விவேகானந்தர் இல்லம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சென்னைத் தலைப்புகள் வார்ப்புரு using AWB
Jeevagv (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[File:Vivekanandar Illam.jpg|thumb|300px|விவேகானந்தர் இல்லம், சென்னை]]
[[File:Vivekanandar Illam.jpg|thumb|300px|விவேகானந்தர் இல்லம், சென்னை]]
'''விவேகானந்தர் இல்லம்''' [[தமிழ்நாடு|தமிழக]]த்தின் தலைநகரமான [[சென்னை]]யில் உள்ளது. இது "ஐஸ் ஹவுஸ்" (''Ice House'') எனவும் ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. இந்த இல்லத்தில் சுவாமி [[விவேகானந்தர்]] [[1900]] ஆம் ஆண்டு ஆறு வாரங்கள் தங்கியிருந்தார். இந்த கட்டிடம் [[1877]] ஆம் ஆண்டு கட்டப்பட்டது. விக்டோரிய கட்டடக் கலையைப் பின்பற்றி இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இப்போது இது தமிழ்நாட்டின் மிகவும் முக்கியமான சுற்றுலாத் தலமாக விளங்குகின்றது.
'''விவேகானந்தர் இல்லம்''' [[தமிழ்நாடு|தமிழக]]த்தின் தலைநகரமான [[சென்னை]]யில் [[திருவல்லிக்கேணி]]யில் உள்ளது. இதன் பழைய பெயர் "ஐஸ் ஹவுஸ்" (''Ice House'') என்றாலும், தற்போதும் இப்பெயர் பொது வழக்கில் உள்ளது. இந்த இல்லத்தில் சுவாமி [[விவேகானந்தர்]] [[1897]] ஆம் ஆண்டு ஒன்பது நாட்கள் தங்கியிருந்தார். இப்போது இது தமிழ்நாட்டின் மிகவும் முக்கியமான சுற்றுலாத் தலமாக விளங்குகின்றது.

---கட்டிடம்---
[[அமெரிக்கா]]வின் [[மசாசூட்ஸ்]] மாநிலத்தைச் சேர்ந்த தியூடர் ஐஸ் கம்பெனியின் நிறுவனரான பிரடெரிக் தியூடர் என்பவரால் 1842ல் கட்டப்பட்டது. அப்போது சென்னையில் இருந்த வெளிநாட்டவரின் தேவைக்காக "தியூடர் ஐஸ்' கம்பெனியில் இருந்து கப்பலில் கொண்டுவரப்பட்ட பனிக்கட்டிகளை சேமிக்கும் கிடங்காக இக்கட்டிடம் பயன்படுத்தப் பட்டது. அந்த வகையில் தான் "ஐஸ் ஹவுஸ்' என்ற பெயர் ஏற்பட்டது. பின்னர் பனிக்கட்டி தாயாரிப்பது இந்தியாவிலேயே தொடங்கிய பின்னர் இந்த கட்டிடத்தை பிலிகிரி ஐயங்காருக்கு தியூடர் ஐஸ் நிறுவனம் விற்றுவிட்டது. பிலிகிரி ஐயங்கார் இந்த கட்டிடத்தை, ஏழைகள் மற்றும் கல்வியறிவில் பின்தங்கியவர்களுக்கான பள்ளியாக பயன்படுத்தி வந்தார்.

---விவேகானந்தரின் வருகை---
சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவின் [[சிகாகோ]]வில் வரலாற்று புகழ்மிக்க சொற்பொழிவை நிகழ்த்திவிட்டு தாயகம் திரும்பியவர் 1897ம் ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி முதல் 15ம் தேதி வரை இந்தக் கட்டிடத்தில் தங்கியிருந்தார். இங்கு தங்கியிருந்த போது அவர் புகழ் பெற்ற ஒன்பது சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். அப்போது, சுவாமி விவேகானந்தரிடம் சென்னையில் [[இராமகிருஷ்ண மடம்]] ஒன்றினை தொடங்கிட வேண்டுகோள் வைக்கப்பட்டது. [[கொல்கத்தா]] திரும்பிய சுவாமி விவேகானந்தர், அங்கு ராமகிருஷ்ணர் மடத்தில் பணியாற்றிக் கொண்டு இருந்த சுவாமி ராமகிருஷ்ணானந்தரை இங்கு அனுப்பிவைத்தார். சசிமகராஜ் என்றழைக்கப்பட்ட சுவாமி ராமகிருஷ்ணானந்தரின் தொண்டால் இந்த கட்டிடம் தென்னகத்தின் முதலவாது ராமகிருஷ்ணர் மடமாக செயல்பட்டத் துவங்கியது.



