கடுகண்ணாவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up
clean up (AWB)
வரிசை 114: வரிசை 114:
{{இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள நகரங்கள்}}
{{இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள நகரங்கள்}}


[[பகுப்பு:மத்திய மாகாணம், இலங்கை]]
[[பகுப்பு:நகரங்கள் - மத்திய மாகாணம், இலங்கை]]

03:15, 21 ஏப்பிரல் 2007 இல் நிலவும் திருத்தம்

7°15′57″N 80°33′13.48″E / 7.26583°N 80.5537444°E / 7.26583; 80.5537444

கடுகண்ணாவை

கடுகண்ணாவை
மாகாணம்
 - மாவட்டம்
மத்திய மாகாணம்
 - கண்டி
அமைவிடம் 7°15′57″N 80°33′13″E / 7.265815°N 80.553745°E / 7.265815; 80.553745
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 613 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)

கடுகண்ணாவை இலங்கையின் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் ஒரு நகரசபையாகும். இது யட்டிநுவரை வட்டச் செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.இது கொழும்பு - கண்டி பெருந்தெருவில் கேகாலைக்கும் பிலிமத்தலாவை நகருக்கும் இடையில் கொழுபில் இருந்து 101 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இது மாவட்ட தலைநகரான கண்டி நகரத்தில் இருந்து மேற்குத் திசையில் அமைந்துள்ளது. இலங்கையின் மலைநாட்டுக்கு நுழையும் கணவாய் கடுகண்ணாவையில் அமைந்துள்ளது. இந்நகரம் கண்டி இராச்சியத்தின் காலத்தில் முக்கிய நுழவாயிலாகவும் பாதுகாப்பு கோட்டையாகவும் விளங்கியது. மிகவும் கடினமான புவியியல் அமைப்பைக் கொண்ட இப்பகுதியூடாக இரயில் மற்றும் பெருந்தெருவை அமைத்த ஆங்கிலேய பொறியியலாளர் டாவ்சன் என்பவரை கௌரவிக்கும் வகையில் இங்கு ஒரு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

புவியியலும் காலநிலையும்

கடுகண்ணாவை மத்திய மலைநாடு என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 303 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 24 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 2500-3000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது.

மக்கள்

இது சிங்களவரை பெரும்பான்மையாக கொண்ட ஒரு நகரமாகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். 2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில மக்களின அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் பின்வருமாறு:

பிரிவு மொத்தம் சிங்களவர் இலங்கைத் தமிழர் இந்தியத் தமிழர் முஸ்லிம்கள் பரங்கியர் ஏனைய
மொத்தம் 1215 916 40 2 251 4 2
நகரம் 1215 916 40 2 251 4 2

2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில் மத அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் வருமாறு:

பிரிவு மொத்தம் பௌத்தர் இந்து இஸ்லாம் கத்தோலிக்கம் ஏனைய கிறிஸ்தவம் ஏனைய
மொத்தம் 1215 872 46 251 43 3 0
நகரம் 1215 872 46 251 43 3 0

கைத்தொழில்

இங்கு நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. மேலும் தேயிலைப் பெருந்தோட்டங்களும் காணப்படுகிறது.

குறிப்புகள்


உசாத்துணைகள்


இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள நகரங்கள் {{{படிம தலைப்பு}}}
மாநகரசபைகள் கண்டி | மாத்தளை | நுவரெலியா
நகரசபைகள் நாவலப்பிட்டி | கம்பளை | கடுகண்ணாவை | வத்தேகாமம் | அட்டன் - டிக்கோயா | தலவாக்கலை - லிந்துலை | உடதலவின்ன
சிறு நகரங்கள் அக்குரணை | கினிகத்தனை | குண்டசாலை | கொட்டகலை | தெல்தோட்டை | தொழுவை | பன்விலை | பேராதனை | மினிப்பே | வட்டவளை | இரம்படை | புசல்லாவை | உலப்பனை | பொகவந்தலாவை
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடுகண்ணாவை&oldid=127109" இலிருந்து மீள்விக்கப்பட்டது