மொழியின் இறப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: uk:Смерть мови
சி *உரை திருத்தம்*
வரிசை 1: வரிசை 1:
'''மொழியின் இறப்பு''' என்பது ஒரு மொழிச் சமூகத்திடம் அதன் மொழித் திறமை அருகி, நாளடைவில் அந்த மொழி பேச்சு வழக்கிழந்து போவதைக் குறிக்கும்.
'''மொழியின் இறப்பு''' என்பது ஒரு மொழிச் சமூகத்திடம் அதன் மொழித் திறமை அருகி, நாளடைவில் அந்த மொழி பேச்சு வழக்கிழந்து போவதைக் குறிக்கும்.

சிறிய வளர்ச்சிய குன்றிய மொழிகள் மட்டுமல்லாமல் [[சமசுகிருதம்]], [[இலத்தீன்]] போன்ற சிறப்பு மிக்க மொழிகளும் வழக்கிழந்து போவதுண்டு.
சிறிய வளர்ச்சி குன்றிய மொழிகள் மட்டுமல்லாமல் [[சமசுகிருதம்]], [[இலத்தீன்]] போன்ற சிறப்பு மிக்க மொழிகளும் வழக்கிழந்து போவதுண்டு.

== தரவுகள் ==
== தரவுகள் ==
உலகில் தற்போது 6912 மேற்பட்ட மொழிகள் இருக்கின்றன. அவற்றுள் பெரும்பான்மை இந்த நூற்றாண்டு இறுதிக்குள் அழிந்துவிடும். <ref>[http://books.google.com/books?id=2U-l_h2uB0oC&printsec=frontcover&dq=when+languages+die&ei=FOQgSZaGNpiyMKv41cEF#PPA3,M1 மொழிகள் இறக்கும்பொழுது] - ஆங்கில நூல்</ref>
உலகில் தற்போது 6912 மேற்பட்ட மொழிகள் இருக்கின்றன. அவற்றுள் பெரும்பான்மை இந்த நூற்றாண்டு இறுதிக்குள் அழிந்துவிடும் என அறியப்படுகிறது. <ref>[http://books.google.com/books?id=2U-l_h2uB0oC&printsec=frontcover&dq=when+languages+die&ei=FOQgSZaGNpiyMKv41cEF#PPA3,M1 மொழிகள் இறக்கும்பொழுது] - ஆங்கில நூல்</ref>

== மொழி இறப்பு காரணங்கள் ==
== மொழி இறப்பு காரணங்கள் ==
வரிசை 10: வரிசை 10:

=== அரசியல் ===
=== அரசியல் ===
ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தால் அரசியல் நோக்கில் ஆக்கிரமிக்கப்பட்டு, வேறு ஒரு மொழி திணிக்கப்படும் பொழுது அந்த மொழிச் சமூகம் அந்த மொழியை இழக்கிறது. எடுத்துக் காட்டாக அமெரிக்காவில் ஐரோப்பிய காலனித்துவத்தால் அங்கிருந்த பல மொழிகள் இறந்தன.

=== பொருளாதாரம் ===
=== பொருளாதாரம் ===
ஒரு மொழி கல்வி, வணிகம், அரசு ஆகியவற்றில் செல்லாவாக்கு செலுத்தினால், அந்த மொழியை அறிந்திருப்பது பொருளாதார தேவையாகிறது. அப்படி வேற்று ஒரு மொழியை ஏற்றுக்கொள்கையில் தாய் மொழி வழக்கொழிந்து போகலாம்.
ஒரு மொழி கல்வி, வணிகம், அரசு ஆகியவற்றில் செல்லாவாக்கு செலுத்தினால், அந்த மொழியை அறிந்திருப்பது பொருளாதார தேவையாகிறது. அப்படி வேற்று ஒரு மொழியை ஏற்றுக்கொள்கையில் தாய் மொழி வழக்கொழிந்து போகலாம்.