{{குறுங்கட்டுரை}}
{{குறுங்கட்டுரை}}

02:57, 25 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

விவேகானந்தர் இல்லம், சென்னை

விவேகானந்தர் இல்லம் தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் திருவல்லிக்கேணியில் உள்ளது. இதன் பழைய பெயர் "ஐஸ் ஹவுஸ்" (Ice House) என்றாலும், தற்போதும் இப்பெயர் பொது வழக்கில் உள்ளது. இந்த இல்லத்தில் சுவாமி விவேகானந்தர் 1897 ஆம் ஆண்டு ஒன்பது நாட்கள் தங்கியிருந்தார். இப்போது இது தமிழ்நாட்டின் மிகவும் முக்கியமான சுற்றுலாத் தலமாக விளங்குகின்றது.

---கட்டிடம்--- அமெரிக்காவின் மசாசூட்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த தியூடர் ஐஸ் கம்பெனியின் நிறுவனரான பிரடெரிக் தியூடர் என்பவரால் 1842ல் கட்டப்பட்டது. அப்போது சென்னையில் இருந்த வெளிநாட்டவரின் தேவைக்காக "தியூடர் ஐஸ்' கம்பெனியில் இருந்து கப்பலில் கொண்டுவரப்பட்ட பனிக்கட்டிகளை சேமிக்கும் கிடங்காக இக்கட்டிடம் பயன்படுத்தப் பட்டது. அந்த வகையில் தான் "ஐஸ் ஹவுஸ்' என்ற பெயர் ஏற்பட்டது. பின்னர் பனிக்கட்டி தாயாரிப்பது இந்தியாவிலேயே தொடங்கிய பின்னர் இந்த கட்டிடத்தை பிலிகிரி ஐயங்காருக்கு தியூடர் ஐஸ் நிறுவனம் விற்றுவிட்டது. பிலிகிரி ஐயங்கார் இந்த கட்டிடத்தை, ஏழைகள் மற்றும் கல்வியறிவில் பின்தங்கியவர்களுக்கான பள்ளியாக பயன்படுத்தி வந்தார்.

---விவேகானந்தரின் வருகை--- சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவின் சிகாகோவில் வரலாற்று புகழ்மிக்க சொற்பொழிவை நிகழ்த்திவிட்டு தாயகம் திரும்பியவர் 1897ம் ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி முதல் 15ம் தேதி வரை இந்தக் கட்டிடத்தில் தங்கியிருந்தார். இங்கு தங்கியிருந்த போது அவர் புகழ் பெற்ற ஒன்பது சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். அப்போது, சுவாமி விவேகானந்தரிடம் சென்னையில் இராமகிருஷ்ண மடம் ஒன்றினை தொடங்கிட வேண்டுகோள் வைக்கப்பட்டது. கொல்கத்தா திரும்பிய சுவாமி விவேகானந்தர், அங்கு ராமகிருஷ்ணர் மடத்தில் பணியாற்றிக் கொண்டு இருந்த சுவாமி ராமகிருஷ்ணானந்தரை இங்கு அனுப்பிவைத்தார். சசிமகராஜ் என்றழைக்கப்பட்ட சுவாமி ராமகிருஷ்ணானந்தரின் தொண்டால் இந்த கட்டிடம் தென்னகத்தின் முதலவாது ராமகிருஷ்ணர் மடமாக செயல்பட்டத் துவங்கியது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=விவேகானந்தர்_இல்லம்&oldid=1265007" இலிருந்து மீள்விக்கப்பட்டது