட்டன. சீக்கியர்கள் ஒன்றரை கோடி ரூபாய் தண்டமாக கிழக்கிந்திய நிறுவனத்துக்குக் கட்டினர். ஆனால் இரு தரப்பினருக்கும் இடையே சிறு சிறு மோதல்கள் ஏற்பட்டவாறு இருந்தன. 1848 இல் மீண்டும் வெளிப்படையான போர் மூண்டது. 1848-49 காலகட்டத்தில் நடைபெற்ற இரண்டாம் ஆங்கிலேய-சீக்கியப் போரில் சீக்கியப் பேரரசு முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டது. அதன் பகுதிகள் பஞ்சாப் மற்றும் வடமேற்கு எல்லைப்புற மாகாணமாக பிரித்தானிய இந்தியாவுடன் இணைக்கப்பட்டன.