சூழலியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி இணைப்பு: pa:ਪਾਰਿਸਥਿਤੀਕੀ
வரிசை 109: வரிசை 109:
[[nrm:Êcologie]]
[[nrm:Êcologie]]
[[oc:Ecologia]]
[[oc:Ecologia]]
[[pa:ਪਾਰਿਸਥਿਤੀਕੀ]]
[[pih:Ekolojii]]
[[pih:Ekolojii]]
[[pl:Ekologia]]
[[pl:Ekologia]]

04:58, 31 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்

இயுஜெனியஸ் வார்மிங் சூழ்நிலையியலை ஒரு அறிவியல் துறையாக நிறுவினார்

சூழலியல் (Ecology) என்பது, உயிர் வாழ்க்கையின் பரவல் பற்றியும், உயிரினங்களுக்கும் அவற்றின் இயற்கைச் சூழலுக்கும் இடையிலான இடைவினைகள் பற்றியும் அறிவியல் அடிப்படையில் ஆய்வு செய்யும் துறையாகும். ஒரு உயிரினத்தின் சூழல் என்பது சூரிய ஒளி, காலநிலை, நிலவியல் அம்சங்கள் போன்ற உயிரற்ற காரணிகளின் ஒட்டுமொத்த அளவான இயற்பியல் இயல்புகளையும்; குறிப்பிட்ட வாழிடத்தில் வாழும் பிற உயிரினங்களைக் கொண்ட உயிர்சார் சூழல் மண்டலத்தையும் (ecosystem) உள்ளடக்கியதாகும்.

சூழல் என்பது தாவரங்கள், விலங்குகள் அடங்கிய அனைத்து உயிரினங்களுடன், அவற்றுடன் தொடர்பு கொண்டிருக்கும் அனைத்து இயற்பியல் கூறுகளையும் அடக்கியதாகும். இவைகளுக்கு இடையே தொடர்புகள், பரிமாற்றங்கள் அல்லது இடைவினைகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பதைப் பற்றி கற்றுக்கொள்ளுவதே சூழலியல் ஆகும்.

சூழலியல் என்னும் கருத்துருவை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் ஜேர்மானிய உயிரியலாளரான ஏர்ன்ஸ்ட் ஹேக்கல் (Ernst Haeckel) என்பவராவார். இதை இவர் சூழலுடன் உயிரினங்களுக்குள்ள தொடர்பு பற்றிய விரிவான அறிவியல் என வரையறுத்தார். எனினும் இவர் இக் கருத்துருவை விரிவாக விளக்கவில்லை. இது தொடர்பான விரிவான பாட நூல் ஒன்றையும், இத்துறையில் பல்கலைக்கழகப் பாடநெறி ஒன்றுடன் சேர்த்து எழுதியவர் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த தாவரவியலாளரான இயுஜெனியஸ் வார்மிங் (Eugenius Warming) என்பவராவார். இதனால் இவரே சூழ்நிலையியலை நிறுவியவர் என்கின்றனர்.

பெயரின் வரலாறு

சூழலியல் என்பதைச் சுட்டும் ஈக்காலாஜி (Ecology ) என்னும் ஆங்கிலச் சொல் ஓய்கோஸ் (oikos) என்னும் கிரேக்க வார்த்தையில் இருந்து பெறப்பட்டதாகும். இதன் பொருள் வீடு அல்லது நிலையம் என்பதே.

இச்சொல்லை முதன்முதலில் ஜேர்மன் நாட்டு விலங்கியலாளாராகிய ஹெக்கல் 1869 ம் ஆண்டு பயன்படுத்தினார். பின்னர் 1895 இல் டென்மார்க் நாட்டு வாமிங் (Warming) என்பவரைத் தொடர்ந்து இச்சொல்லை தாவரவியல் மற்றும் விலங்கியல் அறிஞர்கள் பயன்படுத்தத் தொடங்கினர்.


வீச்செல்லை

சூழலியல் பொதுவாக, உயிரினங்களைப் பற்றி ஆய்வு செய்யும்போது அறிவியல்துறைகளுள் ஒன்றான உயிரியலின் ஒரு பிரிவாகக் கருதப்படுகின்றது. உயிரினங்களைப் பல மட்டங்களில் ஆய்வு செய்ய முடியும். உயிர்வேதியியல், மூலக்கூற்று உயிரியல் போன்ற துறைகளில் நியூக்கிளிக் அமிலங்கள், காபோவைதரேட்டுக்கள், புரதங்கள், கொழுமியங்கள் என்பவற்றிலிருந்து கலங்களை உயிரணு உயிரியல் ஊடாகவும், தாவரங்களைத் (தாவ்ரவியலிலும், விலங்குகளை விலங்கியலிலும், கூட்டங்கள், சமுதாயங்கள், சூழ்நிலை மண்டலங்களை உயிரினக் கோள மட்டம் வரை ஆய்வு செய்ய முடியும். இறுதியாகக் குறிப்பிடப்பட்ட மட்டங்களே சூழலியல் ஆய்வுகளோடு தொடர்புள்ளவை. இது ஒரு பல்துறை அறிவியலாகும். சூழலியல் தனது ஆய்வுகளுக்காக நிலவியல், புவியியல், காலநிலையியல், மண்ணியல், மரபியல், வேதியியல், இயற்பியல் ஆகிய துறைகளையும் துணையாகக் கொள்கின்றது. இதனால் சிலர் இதனை ஒரு முழுதளாவிய (holistic) அறிவியல் என்கின்றனர்.

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ecology
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூழலியல்&oldid=1247424" இலிருந்து மீள்விக்கப்பட்டது