ஒடுக்க-ஏற்ற வேதிவினைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
[[File:redox reaction.png|thumb|300px|right| (எ-க):{{chem|H|2}} + {{chem|F|2}} → 2 HF இவ்வினையில் [[ |
[[File:redox reaction.png|thumb|300px|right| (எ-க):{{chem|H|2}} + {{chem|F|2}} → 2 HF இவ்வினையில் [[நீரியம்|ஐட்ரசன்]](H<sub>2</sub>) இரண்டு எலக்ட்ரான்களை இழந்து ஆக்சிசனேற்றம் அடைகிறது. [[புளோரின்|ஃப்ளூரின்]](F<sub>2</sub>) அந்த எலக்ட்ரான்களைப் பெற்று ஒடுக்கமடைகிறது.]] |
||
13:15, 24 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்
ஆக்சிசனேற்ற மற்றும் ஒடுக்க வினைகள் (reduction-oxidation, சுருக்கமாக Redox) என்பது ஒரு வேதிவினையின் ஒரு வகை ஆகும். ஒரு தனிமம் அல்லது சேர்மம், வேதிவினைக்கு உட்படும் போது அதன் எலக்ட்ரான் எண்ணிக்கையில் மாறுதல் எற்பட்டால், அது இந்த வகையான வேதிவினையாகும்.
ஒரு தனிமம் வேதிவினையில் எலக்ட்ரான்களை இழந்தால், 'ஆக்சிசனேற்றம் அடைகிறது', எலக்ட்ரான்களைப் பெற்றால் 'ஒடுக்கமடைகிறது'.
பெயர்க் காரணம்
ஆக்சிசனேற்றம்
ஆரம்ப காலத்தில், ஆக்சிசனுடன் ஒரு தனிமம் வினைபுரிந்து அதன் ஆக்சைடாக மாறுவதே, ஆக்சிசனேற்றம் என்று அழைக்கப்பட்டது. எடுத்துக்காட்டாக, கார்பன்(C) ஆக்சிசனுடன்(O2) வினைபுரிந்து, கார்பன்-டை-ஆக்சைடைத் தரும் வினையில் கார்பன், ஆக்சிசனேற்றம் அடைந்து எலக்ட்ரான்களை ஆக்சிசனுக்கு வழங்குகிறது. இது ஒரு ஆக்சிசனேற்ற வினையாகும்.
(எ-க): C + O2 -> CO2
பின்னர் ஆக்சிசனை ஒத்த தனிமங்கள் இதே போன்ற வேதி வினையில் ஈடுபடுவது, ஆக்சிசனேற்றம் என்று அழைக்கப்பட்டது. அதன் பின்னர், இப்பெயர் மேலும் பொதுவாக்கப்பட்டு, ஒரு தனிமம் எலக்ட்ரான்களை இழக்கும் எல்லா வேதிவினைகளுமே, 'ஆக்சிசனேற்ற வினைகள்' என்று அழைக்கப்பட்டன.
ஒடுக்கம்
'ஒடுக்கம்' என்ற சொல் எடை குறைதலோடு தொடர்புடையது. அதாவது, முற்காலத்தில், உலேகத்தாதுக்களான, உலோகஆக்சைடுகளிலிருந்து, உலோகத்தை உருக்கிப் பிரிதிதெடுப்பர். இந்நிகழ்வின் போது, ஆக்சிசன் வெளியேறுவதால் எடை குறைகிறது. இதன் காரணமாக, ஆக்சிசன், சேர்மத்திலிருந்து பிரிந்து செல்லும் அனைத்து வினைகளும் 'ஒடுக்க வினைகள்' என்றழைக்கப்பட்டன. பின்னர், ஆக்சிசன் வெளியேறும் போது, உலோகத்தின் எலக்ட்ரான்கள் எண்ணிக்கை அதிகரிப்பதைக் கண்டறிந்தார்கள். எனவே எலக்ட்ரான்களை அதிகரிக்கச் செய்யும் அனைத்து வினைகளுமே, ஒடுக்க வினைகள் என்றழைக்கப்பட்டன.
ஒடுக்க-ஏற்ற வேதிவினைகள்
தற்காலத்தில் ஆக்சிசனேற்றமும், ஒடுக்கமும் ஒரு வேதிவினையின் எலக்ட்ரான் பரிமாற்ற நிகழ்வுகளை மட்டுமே குறிக்கின்றன. சற்று உற்று நோக்கினால், மேற்சொன்ன அனைத்து வினைகளிலுமே, ஒரு தனிமம் எலக்ட்ரான்களை இழந்தால, மற்றொன்று எலக்ட்ரான்களைப் பெறுகிறது என்பது புலப்படும். எனவே தற்காலத்தில் ஒடுக்க வினைகள், ஆக்சிசனேற்ற வினைகள் இரண்டுமே ஒரே பெயரால், 'ஒடுக்க-ஏற்ற வினைகள்' என்று அழைக்கப்படுகின்றன.
எடுத்துக்காட்டாக கீழ்கண்ட வினையில், சோடியம்(Na) ஆக்சிசனேற்றமும், ஃப்ளூரின்(F) ஒடுக்கமும் அடைகின்றன. (எ.கா): Na + F -> Na+F-
ஆக்சிசனேற்றி மற்றும் ஒடுக்கிகள்
பிற தனிமங்களை ஒடுக்கக் கூடிய பொருள் ஒடுக்கி (reductant) என்றும், பிற தனிமங்களை ஆக்கிசனேற்றம் செய்யக் கூடியவை ஆக்சிசனேற்றி என்றும் அழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, மேற்கண்ட வினையில் சோடியம்(Na) ஒடுக்கியாக செயல்பட்டு, ஃப்ளூரினை(F) ஒடுக்கமடையச் செய்கிறது. அதேபோல் ஃப்ளூரின்(F) ஆக்சிசனேற்றியாகச் செயல்பட்டு, சோடியத்தை(F) ஆக்சிசனேற்றம் அடையச் செய்கிறது.
வெளி இணைப்புகள்
- Chemical Equation Balancer - An open source chemical equation balancer that handles redox reactions.
- Video - Synthesis of Copper(II) Acetate 20 Feb. 2009
- Redox reactions calculator
- Redox reactions at Chemguide
- Online redox reaction equation balancer, balances equations of any half-cell and full reactions