என்.எஃப்.எல்.: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 253: வரிசை 253:
[[hr:National Football League]]
[[hr:National Football League]]
[[hu:National Football League]]
[[hu:National Football League]]
[[id:National Football League]]
[[id:Liga Nasional Sepak bola Amerika]]
[[is:National Football League]]
[[is:National Football League]]
[[it:National Football League]]
[[it:National Football League]]

18:48, 7 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

என்.எஃப்.எல். சின்னம்

என்.எஃப்.எல். (NFL) என்னும் நேஷனல் ஃபுட்பால் லீக் (National Football League), தமிழில் தேசிய காற்பந்தாட்டச் சங்கம் ஐக்கிய அமெரிக்காவின் நான்கு மிகப்பெரிய விளையாட்டுச் சங்கங்களில் ஒன்றாகும். உலகின் அமெரிக்கக் காற்பந்தாட்டத்தை ஒருங்கிணைக்கிற சங்கங்களில் மிகப் பெரியதும், பரவலமானது செல்வாக்கு பெற்றதும் இச்சங்கம். 1920இல் பதினொன்று அணிகள் கொண்டு உருவாக்கப்பட்ட இச்சங்கத்தில் இன்று 32 அணிகள் உள்ளன. இந்த 32 அணிகள் தேசிய காற்பந்தாட்டக் கூட்டம் (National Football Conference, NFC) மற்றும் அமெரிக்கக் காற்பந்தாட்டக் கூட்டமாக (American Football Conference, AFC) பிரிந்துகொண்டன. இரண்டு கூட்டங்களும் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய நான்கு பகுதிகளாக பிரிந்து கொண்டன.

17 வாரங்களில் பொது பருவம் (regular season) விளையாடப்படும். இப்பருவத்தில் ஒரு "பை வீக்" (bye week) என்ற வாரத்தை விட்டு ஒவ்வொரு அணியும் வாரத்துக்கு ஒரு போட்டி விளையாடி மொத்தத்தில் 16 போட்டிகளை விளையாடும். பொதுவாக செப்டம்பர் மாதத்தில் முதலாம் வாரம் பொது பருவம் தொடங்கி டிசம்பர் இறுதியில் முடியும். இதற்கு பிறகு ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் ஆறு அணிகள் கொண்ட பின்பருவம் (postseason; playoffs) நடைபெறும். கடைசியில் ஒவ்வொரு கூட்டத்தில் நின்றிருக்கும் அணிகளும் சூப்பர் போல் (Super Bowl) என்றழைக்கப்பட்ட இறுதிப் போட்டியில் விளையாடி இப்போட்டி வென்ற அணி என்.எஃப்.எல். சாம்பியனாக வெற்றி பெறும்.

உலகில் பல உள்நாட்டு விளையாட்டுச் சங்கங்களில் என்.எஃப்.எல். போட்டிகளுக்கு வருகிற மக்கள் மிக அதிகமானது. பொது பருவத்தில் ஒரு போட்டிக்கு சராசரியாக 67,000 மக்கள் நுழைவுச்சீட்டை வாங்குகின்றனர்.