=== சமூகம் ===
=== சமூகம் ===
வரிசை 19: வரிசை 19:

=== மொழியியல் ===
=== மொழியியல் ===
ஒரு மொழி அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, சூழ்நிலைக்கேற்ப தன்னை வளர்த்துக் கொள்ளாமல் விட்டால், அல்லது இறுக்கமான கட்டுப்பாடுகளைக் கொண்டால் அந்த மொழி அழிந்து போக சாத்தியம் உள்ளது.
ஒரு மொழி அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, சூழ்நிலைக்கேற்ப தன்னை வளர்த்துக் கொள்ளாவிட்டால், அல்லது இறுக்கமான கட்டுப்பாடுகளைக் கொண்டால் அந்த மொழி அழிந்து போக சாத்தியம் உள்ளது.

== கோட்பாடுகள் ==
== கோட்பாடுகள் ==
ஒரு மொழி எப்படி இறக்கிறது என்பது தொடர்பான 1970 களில் இருந்து மொழியியல் துறையில் விரிவான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அந்த ஆய்வுகளில் இருந்து சில பொது கோட்பாடுகள் முன்வைக்கப்படுகின்றன.
ஒரு மொழி எப்படி இறக்கிறது என்பது தொடர்பான 1970 களில் இருந்து மொழியியல் துறையில் விரிவான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அந்த ஆய்வுகளில் இருந்து சில பொது கோட்பாடுகள் முன்வைக்கப்படுகின்றன.

=== கான்சு யேர்சென் சாசி ===
=== கான்சு யேர்சென் சாசி ===
வரிசை 33: வரிசை 33:
== பிற மொழியை நோக்கி நகர்தல் ==
== பிற மொழியை நோக்கி நகர்தல் ==
{{முதன்மை|மொழி நகர்வு}}
{{முதன்மை|மொழி நகர்வு}}
ஒரு மொழி இறக்கும் பொழுது எந்த பிற மொழியை அந்த சமூகம் ஏற்கிறதோ அந்த மொழி போல் தமது மொழியை மாற்றுவர். சொற்கள் மட்டுமல்லாமல் இலக்கணமும் ஆதிக்க மொழிபோல் மருபும். தமது மொழியில் பிற மொழியில் இல்லாத கூறுகள் இருக்குமானல், அந்தக் கூறுகளை அவர்கள் தவிர்த்து விடுவர்.
ஒரு மொழி இறக்கும் பொழுது எந்த பிற மொழியை அந்த சமூகம் ஏற்கிறதோ அந்த மொழி போல் தமது மொழியை மாற்றுவர். சொற்கள் மட்டுமல்லாமல் இலக்கணமும் ஆதிக்க மொழிபோல் மருபும். தமது மொழியில் பிற மொழியில் இல்லாத கூறுகள் இருக்குமானால், அந்தக் கூறுகளை அவர்கள் தவிர்த்து விடுவர்.

== மொழி இறப்பின் பாதிப்புகள் ==
== மொழி இறப்பின் பாதிப்புகள் ==
மொழி வெறும் சொற் கூட்டம் அல்ல. மொழி மனிதர் தமது அறிவைப் பகிர கட்டமைத்த ஒரு திறன் மிக்க தொழில்நுட்பம். பல நூற்றாண்டுகளாக ஒரு மொழிச் சமூகம் உலகை அவதானித்து அதன் அறிவை மொழியில் குறித்து வைக்கிறது. ஒரு மொழி அழியும்பொழுது அந்த அறிவும் அழிய வாய்புள்ளது. ஓரளவுக்கு அந்த அறிவை மொழிபெயர்ப்பதன் மூலம் பேணலாம்.

