காற்றாடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: th:ฟาร์มกังหันลม
சி r2.7.2+) (தானியங்கி மாற்றல்: tr:Rüzgâr çiftliği
வரிசை 52: வரிசை 52:
[[sv:Vindkraftspark]]
[[sv:Vindkraftspark]]
[[th:ฟาร์มกังหันลม]]
[[th:ฟาร์มกังหันลม]]
[[tr:Rüzgâr tarlası]]
[[tr:Rüzgâr çiftliği]]
[[uk:Вітряна електростанція]]
[[uk:Вітряна електростанція]]
[[wa:Tourniketreye]]
[[wa:Tourniketreye]]

01:45, 31 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்

நீங்கள் விசிறியைப்பற்றி அறியவிரும்பினால் விசிறி கட்டுரையைப் பார்க்கவும்.
விளையாட்டுக் காற்றாடி
காற்றிலிருந்து மின்னாற்றல் பெறப் பயன்படுத்தும் காற்றாலை
காற்றாடி

காற்றாடி என்பது பொதுவாகக் காற்று வீசுவதைப் பயன்படுத்திச் சுற்றும் அமைப்பைக் குறிக்கும். சில வேளைகளில் மின் விசிறிகளையும் காற்றாடி என்று அழைப்பதுண்டு. காற்று வீசுவதைப் பயன்படுத்தி மின்னாற்றலைப் பெறுவதற்கும் சிறுவரின் விளையாட்டுப் பொருளாகவும் காற்றாடிகள் பயன்படுகின்றன. பேச்சு வழக்கில் இவற்றை காத்தாடி என்பர்.

பனையோலையால் செய்யப்படும் காற்றாடி வகைகளைக் காட்டும் கோட்டுருவப் படம்

விளையாட்டுக் காற்றாடி

சிற்றூர்ப்பகுதிகளில் சிறார்கள் பனை ஓலையை வெட்டி, கருவேல முள்ளில் கோர்த்து, ஒரு சிறு குச்சியில் குத்தி காற்றாடிகளைச் செய்வர். மாட்டுவண்டிகளிலும் பிற சக்கர (ஆழி) வண்டிகளிலும் அச்சாணி வைத்திருப்பதுபோல ஓலையைத் தன்னிடத்தில் வைத்திருப்பதற்கு காய்ந்த ஆட்டுப் புழுக்கைகளையோ களிமண் உருண்டைகளையோ இருபுறமும் முள்ளில் கோர்த்து வைப்பார்கள். இவ்வாறு செய்யும் காற்றாடியைக் கையில் பிடித்துக்கொண்டு காற்றை எதிர்த்தார்ப்போல ஓடும்போது தகடு போல வெட்டப்பட்ட இரு பனை ஓலைத்துண்டுகளும் ஒருங்கே சுற்றும்.

இதே போன்ற அமைப்பைத் தொழிற்கூடங்களில் காகிதத் தாளினாலான வெவ்வேறு வடிவ இறக்கைகளைப் பிளாசுட்டிக்குக் குச்சியில் இணைத்து உருவாக்குவர். திருவிழாக்களின் போது இவை பெருமளவில் விற்கப்படுகின்றன.

காற்றாடி ஆலை

பெரும் தகடுகளைக் கோர்த்து[1] காற்று வீசும் திசையைப் பார்த்து நிறுத்தி, அவை சுழலும்போது பெறும் ஆற்றலைக் கோண்டு நீரிறைப்பதற்கும் மின்னாற்றலைப் பெறுவதற்கும் காற்றாடி ஆலைகள் பயன்படுகின்றன. தமிழ் நாட்டில் கயத்தாறு, பல்லடம் - பொள்ளாச்சி, தேனி ஆகிய பகுதிகளில் பல காற்றாடி ஆலைகள் இயங்குகின்றன.

பார்க்க

மேற்கோள்கள்

  1. "காற்றாடி மின்சார ஜெனறேற்றரின் பிரதான அங்கங்கள் எவை ?". பார்க்கப்பட்ட நாள் 2010-10-06.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=காற்றாடி&oldid=1247324" இலிருந்து மீள்விக்கப்பட்டது