அணிகள்

அமெரிக்கக் காற்பந்தாட்டக் கூட்டம்
பகுதி அணி நகர் மைதானம் பயிற்றுனர் தோற்றம்
ஏ.எஃப்.சி. கிழக்குப் பகுதி பஃபலோ பில்ஸ் ஆர்ச்சர்ட் பார்க், நியூ யோர்க்
ரால்ஃப் வில்சன் ஸ்டேடியம் டிக் ஜரான் 1959
மயாமி டால்ஃபின்ஸ் மயாமி கார்டன்ஸ் டால்ஃபின் ஸ்டேடியம் டோனி ஸ்பரானோ 1966
நியூ இங்க்லன்ட் பேட்ரியட்ஸ் ஃபாக்ஸ்பரோ, மாசசூசெட்ஸ் ஜிலெட் ஸ்டேடியம் பில் பெலிச்சிக் 1959
நியூ யோர்க் ஜெட்ஸ் கிழக்கு ரதர்ஃபோர்ட், நியூ ஜெர்சி ஜயன்ட்ஸ் ஸ்டேடியம் எரிக் மான்ஜீனி 1960
ஏ.எஃப்.சி. வடக்குப் பகுதி பால்ட்டிமோர் ரேவென்ஸ் பால்ட்டிமோர், மேரிலன்ட் எம்&டி பாங்க் ஸ்டேடியம் ஜான் ஹார்பா 1996
சின்சினாட்டி பெங்கல்ஸ் சின்சினாட்டி, ஒகையோ பால் ப்ரௌன் ஸ்டேடியம் மார்வின் லூயிஸ் 1968
கிளீவ்லன்ட் ப்ரௌன்ஸ் கிளீவ்லன்ட், ஒகையோ கிளீவ்லன்ட் ப்ரௌன்ஸ் ஸ்டேடியம் ரோமியோ க்ரெனெல் 1946
பிட்ஸ்பர்க் ஸ்டீலர்ஸ் பிட்ஸ்பர்க், பென்சில்வேனியா ஹைன்ஸ் ஃபீல்ட் மைக் டாம்லின் 1933
ஏ.எஃப்.சி. தெற்குப் பகுதி ஹியூஸ்டன் டெக்சன்ஸ் ஹியூஸ்டன், டெக்சஸ் ரிலையன்ட் ஸ்டேடியம் கேரி கூபியாக் 2002
இன்டியனாபொலிஸ் கோல்ட்ஸ் இன்டியனாபொலிஸ், இந்தியானா லூக்கஸ் ஆயில் ஸ்டேடியம் டோனி டன்ஜி 1953
ஜாக்சன்வில் ஜாகுவார்ஸ் ஜாக்சன்வில், புளோரிடா ஜாக்சன்வில் முனிசிபல் ஸ்டேடியம் ஜாக் டெல் ரியோ 1995
டென்னசி டைட்டன்ஸ் நாஷ்வில், டென்னசி எல்பி ஃபீல்ட் ஜெஃப் ஃபிஷர் 1960
ஏ.எஃப்.சி. மேற்குப் பகுதி டென்வர் பிராங்கோஸ் டென்வர், கொலராடோ இன்வெஸ்கோ ஃபீல்ட் அட் மைல் ஹை மைக் ஷானஹான் 1960
கேன்சஸ் சிட்டி சீஃப்ஸ் கேன்சஸ் நகரம், மிசூரி ஆரோஹெட் ஸ்டேடியம்3 ஹர்ம் எட்வர்ட்ஸ் 1960
ஓக்லன்ட் ரெய்டர்ஸ் ஓக்லன்ட், கலிபோர்னியா மாக்கஃபீ காலிசியம் லேன் கிஃபின் 1960
சான் டியேகோ சார்ஜர்ஸ் சான் டியேகோ, கலிபோர்னியா குவால்காம் ஸ்டேடியம் நார்வ் டர்னர் 1960
தேசிய காற்பந்தாட்டக் கூட்டம்
பகுதி அணி நகர் மைதானம் பயிற்றுனர் தோற்றம்
என்.எஃப்.சி. கிழக்குப் பகுதி டாலஸ் கவுபோய்ஸ் அர்விங், டெக்சஸ் டெக்சஸ் ஸ்டேடியம் வேட் ஃபிலிப்ஸ் 1960
நியூ யோர்க் ஜயன்ட்ஸ் கிழக்கு ரதர்ஃபோர்ட், நியூ ஜெர்சி ஜயன்ட்ஸ் ஸ்டேடியம் டாம் காஃப்லின் 1925
ஃபிலடெல்ஃபியா ஈகில்ஸ் ஃபிலடெல்ஃபியா, பென்சில்வேனியா லிங்க்கன் ஃபைனான்சியல் ஃபீல்ட் ஆன்டி ரீட் 1933
வாஷிங்டன் ரெட்ஸ்கின்ஸ் லான்டோவர், மேரிலன்ட் ஃபெடெக்ஸ் ஃபீல்ட் ஜிம் சோர்ன் 1932
என்.எஃப்.சி. வடக்குப் பகுதி சிக்காகோ பேர்ஸ் சிக்காகோ, இலினொய் சோல்ஜர் ஃபீல்ட் லவி ஸ்மித் 1919
டிட்ராயிட் லயன்ஸ் டிட்ராயிட், மிச்சிகன் ஃபோர்ட் ஃபீல்ட் ராட் மாரினெலி 1929
கிரீன் பே பாக்கர்ஸ் கிரீன் பே, விஸ்கான்சின் லாம்போ ஃபீல்ட் மைக் மெக்கார்த்தி 1919
மினசோட்டா வைக்கிங்ஸ் மினியாப்பொலிஸ், மினசோட்டா மெட்ரொடோம் பிராட் சில்ட்ரெஸ் 1961
என்.எஃப்.சி. தெற்குப் பகுதி அட்லான்டா ஃபால்கன்ஸ் அட்லான்டா, ஜோர்ஜியா ஜோர்ஜியா டோம் மைக் ஸ்மித் 1966
கரொலைனா பாந்த்தர்ஸ் ஷார்லட், வட கரொலைனா பேங்க் அஃப் அமெரிக்கா ஸ்டேடியம் ஜான் ஃபாக்ஸ் 1995
நியூ ஓர்லென்ஸ் செயின்ட்ஸ் நியூ ஓர்லென்ஸ், லூசியானா லூசியானா சூப்பர்டோம் ஷான் பெய்ட்டன் 1967
டாம்ப்பா பே பக்கனியர்ஸ் டாம்ப்பா, புளோரிடா ரேமன்ட் ஜேம்ஸ் ஸ்டேடியம் ஜான் குரூடென் 1976
என்.எஃப்.சி. மேற்குப் பகுதி அரிசோனா கார்டினல்ஸ் கிலென்டேல், அரிசோனா யுனிவர்சிட்டி அஃப் ஃபீனிக்ஸ் ஸ்டேடியம் கென் விசன்ஹன்ட் 1898
செயின்ட். லூயிஸ் ராம்ஸ் செயின்ட் லூயிஸ், மிசூரி எட்வர்ட் ஜோன்ஸ் டோம் ஸ்காட் லினெஹான் 1936
சான் ஃபிரான்சிஸ்கோ 49அர்ஸ் சான் ஃபிரான்சிஸ்கோ, கலிபோர்னியா கான்டில்ஸ்டிக் பார்க் மைக் நோலன் 1946
சியாட்டில் சீஹாக்ஸ் சியாட்டில், வாஷிங்டன் குவெஸ்ட் ஃபீல்ட் மைக் ஹோம்கிரென் 1976
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்.எஃப்.எல்.&oldid=1273188" இலிருந்து மீள்விக்கப்பட்டது