== தமிழ் மொழி இறக்குமா ==
== தமிழ் மொழி இறக்குமா ==
தமிழ் மொழி பேசுவோர் தொகையில் முதல் 20 மொழிகளில் ஒன்று. 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இலக்கியத்தையும் விருத்தியையும் கொண்ட மொழி. தமிழ் கணினியிலும் தன்னை நிலைநிறுத்த முனைகிறது. தமிழ்நாடு, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இதற்கு அரச அங்கீகாரம் உண்டு. தமிழ்நாட்டில் இது தனி ஆட்சிமொழியாக நடைமுறைபடுத்தப்படுகிறது. பத்திரிகை, இதழ், தொலைக்காட்சி, திரைப்படம், இணையம் என தமிழில் விருத்தி பெற்ற ஊடகத்துறை உண்டு. எனவே தமிழ் மொழி அடுத்த நூற்றாண்டுக்குள் இறப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு. எனினும் தமிழ் மொழி நலிவடையக் கூடும்.
[[தமிழ்]] மொழி பேசுவோர் தொகையில் முதல் 20 மொழிகளில் ஒன்று. 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இலக்கியத்தையும் விருத்தியையும் கொண்ட மொழி. [[கணினியில் தமிழ்|தமிழ் கணினி]]யிலும் தன்னை நிலைநிறுத்த முனைகிறது. [[தமிழ்நாடு]]([[இந்தியா]]), [[இலங்கை]], [[சிங்கப்பூர்]] ஆகிய நாடுகளில் இதற்கு அரச அங்கீகாரம் உண்டு. தமிழ்நாட்டில் இது தனி ஆட்சிமொழியாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. பத்திரிகை, இதழ், தொலைக்காட்சி, திரைப்படம், இணையம் என தமிழில் விருத்தி பெற்ற ஊடகத்துறை உண்டு. எனவே தமிழ் மொழி அடுத்த நூற்றாண்டுக்குள் இறப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவு. எனினும் தமிழ் மொழி நலிவடையக் கூடும்.

== இவற்றையும் பாக்க ==
== இவற்றையும் பாக்க ==

06:21, 3 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

மொழியின் இறப்பு என்பது ஒரு மொழிச் சமூகத்திடம் அதன் மொழித் திறமை அருகி, நாளடைவில் அந்த மொழி பேச்சு வழக்கிழந்து போவதைக் குறிக்கும்.

சிறிய வளர்ச்சி குன்றிய மொழிகள் மட்டுமல்லாமல் சமசுகிருதம், இலத்தீன் போன்ற சிறப்பு மிக்க மொழிகளும் வழக்கிழந்து போவதுண்டு.

தரவுகள்

உலகில் தற்போது 6912 மேற்பட்ட மொழிகள் இருக்கின்றன. அவற்றுள் பெரும்பான்மை இந்த நூற்றாண்டு இறுதிக்குள் அழிந்துவிடும் என அறியப்படுகிறது. [1]

மொழி இறப்பு காரணங்கள்

அரசியல், பொருளாதார, சமூக, மொழியியல் காரணங்களால் மொழிகள் இறக்கின்றன.

அரசியல்

ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தால் அரசியல் நோக்கில் ஆக்கிரமிக்கப்பட்டு, வேறு ஒரு மொழி திணிக்கப்படும் பொழுது அந்த மொழிச் சமூகம் அந்த மொழியை இழக்கிறது. எடுத்துக் காட்டாக அமெரிக்காவில் ஐரோப்பிய காலனித்துவத்தால் அங்கிருந்த பல மொழிகள் இறந்தன.

பொருளாதாரம்

ஒரு மொழி கல்வி, வணிகம், அரசு ஆகியவற்றில் செல்லாவாக்கு செலுத்தினால், அந்த மொழியை அறிந்திருப்பது பொருளாதார தேவையாகிறது. அப்படி வேற்று ஒரு மொழியை ஏற்றுக்கொள்கையில் தாய் மொழி வழக்கொழிந்து போகலாம்.

சமூகம்

ஒரு மொழியின் அந்தஸ்து இழிக்கப்பட்டு சமயம், இசை, ஊடகம் என புழக்கத்தில் இல்லமால் போனால், அந்த மொழி இறக்க நேரிடுகிறது.

மொழியியல்

ஒரு மொழி அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, சூழ்நிலைக்கேற்ப தன்னை வளர்த்துக் கொள்ளாவிட்டால், அல்லது இறுக்கமான கட்டுப்பாடுகளைக் கொண்டால் அந்த மொழி அழிந்து போக சாத்தியம் உள்ளது.

