சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Jeevagv (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[File:skoil1.jpg|thumb|right||சங்கரநயினார் கோவில், சங்கரன்கோவில்]]
[[File:skoil1.jpg|thumb|right||சங்கரநயினார் கோவில், சங்கரன்கோவில்]]
'''கோமதி அம்மன்''', [[தமிழ்நாடு]], [[திருநெல்வேலி மாவட்டம்]] [[சங்கரன் கோவில்|சங்கரன் கோவிலில்]] அமைந்துள்ள. [[சங்கரநயினார் கோவில்|சங்கரநயினார் கோவிலின்]] முதன்மைப் பெண் தெய்வம். ஆதி சக்தியான [[பார்வதி]]யின் அம்சமாக உறையும் அம்மன் இவர். வன்மீகநாதரின் துணைவி. கோவிலில் சங்கரநாராயணருடன் இணைந்து காணப்படுகிறார். உக்கிரப் பாண்டியன் என்னும் மன்னனால் கட்டப்பட்ட இக்கோயில் 900 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலில் ''ஆடித் தவசு'' விழா ஆண்டுதோறும் [[ஆடி (மாதம்)|ஆடி மாதத்தில்]] சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது
'''கோமதி அம்மன்''', [[தமிழ்நாடு]], [[திருநெல்வேலி மாவட்டம்]] [[சங்கரன் கோவில்|சங்கரன் கோவிலில்]] அமைந்துள்ள. [[சங்கரநயினார் கோவில்|சங்கரநயினார் கோவிலின்]] முதன்மைப் பெண் தெய்வம். ஆதி சக்தியான [[பார்வதி]]யின் அம்சமாக உறையும் அம்மன் இவர். வன்மீகநாதரின் துணைவி. கோவிலில் சங்கரநாராயணருடன் இணைந்து காணப்படுகிறார். [[உக்கிரப் பாண்டியன்]] என்னும் மன்னனால் கட்டப்பட்ட இக்கோயில் 900 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலில் ''ஆடித் தவசு'' விழா ஆண்டுதோறும் [[ஆடி (மாதம்)|ஆடி மாதத்தில்]] சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது


==மரபு வழி வரலாறு==
==மரபு வழி வரலாறு==

14:58, 27 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்

சங்கரநயினார் கோவில், சங்கரன்கோவில்

கோமதி அம்மன், தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலில் அமைந்துள்ள. சங்கரநயினார் கோவிலின் முதன்மைப் பெண் தெய்வம். ஆதி சக்தியான பார்வதியின் அம்சமாக உறையும் அம்மன் இவர். வன்மீகநாதரின் துணைவி. கோவிலில் சங்கரநாராயணருடன் இணைந்து காணப்படுகிறார். உக்கிரப் பாண்டியன் என்னும் மன்னனால் கட்டப்பட்ட இக்கோயில் 900 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலில் ஆடித் தவசு விழா ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது

மரபு வழி வரலாறு

இந்துப் புராணங்களின்படி:

இந்த அம்மன், சிவனை வேண்டி ஊசி முனை மேலிருந்து தவம் செய்யும் யோகினி. சங்கன், பதுமன் என்ற இரு நாக மன்னர்களிடையே சண்டை மூண்டது. சங்கன் தன் கடவுளான சிவனே அதிக ஆற்றல் உள்ளவர் என்றும் பதுமன் தன் விருப்பக் கடவுளான திருமாலே அதிக ஆற்றல் உடையவர் என்றும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இருவரும் அம்மனிடன் சென்று முறையிட்டனர். சங்கன், பதுமன் மட்டுமின்றி, இறைவனின் முழு வடிவத்தை உலக மக்கள் உணர வேண்டும் என அம்மன் சிவனிடம் வேண்ட, அம்மனின் வேண்டுகோளுக்கு இணங்க சிவன், சங்கரநாராயணராகக் (சங்கரன்-சிவன்; நாராயணன்-திருமால்) காட்சியளித்தார். கடவுளர் இருவருமே சமம் என்றும், அன்பினாலும் தியாகத்தாலும் மட்டுமே இவர்களை அடைய முடியும் என்றும், சிவனும் திருமாலும் இணைந்த சங்கரநாராயணர் தோற்றத்தால் உணர்த்தப்பட்டது. நாகர் இருவரும் இறைவனை வழிபட்டு, கோமதி அம்மனுடன் தங்கினர். நாகங்கள் அம்மனுடன் குடியிருப்பதால், இந்தத் தேவியை வணங்குவதன் மூலம், பயத்தைப் போக்கலாம்.

பாம்பாட்டி சித்தர் இவ்வூரிலே வாழ்ந்து, தேவியின் மகிமைகளை உலகறியச் செய்தார். இவரது சமாதியும் கோவிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளது.

ஆடித் தபசு

ஆடி மாதத்தின் உத்திராட நாளில் சங்கரநாராயணர் கோமதி அம்மனுக்கும், சங்கன், பதுமன் ஆகியோருக்குக் காட்சியளித்த நாளை நினைவுகூரும் வகையில் இவ்விழா ஆடி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இங்கு அமைந்துள்ள சிரீ சக்கர பீடத்தில், நோயாளிகள், தீய சக்திகளால் ஆட்கொள்ளப்பட்டவர்கள், மனநலமற்றவர்கள் ஆகியோரை அமரவைத்தால், நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. அம்மனுக்கு வழங்கப்படும் நைவேத்தியங்களில் மாவிளக்கு முக்கியத்துவம் பெறுகிறது. கோவிலுக்கு வருவோர், பாம்பு, தேள் ஆகியவற்றின் சிறு படங்களை உண்டியலில் செலுத்துவதன் மூலம் நலம் பெறுவர் என நம்பப்படுகிறது.

பாம்பு புற்று

கோவிலின் உள்ளே அம்மன் சந்நிதியைச் சுற்றி அமைந்துள்ள பிரகாரத்தில் உள்ள பாம்பு புற்று வன்மீகம் என்று அழைக்கப்படுகிறது. இப்புற்றில் இருந்து எடுக்கப்படும் மணலை உடலில் தடவிக் கொண்டால் நோய்கள் நீங்கும் என்று நம்பப்படுகிறது.