கோட்பாடுகள்

ஒரு மொழி எப்படி இறக்கிறது என்பது தொடர்பான 1970 களில் இருந்து மொழியியல் துறையில் விரிவான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அந்த ஆய்வுகளில் இருந்து சில பொது கோட்பாடுகள் முன்வைக்கப்படுகின்றன.

கான்சு யேர்சென் சாசி

கான்சு யேர்சென் சாசி (Hans-Jurgen Sasse) மொழி இறப்புக் கோட்பாட்டின் மூன்று கூறுகளை முன்வைக்கிறார்.[2]

  • வெளிக் காரணிகள் (External Settings) - அரசியல் பொருளாதாரச் சமூகச் சூழ்நிலை (முதன்மை)
  • பேச்சு நடத்தைகள் (Speech Behaviour) - வெவ்வேறு சூழ்நிலைகளில் வேறு மொழிகளைப் பயன்படுத்தல், பேச்சு மொழியில் ஏற்பட்டும் மாற்றங்கள், மொழி பயன்படுத்தப்படும் தளங்கள், மொழி நோக்கிய மனப்பாங்கு
  • மொழிக் கட்டமைப்புத் தாக்கங்கள் (Structural Consequences) - அழிவு நிலைக்குத் தள்ளப்படும் மொழியில் ஏற்படும் ஒலிப்பியல், உருபனியல், சொற்றொடரியல், சொற்கள், மற்றும் பிற மொழியியல் மாற்றங்கள் மொழி இறப்பின் இறுதிக் கட்டத்தில் வெளிக் காரணிகளால் உந்தப்படுகின்றன.

பிற மொழியை நோக்கி நகர்தல்

ஒரு மொழி இறக்கும் பொழுது எந்த பிற மொழியை அந்த சமூகம் ஏற்கிறதோ அந்த மொழி போல் தமது மொழியை மாற்றுவர். சொற்கள் மட்டுமல்லாமல் இலக்கணமும் ஆதிக்க மொழிபோல் மருபும். தமது மொழியில் பிற மொழியில் இல்லாத கூறுகள் இருக்குமானால், அந்தக் கூறுகளை அவர்கள் தவிர்த்து விடுவர்.

மொழி இறப்பின் பாதிப்புகள்

மொழி வெறும் சொற் கூட்டம் அல்ல. மொழி மனிதர் தமது அறிவைப் பகிர கட்டமைத்த ஒரு திறன் மிக்க தொழில்நுட்பம். பல நூற்றாண்டுகளாக ஒரு மொழிச் சமூகம் உலகை அவதானித்து அதன் அறிவை மொழியில் குறித்து வைக்கிறது. ஒரு மொழி அழியும்பொழுது அந்த அறிவும் அழிய வாய்புள்ளது. ஓரளவுக்கு அந்த அறிவை மொழிபெயர்ப்பதன் மூலம் பேணலாம்.

தமிழ் மொழி இறக்குமா

தமிழ் மொழி பேசுவோர் தொகையில் முதல் 20 மொழிகளில் ஒன்று. 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இலக்கியத்தையும் விருத்தியையும் கொண்ட மொழி. தமிழ் கணினியிலும் தன்னை நிலைநிறுத்த முனைகிறது. தமிழ்நாடு(இந்தியா), இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இதற்கு அரச அங்கீகாரம் உண்டு. தமிழ்நாட்டில் இது தனி ஆட்சிமொழியாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. பத்திரிகை, இதழ், தொலைக்காட்சி, திரைப்படம், இணையம் என தமிழில் விருத்தி பெற்ற ஊடகத்துறை உண்டு. எனவே தமிழ் மொழி அடுத்த நூற்றாண்டுக்குள் இறப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவு. எனினும் தமிழ் மொழி நலிவடையக் கூடும்.

இவற்றையும் பாக்க

மேற்கோள்கள்

  1. மொழிகள் இறக்கும்பொழுது - ஆங்கில நூல்
  2. Matthias Brenzinger. (1992). Language death: factual and theoretical explorations with special reference to East Africa. Berlin: Walter de Gruyter.

உசாத்துணைகள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மொழியின்_இறப்பு&oldid=1249942" இலிருந்து மீள்விக்கப்பட்டது